நாலு பேர்..

அருணா சுப்ரமணியன்

நாலு விதமா 

பேசுவார்கள் என்றனர்…

நால்வரிடமே கேட்டேன்..

என்ன தவறு என்று?

அப்படித்  தான் 

என்றார் ஒருவர்..

இதெல்லாம் எதற்கு 

என்றார்  இன்னொருவர்..

தவறில்லை 

ஆனாலும் வேண்டாம் 

என்றார் மூன்றாமவர்..

என்ன கேள்வி 

கேட்கிறாய்?

என்றார் நாலாமவர் ..

ஒருவருக்குமே 

தெரிந்திருக்கவில்லை 

என் கேள்விக்கான 

பதிலையும் ..

என்னையும்…

 

Series Navigationவாங்க பேசலாம்!தொடுவானம் 164. அறுவை மருத்துவப் பயிற்சி.