நம்பிக்கையெனும் கச்சாப்பொருள்

எள்ளளவும் சந்தேகமில்லை
எளிதில் நீங்கள் மன்னித்துவிடுவீர்கள்
காலகாலமாய் அதற்காகத்தான் பழக்கப்படுத்தப்பட்டீர்கள்
இருக்கக்கூடும் உங்களின் பெரும்தன்மையாக
அதுதான் எங்களுக்கான
மூலதனமும் கச்சாப்பொருளும்
நம்பிக்கையுண்டு
அழைக்க பின்தொடர்வீர்கள்
மந்தைகளாக
அற்புதங்கள் நிறைந்தது என்றிட
முள் அப்பிய பாதையைக்கூட சகித்தீர்கள்
கடந்தபின் நீங்கள் கண்டது
வறண்ட பொட்டல்வெளிதான்
நாளைகளில் மாற்றங்கொள்ளுமென்றதும்
வணங்கிவிட்டு திரும்பினீர்கள்
குறைச்சலான காலத்திற்குப் பின்
மீண்டும் பொய்களோடு வருவோம்
நீங்களும் ஆசைகளோடு பின்தொடர்வீர்கள்…

Series Navigationவிலகா நினைவுதீபாவளி நினைவுகள்