மருத்துவக் கட்டுரை ஹைப்போதைராய்டிசம்

Spread the love

ஹைப்போதைராய்டிசம் என்பது கேடயச் சுரப்பு நீர் குறைபாடு அல்லது குறைக்கேடய நிலை..

தைராய்டு சுரப்பி இரண்டு ஹார்மோன்களைச் சுரக்கிறது. அவை T3, T4 என்பவை. கடல் வாழ் உணவுகள், உப்பு, ரொட்டி போன்றவற்றில் உள்ள ஐயோடின் ( Iodine ) பயன்படுத்தி இந்த சுரப்பி ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த இரண்டு ஹாமோங்ககள் உடல் வளர்ச்சி. செல்களின் செயல்பாடுகளுக்கு இன்றியமையாதவை. இவை குறைவுபட்டால் பல்வேறு விளைவுகள் உண்டாகும்.

ஹைப்போதைராய்டிசம் எதனால் ஏற்படுகிறது?

* ஹாஷிமோட்டோ வியாதி- இதில் தைராய்டு சுரப்பி வீங்கி    பெரிதாகத் தெரிதும். இது சில குடும்பங்களில் மரபு வழியாக தோன்றலாம். இது உண்டானால் ஹார்மோன் சுரப்பது குறைந்துபோகும். இதை இரத்தப் பரிசோதனை மூலமாகவும், ஸ்கேன் பரிசோதனையாலும் கண்டறியலாம். இது ஒரு சுய எதிர்ப்பு நோய். அதனால், உடலின் எதிர்ப்புச் சக்தி தவறாக தைராய்டு சுரப்பியை தாக்கி வீக்கத்தை உண்டுபண்ணுகிறது. இதைக் கண்டுபிடித்தவர் ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் ஹக்காரு ஹாஷிமோட்டோ என்பதால் இதற்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

* தைராய்டு சுரப்பி அழற்சி – இது வெள்ளை இரத்த செல்களால் உண்டாவது. இது பெரும்பாலும் குழந்தை பிரசவித்த உடனே தாய்க்கு வரவல்லது.

* கதிரியக்க ஐயோடின் அல்லது அறுவை சிகிச்சை மூலம் தைராய்டு சுரப்பி பாதிக்கப்படுகிறது. இவை இரண்டுமே ஹைப்பர்தைராய்டிசம் சிகிச்சை முறைகள். இவற்றால் தைராய்டு சுரப்பி நிரந்தரமாக சுரக்கும் செயலை இழந்துவிடலாம்..

* மூளையில் உள்ள பிட்டியூட்டரி சுரப்பியும் ஹைப்போதேலமஸ் எனும் சுரப்பியும் தைராய்டு சுரப்பியைக் கட்டுப்படுத்துகின்றன. இவை இரண்டும் காரணமாக இருந்து தைராய்டு ஹார்மோன் குறைவுபடலாம். இது நேர்ந்தால் வீக்கம் இருக்காது.

* ஐயோடின் சத்து குறைபாடு – உணவில் ஐயோடின் சத்து குறைந்தால் தைராய்டு சுரப்பி வீங்கி, ஹார்மோன் உற்பத்தி குறையும்.

                  அறிகுறிகள்

ஹைப்போதைராய்டிசம் ஏற்படுத்தும் அறிகுறிகள் மிகவும் சாதாரணமானவை. சிலருக்கு அறிகுறிகள் இல்லாமல்கூட போகலாம். அவை வருமாறு:

* களைப்பு

* மனச் சோர்வு அல்லது மன அழுத்தம்

* எடை கூடுதல்

* குளிர் தாங்க முடியாத நிலை

* அதிக தூக்கம்.

* உலர்ந்த சொரசொரப்பான ரோமம்

* மலச்சிக்கல்

* உலர்ந்த தொல்

* இரத்தத்த்தில் அதிக கொலஸ்ட்ரால்

* கவனமின்மை

* உடல் வலி

* கால்கள் வீக்கம்

நோய் முற்றினால் உண்டாகும் ஆபத்தான அறிகுறிகள்

* கண்கள் சுற்றி வீக்கம்.

* குறைவான இருதயத் துடிப்பு

* குறைவான உடல் வெப்பம்

* இருதய செயலிழப்பு

* நெஞ்சில் நீர் கோத்தல்

* கோமா நிலை

                               சிகிச்சை

ஹைப்போதைராய்டிசம் தைராய்டு ஹார்மோன் குறைவினால் உண்டாவதால் T4 மாத்திரை வடிவில் உட்கொள்ள வேண்டும். சிலர் வாழ்நாள் முழுதும்கூட மாத்திரையை தொடர வேண்டிவரும்.

( முடிந்தது )

Series Navigationநோ செண்டிமெண்ட்ஸ் மம்மி!கமலா இந்திரஜித் கதைகள்முப்பது ஆண்டுகளாகப் பேசவில்லைநவீன அரபு இலக்கியம் : எச்.பீர்முகமது நூல் அறிமுகம்தாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 42மருமகளின் மர்மம் – 12