அர்த்தராத்திரி ஃபோனும், மாணவர்கள் நிலையும்

author
122
0 minutes, 5 seconds Read
This entry is part 23 of 29 in the series 24 மார்ச் 2013

student

ராஜேந்திரன்

 

இன்று இலங்கையில் மாட்டிக் கொண்டிருக்கும் சாமான்ய மக்களின் அல்லல்களுக்காக குரல் கொடுக்கப்படுவது மிகச்சரியே…

உலகின் எந்தப் பகுதியெனினும், சாமான்ய மக்களுக்காக குரல் கொடுக்கப்பட வேண்டும்.

ஆனால், அதே நேரத்தில் மாணவர்களை தங்களது இயக்க நோக்கங்களுக்காக உபயோகப்படுத்துவதும் நடக்கிறது.

இதில் பேராபத்தாக நான் நினைப்பது –

அமெரிக்காவில் இருந்து வரும் அர்த்த ராத்திரி போன்கள்.

கண்ணைக் கசக்கி,

Good evening… no no good morning sir.. – என்றால்,

”என்னது ,வணக்கம் என்று சொல்லுங்கள்.

தமிழன் பண்பாடு அது.

அமெரிக்கா வந்தும் நாங்கள் வணக்கம் என்று தான் சொல்கிறோம்.” -என்பர்

( வணக்கம் என்று சொல்லாமல் விட்டதால், அரை மணி நேரம் காச்சி எடுத்த புண்ணியவான் இப்போது அமெரிக்காவில் $100,000 வாங்கிக்கொண்டு, பொழுதுபோகாமல் , தமிழ்நாட்டில் தமிழ்மொழி கல்வி வேண்டும் என்று இணையத்தில் எழுதிக்குவிக்கிறார் )

வாரக் கடைசியில் பிள்ளைகளை, தமிழ் வகுப்பில் போட்டிருக்கிறோம் ,என்பார்கள்.

பின், கூடங்குளம், ஈழப் பிரச்சனை என்று ஆரம்பித்து இவனை உசுப்பேத்தி விடுவார்கள்.

நம்மள மாதிரி உணர்ச்சி பொட்டலம் கரெக்டா இவனுகள்ட்ட மாட்டும்.

நமக்கோ வீட்டில், அமெரிக்காவில இருந்து இரண்டு மணி நேரம் பேசுறாங்க என்று பெருமை….

இந்தப் போதை தான் இன்று அதிக நாசம் செய்கிறது.

தமிழ்நாட்டில் இருப்போரை தமிழில் படிக்கச் சொல்லும் இவர் போன்றோர், தங்கள் பிள்ளைகளை வளர்ப்பது அமெரிக்காவில்.

சிட்டிஸன் ஆனவுடனே, ஊர்ல வந்து தான் பிள்ளைகள படிக்க வைக்கனும் என்று வீடு பிளாட் வாங்கிப் போட்டிருக்கேன் என்பார்கள்.

பின், பிள்ள நான் சொல்றத கேட்கலை அதனால், அவங்க இங்கேயே டெக்ஸ்ஸாஸ்ல போட்டிருக்கேன். .என்பார்கள்.

”ஏன், அட்வைஸ் பண்ணலையா, “ என்று கேட்டால்,

இங்கெல்லாம் தலையிட முடியாது, அப்புறம் அது டீச்சருக்கு தெரிந்தால், போலீஸிடம் புகாராக போயிடும், பிரச்சனை என்பார்கள்.

அங்கு வேலை கிடைக்காட்டி கூட உரிமை பேசி, பிசா பர்கர் என்று வக்கனையா திங்கலாம்…

ஆனா, இங்கு …?

ஏற்கனவே, பட்டம் பெற்ற மாணவர்கள் வேலைக்கு எடுக்கும் அளவிற்கு தகுதியில்லை என்று மறுத்தல்அதிமாக இருக்கிறது..

இந்த லட்சணத்தில் யாரையோ யாரோ பழிவாங்க தூரத்தில் இருந்து இந்தக் குட்டையில் கல்லெறிந்து கொண்டு.

முன்பு ஜெயை திட்டினார்கள். இன்று அம்மா என்கிறார்கள்.

கலைஞரே, உலகத் தமிழர் தலைவர் என்றார்கள், இன்றோ, கிழவன் என்று திட்டு…

ஒரு குறிப்பிட்ட ஜாதியை மிக மிக கேவலமாகத் திட்டுவார்கள்.

ஆனால் இன்று இந்த போராட்டமே அந்த ஜாதி சேர்ந்த பத்திரிக்கை தரும் நியூஸ் முறையால் தான் நடக்கிறது.

அரவணைப்பாக இருந்து, போராட்டங்களை தொடர அனுமதிப்பதும் அந்த சாதி சேர்ந்த முதல்வரால் தான்.

இவர்களிடமிருந்து தமிழக மக்கள் தங்கள் குழந்தைகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

”அமெரிக்கா , இந்த விஷயத்தில் அராஜக நிலை எடுத்திருக்கிறது”- என்ற கோஷத்திற்க்கு அவர்கள் தூபம் போட்டால்,

முதலில் அவர்களை அமெரிக்க குடியுரிமை, கிரீன் கார்ட்டு அல்லது என்ன நிலையோ அதெல்லாம் திரும்பக் கொடுத்து விட்டு, தங்களது பிள்ளை குட்டிகளுடன் திரும்ப வ்ந்து போராடச் சொல்லுங்கள்.

1965 – மாதிரி போராட்டம் என்கிறார் ஒருவர்.

இன்று என்ன ஆனது அதனால்.?

முச்சந்தியிலும், நாற்சந்தியிலும் கண்ணகிக்கு கற்பு 100% இல்லை மாதவிக்கு 100% என்று மேடை கண்டு விடிய விடிய கூத்தடித்தது தாண்டி என்ன நடந்தது…?

இன்று சிபிஎஸ்ஸி, ஐஜிசிஎஸ்ஸி முறையென ஆக்கிரப்படுகிறதே, கல்வி முறை அதற்கு என்ன செய்தீர்கள்.

யூ பி எஸ் ஸி யில் பிராந்திய மொழி இல்லையென்ற போது என்ன செய்தீர்கள் ..?

அனுபவத்தால், கனிமொழி, ஹிந்தி படியுங்கள் என்றால் அவரை கேவலமாக விமர்சிப்பது. (அவரது அரசியல் 2ஜி பற்றி ஒரு பக்கம் இருக்கட்டும்.)

அவர் சொன்னதில் என்ன தவறு..?

ஹிந்தி தாண்டி , நீங்கள் ஆங்கிலமுடன் அமெரிக்கா வரை சென்று விட்டு , இங்கிருப்போனை தூண்டி விட்டு சிரிப்பது உங்களது மனநிலை கோளாறு தானே..?

கனடாவில், பிரஞ்சும் ஆங்கிலமும் கற்று குடியுரிமை பெற தகுதி அதிகரிப்பது மட்டும் எப்படி சரி…?

அங்கு தமிழ் மட்டும் தான் என்று சொல்லலாமே…?

நமது மாநிலம் சார்பாக, காங், கம்யூ, பிஜேபி யில் ஆட்கள் இருந்தால் என்ன ..?

காங்கிரஸையும், பிஜேபியையும் தவிர்த்து இந்திய அரசியலோ, அதிகார அமைப்போ இல்லை. அதுவே உண்மை.

கம்யூனிஸ்டுகளை கூட்டங்களில் பேச விடுகிறார்கள்.

ஆனால், ரஷ்யாவும், சைனாவும் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலை தானே எடுத்திருக்கிறது…?

அதைத் தட்டிக் கேட்கலாமே… சிவப்பு சிந்தனையாளர்கள்.

இந்திய அமைப்பில் ஆயிரம் குறைகள் இருக்கலாம், அதற்காக தனியாகனும் என்பதில் என்ன விவேகம் இருக்கிறது.?

அமெரிக்காவில் இருந்து ஜாதிய தாக்குதல் நடத்தும் பலர், இன்போஸிசில் வேலை கிடைத்தால் என்ன வேண்டாம் என்றா சொல்லுவார்கள்.?

அவர்களுக்கு உண்மையில் தமிழர் நலன் இருந்தால்,

 

  1. ஆளுக்கொரு நிர்கதியற்ற தமிழர்களை தத்தெடுக்கலாம்.

  2. தாங்கள் முன்பு படித்த கல்லூரியில் ஒரு வகுப்பை, கண்காணிப்பு தத்து எடுக்கலாம், அதாவது அந்த மாண்வர்கள் ஒழுங்காக படிக்கிறார்களா.. இல்லை அவர்களுக்கு எந்த முறையில் வழிகாட்டுதல் தேவை என்று அறிந்து “ஸ்கைப்” மூலம் இலவச வகுப்புகளை வாரக் கடைசியில் எடுக்கலாம்.

 

முள்வேலி முகாமில் சித்திரவைதை ஆட்பட்ட குழந்தைகளை தத்தெடுக்கலாமே …?

அன்று காந்தி சொன்னது போல், விதவைப் பெண்களை மணம் செய்யலாமே..?

ஒரே ஒருவர், தமிழகத்திலிருந்து முகாம் போன போது தனது மகனுக்கு ஒரு பெண்ணை மணமுடித்தார். விகடனில் வந்தது.

அவர் கால்களுக்கு வந்தனம்.

இதை விட அதிகமான, அட்டூழித்தை பார்த்திருக்கிறது நாஸி பிரச்சனையால், ஐரோப்பிய தீபகற்பம்.

போலந்து போய் வரலாற்றுக் கண்காட்சி பாருங்கள்.

அதற்கப்புறம் இந்த நாடு எப்படி ஜெர்மனியுடன் இயைந்து வாழ்கிறது என்று வினவி அறிவீர்கள்.

நாஸிக்களுடன் பின் எப்படி ஒன்றிணைந்து வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டது என்று கேட்டறியுங்கள்.

வெனிசுலாகாரர் ஒருவர் இறந்ததற்கு ஒரு தமிழர் தலைவர் வீரவணக்கம் என்றார் போன வாரம்.

இந்த வாரம் வெனிசுலா ,இலங்கைக்கு ஆதரவாக நிலையெடுத்திருக்கிறது.

அதற்கு என்ன பதில் …?

உங்கள் பிள்ளைகள் இணையத்தில் ஆபாச படம் பார்த்திடும் என்ற பயம் தாண்டி,

இன்று கேடாக தவறான உணர்ச்சித் தூண்டுதலுக்கு ஆளாவது உணருங்கள்.

இல்லாவிடில் உணர்ச்சிவசப்படும் குணத்தை கட்டுப்படுத்த பயிற்சி எடுக்காமல் போனல், காலம், காசு, நிலம், தொழில், என்று இழப்பது உங்கள் குழந்தைக்கட்டு நடக்கலாம்…

அமெரிக்காவில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்த பட்சம் $50 டாலர்கள் சம்பாதிக்கிறார்கள்.

படிக்கும் காலத்தில் அவர்கள் இந்த மாதிரி போராட்டங்களில் என்ன நிலை எடுத்தார்கள் என்று கேளுங்கள்.

போட்டி போட்டு ஜெயிக்க முடியாமல், யாரையோ பழி வாங்குவதாக நினைத்து சக தமிழர் குழந்தைகளின் எதிர்காலத்தையே சவக்குழிக்குள் தள்ளுகிறார்கள்.

அமெரிக்காவில் சாமான்யன் வாழ்வு பாதுகாப்பு முறைப்படுத்தப்பட்டது.

அவர்களுக்கு வேலை முடிந்த காலகட்டங்களில், சோஷியல் செக்யூரிட்டியிலிருந்து பணம் கிடைக்கும்.

அவசர கால மருத்துவத்தை எந்த ஆஸ்பத்திரியும் மறுக்க முடியாது.

முதலில் ஆபரேஷன், பின் தான் பணம் கட்டவில்லையெனில் கேஸ் என்ற முறை.

பணத்தை கவுண்டரில் கட்டிவிட்டு வந்தால் தான் அவசர வைத்தியம் எனும் முறை கிடையாது.

ஒவ்வொரு ஆஸ்பத்திரி வாயிலிலும், “பிரசவத்திற்கு வருவோரிடம் எந்த கேள்வியும் கேட்கப்படாமல் வைத்தியம் பார்க்கப்பட வேண்டும்” என்றிருக்கும்.

தங்கள் குழந்தைகளை  நன்கு படிக்க வைக்க,

இங்கு எந்த ஜாதியினரை கேவலமாக பேசத் தூண்டுகின்றனரோ, அவர்கள் போல் , பரதநாட்டியம் யோகா தியானம் என கலை கட்டும் அவர்கள் வாழ்வு.

ல –விற்கும் ழ –விற்கு உச்சரிப்பு வித்தியாசம் தெரியாதோர் கூட,

இங்கிருக்கும் தமிழர்களை அர்த்த ராத்திரி ஃபோனிலோ ,ஃபேஸ் புக்கிலோ  தமிழ் தமிழர் இனம் எனத் தூண்டி விட்டுக் கொண்டு.

ஏன், அவர்கள் பிள்ளைகள் வகுப்புப் புறக்கணிப்பு செய்யலாமே..?

ரோட்டில் அமர்ந்து அமெரிக்காவில் போராடலாமே..?

