அண்டவெளிப் பயணங்கள் என்னும் விஞ்ஞான நூலை சென்னை தாரிணிப் பதிப்பக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார்

This entry is part 3 of 7 in the series 17 ஜூன் 2018

அன்புள்ள திண்ணை வாசகர்களே,

அண்டவெளிப் பயணங்கள் என்னும் விஞ்ஞான நூலை சென்னை தாரிணிப் பதிப்பக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார் என்று மகிழ்ச்சியுன் தெரிவித்துக் கொள்கிறேன்.

1945 இரண்டாம் உலக யுத்த முடிவில் அணுகுண்டு முதன்முதலாய் ஜப்பானில் போடப்பட்டு, அணுயுகம் துவங்கியது. அடுத்து ராக்கெட் பொறிநுணுக்கம் விரிவாகி 1957 இல் ரஷ்ய ஸ்புட்னிக் ஏவிப் பூமியைச் சுற்றி வந்து, அண்ட வெளி யுகம் பிறந்தது. அணுயுகமும், அண்டவெளி யுகமும் ஒன்றாய் விளைந்த மாபெரும் வரலாற்று மைல்கல் நிகழ்ச்சியாய்ப் பொன்னெ ழுத்துக்களில் பொறிக்கபட்ட வேண்டியது. 1960 ஆண்டுகளில் சந்திரனைத் தேடிய விண்வெளிப் பயணங்களில் அமெரிக்கா வின் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் 1969 இல் அப்பெல்லோ-11 விண்கப்பலில் மற்றும் இருவருடன் மூவராய், முதன்முதல் பூமியைத் தாண்டிச் சுமார் 250,000 மைல் கடந்து நிலவில் தடம் வைத்துப் பாதுகாப்பாய் பூமிக்கு மீண்டனர்.

கப்பல் மாலுமி கொலம்பஸ் இந்தியாவுக்குப் புதுக்கடல் மார்க்கம் காண துணிச்சலுடன் மேற்குத் திசையில் பயணம் செய்து, கரீபியன் தீவுகளில் கால்வைத்து முதன்முதல் வட அமெரிக்காவைக் கண்டதற்கு அடுத்தபடி, வேறொரு கோளான நிலவில் தடம் வைத்தது விண்வெளித் தேடல் வரலாற்றில் முதன்மை மைல் கல்லாய் நிறுவப்பட வேண்டியது. அடுத்து மனிதர் இயக்கும் விரைவு விண்கப்பல் செவ்வாய்க் கோளைச் சுற்றிவந்து, 2025 ஆண்டுக்குள் மனிதர் தடம் வைத்துவிடுவார் என்று உறுதியாக எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த விஞ்ஞானக் கட்டுரைகள் அனைத்தும் கடந்த 18 ஆண்டுகளாகத் [2001 – 2018] திண்ணை.காம், வல்லமை.காம் வலைத் தளங்களில் தொடர்ந்து வெளிவந்தவை. அவற்றைப் பொறுமைடன் வெளியிட்ட திண்ணை ஆசிரியர் ராஜாராம், துக்காராம் அவர்களுக்கும், வல்லமை அதிபர் அண்ணா கண்ணன், ஆசிரியை திருமிகு பவள சங்கரி திருநாவுக்கரசு ஆகியோருக்கும், சிறந்த முறையில் படங்களுடன் அச்சிட்டு வெளியிட்ட தாரிணி பதிப்பக அதிபர் வையவன் அவர்களுக்கும் என்னினிய நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.

நூலின் பக்கங்கள் : 450
விலை : ரூ. 450.
கிடைக்குமிடம் :

தாரிணி பதிப்பகம்
A4, Ramea Flats
32/79 Gandhi Nagar
4th Main Road,
Adyar, chennai- 600020

Ph: 99401 20341

Series Navigationஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 10- கோஹட்டோ(Taboo)தொடுவானம் 226. இது கடவுளின் அழைப்பு
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

  1. Avatar
    A.Chandran says:

    அன்பு சகோதரர் S . ஜெயபாரதன் அவர்களின் நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா பக்கத்தை இன்று படித்தேன் ,பரவசமானேன் , அறிவியல் தகவல்களை தமிழில் தந்தமைக்காக ,எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்
    A . சந்திரன்.காளையார்கோயில்

Leave a Reply to A.Chandran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *