புதல்விக்கு மடல்

Spread the love

 

 
 
சி. ஜெயபாரதன், கனடா
 
 
களைத்து
அந்திப் பொழுதில் கதிரோன்
அடிவானில் மூழ்குது.
மங்கிடும் மாலை மயங்கிக்
கருகிடும். 
இருளுது கண்கள் நீர் சொட்டி
கால்கள் முடங்குது.
காபி தம்ளர் கனக்குது
கைகள் வலுவின்றி.
காலன் வந்து விட்டானா ?
மருத்துவ மனையில்
காப்பாற்ற 
முனையுது டாக்டரும்
துணைக் குழுவும்.
மூக்குக் குழல் வேண்டாம்
நாக்கு முடங்கி
வாய்க் குழல் எதற்கு ?
ஆயுள் நீடிப்பு எதற்கு 
உயிர்வாயு எதற்கு ?
போக விடுவீர் என்னை,
பிழைத்திட முயலாதீர்,
உழைத்தது போதும்,
உயிர் இனி இயங்க
முடியாது,
முடங்கும் உடல்.
உடம்பில் வலி தெரியாது
எடுத்துக் கொள்வீர்:
இருதயம், கிட்னி, காற்றுப் பை
கண்கள், இவை
என் இறுதிக் கொடை. 
அறுத்துக் கொள்வீர்
செத்தும் கொடுப்பேன்,
ஆயினும்
விடுவிப்பீர் என்னை.
 
================
Series Navigation“  மேதகு  “ ஏற்படுத்திய எண்ண அலைகள் – திரைமொழிக்கு வரவேண்டிய ஈழத்தமிழினத்தின்   அவலப்பட்ட   கதைகள்  ஏராளம்  உண்டு