திருப்பூரில் தமிழறிஞர் புலவர் மணியன் மரணம்.

author
0 minutes, 8 seconds Read
This entry is part 1 of 18 in the series 21 ஜூன் 2020

திருப்பூரில் தமிழறிஞர் மரணம்

திருப்பூரில் தமிழறிஞர் மரணம். புலவர் மணியன் தன் 84ம் வயதில் திருப்பூரில் மரணம்  அடைந்தார்.புற்று நோயால் அவதிப்பட்டவருக்கு விடுதலை கொரானா காலத்தில் வாய்த்தது.

அரசுஆதரவுகிடைக்காமல்நல்லதமிழறிஞர்கள்திருமடங்களையும்புரவலர்களையும்நாடிச்சென்றுதம்புலமையைவெளிப்படுத்தமுயன்றுஉரியசிறப்புக்களைதக்கநேரத்தில்பெறாமற்போனவரலாற்றிற்குச்சொந்தக்காரர்மணியனார்அவர்கள்.

சோழவளநாட்டில்பிறந்திருந்தாலும்கொங்குவளநாட்டைத்தன்தாயகமாகக்கொண்டுஅவர்கொங்குநாட்டில்விஜயமங்கலம்போன்றஇடங்களில்தமிழாசிரியராகப்பணியாற்றிப்பணிநிறைவில்அவர்கோவையில்குடிபுகுந்துஆற்றிவந்ததமிழ்ப்பணிகளைநினைவுகூர்ந்துஅவருக்குச்சிறப்புச்செய்வதுகொங்குமண்ணின்மாண்புக்குத்தக்கது

ஆய்வறிஞர்முனைவர்புலவர்மணியன் (1936-2020)

இரங்கற்குறிப்பு

            மூத்ததமிழ்ஆய்வறிஞர்முனைவர்புலவர்மணியன்அவர்கள்இன்றுகாலை 5 மணிஅளவில்திருப்பூரில்தன்மூத்தமகள்வீட்டில்தம் 84 ஆம்வயதில்காலமானார்என்றதுன்பமானசெய்தியைமுனைவர்கே.எஸ்.கமலேஸ்வரன்அவர்கள்மூலம்அறிந்துசொல்லொணாத்துன்பமுற்றோம்.அவர்அண்மைக்காலமாகப்புற்றுநோயால்துன்புற்றுவந்தார்.

தஞ்சைமாவட்டம்திருமயிலாடியில்மரபுவழித்தமிழ்ப்புலமைக்குடும்பத்தில் 29.04.1936 பிறந்தமுனைவர்திருபுலவர்மணியன்அவர்கள்பெரும்புலவர்ச.தண்டபாணிதேசிகரிடம்தமிழ்கற்றபெருமையினர்.அவருடன்இணைந்துஅக்காலத்தியேசங்கஇலக்கியஅகராதியைவெளியிட்டபுலமையாளர்.அவர்தொடர்ந்துசிலம்புக்கும்மணிமேகலைக்கும்அத்தகையகருவிநூல்சமைத்தவர்.தொடர்ந்துஅவர்கள்பேராசிரியர்வ.ஐ.சுப்பிரமணியனார்வழிகாட்டச்சங்கஇலக்கியவினைவடிவங்கள்என்றஅரியஅகராதித்தொகுப்பைச்செய்துசங்கஇலக்கியமொழிக்குஅரியஒருகருவிநூலைப்படைத்துத்திருவனந்தபுரம்திராவிடமொழியியல்கழகம்வழிவெளியிட்டார்..தொடர்ந்துஅவர்அருட்செல்வர்நா.மகாலிங்கம்ஆதரவில்தேவாரம்சொல்லகராதி,அருட்பாஅகராதி,திருமந்திரஅகராதி,ஒன்பதாம்திருமுறைஅகராதி,பத்தாம்திருமுறைஅகராதிஎன்றுகருவிநூல்பணியில்முனைந்துசெயல்பட்டுப்பலஅரியகருவிநூல்களைவழங்கியவர்.அவர்அரிதின்முயன்றுதொகுத்துவெளியிட்டுள்ளகொங்குவட்டாரச்சொல்லகராதிபற்றியும்இங்குவிதந்துகுறிப்பிடவேண்டும்.அதன்திருந்தியபதிப்பொன்றைத்தான்இறக்குந்தறுவாயிலும்கவனமுடன்வெளியிட்டதைநாம்மறக்கமுடியாது.அவர்தயாரித்துள்ளபதினொராந்திருமுறைஅகராதிஅருட்செல்வர்மகனார்திரு.ம.மாணிக்கம்அவர்கள்ஆதரவில்அண்மையில்வெளியாகியிருக்கிறது.அவர்தமிழ்ப்பணிக்காககற்பகம்பல்கலைக்கழகம்முனைவர்பட்டம்வழங்கியசிறப்புடையவர்.பலநல்லஆராய்ச்சிக்கட்டுரைகளையும்எழுதியவர்புலவர்மணியனார்அவர்கள்.துணைவியைஇழந்தமுதுமைத்துன்பத்திலும்தமிழைத்துணையாகக்கொண்டுவாழ்ந்துவந்தார்.

