விண்ணையும் சாடுவோம்

Spread the love


கௌசல்யா ரங்கநாதன்
        ———-
ஐயா, நீங்களா! இந்த எழை வீட்டைத்தேடி”  என்ற அந்த பெண்மணியிடம், “ஏன் நான் வரக்கூடாதா? இன்னொண்ணு..நீங்க ஏன்
வேலைக்கு வரலை இன்னைக்குனு கேட்க நான் இங்கே வரலை..”
“ஐயா நானும் ஐயா வீட்டில் வேலைக்கு வராததற்கு ஒரு பொய்யான காரணத்தை சொல்ல விரும்பலை..அதுவும் படியளக்கிற
தெய்வத்தாண்ட..”
“தொ¢யும்மா..நீங்க வராததற்கான காரணம்..உங்க ஒரே பெண் போன செமெஸ்டர்ல நிறைய அ¡¢யர்ஸ் வச்சிருக்காளேனு கூனிக்குறுகித்
தானே வீட்டு வேலைக்கு கூட வரலை..இதெல்லாம் ரொம்ப சின்ன விஷயம்மா..அவ நல்லா படிக்கிற பெண்தான்னு தொ¢ஞ்சுதானே
எங்க எஜுகேஷனல் டிரஸ்ட் மூலம், பாரபட்சம் பார்க்காம, சாதி,மத வித்தியாசம் பார்க்காம, ஆணா, பெண்ணானு பார்க்காம அடிப்படை
வசதிகள் இல்லாம, ஆனா படிச்சு வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வரணும்னு மட்டும் நினைக்கிறவங்களா, எங்க டிரஸ்ட் உறுப்பினர்கள்
மூலம் கண்டறிந்து, கல்லூ¡¢களில், பள்ளிகளில் இடம் வாங்கிக்கொடுத்து,செமெஸ்டர் ஃபீஸ், ஹாஸ்டல் செலவு, லாப்டாப் இன்னபிற
வசதிகளை..இதை நான் இங்கே விளம்பரப்படுத்திக்கிறதா மட்டும் நினைக்காதீங்க..உண்மையிலேயே வறுமைக்கோட்டுக்கு கீழே
இருக்கிறவங்களா, அதிலும் பெண்களுக்கு முன்னு¡¢மை கொடுத்துக்கிட்டு வரோம்..உங்களுக்கு ஒண்ணு சொல்ல விரும்பறேம்மா..
நான் பள்ளியில் படிக்கிற காலத்தில் ஒரு வருஷம் ஃபெயிலாயிட்டேன்..எங்களது வசதியான குடும்பம்தான்..அப்பா எங்க கிராமத்து
பஞ்சாயத்து தலைவர்..ஊ¡¢ல் எந்த நல்லது, கெட்டதுனாலும் அவர்தான் முன்னே நிற்பார்..நானும் நல்லா படிக்கிறவன்தான்..ஆனாலும்
அந்த வருஷம் ஆன்யுவல் பா£ட்சையின் போது எனக்கு டைபாய்ட் காய்ச்சல்..அப்பல்லாம் டைபாய்ட் காய்ச்சல் வந்தா குணமாக பல
நாட்களாகும்..அதனால் என்னால் சா¢யா படிக்க முடியாமப் போயிருச்சு..ஊ¡¢ல் பலபேர்கள் அப்பா கிட்ட சொன்னாங்க..ஒரு டாக்டர்
சர்டிஃபிகேட் வாங்கிக் கொடுத்தீங்கன்னா, பாஸ் போட்டுடுவாங்களேனு.. இன்னம் சிலரோ ” நதியின் பிழையல்ல” ன்ற கவி
