வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே…

Spread the love

சடசடவென பொழிந்த மழைக்குப் பின்னான புழுக்கம்
சரசரவென அடித்த காற்றால் தின்றழிக்கப்படுகிறது
ஒன்றை எப்பொழுதும் வேறொன்று வீழ்த்தக் காத்திருக்க
வருத்தமெதற்கு வளரும் தொப்பை குறித்து
பாரம் சுமக்கும் உடல் அறியும்
பருமன் குறைக்கும் ரகசியங்களை
மெலிந்த தேகத்தோடு இருந்தவன்
உரையாடிக் கொண்டிருந்தான்
சொல்லுதல் யாவர்க்கும்… குறள் தவளையாக குதிக்க
ஒரு கோலினால் திருப்பிவிட்டேன்
மனம் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை
மீண்டும் துழாவிடத் துவங்க
வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
என்னிடம் வாருங்கள்…

பாவம் இயேசுபிரான்
இப்பாரம் குறித்தெல்லாம் அறிந்திருக்கமாட்டார்.

Series Navigationநினைவுகளின் சுவட்டில் – (84)கவிஞர் தேவதச்சனுக்கு விளக்கு விருது