பதிவுகள்

Spread the love

 

மஞ்சுளா

என் கனவுக் கூட்டுக்குள் 

வந்தடையும் 

இரவுப் பறவைகளின் சிறகுகள் 

விடிந்ததும் முறிந்து விடுகின்றன 

அதிகாலைக் குளிரில் 

நீளவானின் நிறம் 

மெல்ல மாறி வருகிறது 

கடமைகள் பூத்த பகல் 

என்னை நகர்த்தி விட 

அனிச்சையாக 

உடல் வேகம் பெறுகிறது 

தொடர் காரியங்களில் 

உள்ளம் தொலை தூரம் 

சென்று விட…. 

அசதியும் சோர்வுமான 

வேளைகளில் 

வியர்வை பூத்த உள்ளங்கையை 

விரித்துப் பார்க்கிறேன் 

ஓய்வு நேரத்திலும் 

உழைப்பின் கவிதைகளாக 

பதிந்தே கிடக்கிகின்றன 

கைரேகைகள் 

               -மஞ்சுளா 

Series Navigationசொல்வனம் இணைய இதழின் 236 ஆம் இதழ்அனார் கவிதைகள்- ஒரு சுருக்கமான அறிமுகம்