முடியாத் தொலைவு

Spread the love

கசக்கி எறிந்த காகித வார்த்தைகள்
உறைந்து மடிகின்றன …

காத்திருக்கின்றது
இன்னும்
எச்சமாகி நிற்கும் விகுதிகள்

எதிலும் பூரணத்துவம்
பெற்றிருந்த அவ்வார்த்தைகள்
ஒரு சில நேரங்களில்
முரண்படுகின்றன

அவ்வேளைகளில்
வீரியம் அதிகமாக …
வெளிவரும் ஒவ்வொன்றிலும்
தொக்கி நிற்கும் ஒரு துளி விஷம் ….

விடுதலற்ற கணக்காகி எங்கிலும்
எச்சமென தொடரும் அவை ..
என்றும்
முடியாத் தொலைவு வரை ….

ஷம்மி முத்துவேல்

Series Navigationஅக்கறை/ரையை யாசிப்பவள்காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்!