நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா… 26 ஏப்ரல் 2013..

நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும்
விழா…..
26 ஏப்ரல் 2013—நீல பத்மநாபனின் 75 வயது நிறைவு
நாள்……

சென்ற ஆண்டுக்கான நீலபத்மம் தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா 26 ஏப்ரல் 2013 வெள்ளிக்கிழமையன்று மாலை 5.30க்கு தமிழ்ச்சங்கம் பி.ஆர்.எஸ் அரங்கில் நடைபெறவிருக்கிறது.அவ்வமயம் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் மா திருமலை ,மலையாள மொழி இயல் துறைத் தலைவர் முனைவர்  எம்.ஆர். தம்பான், நவீன விருட்சம் ஆசிரியர் திரு.  அழகிய சிங்கர், கவிதாயினி திருமதி திலகபாமா, திரு  குளச்சல் யூசப் -இன்னும் பல தமிழ், மலையாள  அறிஞர்கள் பங்கெடுக்கிறார்கள்.பரிசுபெற்ற கவிதையும் ,  கதையும் அவற்றின் ஆசிரியர்களே வாசிக்கிறார்கள்.தவிர  விழாவில் வெளியிடவிருக்கும் நீல பத்மநாபனின் கவிதைத்  தொகுப்பிலிருந்து ஒருசில கவிதைகள்  வாசிக்கபடவிருக்கிறது. .சங்கச்செயலாளர்  க.வானமாமலையின் ந்கைச்சுவை நிகழ்ச்சி கூத்தரங்கின் சார்பில் மேடையேறுகிறது. நீலபத்மநாபனின் சில தமிழ், மலையாள நூல்கள் வெளியிடப்படுகின்றன.
அனைவரும் வருக.

செயலாளர்

திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம்

Series Navigationகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 2மாமன் மச்சான் விளையாட்டு