வாராது வந்த மாமணி – எங்கள் அப்துல்கலாம்

This entry is part 9 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

அப்துல் கலாம் மறைந்துவிட்டார்.ஆம் நம் கண்கள் பனிக்கின்றன. இந்திய சாதாரண மக்களின் உள்ளம் கவர்ந்த கள்வன்.
விதிவசத்தால் கால்கள் ஊனமாகி ஆனால் எப்படியும் நடக்கத்தான் வேண்டும் என முயலும் மனிதர்க்குத்தரப்படும் செயற்கைக்காலகள் எடைமிகக்குறைந்து அவனுக்கு அது சுகம் தரவேண்டுமென எண்ணி அதன் பாரம் குறைத்த.குணவான்.
ஒரு அணு விஞ்ஞ்ானி இந்திய விண்ணியல் செயல்பாடுகள் உலகை பிரமிக்கவைக்க அடித்தளமிட்ட மாமனிதர்களின் திருக்கூட்டத்துத்தலைவன்.
ராமேசுரம் எனும் குட்டித்தீவில் தீவில் ஒரு அரசாங்கத்து ஆரம்பப்பள்ளியில் தமிழ் வழி பயின்றதால் கூட அக்னிச்சிறகுகள் அவருக்கு முளைத்திருக்கக்கூடும்.சமீபமாய் கலாம் அவர்கள் சோசப் கல்லூாயில்தனக்குப் பவுதிகம் பயிற்றுவித்த ஆசிரியரைக்கண்டு வணங்கிய வரலாற்றுக்காரர்..
இசை அரசி சுப்புலட்சுமிக்கு பாரத ரத்னா கவுரவ விருது தர சென்னையில் அவர் இல்லம் சென்று மரணப்படுக்கையில் இருந்த அவருக்கு புன்னகை முகிழ்க்கக்காரணமானவர்.
குடியரசுத்தலைவர் மாளிகைக்கு சொந்த ச்சிற்றூரின் ஆரம்பப் ஆசிரியர்களையும் நண்பர்களையும் உறவுகளையும் தன் சொந்தச்செலவில் சாதாரண ரயில் வசதியில் டில்லிக்கு அழைத்துச்சென்று தன் ஆகப்பெரும் பதவி ஏற்புகாண வைத்த குழந்தை மனசுக்காரர்.
வேத உப நிடத கருத்துக்களில் ஆழத்தோயும் பெருமனிதர் கலாம் நடிகர் விவேக் தன்னைத் தொலைக்காட்சியில் பேட்டி காணவந்தபோது மகிழ்ந்துபோனவர் .இப்படியும் சாத்தியமா என்று எண்ணி எண்ணி சிறிய மனசுக்காரர்கள் அதிர்ந்துபோனார்கள்.
கன்னியாகுமரியில் கம்பீரமாய் நிற்கும் திருவள்ளுவர் சிலை வளாகத்தில் குறள் மீது கலாம் கொண்ட காதலால் தன் குறிப்புக்களை தந்து அவை அந்த கல்பலகையில் இன்றும் ஒளிர்கின்றன. நற்பணி முடித்திட்ட அப்போதைய முதல்வர் திரு. கருணாநித அவர்கள்ி அவர் மீதுகொண்டுள்ள அளப்பரிய மரியாதையை நாம் உணர இது ஓர் வாய்ப்பு
இளைஞ்ர்களை நேசித்த உத்தமர்.அவர்கள் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். இந்திய மனித ஆற்றலை அடிமனதின் ஆழத்திலிருந்து நேருவுக்குப்பிறகு தரிசித்த நேர்மையாளர்.
இந்தியாவைத்தன் குடும்பமாக ப்பார்த்து அனுபவித்தவர்.தேவையில்லாத ஒரு சிறு சொல்லையும் அவையில் பயன்படுத்தாத மனித எடுத்துக்காட்டு.
படகுக்காரனின் மகன். மீீனவர்களின் நண்பன்.மத இன மொழி வேறுபாடு கடந்து மக்கள் அவரை நேசித்தனர். இவ்வுயரிய பதவிக்குஅன்னாரைத்தேர்வு செய்தவரும் ஒரு பெரியமனதுக்காரரே.
டில்லி விமான நிலையத்தில் அமெரிக்க விமான நிறுவனம் அவர் மாண்பு போற்றாது அவரை ஆய்வுசெய்து பயணிக்கச்செய்ததுண்டு.சிறியவை பொருடபடுத்தாத பக்குவ மனிதரே கலாம்.
பட்டினிச்சாவுகளும் பளிங்கு மாளிகைகளும் எம் தேசத்தில் உண்டு.புத்தனும் காந்தியும் அம்பேத்கரும் கலாமும் இங்கே பிறந்ததால் சுடும் ரணங்களை.எம்மக்கள் பெரிது படுத்த விரும்பவது இல்லை.
கலாம் ஏற்றிய மனித் நேய மாண்பு ஒளி பாரதத்தை நம்பிக்கையோடு இனி வழி நடத்தட்டும்
—-

Series Navigationஅப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார்மாஞ்சா
author

எஸ்ஸார்சி

Similar Posts

Comments

  1. Avatar
    BS says:

    யாராவது கொஞ்சம அனலடிக்கலான ஆபிட்சுவரி எழுதுங்கோ. கலாம் பொதுவாழ்க்கை வாழ்ந்தவர். நமக்கு அவரை அப்படித்தான் தெரியும். அவர் அண்ணன், அண்ணிக்கு உறவினருக்கே அவர் வேறுமாதிரி தெரிவார். அவர்கள் துக்கமும் நம் துக்கமும் வேறானவை.

    பொதுவாழ்க்கை மனிதர்கள் மறையும் போது ஆபிட்சுவரிகள் உணர்ச்சிகரமாக எழுதக்கூடா என்பது நான் கற்ற மரபு.

    என் ஆபிட்சுவரி ஆங்கிலத்தில் படிக்கவிரும்புவோர் இங்கே போகவும்: https://siliconshelf.wordpress.com/2015/07/29/அப்துல்-கலாம்-அஞ்சலி//

    ஆபிட்சுவரிக்குத் தமிழ் அஞ்சலி என்று வராது. அஞ்சலி என்றால் ட்ரைப்யூட். ஆபிட்சுவரி அனலிட்டிகல். அஞ்சலி நிறை மட்டுமே பேசுவது.

    பத்து அஞ்சலிக் கட்டுரைகள் வந்தால் ஒன்றாவது ஆபிட்சுவரியாக இருக்க வேண்டுமென்பது என் அவா. It isn’t bad if a public personality is analysed after his death.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *