வெளி ரங்கராஜனின் ” ஊழிக் கூத்து “

வைதீஸ்வரன்

வெளி     ரங்கராஜனின்      ”  ஊழிக் கூத்து “”   ஒரு   தனி    மனிதனின்

          பல் வேறு வகையான  அனுபவங்களின்    கலவையான      தொகுப்பு
         .  அதை  வாசிக்கும் போது  கடந்த பல   ஆண்டுகளாக  தமிழ் சூழலில்
         நிகழ்ந்த  கலாசார  நிகழ்வுகள்…இலக்கிய   வெளிப்பாடுகள்
      நவீன நாடக  முயற்சிகள்  அரசியல் பிரச்னைகள் கருத்தியல் பற்றிய
     விவாதங்கள்   இப்படி
     பல  அம்சங்களைப் பற்றிய   எதிரொலிகள் அபிப்ராயங்கள் விவரணகள்
     விமர்சனங்கள்   இவை யாவும்   சீரான  சிந்தனை  செறிவுடன்
       சொல்லப் பட்டிருக்கின்றன  .
         ஆசிரியரின்  பல் வேறு அனுபவ எதிரொலிகள்  மூலம் வாசகன்  இந்த
   கட்டுரைப் பொருள்  பற்றி  மீள் சிந்தனைக்கும்   புதிய விவாதங்களுக்கும்
   தூண்டப்படக் கூடும்.  அதே  சமயம்    இத்தகைய  நிகழ்வுகளை
 கவனிக்கத் தவறியவர்களுக்கு   ஒரு அவசியமான    தகவல்களாகவும்
    மீண்டும் அக்கறை கொள்ளத் தூண்டக் கூடிய    ஆவணமாகவும்
      பயன்  படலாம்.
             இதில் நாடக நிகழ்வுகள் பற்றிய  விவரணைகள்  உத்திகள்   கருத்துகள்
  எல்லாம்    மிக நுணுக்கமாக விவரிக்கப் பட்டுள்ளன.  நவீன  நாடகங்களைப்
 பார்க்கத் தவறியவர்களுக்கு   இது ஒரு முக்கியமான  ஸ்வாரஸ்யப்
 படுத்தக்   கூடிய  தகவல்
         கட்டுரை பகுதியில்   பெரிய கோவிலும்  தேவதாசி
     மரபும்;  தமிழில் தேவாரம்   செங்கொடியின் தீயாட்டம்  போன்ற
 கட்டுரைகள்     மிகவும்  ஆழமும் செறிவும் கொண்டவை.
         முக்கியமாக   செங்கொடியின் தீயாட்டம்     சொல்லுகிற விஷயம்
    ஒரு புனை கதையின் ஸ்வாரஸ்யத்துடன்   சொல்லப் பட்டிருக்கிறது
   .
            ராஜீவ் காந்தி  கொலைக் குற்றவாளிகளுக்கு  தண்டனை வழங்கியதை
    எதிர்த்து  தீயிட்டு மாய்த்துக் கொண்ட  செங்கொடி     கோவலனுக்கும்
    மாதவிக்கும் பிறந்த மணிமேகலையின் மறு பிறவி  என்று   நம்பும்படி
     சூழல்  இடம்    ஒத்திசைந்திருப்பதை   ஒரு கட்டுரையாக்கி இருக்கிறார்.
      ரங்கராஜன்.
                இத்தகைய  அனுபவங்களை  ஒரு  சேரப் படிக்கும் போது ஒரு கால
      கட்டத்தின்  உணர்வு   நம் மனதில் இயல்பாக  அழுத்தமாக  பதிகிறது.
  அதையும்தவிர   தன்   காலப் போக்கின் நிகழ்வுகளில்   அக்கறையும்
 சுரணையும்  கொண்டு வாழ்ந்தவரின்   சாட்சிகளாக  தொனிக்கின்றன
     இவைகள்.     வெளி ரங்கராஜனுக்கு  வாழ்த்துக்கள்
                                                    வைதீஸ்வரன்
Series Navigationநான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….. 11. கல்கி – விந்தனின் ‘முல்லைக்கொடியாள்’சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 2