பல

உதய சூரியன்

 

சொத்துக்கள் பல குவித்த
நல்ல மனிதர் இறந்தார்
மனைவிக்கு புத்திசுவாதினம்
மகள்கள் இருப்பிடம் தெரியவில்லை
இழவு வீட்டையே
வெறித்து நோக்கும் தெருவாசிகள் !!!
—————- ———————————– ——————
ஒன்றோடு ஒன்றான கால்கள்
சில மணித்துளிகளில் தளர்ந்தன, நகரவில்லை
இந்த சாதாரண கனவுகளை
நான் ரசிப்பது இல்லை
பிறிதொரு நாளில்
என் கால்கள் தளர்தன
வலிக்கு நிவாரணமில்லை
இன்று அந்த சாதாரண கனவை
அன்றைய பொழுதில்
ரசிக்க விழைகிறேன்
ரசித்த பின் காலம் முடியட்டும்
பிறிதொரு நாள் வேண்டாம்

———————

ஒரு சிறிய கோப்பைக்குள்
சிறிதளவு தண்ணீர்
ஒரு சிறிய கல்லை போடுவதற்குள்
பாறங்கற்களை போட்டார்கள்
கோப்பை நொறுங்கினாலும்
தண்ணீர் சிதறிக்கிடந்தது
கிடைக்க எளிதானது

………………………………..
சத்தம் கேட்டு
திரும்பிப் பார்த்தேன்
ஊமை பேசிக்கொண்டிருக்கிறாள்
வாகன ஓலி எழுப்ப
கனவு கலைந்தது
சமூகத்தில்தான் தான் இருக்கிறேன்
சந்தேகமில்லாமல் கண்டது
`கனவே` தான்
………………………..
சும்மா இருக்கிறேன்
கூச்சலிடுகிறேன்
விவேகமற்று சிரிக்கிறேன்
காரணமில்லாமல் தெருக்களில் திரிகிறேன்
உருப்பிடு , உருப்பிடுங்கள்
கேலி ,அன்புக் கட்டளைகளைக் கேட்டும்
சும்மாதான் இருக்கிறேன்!
மலைகளில் ஏறி அங்கே
சும்மா தேனீர் அருந்தி
இயற்கையை ரசிக்காமல்
கிழே இறங்கி உலா வருகிறேன்
சும்மாதான் இருப்பேன் !-
இறந்தும்
என் வீட்டுப் போட்டோவில்,
காற்றில் கலக்கப்போகும் என் அணுக்களில்
சும்மா இருப்பேன்
அன்றும்
இவர்களின் கூச்சல்கள்
எனக்கு கேட்கப்போவதில்லை!
……………….

எழுதி,கிழித்த காகிதங்களில்
பேசா மௌனங்கள் தினமும்
என்னை சிலுவையில் அறைகின்றன
உயிர்த்தெழுவதில் சட்டச் சிக்கல்கள் இல்லை
உண்மையின் சுவடுகள் கரைவதில்லை
காற்றில் கலக்கின்றன
பருக பயம்
உணரப் போவது
என் சுயமல்லவா
—————————–

Series Navigationபோதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 9வால்ட் விட்மன் வசன கவிதை -12 என்னைப் பற்றிய பாடல் – 5