ஏன், நமது இந்திய தமிழ் மாணவர்கள் மட்டும் கல்லூரி போகாமல் வீதிக்கு வர வேண்டும் ..?

அவர்களின் பிள்ளைகள் அமெரிக்காவில் அமெரிக்கர்களாக படிக்கிறது. அந்த பாஸ்போர்டுடன் மிடில் ஈஸ்டில் வேலை வாங்கினால்,

உங்கள் பிள்ளைகளின் இந்திய பாஸ்போர்ட் அடையாளத்துடனான சம்பளம் போல் 3 மடங்கு கிடைக்கும்.

உலகளாவிய வகையில் படிப்போர் அதிகமாகி வருகின்றனர். அதனால், நாளை வேலை கிடைப்பதற்கு நம் குழந்தைகளை தயார் படுத்த வேண்டும்.

தமிழில் படிக்க வையுங்கள் என்று சொல்லும் அவர்களின் குழந்தைகள்,

: ஸ்பெல்லிங்க் பீ : – எழுதுகின்றன. அதனால், ஆங்கில திறமை பண்மடங்காகிறது.

“குமான்” போன்ற வகுப்புகளில், கணிதத்தை கற்கின்றன.

இணையத்தில் கவிதையில் கலக்கும் ஒருவர் – அமெரிக்க குடியுரிமை பெற்றத் தமிழர் – மணம் புரிந்துள்ளது சீனப் பெண்ணை.

சொல்லப் போனால், இங்குள்ள பண வசதி படைத்தவர் போல் அங்கு சாமான்யனும் வாழ்கிறான்.

ஆனால், படிப்பையும் நாளை கிடைக்கப் போகும் வேலையையும் மட்டுமே நம்பி இருக்கும் நம் மாணவர்கள் நிலை…?

நம் மாணவர் நலனை பாதுகாக்க, பெற்றோர்களே அசட்டையாக இருக்க வேண்டாம்..

உணர்ச்சிகளை தூண்டி விட்டு, தங்களது இயலாமையை பொறுக்க முடியாமல், நம் மாணவர்கள் மூலம் பழி தீர்க்க பலரும் இணையத்தில் இருக்கிறார்கள்..

போராடுவது இன்றியமையாத விஷய்த்திற்காக இருக்க வேண்டும்,

 

  • இலவசக் கல்வி

  • குறைந்த பட்ச வேலை வாய்ப்புப் பயிற்சி முறைகள்

  • வேண்டிய மொழி கற்க இலவச மையங்கள்

  • டாஸ்மாக் , சினிமா போதைகள் எதிர்த்து..

  • ரவுடிகளை எதிர்த்து நார்மலாக வாழ முறைபடுத்தப்பட்ட காவல் நிலைய கலாச்சார முறை

  • லஞ்ச ஒழிப்பு

  • ஹவாலா ஒழிப்பு

  • கட்டப்பஞ்சாயத்து வாழ்வு முறை ஒழிப்பு

  • நடக்க முடியாத, சைக்கிளில் செல்ல முடியாத வாழ்வு முறைக்கான போராட்டம்

என எவ்வளவோ இருக்கு.

அதுவும் போக, காற்றில் கயிறு திரிப்பது போல் ஒரு குழுவிற்கு – அதுவும் அனைவரையும் புறந்தள்ளிய – ஆதரவாக மட்டும் குரல் எழுப்பி, நமது அரசியல் கட்டமைப்பின் மேல் காழ்ப்புணர்ச்சியை தூண்டும் இவர்கள்

 

  • அமெரிக்க தீர்மானம் பிடிக்கவில்லையெனில் அமெரிக்காவில் போராட வேண்டியது தானே..?

பண்ண மாட்டார்கள், ஏனெனில் அவனது வாழ்வு கெடும் என்று தெரியும். அதனால், சோதனைச் சாலை எலிகளாய் தமிழக மாணவர்கள் அவர்களுக்கு.

அதுவும், திடீரென போராடும் மாணவர்களிடம் குறிப்பிட்ட போஸ்டர்கள் கையில் கொடுக்கப்படுகிறது.

என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அவர்களும் அதை ஏந்தி…

இங்கு அரசியல் கணக்குகள் தீர்க்கப்படுகின்றன –

பாடம் சொல்லித் தர வேண்டிய ஒரு கல்லூரி, மத அரசியலுக்காக நிலை எடுக்கிறது.

“கிராஸ் பயரில் பொதுமக்கள் இறப்பது சகஜம் தான்” என்று சாமான்யர்கள் கொத்துக் கொத்தாய் கொன்று குவிக்கப்பட்ட போது சொன்னவர் இன்று ஆபத்பாந்தவர்.

பல தலைமுறைக்கு தமிழ் மொழியை காத்த கருணாநிதி இன்று விரோதி.

காங்கிரஸ் அரசு இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது எனத் தெரிந்தும் , ஆட்சி அதிகாரத்திற்காக அவர்களின் மேலும், திமுக மேலும் வெறுப்பு வரும் வகையில் இருப்பதால், தமிழக அரசே சாதூர்யமாய் இதை கட்டுக்குள் கொண்ட போராட்டமாக வைத்திருக்கிறது..

உண்மையில் இந்தப் பிரச்சனையால் வரும் பாராளுமன்ற வாக்கு போடுதலில் பாதிப்பு இருக்காது.

காங்கிரஸ் செய்யும் தவறு மீண்டும் மீண்டும் ப.சி யை முன் நிறுத்துவது.

பொதுமக்கள் வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வேறு என்பதை உணர வேண்டும்.

பொதுமக்கள் திரளும் போராட்டம் பொது மக்களுக்காக இருந்தாலே தாக்கம் ஏற்படுத்தும், அதில் அரசியல்காரணங்களுக்காக ஒரு இயக்கத்தின் தலைவர் மற்றும் கொடியினை திணிப்பது தோல்வியையே தரும்.

இந்த அரசியலில் பிள்ளைகள் ஏன் மாட்டவேண்டும் …?

கருணாநிதியின் மேல் இருக்கும் பல்தரப்பட்ட காழ்ப்பும் ,வெறுப்பும் இன்று சொல்லாமலே ஒன்றாகி இந்தப்பிரச்சனை யைமையமாக்கி தாக்குதல் நடக்கிறது.

ஒரு இனத்தின் வேதனை இன்று ஒரு தனி மனிதனின் அரசியலை ஆட்டங்காணச் செய்யவே உபயோகிக்கப்படுகிறது.

இதினால், எந்த விஷயத்திற்க்காக கருணாநிதி வெறுக்கப்படுகிறாரோ – ஊழல், ரவுடிகளை வளர்த்துவிட்டது, குடும்ப அரசியல், குறிப்பிட்டமத இன துவேஷம் – அந்த விஷயத்தை வெளிப்படையாக சொல்லி அவரை எதிர்த்தால், இன்னொரு கருணாநிதி அரசியல் முறை வராமல் இருக்கும்.

இல்லையெனில் ஒன்றும் பிரயோஜனமில்லை…

பெற்றோர்களே… சிந்தியுங்கள்,

முன் நின்று போராட்டத்தில், கூக்குரலிடும், பாடையில் உருவ பொம்மையை கொளுத்தி ஒழிக கோஷமிடும்,

நபர்களின் தரத்தை உங்கள் பிள்ளைகளிடம் கேளுங்கள் :

அவர்களின் தங்களுக்கான எதிர்காலத் திட்டம்

தற்போது வாங்கிக் கொண்டிருக்கும் மார்க்

ஏதாவது கல்வி சம்பந்தமாக ரிசர்ச் செய்கிறார்களா..? இணைய உதவிடயன் தங்கள் கல்வி சம்பந்தமாக அதிகமான அறிவுத் தேடலில் ஈடுபடுகிறார்களா..?

இல்லை, உலக அரசியல், செயல்பாட்டு முறை,

தீவிரவாதிகளின் மூளைச் சலவைக்கு ஆட்பட்டவர்களா..?

வெறுப்புணர்வை உமிழும் நபர்களால் கட்டுக்குள் வைக்கப்பட்டவர்களா

உலகப் பொருளாதார அறிவு

என்று அனைத்தும் கேளுங்கள்.

இதெல்லாம் விட,

தன் கண் முன்னே தன் தெருவில்

தன் வீட்டருகே

தன் வார்டில்

தன் ஊரில்

நடக்கும், அக்கிரங்களைத் தட்டிக் கேட்டார்களா என்று கேளுங்கள்.

ஒழுங்கான சாக்கடையில்லா ஊரைச் சரி செய்யத் தெரியாதவர்கள்

ரோட்டில் ஒன்னுக்கு போவதை தட்டிக் கேட்க முடியாதவர்கள்,

லஞ்சப் பேயை விரட்ட முடியாதவர்கள்

16 மணி நேர பவர் கட்டை சரி செய்ய எதுவும் செய்யாதவர்கள்,

உலக பிரச்சனையொன்றில்,

அமெரிக்க ஜனாதிபதி ஒழிக

என்பது

காங் ஒழிக என்பதும்

என்னத்தைப் பெற்றுத் தரும், என்று கேளுங்கள்.

 

கடனை வாங்கி பிள்ளைகள் நாளை இன்ஜினியர் / டாகடர் ஆவார் எனக் கனவுகாணும் பெற்றோர்களே, அவனது மார்க் ஷீட்டை பாருங்கள்.

தொடர்ந்து பாஸ் ஆகியிருக்க வேண்டும்.

பெயில் ஆயிருக்க கூடாது.

அவனது சப்ஜக்டில் அவனுக்கு பாஸ் ஆயிருந்தால் மட்டும் போதாது… அதில் விஷய ஞானம் இருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து தூண்டி விடுவோரிடம், வேலைக்கான உதவி கேளுங்கள், பின் தெரியும் நிலவரம்.

ஏற்கனவே, சிங்கப்பூரில் விசா முறைகளில் மாற்றம் வந்தாச்சு.

அமெரிக்கா விசா இனி குதிரைக் கொம்பு

லண்டன் ஜெர்மனி பிரான்ஸ் நாடுகளில் வேலைக்காக உள்ளேயே போக முடியாது.

கனடா , ஆஸ்திரேலியாவில் போய் படிப்போர் இப்போது அதிகம்.

40லட்சம் இருக்கிற்தா உங்களிடம், அங்கு உங்கள் பிள்ளைகளை அனுப்ப…

முன்பு மாதிரி, முட்டாள்கள் கூட பொய் பயோடேட்டா கொடுத்து வெளிநாடு போய் செட்டில் ஆனது இனி நடவாது.

மொழி முக்கியம் தான். அதனினும் முக்கியம் அதில் இருக்கும் அளப்பறிய தத்துவங்களும் சிந்தனைகளும்.

ஆங்கிலத்தையும் வெறுத்திருந்தால் இன்று நமது நிலை மோசமாயிருக்கும்.

ஹிந்தி வேண்டாம் என்று போராடினார்கள்,

ஆனால் இன்று சிங்கப்பூரில் பல இடங்களில் தமிழ் மொழி டிஸ்ப்ளே இல்லை. ஹிந்தியும் சிங்கப்பூர் அரசு மொழியாக்குவதற்கு பேச்சு நடக்கிறது.

இங்கு, இந்திய பள்ளிகள் சி பி எஸ் ஸி பாடத்திட்டம் வழங்குகின்றன.

( வந்து பாருங்கள், சிங்கப்பூரில் சில இடங்களில் தமிழர்கள் கூலிகளாய் வந்து படும் அவதிகளை.. அதற்கு போராடலாமே. )

மிடில் ஈஸ்டிலும் சிபிஎஸ்ஸி பாடத்திட்டம் இருக்கிறது.

அது போல், தமிழ்மொழி சார்ந்த ஸ்டேட் போர்டு பாடத்திட்டம் உண்டா..?

ஆஸ்திரேலியாவில் தலையாய பல்கலைக் கழகங்களில் ஸ்டேட் போர்ட் பாடத்திட்டத்திற்கு அங்கீகாரமே கிடையாது, அதாவது தமிழ்நாட்டு ஸ்டேட் போர்டில் படித்திருந்தால் அங்கெல்லாம் ( டாப்10 பல்கலைகளில் ) அட்மிஷன் கிடையாது.

இதெல்லாம் சரியாக நாம் என்ன செய்திருக்கிறோம்..?

இதெல்லாம் அறியுங்கள். இங்கு மாற்றப்பட வேண்டியது & போராட வேண்டியது நிறைய இருக்கு…

மொழியின் பெயரால் நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம், அரசியல்வாதிகள் பலரால்.

செண்ட்ரல் கவர்மெண்ட் அனைத்து மாநிலங்களுக்கும் சேர்ந்தது.

மன்மோகன் போய் நாளை மோடி வரலாம், இல்லை ஜெயாவோ அழகிரியோ, யாரோ வரலாம்.

தமிழகம் என்பது ஒரு அமைதிப் பூங்கா என்று சொல்வது உண்மையாயிருக்க வேண்டும்.

அப்போது தான் தொழில் தொடங்க வரும் கூட்டம் அதிகரிக்கும்.

**

காட்டையும் வித்தாச்சு

கழனியும் இல்லை..

காது கழுத்து நகை –

நம் பிள்ளையின்

கல்லூரி பீஸாச்சு…

இனி

பீஸா தின்று செரிக்காமல்

தூண்டிவிடும் வர்க்கத்தின்

சுயநலத்திற்கு பலியானால்-

நம்

பிள்ளைகள் தம் வாழ்வு

பீஸ் போன பல்பாகும்..

