தோற்றம்

Spread the love

இது நானில்லை

சுனையில் தெரிவது

என் பிம்பம்

 

அப்போது

இது தான் நீயா

என்றான் என் மேல்

சுட்டு விரலை வைத்து

 

இது என் உடல்

அதன் தோற்றம்

 

தோற்றம் நீயில்லை

என்கிறாயா

 

ஆமாம்

 

உன் தோற்றமே

நீயில்லையா

 

என் தோற்றம்

தரும் தாக்கம்

உனக்கு வேறு

ஒரு பெண்ணுக்கு வேறு

என்னிடம் உதவி கேட்டு

வருபவனுக்கு வேறு

எனக்கு உதவி

செய்தவனுக்கு வேறு

 

அது சரி என்றான்

புரிந்தது போல​

 

மரத்தின் அருகே

சென்றேன்

பார் இது

பகலில் நிழலானது

நிலவில்லா இரவில்

அச்சம் தருவது

இதன் தோற்றம்

நம் அச்சம் அல்லது

தேவை கொண்டு

மாறும்

 

பதிலே இல்லை

அவன்

போன​ இடம் தெரியவில்லை

 

மேகம் கவிந்து

வானையே மூடியது

 

பறவைகள் திரும்பியதில்

மெலிதாய்க் கிளைகளை

அசைத்தது மரம்

 

நிழல் நீங்கிய​

தோற்றம்

Series Navigationஅவன், அவள். அது…! -2மருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்