விசரி

Spread the love

ஆதி பார்த்தீபன் 

நாளாக்கிய
நாளொன்றில்
அவள் வந்திருந்தாள்
நாளான
புண்ணிடமும்-நசுக்கப்பட்ட
சீழிடமும்
கதை பேசிக்கொண்டிருந்தாள்
சிக்கிய முடிவழி-திக்கிய
பேனினத்தை
சிக்கெடுத்து
ஓடவிட்டாள்
அவள் காதலில் தோற்று
பைத்தியமானவளோ..!!
விரல்களை
நளினம் செய்து
காற்றுடன்
காதல் பேசினாள்
அவள் தன்
உரப்புகளை
மீட்கத் தொடங்கியிருந்தாள்
ஆண்கள் பற்றிய
வசைகளுடனும்
ஒன்றிரண்டு
காமக் கூச்சலுடனும் ..!!
மேலாடை களைவதற்காய்
மிகைப்பட்ட
முயற்சியொன்றை
எடுத்துக்கொண்டாள்
களைந்த ஆடைகட்கிடையில்
கறைபடிந்த அந்த
செய்தியை புரட்டிக்கொண்டிருந்தாள்
கவர்ச்சி விழுங்கும்
உலகத்திடம்…!!
thitthu13@gmail.com
Series Navigationகவிதைதியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதை நூலின் மீது ஒரு மதிப்பீடு