நித்ய சைதன்யா கவிதை

Spread the love

நித்ய சைதன்யா 

தனிமைச் சதுப்பு

உள்வாங்கிய

விதை கிழித்து

ஓராயிரம் வண்ணத்தீற்றல்கள்

 

உன்னை நினைவுறுத்தி

அடுக்குகள் தோறும்

அலைவீசிக் கிடந்த ஜ்வாலைகளில்

அப்பவும் இல்லை

பனித்துளி ஏந்திய புல்நுனி

 

சிறிய குவளைகளில்

ததும்பிய  நீர்மை

ஆழத்தில் கொண்டிருந்தது

பகிரப்படாத இச்சைகளை

 

காற்றைத் தட்டி எழுப்பிய

இலைகள் அறியாது

உறக்கமறுந்து தவிக்கும் நிசிகளை

 

நகர்த்த முடியா சுமையென

கடக்க இயலா நதியென

கனத்துக்கிடக்கும் காலத்தின் சுவடு

 

நினைவுக்குவட்டில் வந்தமரும்

ஒற்றை முகம்

ஒளிப்புள்ளியாய் இருளில் தோன்றும்

 

விடியலைப்போல

தீதும் நன்றும் பிறிதில்லை

 

 

Series Navigation’ரிஷி’யின் நீள்கவிதை – பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா…..!ஹாங்காங் தமிழ் மலரின் ஏப்ரல் 2016 மாத இதழ்