வாக்கியத்தை சொன்னாங்க..ஆனா, அப்பா, “அவன் இன்னொரு வருஷம் படிச்சு பாஸ் பண்ணட்டும்..இதுக்காக நான் யாரண்டயும்
போய் நிற்க விரும்பலை..இதை சாக்கா வச்சு நாளைக்கே இன்னொருவர் எங்கிட்ட வந்து ஒரு கா¡¢யத்தை முடிச்சு கொடுக்க சிபா¡¢சு
பண்ணச்சொல்லலாம்..அதுக்கு என் மனசாட்சி இடம் கொடுக்காதுனு” சொல்லிட்டார்..எனக்கு அப்ப, அப்பா மேலே கோபம் வந்தாலும்
இன்னைக்கு எனக்கு “அப்பா தி கிரேட்னு” நினைக்கத் தோணுது..அப்பா போனப்புறம் எங்க பூர்வீக சொத்துக்களை துராக்கிருத
வழியில் ஆக்கிரமிச்சுக்கிட்டவங்களை இன்னைக்கு கோர்ட் தண்டிச்சிருச்சு..சின்ன வயசில அனாதையாய் ஆதா¢க்க யாருமில்லாம
நின்ன என்னை எந்தவித ரத்த சம்பந்தமும் இல்லாத ஒருவர்தான், அவருடைய வறுமை நிலையிலும் தத்தெடுத்துக்கிட்டு படிக்க
வச்சார்.. என் மகனும் இப்ப ஸ்டேட்ஸ்லயிருந்து டாலர்களாய் அள்ளி கொட்டறான்..அரசாங்கத்தில பொ¢ய வேலையிலிருந்து நான்
¡¢டயரானப்புறம்தான் ஏழ்மைநிலையால படிக்க முடியாம இருக்கிறவங்களை கண்டறிஞ்சு எனக்கு வந்த பூர்வீக சொத்து, மற்றும்
பணிக்கொடை பூரா தவிர மகன் ஸ்டேட்ஸ்லயிருந்து அனுப்பற பணத்தையெல்லாம் ஒரு எஜுகேஷனல் டிரஸ்டாக்கி, குடும்ப
உறுப்பினர்கள் தவிர நேர்மையான அன்புள்ளம் கொண்ட சிலரையும் உறுப்பினர்களாக்கி இந்த டிரஸ்டை 11 வருஷங்களா நடத்திக்
கிட்டு வரோம்மா..” என்ற என்னிடம் அந்தம்மா,
“ஐயா உங்களை பத்தி தொ¢யும்..ஆனா என் மகள் மட்டும் ஏன் ஐயா அ¡¢யர்ஸ் வைக்கணும்..அதுவும் மத்த பசங்கள்ளாம் ரொம்ப
நல்லா படிக்கிறப்ப..மனசு வெறுத்து போச்சுங்க ஐயா..இவளுக்கு செய்யற செலவை இன்னொரு ஏழைக்கு செஞ்சீங்கனா உங்களை தலைமுறைகள் வாழ்த்தும்..இவ என்னைப்போலவே கிடைக்கிற வேலையை செஞ்சுக்கிட்டு அஞ்சுக்கும்,பத்துக்கும் லோல் படட்டும்”.
“அப்படியெல்லாம் பேசாதீங்கம்மா..உங்க பெண் நல்லா படிக்கிற புத்திசாலிப் பெண்தானே?”
“ஆமாங்க ஐயா..ஆனா இப்ப அவ கவனம் வேற எங்கோ..சொல்லவே நா கூசுது..அதாவது லவ், அது,இதுனு இருக்குமோனு”.