**

அன்றொருநாள், மாணவர்கள் தமக்காய் திரண்டபோது,

சுயநலமாய் அவர்களைப் பயன்படுத்தாமல்,

“போ… போ… போய் படிக்கிற வழியப்பாரு“ –என்று நம்மை

விரட்டியடித்த காமராஜரின் கூற்றே உண்மை.

காமராஜர் அப்போது திட்டியதைக் கேட்காமல்,

உணர்ச்சி தூண்டும்

பேச்சு, செயலுக்கு அடிமையாகி

அன்று அவரைப் புறந்தள்ளினோம்…

அவரது அரசைக் கவிழ்த்தோம்..

நமது வாழ்வைத் தொலைத்தோம்.

நமது வாழ்வை

நாம் தொலைத்தது போல்,

பெற்றோர்களே….

நமது பிள்ளைகளின் தலைமுறையிலும் தொடர வேண்டுமா …? சிந்தியுங்கள்.

Series Navigationபொதுவில் வைப்போம்செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு -7
author

Similar Posts

122 Comments

  1. Avatar
    paandiyan says:

    இதை எல்லாம் எளிதாக ஹாண்டில் பண்ண சொல்லி தந்த ஒர அக்மார்க் வழி உங்களை ஆரியன் என்றும் இன்னும் நீங்கள் மீறினால் தமிழன் இல்லை என்று ஜாதி சொல்லி திட்டத்தான். கொஞ்சம் பொறுத்தால் இங்கய நிறைய வரும்…

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    மாணவர்கள் படிக்கும் பருவத்தில் அரசியல் போராட்டங்களில் பங்குகொள்ளத் தூண்டக் கூடாதென்றும், அவரை இலவச ஏவு கணைகளாய்ப் பயன்படுத்தக் கூடாதென்றும், அரசியல் நரிகளுக்குக் கவசங்களாய் ஆக்கக் கூடாதென்றும் ஜெயஶ்ரீயின் “ஒரு தாயின் கீதா உபதேசம்” உண்மைக் கதை அறிவிக்கிறது.

  3. Avatar
    smitha says:

    பல தலைமுறைக்கு தமிழ் மொழியை காத்த கருணாநிதி இன்று விரோதி.

    Really ? Can you pls tell how?

    1. Avatar
      கண்ணன் says:

      இதைத் தவிர திரு. ராஜேந்திரன் சொல்லியிருக்கும் எல்லா விஷயங்களும் சாரமுள்ளது. அடுக்கு மொழி பேசினாலே தமிழ் வளர்ந்துவிட்டது என்ற தோற்றத்தை மட்டுமே கொடுத்தவர் கருணாநிதி; ஏறக்குறைய, சாதாரண தமிழைக்கூட தவறின்றி எழுத முடியாத நிலையில் கடந்த சில தலைமுறைகள் இருந்து வருவதற்கு இந்த கழக ஆட்சி காரணமில்லையா?

  4. Avatar
    புனைப்பெயரில் says:

    ஜெயபாரதன், கதை என்பது நான் முன்பே சொன்னது போல் மிகப் பெரும்பாலும் உணர்வுச் சொறிதலுக்கே பயன்படுகிறது. – மார்ஸிம் கார்கின் “தாய்” புதினம் போன்று விதிவிலக்குகளும் உண்டு. நீங்கள் கூட பேசாமல் விஞ்ஞான கட்டுரை வடிவின்றி வி.கதை எழுதலாமே..? வடை போச்சே என்பது போல், டில்லி பெண் கற்பழிப்பு மேட்டரில் ப.சங்கரி முந்தி கொண்டது போல், இந்த விடயத்தில் ஜெயசிரி முந்திக் கொண்டார். என்னை போன்றோர் சமூக பிரச்சனைகளில் கட்டுரை, ஆய்வறிந்த வியாக்கியானங்களே எதிர்பாரிக்கிறோம்… மாணவர் பிரச்சனையை பொறுத்தவரை இக்கட்டுரை பயத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. இன்னும் முகத்தில் அறைந்தார் போல் எழுதியிருக்க வேண்டும். இன்று கூட, இலங்கையில் தமிழ்ப் பெண்கள் ராணுவத்தில் சேர்ந்துள்ளதாக செய்தி வந்துள்ளது. நம்ம ஊரில் என்ன கருணாநிதி தான் மட்டும் இருக்கனும் என்று ஜெயை சுட்டுக் கொன்றாரா..? இல்லை ஜெ தான் மட்டும் தான் இருக்கனும் என்று கருணாநிதியை சுட்டுக் கொன்றாரா..? சோனியாவும், அத்வானியம், திருமாவும், ராம்தாஸூம், ஒருத்தரை ஒருந்தர் கொலை செய்து தாங்கள் மட்டுமே என்று நிலை கொல்கிறார்களா..? பின் இலங்கையில் மட்டும் ஏன் ஒரே ஒரு குழுவின் ஆதிக்கத்திற்கு வெண்சாமரம்..? அடிவயிறு பத்தி எரியும் – மலையகத் தமிழர்களை இவர்கள் படுத்திய பாடு கேட்டால்… இதையெல்லாம் எழுத இந்த கட்டுரையாளருக்கு தைரியம் இல்லை என்பதே என் கருத்து. பாதிக்கிணறே இவர் தாண்டியுள்ளார்… “பொதக்கடீர்..”

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      திண்ணை தினந்தந்திப் பேப்பர் இல்லை, புனை பெயரே ! வந்த செய்திகளின் நேர் /எதிர்த் தாக்கம் தருவது அதன் தொழிகளில் ஒன்று.

      வீடு, நிலத்தின் மேல் கடன் வாங்கி, பெண்டிர் கழுத்து நகைகளை எல்லாம் விற்று, ஆயிரிக்கணக்கான ரூபாய் ஆண்டாண்டு கப்பம் கட்டி மூன்று, நான்கு ஆண்டுகள் பணம் செலவழித்து, தமிழகக் கல்லூரியில் இடம்பிடித்து உண்ணா விரதம் இருக்கும் புதல்வர் புனை பெயரானுக்கு இப்போது இருக்கிறாரா ?

      அரசியல் குள்ள நரிகள் கல்லூரி மாணவர்களை ஓட்டுக்கும், நாட்டுக்கும் இலவச ஏவு கணைகளாவும், தமக்கு அரண் மதிலாகவும் வைத்துக் கொள்வதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.

      சி. ஜெயபாரதன்.

  5. Avatar
    புனைப்பெயரில் says:

    உணர்வு சொறிதல் என்பதை உணர்ச்சி சொறிதல் என்று முந்தைய பின்னூட்டத்தில் திருத்தி வாசிக்கவும். நன்றி.

  6. Avatar
    Ram says:

    தமிழக போராட்டங்கள் தங்களுக்கு தேவையான அதி அவசிய நோக்கங்களுக்கு இல்லை என்பதும் , மாணவர்கள் கல்வியை புறக்கணிப்பது சரியல்ல என்பதும் மிகவும் சரியே .

    ஆனால் நீங்கள் பேராபத்து என்று கருதுமளவுக்கு போன் கால்கள் உள்ளனவா என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.
    இப்போது நடை பெரும் போராட்டங்கள், இந்தியாவிலிருந்து அமெரிக்கா புலம் பெயரந்தவர்களின் தூண்டுதலால் நடை பெறுகிறது என்கிறீர்களா?

    இந்த நேரத்தில் ஏனோ கூடங்குள போராட்டம் நினைவுக்கு வருகிறது.

  7. Avatar
    சான்றோன் says:

    நானும் கடந்த பத்து நாட்களாக , படிக்கும் எல்லா இனையதளங்களிலும் இதே கருத்தைத்தான் பதிவு செய்கிறேன்…..என்ன செய்வது சார்? தமிழகத்தில் நாமெல்லாம் சிறுபான்மையினர்…….

    மேற்படி போராட்டங்களைப்பற்றி , ஒத்திசைவு திரு.ராமசாமி அவர்கள் நன்றாக . நாகைப்பிடுங்கிக்கொள்ளும் அளவுக்கு சில கேள்விகளை கேட்கிறார்……
    http://othisaivu.wordpress.com/2013/03/25/post-183/
    http://othisaivu.wordpress.com/2013/03/19/post-181/

    மேலும் , எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களது வலைதளத்தில் நரேந்திரன் என்ற வாசகர் எழுதிய கடிதத்தையும் இங்கே சுட்ட விரும்புகிறேன்….. http://www.jeyamohan.in/?p=34695

    மேலும் , எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களது வலைதளத்தில் நரேந்திரன் என்ற வாசகர் எழுதிய கடிதத்தையும் இங்கே சுட்ட விரும்புகிறேன்….. http://www.jeyamohan.in/?p=34695

    போராடும் மாணவர்களோ , அல்லது அவர்களை தூண்டிவிடுபவர்களோ இந்த நேர்மையான கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

  8. Avatar
    paandiyan says:

    மாணவர் எல்லாம் போராடிகொண்டுதான் இருகின்றார்கள் 15 வருடம் முன்பு இருந்தே இலங்கை பிரச்னையில். இப்போ இது புது பிரிண்ட் ரேஞ்சில் ரேக்கி விட பத்திரிக்கைக்கு இப்போது தேவை ஏன் என்றால் , நித்திக்கும், தேவநாதனுக்கும், காஞ்சிக்கும் வைத்த தீ இப்போது திராவிட சேனல் வழிய நாற்றமோ நாற்றம். அந்த நாற்றம் நக்கிரீனராருக்கும், கழுகுக்கும் வேர்க்காமல் இருக்க இதை வைத்து ஒரு பிழைப்பு. சரி சேனல் நாற்றம் எத்தனைநாள் மூடி மறைக்கமுடியும்??

  9. Avatar
    paandiyan says:

    //
    “கிராஸ் பயரில் பொதுமக்கள் இறப்பது சகஜம் தான்” என்று சாமான்யர்கள் கொத்துக் கொத்தாய் கொன்று குவிக்கப்பட்ட போது சொன்னவர் இன்று ஆபத்பாந்தவர்.

    பல தலைமுறைக்கு தமிழ் மொழியை காத்த கருணாநிதி இன்று விரோதி.//

    எனக்கு என்னோவோ இது டேஸ்சோ புஸ்சோ க்கு போகவேண்டிய பின்னோட்டம் இங்கு கட்டுரை வடிவில் வந்துவிட்டது போல இருகின்றது.

  10. Avatar
    Bala says:

    ஒரு சில கருத்துகளைத் தெளிவு செய்துகொள்வது நல்லதென்று நினைக்கிறேன். (அடைப்புக்குறிக்குள் இருப்பன மேற்கோள்கள் அல்ல)

    {மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது}
    அப்படியானால் இந்திய விடுதலைப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டதும் தவறா?

    ‘மாணவர்கள் மட்டும்தான் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. ஆனால் மற்றவர்கள் ஈடுபடலாம்’ என்று எடுத்துக்கொள்ளலாமா?

    {அமெரிக்காவில் வசதியாக வாழ்பவன் தொலைபேசிவழித் தூண்டிவிடும் ஒரு போராட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல} அப்படியானால் இந்தியாவில் இருந்துகொண்டே போராடுவதும் போராடத்தூண்டுவதும் தவறில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

    {காமராசரின் பேச்சைக் கேட்காததால் வாழ்வைத் தொலைத்தோம்} இதற்கு விளக்கம் வேணடும். திராவிடக் கட்சியை ஆட்சியில் அமர்த்தாத இந்தியாவின் மற்ற மாநிலங்களில் தேனும் பாலும் ஓடுகின்றனவா? தமிழ்நாட்டவரின் வாழ்வு மட்டும் எவ்வாறு தொலைந்துபோனது?

    போராடுபவர்கள் அனைவருக்குப் பின்னாலும் வேறு உள்நோக்கம் இருப்பது உண்மையானால் தங்கள் குடும்பமும் பரம்பரையும் ஆட்சிக்கு வரவேண்டும் என்னும் சுயநல நோக்கில்தான் நேரு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதும் உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். மற்ற இந்திய விடுதலைப் போராட்டக்காரர்களுக்கும் ஒரு உள்நோக்கத்தைக் கண்டுபிடிப்பது அப்படியொன்றும் அரிதானதல்ல.

    சிங்கப்பூர் பற்றி
    மலாய், சீன, இந்திய இனத்தவர் அனைவருக்கும் சம உரிமையும் சமவாய்ப்பும் வேண்டும், பெரும்பான்மையாக இருக்கும் மலாய் இனத்தவரின் மதத்தையும் மொழித்திணிப்பையும் ஏற்க மாட்டோம் என்று கூறி மலேசியக் கூட்டரசிலிருந்து விலகித் தனியானது சிங்கப்பூர். சீனர்கள் அந்தச் சிங்கப்பூரில் பெரும்பான்மையினராக இருந்தாலும் மற்றவர் மீது தங்கள் சீன மொழியை அவர்கள் திணிக்கவில்லை. அவரவரும் தத்தம் தாய்மொழியைப் படிக்க சம உரிமையும் சம வாய்ப்பும் அங்கே தரப்படுகிறது.

    அப்படியிருக்க இந்தியாவில் தமிழர்கள் ஏன் இந்தித்திணிப்பபை எதிர்த்து சரியில்லை என்று கருதுகிறீர்கள்? சமவாய்ப்பும் சம உரிமையும் இந்தியத் தமிழர்களுக்கு வேண்டாமா?

