வால்ட் விட்மன் வசன கவிதை -12 என்னைப் பற்றிய பாடல் – 5

This entry is part 17 of 26 in the series 24 பிப்ரவரி 2013

​வால்ட் விட்மன் வசன கவிதை -12

என்னைப் பற்றிய பாடல் – 5

(Song of Myself)

(1819-1892)

(புல்லின் இலைகள் -1)

மூலம் : வால்ட் விட்மன்

தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
+++++++++++++++

 

புவியில் பிறந்தது எத்தகை அதிர்ஷ்ட மென

எவராவது நினைத்த துண்டா ?

எனக்குத் தெரியும்,

அப்படிச் சொல்வோரிடம்

விரைவில் நான் சொல்வேன்

இறப்பதும் ஓர் அதிர்ஷ்டம் என்று !

புறக்கணிப்பேன் மரணத்தை நான்

இறப்பிலும், பிறப்பிலும்

புதிதாய்க் குளித்த சிசுவாய் !    

தலை முடிக்கும், கால் தடத்துக்கும் 

இடையே  நான்

அடைபட்டுப் போன தில்லை !    

 

அப்படிச் சொல்வோரிடம் பன்முகத் துறைப்

பண்டங்களை ஆய்ந்து பார் !    

அனைத்தும் இனியவை.

புவி இனியது ! விண்மீன்கள் இனியவை !

அவற்றோ டிணைந்ததும் இனியவை !

நானொரு பூமி அல்ல !

பூமியோடு ஒட்டியவ னல்ல !

நாட்டு மக்களின் துணைவன் நான்

கூட்டாளி நான் !

என்னைப் போல் பிறரும் நிலைத்து

எந்நாளும் வாழ்பவர் தான் !

ஆழமற் றவர் தான் !

(அழியாதவர் என்றவர் அறியார்

ஆனால் நான் அறிவேன்)

 

ஒவ்வொரு வகுப்பும் தனக்காகத் தான்

உருவாகி உள்ளது !

நானிருப்பது எனக்காகத் தான் !

ஆணோ பெண்ணோ

தானிருப்பது தனக்காகத் தான் !

எனக்கவர் இளைஞராய் இருப்பர்,

வனிதை யரைக் காதலிப்பர்.

மனிதன் பெருமைப் பட வேண்டும்

தன்னைப் பற்றி !

மனிதனைப்

புறக்கணித்தால் குத்தும் என்னை !

இனிய காதலியும்,

வயதான பணிமாதும் எனக்கு

அன்னையர் !

தாய்மார் களின் தாயார் ஆவர் !

 

புன்னகை புரியும் இதழ்களும்

கண்ணீர் சொரியும் விழிகளும் எனக்குத்தான் !

பிள்ளைகளும், பிள்ளை களைப்

பெற்றோரும் எனக்குப் பிடித்தவர் !

அமணமாய் நிற்கிறாயா ? அதற்குன்னைப்

பழித்திட மாட்டேன் ! உன்மேல்

சலிப்படை யேன் !  விலக்கி விடேன் !

கட்டமிட்ட ஆடையுள் ஊடுருவிக்

காண்கிறேன்

உள்ளாயா நீ இல்லாயா என்று !

நிலைத்து நிற்கிறேன்

களைப்பின்றிச் சேமித்த வண்ணம்

அசைத்துத் தள்ள முடியாமல் !   

+++++++++++++

தகவல்:

1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]

3. Britannica Concise Encyclopedia [2003]

4. Encyclopedia Britannica [1978]

5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

[ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan] (February 20, 2013)

http://jayabarathan.wordpress.com/

 

Series Navigationபலஅக்னிப்பிரவேசம்-24
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *