நிரந்தரமாய்…

வீட்டை
வாடகைக்குக் கொடுத்துவிட்டு
வீதியில் நிற்கும் ஒருவன்..
கரையான் புற்றில்
கருநாகமாய் ஒருவன்..
கல்லை அரிசியில்
கலப்பவன் ஒருவன்..
வாங்கிக்
கடித்து பல்லை
உடைப்பவன் ஒருவன்..
ஏழுகோடி பரிசென
எஸ்எம்எஸ் அனுப்ப ஒருவன்..
ஏமாந்து
இருப்புப் பணத்தையும்
இழப்பவன் ஓருவன்..
ஒன்றுக்கு ஒன்று இலவசம்
என்பவன் ஒருவன்..
வாங்கி
ஒன்றுமே இல்லாமல்
போய்விடும் ஒருவன்..
இந்தப்
பட்டியலுக்கு முடிவில்லை…!

ஏமாற்றுபவன்.. ஏமாறுபவன்..
இரண்டும் மனிதன்தான்,
இரண்டும் நிரந்தரம்தான்…!

-செண்பக ஜெகதீசன்…

Series Navigationதீபாவளி நினைவுகள்என் பாட்டி