விழி

சு. இராமகோபால்

 

சாதாரணமான அவனுடன்

பேச்சு அறுபட்டுவிட்டது

அறுபது ஆண்டுகளுக்கு மேலிருக்கும்

கல்லூரி விடுதியில் நடந்தது

அறுபட்டது ஞாபகமிருக்கிறது

எதனாலென்பதைக் காலம் விழுங்கிவிட்டது

எனக்குக் கோபம் வந்தது

ஞாபகமிருக்கிறது எதனாலென்பதைக்

காலம் விழுங்கிவிட்டது

சின்னஞ்சிறுசுகளாகத் தொடங்கியபோது

வகுப்பில் நின்று வாத்தியாருக்கு

விரலைக் காட்டுவோம் மணியடிக்குமுன்

வெளியே போக

ஒண்ணுக்குப் போக எல்லோரும்

ஆள்காட்டி விரலைக் காட்டுவார்கள்

இவன் தன்நடுவிரலைக் காட்டியவன்போல்

சந்தேகம் எழுகிறது

நடுவிரல் எனக்கு அறிமுகமானது

அமெரிக்கா வந்து சில ஆண்டுகளுக்குப் பின்தான்

இப்பொழுதெல்லாம்

இங்கே நடுவிரல்கள்

சர்வ சாதாரணம்

 

Series Navigationவள்ளல்உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 2 – தி இமிடேசன் கேம்