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      இந்த மாணவ உண்ணா விரதப் போராட்டத்தின் உள்நோக்கம் “தனித்தமிழ் நாடு”, தனி ஈழ நாடு கோரிக்கைகள், தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி ஒழிப்பு.

      நம் தமிழர் கட்சியின் போர் மேடை !

      மாணவர் உண்ணா விரதப் போராட்ட வேடத்தில் சிலர் “தனித்தமிழ் நாடு” வேண்டும் என்று கூச்சல் இடுகிறார்.
      சிலர் தமக்குப் பிடிக்காத “காங்கிரஸ் கட்சியைத்” தமிழ்நாட்டில் ஒழித்துக் கட்டு என்று வேட்டு வைக்கிறார்.

      இது அரசியல் சூதாட்டச் சடுகுடு விளையாட்டுக் களம்.
      காந்தி யுகம் போய்க் கலியுகம் பிறந்து 50 ஆண்டுகள் ஆச்சு ! இந்த வேடிக்கை நாடகங்கள். சுதந்திரப் போர்கள் அல்ல.

      1. Avatar
        சி. ஜெயபாரதன் says:

        http://www.youtube.com/watch?feature=player_embedded&v=alfMU97bZDg.

        மாணவர் உண்ணா விரதப் போராட்ட வேடத்தில் சிலர் “தனித்தமிழ் நாடு” வேண்டும் என்று கூச்சல் இடுகிறார்.
        சிலர் தமக்குப் பிடிக்காத “காங்கிரஸ் கட்சியைத்” தமிழ்நாட்டில் ஒழித்துக் கட்டு என்று வேட்டு வைக்கிறார்.

    2. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      எனது பார்வையில் – எனது சிற்றறிவுக்கு எட்டியவரை :

      கே : அப்படியானால் இந்திய விடுதலைப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டதும் தவறா?

      ப : இல்லை. ஆனால் இப்போது நிகழும் போராட்டத்தை இந்திய சுதந்தர போராட்டத்தோடு ஒப்பிட்டு குழப்பிக்கொள்கிறீர்கள். இங்கே ஈடுபடுபவர்களுக்கு எதற்காகா தாம் போராடுகிறோம் என்பதே தெளிவில்லாமல் இருப்பதாகத்தான் தெரிகிறது. மட்டுமில்லாமல் இது தன்னிச்சையான உத்வேகத்தோடு எழுந்த போராட்டமாக தெரியவில்லை. தன்னிச்சையானதாக இருப்பின் 2009-ல் முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவம் நடந்தபோதே அதை தடுத்து நிறுத்த போராடியிருக்கவேண்டும். சுயநலக்காரர்களின் கைப்பாவையாகி தமது வாழ்வை தொலைத்துவிடக்கூடாது என்பதே இந்த ‘கூடாது’-க்கு காரணம்.

      கே : ‘மாணவர்கள் மட்டும்தான் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. ஆனால் மற்றவர்கள் ஈடுபடலாம்’ என்று எடுத்துக்கொள்ளலாமா?

      ப : ஒரு மக்களாட்சி நடைபெறும் தேசத்தில் யாரும் எதற்காகவும் போராடலாம். ‘எதற்கு போராடுகிறோம்’, ‘இதனால் நிகழும் பின்விளைவுகள் என்னென்னவாக இருக்கும்’ (தமிழகத்தில் புத்த பிட்சுவை தாக்கினால் அது இலங்கையில் என்னவாக எதிரொலிக்கும் என்ற குறைந்தபட்ச சிந்தனை கூட இல்லாத …..), ‘மேற்கொண்ட குறிக்கோளுக்கு சாதகமாக இருக்குமா’, ‘போராட்டம் திசைமாறி போகுமா ?’ (தனித்தமிழ் நாடு …) ‘போராட்டத்தின் அடிப்படை காரணத்துக்காக தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்க இயலுமா அல்லது சில நாள் கூத்தாய் (சிலமணி உண்ணாவிரதம் போல) இதுவும் போய்விடுமா’ போன்ற அடிப்படை விஷயங்களில் தெளிவோ தீர்க்கமோ இல்லாமல் யார் போராடினாலும் அது எங்கும் இட்டுச்செல்லாது. மிக முக்கியமாக, தீர்வு காண்பதற்கு பதில் சிக்கலாக்குவதிலேயே முடியும்.

      கே : அப்படியானால் இந்தியாவில் இருந்துகொண்டே போராடுவதும் போராடத்தூண்டுவதும் தவறில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா ?

      ப : இங்கே சொல்லப்படுவது அமெரிக்கா போன்ற வசதியான தேசத்தில் வாழ்வை அமைத்துக்கொண்டு தமது சந்ததிக்கு தமிழே தெரியாமல் இருக்கும் நிலையில் தமிழகத்தில் இருப்பவனை தமிழில் பேசச்சொல்லும், அவனை மட்டும் ‘களத்தில் இறங்கி போராடு’ (நான் இங்கேயே லட்சக்கணக்கான டாலர்கள் சம்பளத்தை நுகர்ந்துகொண்டு சுகவாழ்வு வாழ்கிறேன்) என்று தூண்டிவிடும் போலித்தனத்தையே. அக்கறை இருப்பவர் குறைந்தபட்சம் ஒரே ஒரு போராட்டத்தில் கலந்துகொள்ளவாவது தமிழகம் வந்திருந்தால் அப்போது பரிசீலிக்கலாம் அவர்களது ‘கோரிக்கை’-யை.

      கே : போராடுபவர்கள் அனைவருக்குப் பின்னாலும் வேறு உள்நோக்கம் இருப்பது உண்மையானால் தங்கள் குடும்பமும் பரம்பரையும் ஆட்சிக்கு வரவேண்டும் என்னும் சுயநல நோக்கில்தான் நேரு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதும் உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

      ப : மறுபடி இப்போது நடக்கும் போராட்டத்தை இந்திய விடுதலை போராட்டத்தோடு இணைவைத்து குழப்பிக்கொள்வதால் எழும் கேள்வி. உண்மையில் இந்தியா சுதந்தர போராட்டம் நடந்துகொண்டிருக்கையில் ‘நீங்கள்தான் சுதந்தர இந்தியாவின் பிரதமராகப்போகிறீர்கள்’ என்று யாரேனும் சொல்லியிருந்தால் நேருவே வாய்விட்டு சிரித்திருப்பார் என்றுதான் தோன்றுகிறது. அவர்கள் தொடர்ச்சியாக, முடிவு தெரியும் வரையில் போராட்டக்களத்தில் இருந்தார்கள். எனவே குதர்க்கமான கேள்வி வேண்டாம்.

      1. Avatar
        Bala says:

        முத்துக்குமார்,
        {இல்லை. ஆனால் இப்போது நிகழும் போராட்டத்தை இந்திய சுதந்தர போராட்டத்தோடு ஒப்பிட்டு குழப்பிக்கொள்கிறீர்கள்}
        இதில் என்ன குழப்பம் என்பதை நீங்கள்தான் விளக்கவேண்டும். நீங்கள் சொல்லும் ஒரே காரணத்துக்கான அது குழப்பமானதாகிவிடாது. உங்களுக்குப் பிடிக்காத போராட்டத்தை அற்பமானதாகக் கருதும் குணம்தான் இங்கே தெரிகிறது.

        நேருவுக்குரிய அதே நியாயத்தை ஏன் மற்றவர்களுக்குக் காட்ட மறுக்கிறீர்கள்? அவர் உங்களுக்கு, உங்கள் கருத்துகளுக்கு உவப்பானவர் என்பதைத் தவிர இதற்கு வேறு காரணம் உண்டா?
        என்னைப் பொருத்தவரை அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் தியாகிகளே, கொள்கைப் பிடிப்பாளர்களே. அவர்களது கொள்கைகள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களது போராட்டத்தையே மலினப்படுத்துவது தவறு.

  11. Avatar
    paandiyan says:

    //இந்தியாவில் தமிழர்கள் ஏன் இந்தித்திணிப்பபை எதிர்த்து சரியில்லை என்று கருதுகிறீர்கள்//

    இது எல்லாம் போய போச்சு. இந்த காலத்தில் இது எடுபடுமா என்ன. பக்கத்து மாநிலம் உள்ள படிக்காத தமிழன இன்று தமிழ், லோக்கல் பாஷை தவிர பொலந்து கட்டுவதே ஹிந்திதான். படித்தவன், படித்துகொண்டு இருப்பவன் நிலமைய வேறு — தேடி ஓடுகின்றான் படிக்க. போராடி, வீனா போனவன் — மனசாட்சி உள்ளவன் — போராடியது தவறு என்று மன்னிப்பும் கேட்டுவிட்டான். வேற பிலிம் ஓடுமா பாருங்க..

  12. Avatar
    Bala says:

    (மேலே உள்ள கட்டுரையை நீங்கள் ஆமோதிக்கிறீர்கள் என்றால் கனடாவில் உட்கார்ந்துகொண்டு தமிழகத்தைப் பற்றிப் பேச உங்களுக்கு அருகதை இல்லை என்னும் முடிவுக்கு வரவேண்டியிருக்கும் என்ற உண்மையை நீங்கள் உணர்ந்தீர்களா? உணர்ந்தால் இக்கட்டுரையை ஆதரித்து ஏன் பின்னூட்டம் இடுகிறீர்கள்?)

    ஜனநாயக வழியில் மக்கள் தங்களுக்குப் பிடித்த கருத்துகளுக்காகப் போராடுவதில் எந்தத் தவறும் இல்லை. நீங்கள் வாழும் கனடாவில் கியுபெக் பகுதி மக்கள் பிரிந்துபோக வேண்டும் என்று நினைப்பதையும் அதற்காக வாக்கெடுப்புகள் நிகழ்ந்ததையும் நிகழ்த்தவிருப்பதையும் கூச்சல் என்று அரசியல் நோக்கர்கள் கருதுவதில்லை. செக், சுலோவாக்கியக் குடியரசுகள் அமைதியான முறையில்தான் பிரிந்தன. சோவியத்தின் அடக்குமுறையிலிருந்து எண்ணற்ற குடியரசுகள் தனியாகத்தான் பிரிந்தன. ஸ்காட்லாந்திலும் பிரிந்து செல்வதை முடிவெடுப்பதற்காக ஜனநாயக முறைப்படியான வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இவற்றையும் கூச்சல் என்றும் கும்பல் என்றும் சுயநலம் என்றும் யாரும் கருதுவதில்லை.

    பிரியக்கூடாது என்று கூறுவதற்குரிய உரிமை ஒருவருக்கு உண்டென்றால் பிரிந்துசெல்வது நல்லது என்று கூறுவதற்குரிய உரிமையும் வேறொருவருக்கு உண்டு. இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல் மற்றவரைக் கேலி செய்வதும் அவமதிப்பதும் பண்பான செய்கைகள் அல்ல.

    அரசியல் பண்பாடுகளுக்குப் பேர்போன மேலைநாடுகளில் வசிப்பவர்கள் காலனித்துவக் காலச் சிந்தனைகளில் ஊறிக்கிடப்பதைப் புரிந்துகொள்ளவே முடிவதில்லை.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      இப்போது கணனி யுகத்தில், துணைக்கோள்கள் பல இணைத்து உலக வணிகமும், செல்வப் போக்குவரத்தும், புலர்பெயர் வாழ்வும் ஒன்றாகி, ஐக்கிய நாடுகள் பேரவைக் கண்காணிப்பும், பாதுகாப்பும் உள்ளதால், நாடுகள் நேராகவோ, மறைமுக மாகவோ ஒன்று கூடி “Free Trade” Euro Common Currency” என்று தமது தனித்துவக் கலாச்சார முறையில் இணங்கி வருகின்றன.
      இந்த நூற்றாண்டில் “தனித்தமிழ் நாடு”, “தனி ஈழ நாடு” இவற்றுக்கு ஒருசாரார் போராடுவது நிச்சயம் நடக்கப் போவ தில்லை.
      இந்தியாவில் முன்பு மூர்க்கவாதி சீக்கியர்கள் “காலிஸ்தான்” வேண்டிப் போராடி அது என்னவாயிற்று என்று சிந்திக்க வேண்டும்.
      கனடாவில் “குபெக் தனிநாடு” கோரிக்கையை மாணவர் எடுத்து நடத்தவில்லை. அதற்கு ஆதரவுபோல் எதிர்ப்பும் பலத்து வருகிறது.

    2. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      // மேலே உள்ள கட்டுரையை நீங்கள் ஆமோதிக்கிறீர்கள் என்றால் கனடாவில் உட்கார்ந்துகொண்டு தமிழகத்தைப் பற்றிப் பேச உங்களுக்கு அருகதை இல்லை என்னும் முடிவுக்கு வரவேண்டியிருக்கும் என்ற உண்மையை நீங்கள் உணர்ந்தீர்களா? உணர்ந்தால் இக்கட்டுரையை ஆதரித்து ஏன் பின்னூட்டம் இடுகிறீர்கள் ? //

      இது எனது பின்னூட்டத்திற்கான எதிர்வினை என்றால், மன்னிக்கவும், நான் கனடாவில் இல்லை.

