‘யாரோ’ ஒருவருக்காக

Spread the love

சொன்னதையே
திரும்பத் திரும்ப
பச்சை மரம் சொல்வதாக
அலுத்துக்கொண்ட நிழல்
கறுப்பு வா¢களில்
மொழிபெயர்ந்து கிடக்கிறது
காலடியில்.

அனைத்தும் சொல்லிவிட்டாலும்
சும்மாவாய் இருக்கிறது
நீலவானம் என
முணுமுணுக்கிறது மரம்.

ஒன்றுபோல்தான் என்றாலும்
தானே முளைக்கும் புல்போல்
மனம் என்ன நினைக்காமலா
இருக்கிறது?

சொல்லி அலுத்தாலும்
எல்லாம் புதியனவாய் இல்லாவிடினும்
பழையனவற்றை
எப்படிச் சொன்னால்
நல்லது என நானும்….

எப்படி ஏற்பது என
‘யாரோ’வுமாய்….

—ரமணி

Series Navigationவண்ணார் சலவை குறிகள்காயகல்பம்