நம்பிக்கை

எஸ்.எம்.ஏ.ராம் 

 

எல்லா வழிகளும்

அடைக்கப்பட்டு விட்டன.

ஒரு வழி மூடினால்

இன்னொன்று திறந்து கொள்ளும்

என்று அவர்கள் சொன்னதெல்லாம்

பொய் என்று நிரூபணமாகிவிட்டது.

எஞ்சியிருப்பவை

வெளிச்சத்துக்கும் காற்றுக்குமான

சிறு சிறு துளைகள் மட்டுமே.

அதனால் தானோ என்னமோ

இன்னும் சுவாசம் மட்டும்

நம்பிக்கையோடு

ஓடிக்கொண்டிருக்கிறது..

Series Navigationநாகூர் புறா.விவசாயிகள் போராட்டமா?