      ஏன் தமிழகத்தை பற்றி பேசவேண்டும் ? நான் இன்னும் தமிழன் மற்றும் இந்தியக்குடிமகனே. நமது மாணவர்கள் தான் செய்வது இன்னது என்ற பிரக்ஞை இன்றி வெள்ளாட்டு மந்தையாகிவிடக்கூடாதே என்ற பதைப்புதான் காரணம்.

      // … பிரிந்து செல்வதை முடிவெடுப்பதற்காக ஜனநாயக முறைப்படியான வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இவற்றையும் கூச்சல் என்றும் கும்பல் என்றும் சுயநலம் என்றும் யாரும் கருதுவதில்லை. //

      பிரச்சினையை இப்படிப்பட்ட வழியில் தீர்க்க முற்பட்டிருந்தால் அதைவிட மகிழ்வான விஷயம் வெறு இருந்திருக்க முடியுமா ? சொல்லுங்கள்.

      // அரசியல் பண்பாடுகளுக்குப் பேர்போன மேலைநாடுகளில் வசிப்பவர்கள் காலனித்துவக் காலச் சிந்தனைகளில் ஊறிக்கிடப்பதைப் புரிந்துகொள்ளவே முடிவதில்லை. //

      என்ன சொல்கிறோம் என்பதைக்கூட நிதானமாக படித்து புரிந்துகொள்ள நீங்கள் தயாராக இல்லாதிருப்பதையே இது காட்டுகிறது.

      1. Avatar
        Bala says:

        முத்துக்குமார்,
        என் பின்னூட்டம் திரு ஜெயபாரதனுக்காக எழுதப்பட்டது. மன்னிக்கவும்.

  13. Avatar
    Noel Nadesan says:

    this is timely article and I wrote similar one focusing lankan Tamils in this regards.what is happening in Tamilnadu not helping lankan Tamils but make the situation worse. read entire article noelnadesan.com

    தமிழகத்தின் பிரச்சனைகளை திசை திருப்புவதற்கோ, அல்லது திராவிட முன்னேற்றகழக அரசில் உள்ள வன்மத்தை தீர்த்துக் கொள்ளவோ, மொத்த இந்தியாவுக்கு எதிரான உங்கள் நோக்கத்தில் பகடைக்காய்களாக்க இலங்கைத் தமிழர்களை பாவிக்கும் நோக்கம் உங்களுக்கு இருக்கலாம். ஆனால்
    தமிழக அரசியல்வாதிகள் , கத்தோலிக்க மதகுருமார்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் , இலங்கை தமிழ்த் தலைவர்கள் தயவு செய்து ஏதாவது விடயத்தை செய்ய முதல் அதன் விளைவுகளை தொலை நோக்கத்தில் சிந்தியுங்கள். இலங்கைத்தமிழர்கள் இலங்கையில்த்தான் வாழமுடியும். வேறு வழி அவர்களுக்கு இல்லை. சிங்கள இனவாதத்தின் கொம்பை சீவாதீர்கள். நாங்கள் தான் மீண்டும் இரத்தம் சிந்த வேண்டும்.

    1. Avatar
      paandiyan says:

      மூளை உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். இங்கு உள்ள வியாபாரிகளுக்கு எதாவது விசயம் வேணும் போணியாக நீங்கள் மாடீநீர்கள் இவர்களுக்கு ஒரு 15 வருடமாக. இத பாணியில் மலேசிய தமிழனுக்கு பேச சொல்லுங்கள்? இந்த வார்த்தை வீரத்தை? ஏன் மாணவர் வீரமும்தான்? லயோலோ பின்புலம் பிரித்து மேய்ந்து விட்டார்கள் இணையத்தில் .நல்லவேளை நீங்கு இங்கு இருந்து இந்த கட்டுரை எழுதவில்லை இருந்தால் இன துரோகி , பிராமின் (அப்படி நீங்கள் இல்லை என்றாலும் அந்த சிந்தனை இருகின்றது என்று உங்களுக்கு ஒரு பூநூல் போடா திராவிட புரோகிதர் கூட்டம் இங்கு நேரிய உண்டு..) என்று வறுத்து எடுத்து இருப்பார்கள்.

      1. Avatar
        புனைப்பெயரில் says:

        ஒரு தமிழனின் எழுத்து நிஜப் பகத்தறிவுடன் இருப்பின் அவனுக்கு தரப்படும் பட்டமே, அய்யர் ….. பய என்பது. அப்படி கிடைத்தால் பெருமையே..

        1. Avatar
          Bala says:

          புனைபெயரில்,
          என்ன சொல்லவருகிறீர்கள்? அய்யர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் பகுத்தறிவற்றவர்களா? உங்கள் இன விரோதக் கூட்டுக்குள்ளிருந்து முதலில் வெளியேறுங்கள். சாதியை வைத்து ஒருவரைத் திட்டுவது தவறு என்பது போலவே பிறப்பால் ஒருவருக்கு ஏற்பட்ட சாதியைத் தூக்கிவைத்துக் கொண்டாடுவதும் தவறு என்பதை உணருங்கள்.

  14. Avatar
    Dr.G.Johnson says:

    ஈழத் தமிழர்களுக்காக தமிழக மாணவர்களும் மாணவிகளும் கொதித்து எழுந்து போராடுகின்றனர். அவர்கள் உண்மையில் தமிழ் இன உணர்வால் போராடினால் அதை நான் பாராட்டுகிறேன். தமிழ் நாட்டு மாணவர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் அபிமானிகளே. இதற்கு நாம் ஏதும் செய்ய முடியாது. அவரவரின் அரசியல் தலைவரின் வழிகாட்டுதலின்படியே அவர்கள் செயல் படுவார்கள்.

    ஆனால் அத்தைகைய அரசியல் கட்சிகளின் வேற்றுமை மறந்து ஒன்றுபட்டவர்களாக அவர்கள் இப்போது செயல்பட்டால் அது பாராட்டுதற்குரியது.

    இந்தச் சூழலில் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் பற்றி ஒரு சோகமான உண்மையை நான் குறிப்பிட்டே ஆகவேண்டும்!

    மலேசியா, சிங்கப்பூரில் நான் கண்டவரையில் ஈழத் தமிழர்கள் மற்ற தமிழர்களுடன் சேர்ந்து ” நாம் தமிழர் ” என்று காட்டிக் கொள்வதில்லை. அவர்கள் தனியாகவே ஈழத் தமிழர் என்று தனியேதான் இயங்கி வருகின்றனர். அவர்களுக்கென்று தனியாக CEYLON TAMILS ASSOCIATION அல்லது SRI LANKA TAMILS ASSOCIATION என்றுதான் வைத்துள்ளனர். இவர்கள் மற்ற தமிழர்களை ” கூலித் தமிழர்கள் ” என்றும் ” எஸ்டேட் தமிழர் ” என்றும் மட்டமாகத்தான் பார்க்கின்றனர்.

    இதற்குக் காரணம் இவர்கள் இந்த நாடுகளுக்கு ஆங்கிலேயர்களால் WHITE COLLAR JOBS செய்ய கொடுவரப் பட்டவர்கள்.

    ஆனால் தமிழ் நாட்டிலிருந்து தமிழர்கள் கூலி வேலைக்குதான் கொண்டு வரப் பட்டுள்ளனர்! இதனால் தான் இந்த அவல நிலை இன்றும்!..

    இது மலேசியா சிங்கபூர் தமிழர்கள் நிலை! மற்ற நாடுகள் பற்றி எனக்கு தெரியாது!…டாக்டர் ஜி.ஜான்சன்.

    1. Avatar
      புனைப்பெயரில் says:

      அய்யா ஜான்சன் அடிப்படையில் மருத்துவர். அதனால் நிச்சயம் அனுபவம் சற்றே மனோரீதியாக இருக்கும். ஈழத்தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஜாப்னா கூட்டம் மமதை கொண்டவரே… கூலிகள் என்று இகழ்ந்தவர்கள் இன்றும் அதை தான் சொல்வார்கள் – நம்மவர்கள் கேட்காமலே தீ வைத்துக் கொள்வதால்.

    2. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      நண்பர் டாக்டர். ஜி. ஜான்சன்,

      ///ஈழத் தமிழர்களுக்காக தமிழக மாணவர்களும் மாணவிகளும் கொதித்து எழுந்து போராடுகின்றனர். அவர்கள் உண்மையில் தமிழ் இன உணர்வால் போராடினால் அதை நான் பாராட்டுகிறேன். தமிழ் நாட்டு மாணவர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் அபிமானிகளே. இதற்கு நாம் ஏதும் செய்ய முடியாது. அவரவரின் அரசியல் தலைவரின் வழிகாட்டுதலின்படியே அவர்கள் செயல் படுவார்கள்.///

      அறிஞர்கள் இப்படி ஒதுங்கிக் கொள்ளக் கூடாது. அரசியல் அபிமானம் வேறு, அரசியல் வன்முறைப் போராட்டம் வேறு. இந்த நூற்றாண்டில் “தனித்தமிழ் நாடு” “தனி ஈழ நாடு” போராட்டங்கள் நிகழாத வெறும் பகற் கனவுகள். 25 ஆண்டுகள் வன்முறையில் போராடி விடுதலைப் புலிகள் ஈழத்தமிழர் 500,000 பேர் மரணத்துக்கும், படு கொலைக்கும் 500,000 பேர் புலம் பெயரவும் ஒரு முக்கிய காரணமானார்.
      இந்தியாவில் முன்பு மூர்க்க சீக்கியர் வேண்டிப் போராடிய “காலிஸ்தான்” தனிநாடு கோரிக்கை நசுக்கப் பட்டது.
      ஐந்தாண்டு ஆசனத்தில் அரசாளும் அரசியல் குள்ள நரிகளின் பின்னால் செல்லும் மாணவருக்கு பெரியவர்கள் அறிவுரை வழங்க வேண்டும்.

      1. Avatar
        புனைப்பெயரில் says:

        நிச்சயமாக, பெற்றோர்கள் இதையெல்லாம் படிக்கிறார்களா என்று தெரியவில்லை. அல்லது தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி அக்கறையிருக்கிறதா என்றும் புரியவில்லை. ஜெயபாரதன், டாக்டர் ஜான்சன், திருமதி.சீதாலட்சுமி அவர்கள் அனைவரும் ஏன் ஒரு மாணவ பெற்றோருக்கான அறிக்கை திண்ணையளவிளாவது விடலாமே…

    3. Avatar
      Bala says:

      நீங்கள் மலேசியாவில் பிறந்துவளர்ந்த இலங்கைத் தமிழரின் வாரிசுகளையும் இலங்கைத் தமிழரையும் ஒன்றுபோலவே கருதும் ஒரு தவறைச் செய்கிறீர்கள். அதனால்தான் நீங்கள் அவர்களை ‘ஈழத் தமிழர்கள்’ என்று குறிப்பிடுகிறீர்கள். அவர்கள் ஈழத் தமிழர்கள் அல்லர், மலேசியத் தமிழர்கள்.

  15. Avatar
    பூவண்ணன் says:

    மாணவர் சங்க தலைவர்களில் ஒருவனாக இருந்தவன் ,பல போராட்டங்களில் பங்கு பெற்றவன் என்ற முறையில் கூறுகிறேன்
    உணர்வுபூர்வமாக எந்த விஷயத்தையும் அணுகும் வயது அது.முடியுமா,முடியாதா என்ஹ்பதை யோசித்து முடிவு எடுக்கும் வயது அல்ல மாணவர் பருவம்
    முடிந்தால் நல்லது,இல்லை ஒரு நல்ல படிப்பினை,அனுபவம் எனபது எந்த பொதுநல போராட்டத்திற்கும் பொருந்தும்

    எந்த போராட்டமும் தன்னிச்சையாக ,சுயம்பாக பலரிடம்,பல இடங்களில் எழும்பாது
    பொறியை தூண்ட சில சக்திகள் வேண்டும்.
    ஆதரவு தர தனி நபர்கள்,இயக்கங்கள் வேண்டும்,பாராட்ட பத்திர்க்கைகள் வேண்டும்
    இவ்வளவு இருந்தும் மாணவர்கள்/தொழிலாளர்கள் மனபூர்வமாக நம்பி குதிக்காவிட்டால் உடனே பிசுபிசுத்து விடும்
    தமிழ் மக்களை கொடுமைபடுத்துகிறார்கள்,எவ்வித உரிமையும் இன்றி அகதி போல வாழ்கிறார்கள்,நடைபெற்ற படுகொலைகளை புரிந்தவர்கள் அதிகார பலத்தோடு சுதந்திரமாக உலா வருகிறார்கள் ,அவர்களுக்கு தண்டனை வேண்டும் என்று போராடினால்,உன் அண்ணன்,நண்பன்,உறவினர்கள்,சார்ந்து இருந்த இயக்கம் கூட கொலைகளை செய்தது எனபது என்ன வாதம்
    அவனுக்கு ,அவர்களுக்கு தண்டனை கிடைத்து விட்டது.இவர்களுக்கு கிடைக்க போராடினால் அதை நக்கல் செய்வதா

    கல்லூரி போராட்டங்களில் பல முறை காலையில் கைது செய்து மண்டபத்தில் அல்லது விளையாட்டு மைதானங்களில் வைத்திருந்து விட்டு இரவு விட்டு விடுவார்கள்
    மாணவனாக இருக்கும் போது கல்லூரி போராட்டத்தின் காரணமாக பதினெட்டு வயதில் சென்னை மத்திய சிறையில் சில நாட்கள் அடைக்கப்பட்டேன்
    என்னுடன் சிறையில் இருந்தவர்கள் அனைவரும் இன்று நல்ல நிலையில் தான் உள்ளனர்.பலர் அரசு பணியில் உயர் அதிகாரிகள்.மற்றவர் பல வெளிநாடுகளில் உயர்பதவிகளில்.கல்லூரி மாணவரின் எதிர்காலம் பாழாகிறது எனபது எல்லாம் வெற்று வாதம்
    ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி தனியாராக மாற்றப்பட்டதற்கு எதிராக இரு மாதங்கள் நடந்த போராட்டம் அது.சிறையில் இருந்தால் அரசு வேலை கிடைக்காது ,வெளிநாடு செல்ல முடியாது என்று பூச்சாண்டி காட்டியவர்கள் பலர்
    நான் அரசு,பொதுத்துறை,ராணுவம் என அனைத்திலும் பனி புரிந்தவன்.gazetted ஆபீசர்
    மாணவர் போராட்டத்தினால் பலர் வாழ்வு பாழ் என்பதெல்லாம் சுத்த பொய்கள்.
    எனக்கு இந்த நிகழ்வுகள் தந்த தைரியம் பத்து ஆண்டு படிப்புக்கு சமம்.பெற்றோரிடம் தைரியமாக என் திருமணம் ,வேலை என என் விருப்பதிர்க்கேர்ப்ப முடிவு செய்ய தேவையான தைரியம் தந்தது மாணவனாக நான் பங்கு பெற்ற போராட்டங்கள்.
    போராட்டத்திற்கு மறைமுகமாக பல உதவிகள் செய்தது கம்முனிச தொழில் சங்கங்கள்,முன்னாள் மாணவர்கள்,எதிர்க்கட்சி தொழில்சங்கங்கள்
    கல்லூரி விடுதிகள் மூடப்பட்ட பிறகு ஆலந்தூரில் உள்ள வி பி சிந்தன் நினைவு இல்லத்தில் மாதகணக்கில் மாணவர்கள் தங்கி இருந்தனர். இதை போல மற்றவர்களின் உதவி இல்லாமல் மாணவர் போராட்டம் நீடிக்க முடியாது.ஆனால் யார் ,எவ்வளவு உதவி செய்தாலும் மனபூர்வமான பங்களிப்பு இல்லாமல் போராட்டம் தொடராது
    மற்ற மாநிலங்களில் வசித்தால் தான் தெரியும் நம் ஊரின் பள்ளிகள்,கல்லூரிகள்,அரசியல் கட்சிகளின் அருமை.
    இந்தியாவிற்கே உதவியது தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு போராட்டம் .அதை வன்மம் கொண்டு பார்ப்பது ஏன் எனபது விளங்காத ஒன்று
    swaminomics.org/?p=548

    Annadurai saw this as Hindi imperialism, and struck back with the most violent agitation the state had ever seen. Several Tamil students immolated themselves in protest. The police opened fire on rampaging mobs, killing at least 66 (official figures) and maybe 500 (unofficial estimates). Fearful that the language issue would stoke secession, New Delhi retreated and assured all states that their adoption of Hindi would be optional, not mandatory. In 1967 the Official Languages Act was amended to specify that both English and Hindi could be used as official languages for all purposes.

    In the state election of 1967, the DMK won a landslide victory. The party has (in one of two factional avatars) ruled the state ever since. Many people think South India resisted Hindi. Not really. The resistance was specifically Tamil. Former foreign minister Dinesh Singh, from Uttar Pradesh, once complained bitterly to me that Hindi would have triumphed but for Tamil Nadu.

    1. Avatar
      paandiyan says:

      ஹிந்தி எதிர்ப்பை பற்றி இன்று நிதர்சனமாக ஆராய்பவர்கள் வேறு யாரும் இல்லை. போராடி வீனா போனவர்கள் அல்லது சொத்து சேர்த்தவர்கள். உங்களுக்கு போராட்டம் நன்மை என்றால் பல பேர் உயிர் போனதே அது எப்படி? ஒரு சூழ்ச்சியோடு போராடவில்லையோ? அது ரொம்ப முக்கியம் இல்லையா? கல்லக்குடி ட்ரைன் க்கு தலைவைத்தது போல? முன் ஜாக்கிரதையாக?

  16. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    இந்தி மொழி தமிழ் நாட்டில் ஒழிந்து விட்டதா ??? ஒவ்வொரு இரயில் நிலைய அறிவிப்புப் பலகையிலும் உள்ளது. எடுக்கும் இந்திப் படங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் ஓடுகின்றன. பார்ப்பவர் பலர் தமிழர்கள்.
    ஆங்கிலம் தெரியாமல் தமிழ் நாட்டுக்கு வரும் மற்ற மாநில சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியில் ஊர்ப் பெயர் இருப்பது உதவி செய்யும். ஏராளமான தமிழர் பிற மாநிலங்களில் வேலை செய்கிறார். அவருக்கு உதவும் இந்தி மொழி. நான் 20 ஆண்டுகள் பிற மாநிலங்களில் பணி செய்தேன். இந்தி மொழி சிறிது தெரிந்தது எனக்கு வசதியாக இருந்தது.
    தமிழ் நாட்டிலிருந்து டெல்லி பாராளுமன்றத்துக்குச் செல்லும் அரசியல் உறுப்பினருக்கு இந்தி தெரிந்தால் மிக்கப் பயன் அளிக்கும்.
    இந்தி தெரியாத திராவிடத் தமிழன், இந்தி மொழி பேசும் மற்ற மாநிலத்தாரை விட எந்த முறையில் சிறந்துள்ளான் ??? இந்தியைக் கேலி செய்யும் பொதுத் தமிழனுக்குத் தமிழும் சரியாகத் தெரியாது. ஆங்கிலமும் சரியாகத் தெரியாது.

  17. Avatar
    poovannan says:

    ஹிந்தி படிக்க வேண்டும் என்று விரும்புபவர்களை யாரும் எப்போதும் தடுத்தது கிடையாது.
    நடைபெற்ற போராட்டம் கட்டாய ஹிந்திக்கு எதிரான ஒன்று
    அனைவரும் கட்டாயம் ஹிந்தி படிக்க வேண்டும் என்ற திட்டமே ஆங்கிலத்தை நீக்கி விட்டு ஹிந்தியை மட்டும் இணைப்பு மொழியாக ஆக்கும் திட்டம் தான்
    இன்று இதை ஹிந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலங்களே விட்டு விட்டு ஆங்கிலத்தை படிக்க தங்கள் மாணவர்களை ஊக்குவிக்கின்ற நிலையில் ஹிந்தி எதிர்ப்பு அழிந்து விட்டது என்று வாய் கூசாமல் சொல்ல முடிவது வியப்பு தான்
    இந்தியாவில் இந்தியை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் ஒரே ஒரு மொழியை படிப்பார்கள்,வேறு தாய்மொழியை கொண்டவர்களுக்கு மூன்று மொழி கொள்கை என்ற முட்டாள்தனத்தை,மொழி வெறி பாகுபாட்டை தமிழரை வாழ வைக்க வந்த திட்டம் என்று பேசுவது நல்ல நகைச்சுவை
    ஹிந்தியை படித்த மாநிலங்களை,ஹிந்தியை தாய் மொழியாக கொண்ட மாநிலங்களை விட தமிழகம் எந்த அளவுகோலின் கீழும் பின் தங்கி விடவில்லை.கட்டாய வடமொழியோ,இந்தியோ என்றும் ஏற்று கொள்ளப்படாது

    1. Avatar
      paandiyan says:

      //ஹிந்தியை படித்த மாநிலங்களை,ஹிந்தியை தாய் மொழியாக கொண்ட மாநிலங்களை விட தமிழகம் எந்த அளவுகோலின் கீழும் பின் தங்கி விடவில்லை.///
      ஒரு மொழியை கற்றுகொண்டால் நாட்டில் பாலும், தேனும் ஓடும் என்பது என்ன மாதரியான ஆராய்ட்சி ?
      மக்கள் விழித்து கொண்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது

  18. Avatar
    poovannan says:

    புதுச்சேரியில் வசிப்பவர் பலர் பிரான்ஸ் சென்று வேலை செய்ய ஆசைபடுவர்.பிரெஞ்சு மொழி படிப்பர்.
    அதே போல டெல்லி சென்று வாழ,வேலை செய்ய விருப்பபடுபவர்கள் தேவையான மொழியை படித்து கொள்கிறார்கள்
    வெளிமாநிலத்திற்கு வேலைக்கு செல்லும் வரை எனக்கு பொட்டு ஹிந்தி கூட தெரியாது.சில மாதங்களில் கற்று கொள்வது ஒன்றும் கடினமான ஒன்று கிடையாது
    நண்பர் வினோதகன் முகநூலில் அற்புதமான கருத்து வைத்தார். மொழியை எப்போது வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம்.ஆனால் உணவு பழக்கம் அப்படி அல்ல ,உலகமெங்கும் மாட்டு கறி உண்ணும் நாடுகள் தான் அதிகம்.அங்கு சென்று உணவு கிடைக்க மிகவும் கஷ்டபடுவதை தடுக்க சிறு வயதில் இருந்தே அனைவருக்கும் அனைத்து கறியும் உண்ணும் பழக்கத்தை உருவாக்கி விட்டால் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்ய எந்த தடையும் இருக்காது என்று
    வெளி ஊரில் வேலை செய்ய தடை என்று குதிக்கும் நண்பர்கள் இதை ஒத்து கொள்கிறார்களா

  19. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    மற்ற மாநிலத்தார் எழுதும் / பேசும் ஆங்கிலத்தையும், தமிழர் எழுதும் /பேசும் ஆங்கிலத்தையும், வலையில் வரும் தமிழின் தரத்தையும் பாருங்கள்.

    இந்தி படிக்கும் கேரள, தெலுங்கு, கன்னட இந்தியர் தமிழனை விட சாமர்த்தியமாய் இருக்கிறார்.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      கனடா, அமெரிக்க போன்ற வெளி நாடுகளில் இந்தியர்கள் ஒருங்கு கூடி நடத்தும் சுதந்திர தின விழா, தீபாவளி போன்ற பொதுப் பண்டிகையில் மற்ற இந்திய மாநிலத்தில் வாழ்ந்தவர் புன்னகையோடு ஐக்கியமாய்ப் பழகும் போது, திராவிடத் தமிழர் மட்டும் உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டு தனியே ஒதுங்கி நிற்கிறார். இது உண்மை.
      திராவிடக் கட்சிகள் வளர்த்த இந்தி, இந்திய ஒருமைப்பாடு வெறுப்பால் அவன் தன்னை இந்தியன் என்று மனதில் நினைக்க முடிய வில்லை.
      இந்தி மொழி வெறுப்பு தான் இந்தியன் அல்லன் என்று சொல்லும் அளவுக்குத் தமிழனைத் தனியே பிரித்து விட்டது.

  20. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    நண்பர் பூவண்ணன்,

    விடுதலை நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாய்த் தமிழ்நாட்டில் வெளியான இலக்கிய, விஞ்ஞான, வரலாற்று, மருத்துவ, கலைத்துவப் படைப்புகள் எத்தனை ?
    பணம் கொடுத்து இடம் பிடித்துப் பணம் கொடுத்துப் பட்டம் வாங்கும் தமிழ்க் கல்லூரி மாணவர்கள் எப்படித் தமிழை / ஆங்கிலத்தை, கலையை, இலக்கியத்தை, மருத்துவத்தை, பொறியியலை எப்படி வளர்ப்பார் ?

  21. Avatar
    paandiyan says:

    //ஹிந்தி படிக்க வேண்டும் என்று விரும்புபவர்களை யாரும் எப்போதும் தடுத்தது கிடையாது//

    இன்றைய இணய உலகில் இந்த மாதரி பொய் சொல்ல நா கூசவில்லை

  22. Avatar
    poovannan says:

    http://www.dbhpsabha.org/courses.htmஹிந்தி பிரசார் சபாவின் மூலம் விருப்பபடுபவர்கள் ஹிந்தி படிக்க என்றும் தடை இருந்தது கிடையாது
    எதிர்க்கப்பட்டது கட்டாய ஹிந்தி தான்.கொஞ்சமாவது வரலாற்றை படியுங்கள் தோழர்.தமிழகத்தில் கட்டாய தமிழ் கூட சில ஆண்டுகள் முன் வரை கிடையாது.
    அதிக மதிப்பெண் எடுக்க பிரெஞ்சு,வடமொழி எடுத்த மாணவர் பலர். தி மு க அரசு அரசின் பரிசுகள்,மாநில ,மாவட்ட முதல் மதிப்பெண் தமிழில் படித்தவர்களுக்கு மட்டும் தான் என்று கொடன்னு வந்த பின்,தமிழிலும் அதிக மதிப்பெண் தரும் வழக்கம் வந்த பின் மெட்ரிக் பள்ளிகளில் பலர் தமிழுக்கு மாறினார்
    இரண்டாவது மொழியாக தனக்கு விருப்பப்பட்ட மொழியை தேர்தெடுக்கும் உரிமை தமிழ்நாட்டில் அனைவருக்கும் இருநதது
    ஜெயபாரதன் சார்
    இந்தியாவிலேயே அரசு மருத்துவ கல்லூரிகளில் அதிக இடங்கள் இருப்பது தமிழகத்தில் தான்.அரசு பொறியியல்,சட்ட,கலை கல்லூரிகளும் அதிகம்.எதை பார்த்து விட்டு தமிழகத்தில் அனைவரும் பணம் கொடுத்து கல்லூரிகளில் இடம் பிடிக்கிறார்கள் என்று கூறுகிறீர்கள்
    அப்படி இருந்தால் ஏன் இட ஒதுக்கீட்டிற்கு சண்டை,உள் ஒதுக்கீடு போராட்டங்கள்.
    பல தனியார் பொறியியல் கல்லூரிகள் பெருகி விட்டதால் பணம் கொடுத்து அவற்றில் சேர முடியும்.ஆனால் அரசு கல்லூரிகளுக்கு இன்றும் மவுசு அதிகம் தான்.அங்கு யாரும் பணம் கொடுத்து சேர முடியாது,விதிவிலக்கான சில அரசியல் ஒதுக்கீடுகளை தவிர
    தமிழக மருத்துவ,பொறியாளர்கள் உலகம் முழுக்க இருக்கின்றனர்.அதில் பலர் மிக நல்ல முறையில் பணிபுரிந்து நற்பெயர் பெற்றவர்கள்.
    ஆதாரங்களை வைத்து கொண்டு பேச வேண்டும்.வாயில் வருவதை அடித்து விட கூடாது.

    http://articles.timesofindia.indiatimes.com/2013-02-22/chennai/37241742_1_medical-colleges-mbbs-seats-staff-in-non-clinical-subjects

    Tamil Nadu has a high number of medical colleges in the country compared to many other states, yet every year there is tough competition for admission. The cut-off for medicine is as high is 92% for reserved category students and 99% for open category students. For colleges affiliated to the state university, admissions are done through a single window system following merit and rule of reservation.

    Senior academicians like MMC dean Dr V Kanasabai feel that increasing the number of government medical colleges will help more deserving students to get into medical colleges without paying huge capitation fees. “Many more deserving students will get admission in colleges that have low fees and no capitation,”

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      This is true in Annamalai University for an Engg Student
      [2009-2013] who is in fourth year now.

      1. He got 86% average in Higher Secondary Course.
      2. Rs.2.5lakh bribe to get Engg Seat.
      3. Fees per year 50 Thousand and the Total amount for 4 years : 2 lakhs
      4. One semester fees…on the whole he has to pay.
      5. After the recent demonstration, Rs 2000/- per student penalty for the property damage.

  23. Avatar
    புனைபெயரில் says:

    இதைத் தான் கருணாநிதி கும்பல் செய்கிறது. என்ன பிரச்சனையென்றாலும் உடனே, ஹிந்தியை உள் இழுத்து திசை திருப்பதலை செய்யும். நடப்பது, செத்த பாம்பு விஷயம்,, மிருக பலமும் பலர் ஆதரவும் இருந்த போது சாதிக்காததை சுடுகாட்டில் சாதிக்க முடியும் என்ற நினைப்பை, தமிழ்நாட்டு மக்குகளிடம் விதைத்து விட்டார்கள். இந்த மக்குகளும் இந்தியா ஏதோ பக்கத்து நாடு போல கோஷங்கள்.

  24. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அரசாங்கக் கல்லூரிகள் இந்தியா முழுதும் உள்ளன. தமிழ்நாட்டு அரசினர் மருத்துவப் பொறியியல் கல்லுரிகளில் இடம் கிடைப்பு, ஆண்டுக் கட்டணம், பரீட்சைத் தரங்கள் இப்போது திராவிட ஆட்சியில் எப்படி உள்ளன என்று தெரியாது. 1952-1956 நான் கோவை அரசினர் பொறியியல் கல்லூரியில் படித்த காலத்தில் பிரச்சனை இல்லை.
    தமிழகத்தில் அரசினர் கல்லூரி தவிர மற்ற அனைத்து மருத்துவ, பொறியியல் கல்லூரிகளும் ஏழை மாணவரிடம் பணம் கறக்கும் துறைக் கூடமாக உள்ளன. எனது சொந்தக்காரர் புதல்வர்கள் ஏராளமான பணச் செலவில் இடம் பிடித்து ஆண்டாண்டு தோறும் கப்பம் கட்டி வருகிறார். ஓர் உதாரணம் : தில்லை, அண்ணாமலைப் பல்கழைக் கழகம். திராவிடக் கழகத்தார் எத்தனை கல்லூரிகள் எப்படி நடத்தி வருகிறார் ?
    இந்திய அரசு ஏற்படுத்திய மூன்று IIT களைத் தவிர மற்றவை மார்க்குகளுக்கு முதன்மை தராது, பெருந் தொகைக்கு மட்டும் இடமளிப்பது எனக்கு நன்கு தெரியும்.

  25. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    /// இந்தியாவிலேயே அரசு மருத்துவ கல்லூரிகளில் அதிக இடங்கள் இருப்பது தமிழகத்தில் தான்.அரசு பொறியியல், சட்ட,கலை கல்லூரிகளும் அதிகம்.எதை பார்த்து விட்டு தமிழகத்தில் அனைவரும் பணம் கொடுத்து கல்லூரிகளில் இடம் பிடிக்கிறார்கள் என்று கூறுகிறீர்கள்
    அப்படி இருந்தால் ஏன் இட ஒதுக்கீட்டிற்கு சண்டை,உள் ஒதுக்கீடு போராட்டங்கள் ///
    இதற்குப் பதில் வீரமணி, கருணாநிதி, ஜெயலலிதாவின் திராவிடக் கட்சிகள்தான் கூற வேண்டும். “ஜாதிவாரி இட ஒதுக்கீடுகள்” தேவை என்று ஜாதிகளுக்கு கல்வெட்டு செய்து, இடப் பதிவு அழுத்திக் கேட்பது பகுத்தறிவுத் திராவிடக் கட்சிகள்.

    1. Avatar
      poovannan says:

      ஐயா பணம் கொடுத்தால் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்றால் எதற்காக இடஒதுக்கீடிற்கு போராட்டங்கள் என்று கூறினேன்.
      நீங்கள் சொல்லும் ஐம்பது வருடம் முன்பு பத்தில் இரு பெண்கள் பிரசவத்தின் போது இறந்தார்கள்.இன்று தமிழகத்தில் ஆயிரத்தில் ஒருவர் கூட பிரசவத்தில் இறப்பது இல்லை .இதற்க்கு காரணம் நீங்கள் திட்டும் இன்றைய கல்லூரிகளில் படித்த மாணவ மாணவிகள் தான்
      பஞ்சம் பட்டினியால் இறப்பதை விட உலகம் முழுவதும் தேயிலை தோட்ட தொழிலை செய்ய தமிழன் சென்ற காலத்தை புகழ்வது எதன் அடிப்படையில்.இன்று உலகம் முழுவதும் உயர்பதவிகளுக்கு போட்டி போடும் நிலையில் உள்ள தமிழர்கள் இந்த கல்லூரிகளில் படித்தவர்கள் தான்
      நம் ஊரில் கொளுத்து வேலை செய்ய ஆள் கிடைக்காததால் ஒரிசா,பீகார் மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கில் மக்கள் தமிழகம் வந்து வேலை செய்கிறார்கள்
      நீங்கள் புகழும் காலகட்டத்தில் நூற்றில் ஒரு வீட்டில் யாராவது பட்டம் பெற்றவராக இருந்ததே அரிது. இன்று அப்படியா
      சொந்த வீடு இல்லாதவர்கள் சதவீதம் கடந்த ஐம்பது வருடங்களில் ஐந்தில் ஒரு பங்காக குறைந்து விட்டது வருத்தப்பட வேண்டிய மாற்றமா .

      1. Avatar
        poovannan says:

        மன்னிக்கவும் நூற்றில் இரு பெண்கள் ,லட்சம் பிரசவங்களுக்கு இரண்டாயிரம் பெண்கள் என்ற சதவீதத்தில் இருந்து இன்று லட்சத்திற்கு நூற்றிற்கும் குறைவான உயிர் இழப்புகள் தான்

      2. Avatar
        சி. ஜெயபாரதன் says:

        நண்பர் பூவண்ணன்,

        தமிழ்நாட்டில் பொறியியல், மற்றும் மருத்துவக் கல்லுரிகள் பெருத்ததற்குக் காரணம் தலைக்கு ஓரிரு லட்சம் நிதி மூட்டை சேர்வதால்தான். வேர்வை சிந்தாமல் இம்மாதிரிப் பெருத்த வருமானம் இந்தியாவில் எந்தத் தொழிலும் கிடைக்காது. பணம் கொடுத்து, இடம் பிடித்து, பணம் கொடுத்துப் பாஸாகிப் பட்டம் வாங்கும் இந்த மருத்துவ டாக்டர்கள், வெளிநாடுகளில் பிழைக்க முடியாமல் பெட்ரோல் பம்ப்பில் பெட்ரோல் விற்பதை இங்கு வந்து பாருங்கள். காரணம் இங்குள்ள மெடிகல் தேர்வுகளில் அவர் பெயில் ஆவது ஒரு காரணம்.
        அடுத்து தமிழகக் கல்லூரிகள் வாங்கும் இந்தப் பெரும் லஞ்சத் தொகைக்கு ரசீது தருவதில்லை. கருப்புக் கணக்காய் ஒளித்து வைக்கப் பட்டு அரசாங்கத்து வரியும் தருவதில்லை.
        அண்ணாமலைப் பல்கலைக் கழகச் செட்டியார்கள் இந்தியப் பெருஞ் செல்வந்தர் வரிசையில் முன் நிற்பார், கருப்புப் பண இரும்புப் பெட்டிப் பணத்தை எண்ண முடிந்தால்.

  26. Avatar
    Bala says:

    பூவண்ணன்,
    திரு ஜெயபாரதனுக்குப் பின்னூட்டம் இடுவது விழலுக்கிறைத்த நீர் போலாகும் என்பதை அவர் மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார். ஒரு பின்னூட்டத்தின் மையக் கருத்து என்ன என்பதை அவர் உணர்வதில்லை. அல்லது உணர்ந்தாலும் உணராததுபோல வேறு பாதையில் திரும்பிவிடுவார்.
    ஒருவரது மொழியை மற்றவர் மேல் திணிப்பது எந்த வகையிலும் நியாயமற்ற செயல் என்பதைக் கொஞ்சமும் புரிந்துகொள்ளாமல் பேசிக்கொண்டிருப்பவர்களுடன் விவாதம் செய்வதெப்படி?

    1. Avatar
      poovannan says:

      புரிந்து தான் பேசுகிறார்களா இல்லை புரியாமல் பேசுகிறார்களா என்றே புரியவில்லை
      சென்னை தமிழ் ,கோவை தமிழ் ,நெல்லை தமிழ் என்று மூன்றும் வேறு மொழிகள்,வேறு ஸ்கிரிப்ட் என்று இருக்கிறது என்று வைத்து கொள்வோம்.இதில் சென்னை மாணவர் சென்னை தமிழ் மட்டும் படித்தால் போதும்
      மற்றவர்கள் கோவை தமிழோடு ,சென்னை தமிழையும் கட்டாயம் படிக்க வேண்டும் என்றால் இவர்கள் ஒத்து கொள்வார்களா
      இணைப்பு மொழியாக ஒரு பொது மொழியை/எளிதான மொழியை,உலகத்தில் முக்கால்வாசி நாடுகளில் பேசப்படும் மொழியை வைப்பது ஞாயமா,மற்றவரை விட எண்ணிகையில் சிறிது அதிகம் என்பதால் ஒருவரின் தாய்மொழியை மற்றவர்களின் மீது திணிப்பது ஞாயமா
      சிலர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மிகவும் வெறுக்க காரணம் ,இவர்களின் கனவு திட்டமான ஆங்கிலத்தை விரட்டும் முடிவுக்கு கிடைத்த மரண அடி,மற்றும் ஹிந்தி பேசும் மாணவர்கள் மற்றவர்களை போல இன்னொரு மொழி படிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழும்பினால் அவர்களின் மீது வடமொழியை திணித்து ,ஹிந்டுத்வத்தின் வலுவான பிடியில் சிறுவயதிலேயே அனைவரையும் அடக்கும் முயற்சியில் மண் விழுந்ததும்
      இன்று இந்தியா முழுவதும் வட கிழக்கோ,கஷ்மீரமோ,மகாராஸ்ற்றமோ,வங்காளமோ தமிழகத்தின் வழியில் தான் இந்தியை விட ஆங்கிலம் முக்கியம்/அது தான் இணைப்பு மொழி என்று மாறி இருக்கும் போது தமிழகத்தில் பலர் ஆங்கிலத்தை விட இந்தி படிப்பது நல்லது என்று மாறி விட்டது போல பாண்டியன் கூறுவது எந்த அடிப்படையில் பேசுகிறார்

  27. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    தமிழ்நாட்டில் இருக்கும் கேந்திந்திரியா வித்தியாலங்களில், ஆங்கிலம் தவிர மற்ற எல்லாப் பாடங்களும் இந்தியில்தான் இப்போதும் சொல்லிக் கொடுக்கப் படுகின்றன. தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப் பாடம் கிடையாது கேந்திரியா வித்தியால யங்களில். தமிழே அங்கே கிடையாது. திராவிடக் கட்சிகள் தமிழ் நாட்டில் இந்தி திணிப்பை எங்கே மாற்றி யுள்ளன ? சில ஊர்களில் தாய் மொழி தமிழாகக் கற்பிக்கப் படாத ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.