வைணவஇலக்கியமரபில்நாலாயிரம்முதலியதோத்திரப்பாடல்களுக்குஉரைமரபுசைவத்தில்வேரூன்றவில்லை .எனினும்இருபதாம்நூற்றாண்டிற்குப்பின்இந்நிலைமாற்றமடைந்தது.திருவாசகம்போன்றவற்றைபோப்போன்றவர்கள்மொழிபெயர்த்தபின்தமிழர்களும்உரைமுயற்சியில்இறங்கினர்.பண்டிதமணிகதிரேசஞ்செட்டியார், திருவாசகமணிபாலசுப்பிரமணியன்போன்றோரைத்தொடர்ந்துஇத்துறையில்முயல்பவர்களைக்காணலாம்.அத்துடன்செங்கலவராய பிள்ளைஅவர்களின்ஒளிநெறிவரிசைஆழமானஒருபுலமைமரபுசைவஇலக்கியஆராய்ச்சியிலும்வளர்ந்துவருவதைக்காட்டுகிறது.அப்புலமைமரபின்கான்முளையாகத்தோன்றிப்பேரா.வ.ஐ.சுப்பிரமணியம்போன்றவர்கள்வழிப்புதுநெறிகளைஏற்றுத்தமிழ்ப்புலமைமரபைச்செழுமைப்படுத்தியவர்புலவர்மணியன்என்றமணியானபுலவர்மணிஅவர்கள்.ஆராய்ச்சிக்குஉரியஅரியகருவிநூல்களைஉருவாக்குவதுஎன்றஅடிப்படைத்தமிழாய்வைவளப்படுத்தியவர்அவர்.நிறுவனஆதரவு ,அரசுஆதரவுகிடைக்காமல்நல்லதமிழறிஞர்கள்திருமடங்களையும்புரவலர்களையும்நாடிச்சென்றுதம்புலமையைவெளிப்படுத்தமுயன்றுஉரியசிறப்புக்களைதக்கநேரத்தில்பெறாமற்போனவரலாற்றிற்குச்சொந்தக்காரர்மணியனார்அவர்கள்.

சோழவளநாட்டில்பிறந்திருந்தாலும்கொங்குவளநாட்டைத்தன்தாயகமாகக்கொண்டுஅவர்கொங்குநாட்டில்விஜயமங்கலம்போன்றஇடங்களில்தமிழாசிரியராகப்பணியாற்றிப்பணிநிறைவில்அவர்கோவையில்குடிபுகுந்துஆற்றிவந்ததமிழ்ப்பணிகளைநினைவுகூர்ந்துஅவருக்குச்சிறப்புச்செய்வதுகொங்குமண்ணின்மாண்புக்குத்தக்கது.

அவர்மறைவுதமிழாய்வுக்குப்பேரிழப்பு .அவரைஇழந்துவாடும்அவர்குடும்பத்தார் ,நண்பர்கள்ஆய்வாளர்கள்முதலியஅனைவருக்கும்ஆழ்ந்தஇரங்கல்கள்.அவர்உயிர்இயற்கையில்கையில்அமைதியாகஉறங்கட்டும்.- டாக்.கி.நாச்சிமுத்து குறிப்புகள்

Series Navigationகட்டுடைத்தlலும் அன்பு செய்தலும் (ஆர். சூடாமணியின் அர்த்தங்கள் ஆயிரம்)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *