தினம் என் பயணங்கள் -31 குடிநோயாளிகள் மறுவாழ்வு

alcoholic

 

எங்கும் திருவிழா கோலம். விநாயக சதூர்த்தியின் கைங்காரியம்,விடுமுறை தினம். சீரியல் விளக்கொளியில் அந்த தெருவே மின்னியது. அழகு தேவதைகள் போல உலா வந்த அத்தெருவின் இளம் பெண்கள். குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்த குழந்தைகள். பிள்ளையார் ஒவ்வொரு வீட்டு வாசலுக்காய் வந்து சுண்டலும் கொழுக்கட்டையும், பூசையும் ஏற்று விநாயகர் தான் கொலுவேற்கும் இருப்பிடத்தில் போய் அமர்ந்துக்கொண்டார்.

 

 

சிறிய குழந்தை ஒன்று விநாயகர் அகவல் படித்தது மைக்கில். பிறகு குழந்தைகள் பாடல்கள் வேறு பாடிக்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. அந்த திருவிழா கூட்டத்தினுள் குடித்து விட்டு ஒருவன் சாலை தனதுபோல்கருதி இதற்கும் அதற்குமாக நடந்து உரிமைப் பாராட்டினான்.

 

 

கூட்டத்தில் ஒருவன் அவனைத் திட்டித் தீர்க்க, மற்றொருவன் அவனுக்குச் சாதகமாகப் பேசினான். அவன் நிலையில இருந்து பாரு, அவன் கஷ்டம் புரியும் என்று சொல்லி,  அவனை அவ்விடத்தில் இருந்து அழைத்தும் சென்று விட்டான்.

 

 

இது என் மனதை உறுத்தியது. குடிக்காரர்களை இந்த சமுதாயம் எப்படி உருவாக்குகிறது ? ஒரு பக்கம் அரசாங்கம் சாராய விற்பனையில் பேரளவு நிதி சேர்க்கிறது. மறுபக்கம் சமூக நலம் விரும்பிகள் சாராய விற்பனையை எதிர்த்துப் போர்க்கொடி தூக்குகிறார்கள்.  பின்னோர் பக்கம் யாரோ, எவரோ குடிக்கிறார். குடிப்பவர்களுக்கு ஆயிரம் காரணங்கள். ஜாலிக்கென துவங்கி, குடும்பச் சூழலில்தர்க்கமாக, சண்டையாக மாறி, நண்பர்கள் வட்டத்தில் ஒத்துழைப்பாகி ஏதேனும் சோகக் கதையில் முடிந்துவிடும்.

 

குடிக்காரன் தன்னைத் தானே வடிவமைத்துக்கொள்கிறானா? அல்லது இந்த சமூகம்தான் உருவாக்குகிறதா?  இப்படிப் பட்டவர்களை எப்படித் திருத்துவது?

 

 

சமீபத்தில் குடிநோயாளிகள் மறுவாழ்வு மையத்திற்குச் சென்ற ஒரு சகோதரரைச் சந்திக்க நேரிட்டது.  அவர் கூறினார். காலையில் ஒரு பிரார்த்தனை செய்ய வேண்டும் அந்த பிரார்த்தனையை மனப்பாடம் செய்யவே ஒரு வாரம் ஆயிற்று. ஒரே இடத்தில் தான் அமர்ந்திருக்க வேண்டும். சாப்பாடு சரியா கிடையாது. சாதம் அதிகமா இருக்கும் கொழம்பை கொறைச்சுடுவானுங்க, ஒரு லீடர் இருப்பான். அவன் நைட்ல எவனெவன் என்னென்ன செய்கிறானோ அதை எழுதி வச்சுடுவான். காலைலவார்டன்வந்ததும், ஏய் எல்லாம் சுவத்தை அனைச்சு நில்லுங்க! சூத்தாமட்டையிலயே மூங்கில் குச்சில நாலு சாத்துகிடைக்கும். எல்லாம் அடிச்சு முடிச்சதும் ஒரே ஒரு பீடி. அதையே பத்தவச்சு ரெண்டு இழுப்பு இழுத்துட்டு, திரும்ப அனைச்சு வச்சுக்கனும்.

 

 

சரி அங்க போய்ட்டு வந்ததும் குடிகாரனிடம் எதாச்சும் மாறுதல் தெரிஞ்சுதா?

 

 

எல்லாமே மனசுக் கட்டுப்பாடுதாங்க.

 

 

டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனாங்களா?

 

 

பின்ன கூட்டிட்ட போகாம இருப்பாங்களா?  அடிச்சுட்டு அடிச்சுட்டு அதுக்கு மறந்து போடத்தான் மாசம் 10000 ஆயிரம்ரூபாய்.

 

 

கொஞ்சம் மனம் ரணமாகியது. அடி உதவறது போல அண்ணந்  தம்பியும் உதவமாட்டாங்களாம் அதே பாலிசியை கடைப்பிடிச்சுட்டாங்க போல.

 

 

எப்படி இருந்தாலும் ஒரு பக்கம் நீதியும் மறுப்பக்கம் அநீதியும்சமூகத்தில் எப்போதும் போரிட்டுக்கொண்டே இருக்கிறது .

 

இந்த சூழலை மாற்றுவதாகப் பாசாங்கு செய்துகொள்கிறார்களே தவிர குடிகாரரை மாற்றுபவர்கள் யாருமில்லை.

 

[தொடரும்]

+++++++++++++++++++++++

 

Series Navigation