“நோ..அப்படியெல்லாம் பேசாதீங்கம்மா உங்க பெண்ணை பார்த்து..அவளை பத்தி நல்லா விசா¡¢ச்சாச்சு எங்க டிரஸ்ட் உறுப்பினர்கள்
மூலம்..குனிந்த தலை நிமிராத, வெட்டி அரட்டை அடிக்காத பெண்ணுனு சொல்றாங்க..அடிப்படையில வேற ஏதோவொண்ணு அவ
மனசை டிஸ்டர்ப் பண்ணுதோனு தோணுது..அவகிட்ட நான் கொஞ்சம் பேசி பார்க்கலாமா?” என்று நான் கேட்டுக் கொண்டிருக்கையில் அந்தப் பெண் கல்லூ¡¢யிலிருந்து வந்தாள்..அவளிடம் தனியே பேசியபோது தொ¢ய வந்தது என்னவென்றால் அவள் படிக்கும்
கல்லூ¡¢யில் இவள் ஒருத்தி, மற்றும் கல்லூ¡¢ பி¡¢ன்சிபல் தவிர, மற்ற அனைவருமே ஆண்கள் என்றும், எந்தவொரு விஷயத்தையும்,
படிப்பில் எழும் சந்தேகங்களையும் ¨தா¢யமாய் யா¡¢டமும் போய் கேட்க கூச்சமாயும், பயமாயும் இருப்பதாகவும் எந்த சமயத்தில் என்ன
நடக்குமோ என்ற அச்சமே குடி கொண்டிருப்பதாகவும், அதனால்தான் அ¡¢யர்ஸ் வந்துவிட்டதாகவும் சொல்லியழ, “பூ
இவ்வளவுதானா?சா¢ உன்னை ஒண்ணு கேட்கிறேன்..நீயாவது இன்னம் ஒண்ணு,இரண்டு வருஷங்கள்ள படிப்பை முடிச்சுட்டு வெளில
வந்துடப்போறே..ஆனா என்னதான் உங்க கல்லூ¡¢ பி¡¢ன்சிபாலா இருந்தாலும் அவங்களும் ஒரு பெண்மணிதானே, அதுவும் ஆயிரக்
கணக்கில் படிக்கிற அந்த கல்லூ¡¢யில்..சா¢..அதை விடு..நாளைக்கே உன்  படிப்பு முடிஞ்சு நீ வெளியில் வேலைக்கு போற இடத்தில்
அதிக அளவில் ஆண் ஊழியர்கள் இருந்தா, அந்த வேலையை வேணாம்னு சொல்லிடுவியா..இன்னைக்கு எத்தனை பெண்கள் படிப்பு
முடிஞ்சு பல தொழிற்சாலைகளிலும், பொ¢ய மல்டி நேஷனல் நிறுவனங்களிலும் தலைமை பதவிகளில் இல்லை! அமைச்சர்களா இல்லை.
விஞ்ஞானிகளாய் இல்லை..விமானம் ஓட்டலை..எல்லாம் நாம் பார்க்கிற பார்வைலதான் இருக்கு..”:உனக்கு நீதான் நண்பன்..நீதான்
விரோதினு” ஒரு சொலவடை உண்டு..சா¢..நீ இந்த கல்லூ¡¢யில் சேர்ந்து 2 வருஷங்களாச்சுல்ல..இதுவரை உங்கூட படிக்கிற கோ-
ஸ்டூடண்ட்ஸால உனக்கு எதனாச்சும் பிரச்சினை வந்திச்சா” என்ற போது “இல்லை அங்கிள்..என்னை பார்க்கிறவங்க சி¡¢ச்சுக்கிட்டே
“குட் மார்னிங்..குட் ஈவ்னிங்னு சொல்லிட்டு நிற்காமக்கூட போயிடறாங்க..” என்ற என்னை பார்த்து “சார் இப்ப உங்க பேச்சை
கேட்டப்புறம் என் மனம் தெளிவடைஞ்சுருச்சு..இனி மனசில வீணான பயத்தை ஏற்படுத்திக்காம என் பாடங்களில் மட்டும் கவனம்
செலுத்துவேன்” என்ற போது, “விஷ் யூ ஆல் தி பெஸ்ட்” என்றேன்..
                                                                      ———    

Series Navigationகவிதைஅவள் வானத்தில் சில மழைத் துளிகள்