வம்சி சிறுகதைப் போட்டி முடிவுகள்


 

சற்றுமுன் வம்சி பதிப்பகத்தின் சார்பில் சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. (நடுவர்கள்: எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், பிரபஞ்சன், தமிழ்நதி)

 

முதல் பரிசுக்குரிய சிறுகதை: (பரிசுத் தொகை ரூ.10000)

 

காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – எம்.ரிஷான் ஷெரீப்

 

 

இரண்டாவது பரிசுக்குரிய சிறுகதைகள்: (ஒவ்வொன்றுக்கும் பரிசுத் தொகை ரூ.5000/-)

 

1.இரைச்சலற்ற வீடு – ரா.கிரிதரன்

 

2. யுகபுருஷன் – அப்பாதுரை

 

 

தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் (ஒவ்வொன்றுக்கும் பரிசுத் தொகை ரூ.1000/- வீதம்)

 

1.படுதா – போகன்

 

2.சுனை நீர் – ராகவன்

 

3.உயிர்க்கொடி – யாழன் ஆதி

 

4,அசரீரி – ஸ்ரீதர் நாராயணன்

 

5.பெருநகர சர்ப்பம் –  நிலா ரசிகன்

 

6.கொடலு – ஆடுமாடு

 

7.கலைடாஸ்கோப் மனிதர்கள் – கார்த்திகைப் பாண்டியன்

 

8.பம்பரம் – க.பாலாசி

 

9.அப்ரஞ்ஜி – கே.ஜே.அசோக்குமார்

 

10.முத்துப்பிள்ளை கிணறு – லஷ்மிசரவணக்குமார்

 

11.கல்தூண் – லதாமகன்

 

12.கருத்தப்பசு – சே.குமார்

 

13.மரம்,செடி,மலை – அதிஷா

 

14.அறைக்குள் புகுந்த தனிமை – சந்திரா

 

15.வார்த்தைகள் –  ஹேமா

 

 

இந்த சிறுகதைத் தொகுப்பிற்கு முதல் பரிசு பெற்ற கதையான “காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்” என்ற பெயரே வைக்கப்படுகிறது. தொகுப்பு சென்னை புத்தகக் கண்காட்சிக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடந்துகொண்டு இருப்பதாக வம்சி பதிப்பகத்தின் சார்பில் சொல்லியிருக்கிறார்கள். விரைவில் புத்தக வெளியீடு நடத்தி அதில் பரிசுத்தொகை வழங்குவதற்கு திட்டம் இருக்கிறது. அதுகுறித்து வம்சி பதிப்பகத்திலிருந்து, வெற்றிபெற்ற பதிவுலக எழுத்தாளர்களுக்கு மெயில் அனுப்பப்படும்.

 

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும், போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு பாராட்டுக்களையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

Series Navigationதனாவின் ஒரு தினம்பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை