மனப்பிறழ்வு

Spread the love

 

  • ஒருபாகன்

உழைத்தோய்ந்த நேரத்தில் அல்லது

உயிர் கசந்த நேரத்தில்

அசை போடும் மாடு போல

அகழ்வாராயும் மனது

 

அறியாப் பருவ அனுபவங்கள்

அடுக்கடுக்காய்ப் பொங்க

உறைந்து போன உணர்வுகள்

உயிர் கசக்கிப் பிழிய

 

பேச்சும் புரிதலும்

புலம் காக்கக் கூடுகையில்

பேசுவதற்கு எவருமில்லை

புரிதலுக்கு சாத்தியமுமில்லை

 

பற்றுகளும் ஈர்ப்புகளும்

பொருளற்று போக

பெருவெளிப் பயணம் துவங்க

மனப்பிறழ்வே தலைவாயில் !!

 

  • ஒருபாகன்
Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 276 ஆம் இதழ்குறளின் குரலாக சிவகுமார்