நகரத்து மாங்காய்..

மாமரத்தில் ஏறி
மெலிந்த கிளையைப் பிடித்து
மயிரிழையில் தப்பித்து..
செவுனி எறும்புகளிடம்
செமத்தியாய்க் கடிவாங்கி..
தோட்டக்காரன்
தலையைப் பார்த்து
தொடைநடுங்கி ஓடி..
கிடைத்த காயையெல்லாம்
மடியில் கட்டி
மாறாத கறையாக்கி வந்து..
மற்றவர்களுடன்
மணக்க மணக்க
பால் வடிய பக்குவமாய்ப்
பல்லால் கடித்தும்
கல்லில் உடைத்தும்
களவாடித் தின்றதுதான்
மாங்காய் !

கீத்து மாங்காய் தின்னும்
என் பிள்ளை
கையில் இருப்பதா
மாங்காய் !

-செண்பக ஜெகதீசன்..

Series Navigationபேசித்தீர்த்தல்அதுவும் அவையும்!