    1. Avatar
      poovannan says:

      சார் KV பற்றி ஏதாவது தெரியுமா உங்களுக்கு
      அவை மத்திய அரசில் பணிபுரியும் அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களுக்காக உருவாக்கப்பட்ட பள்ளிகள்.அங்கு பயிற்று மொழி ஆங்கிலம்.மூன்றாவது வரை ஆங்கிலம் மற்றும் இரண்டாவது மொழியாக அந்த மாநிலத்தின் மொழி(ஆந்திரத்தில் தெலுகு,தமிழகத்தில் தமிழ் ,கேரளத்தில் மலையாளம் ) அல்லது ஹிந்தி.நான்காம் வகுப்பில் இருந்து மூன்று மொழிகள்.மூன்றாவதாக ஹிந்தி(இரண்டாவது மொழியாக ஹிந்தி எடுக்கவில்லை என்றால் கட்டாயம் மூன்றாவது மொழியாக ஹிந்தி) அல்லது வடமொழி அல்லது மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பிரெஞ்சு .ஜேர்மன் படிக்கலாம் http://en.wikipedia.org/wiki/Kendriya_Vidyalaya

      There is a common syllabus and bilingual instruction in all schools. They are all co-educational. Sanskrit is taught as a compulsory subject from classes VI to VIII and as an optional subject until class XII, and students can elect to study the German language.

      இந்த விக்கிபீடியா லிங்கும் முழு உண்மை கிடையாது.அந்தந்த மாநில மொழிகளுக்கான ஆசிரியர்கள் அந்த மாநிலத்தில் இருக்கும் அனைத்து KV பள்ளிகளிலும் இருப்பர்.ஹிந்தி எடுத்தவர்களுக்கு தான் வட மொழி கட்டாயம்.மாநில மொழி எடுத்தவர்களுக்கு மூன்றாவது மொழியாக கட்டாயம் ஹிந்தி தான்

      1. Avatar
        சி. ஜெயபாரதன் says:

        நண்பர் பூவண்ணன்,

        கொம்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கிறீர் நண்பரே. தமிழ்நாட்டில் [கல்பாக்கம், நெய்வேலி போன்ற] இயங்கும் கேந்திரிய வித்தியாலத்தில் ஹிந்தியில் யாவும் கற்பிக்கப் பட்டு ஏன் தமிழ் மொழி விருப்ப பாடமாகக் கூட வைக்கப் பட வில்லை, திராவிடக் கட்சிகள் 45 ஆண்டுகளாய்த் தமிழகத்தை ஆண்டு வரும்போது ?

      2. Avatar
        பொன்.முத்துக்குமார் says:

        // அங்கு பயிற்று மொழி ஆங்கிலம்.மூன்றாவது வரை ஆங்கிலம் மற்றும் இரண்டாவது மொழியாக அந்த மாநிலத்தின் மொழி(ஆந்திரத்தில் தெலுகு,தமிழகத்தில் தமிழ் ,கேரளத்தில் மலையாளம் ) அல்லது ஹிந்தி. //

        இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை; எல்லா KV-யிலும் அப்படித்தானா என்றும் புரியவில்லை.

        என் மனைவி KV-யில் படித்தவர். அவருக்கு தமிழே எழுத படிக்க தெரியாது. வெளியில் தனியே கோடை விடுமுறையில் படித்து ஏதோ தத்தி தடுமாறி படிப்பார்.

        1. Avatar
          poovannan says:

          முத்துகுமார் சார் இரண்டாவது மொழியாக மாநிலத்தின் மொழி அல்லது ஹிந்தி.எதை எடுப்பது எனபது மாணவரின் விருப்பம்.வேலைமாற்றல் ஆகும் வாய்ப்பு உள்ளவர்கள் அனைவரும் இரண்டாவது மொழியாக ஹிந்தியை தான் எடுப்பார்கள்.ஒவ்வொரு மாநிலத்திலும் சென்று வேறு மொழி படிக்க முடியாது.
          வேலை மாற்றம் இல்லாத ,எடுத்துக்காட்டாக தபால்துறையில் தபால்காரராக பணியாற்றுபவரின் குழந்தைகள் இரண்டாவதாக அந்த மாநிலத்தின் மொழியை எடுக்கலாம்.அவரும் மாற்றலாகும் அதிகாரிகளின் குழந்தைகள் இரண்டாவது மொழியாக ஹிந்தியை எடுத்ததை போல தன குழந்தைகளுக்கு ஹிந்தியை தேர்வு செய்தால் KV பள்ளியில் படிக்கும் அவர் குழந்தைகள்,ஹிந்தி,மற்றும் வட மொழி /ஜேர்மன் தான் படிக்கும்
          மத்திய அரசின் கீழ் உள்ள பள்ளிகளில்,மத்திய அரசு பணியில் இருப்பவர்களுக்காக(பெரும்பான்மையானோர் வேறு மாநிலங்களை சார்ந்தவர்கள் ) உருவாக்கப்பட்ட பள்ளிகளில் மாநிலத்தின் பங்கு பூஜ்யம் தான்.அங்கு ஜெயபாரதன் ஐயா மாநில அரசுகள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். விருப்ப பாடமாக மாநில மொழி இருக்க வேண்டியது கட்டாயம்.அதற்கு ஆசிரியர்கள் உண்டு.தமிழ் ஆசிரியர்களுக்கும் KV பள்ளிகளில் வேலைவாய்ப்பு உண்டு
          நவோதய பள்ளிகளுக்கு மாநில அரசு நிலம் ஒதுக்க வேண்டும்.அந்த மாவட்டத்தில் உள்ள ஏழை மாணவர்கள் தான் அந்த பள்ளியில் சேர்த்து கொள்ளபடுவர்.அங்கு மாநில அரசுக்கு உரிமை இருப்பதால் கட்டாய ஹிந்தி திணிப்பை தமிழக அரசுகள் எதிர்க்கின்றன

  28. Avatar
    Needhidevan says:

    I as student. Was witness to 1965 anti Hindi agitation and personally know how the future of thousands of students ruined beyond repair except a handful who dabbled in politics. The biggest beneficiary at that time was DMK And by corollary karunas and his henchmen. Now looking at the faces of ” students ” in visual media and I am yet to see a face of a forward community student with tell tale signs of brightness in academics. Most of them look like excuses. After keeping passive in 2009 , now crying wolf when the horses have bolted is futile.there are really self serving forces behind these agitations . It hardly causes a ripple in rest of India.

    1. Avatar
      புனைப்பெயரில் says:

      அருமை நீதி தேவன். உறைக்க வேண்டிய ஜன்மங்களுக்கு உறைக்க வேண்டும். மாணவன் என்ற பெயரில் ஒரு ஜந்து, அனைத்து மாணவர் கூட்டமைப்பில் கேமிரா முன்னால் பட படவென்று ஈழம் மீட்டெடுக்கும் வரை ஓய மாட்டோம் என்றார். அவரின் தகுதிக்கு, ஓபாமாவும், மன்மோகன்சிங்கும் அப்பாயிண்ட்மெண்ட்டுடன் காத்திருப்பதாய் நினைப்பு. முதலில் ஜெயிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி பேசச் சொல்லனும், இந்த அரியர்ஸ் திலகங்களை… தேர்தல் முடிந்தவுடன் அடிப்பார் அம்மா ஆப்பு…

  29. Avatar
    சான்றோன் says:

    //ஒருவரது மொழியை மற்றவர் மேல் திணிப்பது எந்த வகையிலும் நியாயமற்ற செயல் //@ பாலா …..

    வியாக்கியானமெல்லாம் நல்லாத்தான் இருக்கு……….ஆனால் நடைமுறை உண்மை என்ன? மாணவர்கள் ஒரு மொழியை பள்ளியில்தான் கற்றுக்கொள்ள முடியும்……….பள்ளிகளில் ஹிந்தி கிடையாது…வேண்டுமானால் ஹிந்தி பிரச்சார சபாவில் சென்று கற்றுக்கொள் என்று சொல்வது அராஜகமல்லாமல் வேறென்ன? இதர தென்மாநிலங்களில் எல்லாம் ஹிந்தி மூன்றாவது மொழியாக கற்பிக்கப்படுகிறது……. கன்னடம் , மலையாளம் , தெலுங்கு எல்லாம் அழிந்தா போய்விட்டன.?

    நான் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் நடத்தும் சைனிக் பள்ளியில் படித்தேன் [ சி.பி.எஸ்.இ – ஆங்கில மீடியம் ]…..அங்கு ஹிந்தி கட்டாயம்….. நான் தமிழை மறந்துவிட்டேனா என்ன?

    நவோதயா பள்ளிகளைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீகளா? முழு மத்திய அரசின் நிதி உதவியுடன் தமிழகம் தவிர்த்துஎல்லா மாநிலங்களிலும் இந்தப்பள்ளிகள் செயல்படுகின்றன…….. சி.பி .எஸ் . இ பாடத்திட்டத்தில் மாவட்டத்துக்கு ஒன்று என அமைக்கப்படும் இப்பள்ளிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு 75 சதவீத ஒதுக்கீடு உண்டு……ஆங்கிலம் முதல் மொழியாகவும் , அந்தந்த மா நில மொழி இரண்டாவது மொழியாகவும் , ஹிந்தி மூன்றாவது மொழியாகவும் கற்பிக்கப்படுகின்றன…….

    ஒரு பைசா செலவில்லாமல் கிராமப்புற மாணவர்களுக்கு அற்புதமான கல்வி வழங்கும் இந்த அருமையான திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க திராவிடக்கட்சிகள் தயங்குவது ஏன்? காரணமற்ற ஹிந்தி எதிர்ப்பைத்தவிர , நியாயமான காரணம் ஒன்று சொல்ல முடியுமா?

  30. Avatar
    சான்றோன் says:

    சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ராஜாஜி, தொடர்ந்து இரண்டு பிரதமர்களை தேர்வு செய்யும் அளவுக்கு அகில இந்திய அரசியலில் கோலோச்சிய காமராசர் போன்ற தலைவர்களை உருவாக்கி , தேசிய அரசியலில் பெரும் பங்கு வகித்த தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் இருந்து துண்டித்தது ஹிந்தி எதிர்ப்பு வன்முறை……..

    அதன் பலனை நாம் இன்றும் அனுபவித்து வருகிறோம்………காவிரி, பாலாறு , முல்லை பெரியாறு ,தற்போது அமராவதி என் அனைத்து நதி நீர் பிரச்சினைகளிலும் நாம் வஞ்சிக்கப்படுகிறோம்…..இத்தனைக்கும் இந்த அநியாயத்தை தொடர்ந்து செய்து வருபவர்கள் இவர்கள் குறிப்பிடும் திராவிடர்கள் தான்……இந்தி பேசும் வட நாட்டவர் அல்ல….எனில் ஹிந்தி எதிர்ப்பு போர்[?] சாதித்தது என்ன?

    தமிழனை ,சக இந்தியனிடம் இருந்து துண்டித்தது தான் அதன் ஒரே சாதனை…….

    இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் எனும் கேள்வி எழலாம்…… லாபி என்பது மிக முக்கியம்….. ந‌மது மாநிலத்துக்கான எந்த சலுகை பெற வேண்டுமானாலும் லாபியிங் மிக முக்கியம்…..இந்திரன் மாறினாலும் இந்திராணி மாற மாட்டாள் என்பது சொலவடை…..அரசியல்வாதிகள் மாறினாலும் அதிகாரிகள் மாறுவதில்லை…..எந்த கொள்கை முடிவையும் நடைமுறைப்படுத்துபவர்கள் அவர்களே……ஆக மத்திய அரசுப்பணிகளில் தமிழர்களின் பங்கு மிக முக்கியம்….எழுபதுகளின் பிற்பகுதி வரை தமிழ் அதிகாரிகளே டெல்லியில் முக்கிய இலாகாக்களை நிர்வகித்தனர்……அதன் பிறகு நிலைமை மாறி தற்போது தமிழர்களை முக்கிய பதவிகளில் தேட வேண்டியுள்ளது……காரணம் வட இந்திய அரசியல்வாதிகளால் ஆங்கிலத்தை விட ஹிந்தியை எளிதில் புரிந்து கொள்ள முடிவதால்தான்…..ஹிந்தி தெரியாத அதிகாரிகளை அவ‌ர்கள் புறக்கணிக்கிறார்கள்….. ந‌ம் தர‌ப்பு நியாயத்தை எடுத்துச்சொல்ல அங்கு ஆளே இல்லை……

    ஒரு வாதத்துக்காக தமிழை காக்கத்தான் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்றால், இதர தென்னிந்திய மாநிலங்கள் எதுவும் ஹிந்தியை எதிர்க்கவில்லையே? இப்போது கன்னடம் ,மலையாளம் , தெலுங்கு போன்ற மொழிகள் எல்லாம் அழிந்தா போய்விட்டன? ஹிந்தியை ஏற்றுக்கொண்டு படித்த அவர்கள் தானே இன்று சகல துறைகளிலும் கோலோச்சுகின்றனர்?

    நதிநீர் பிரச்சினைகளில் உச்ச நீதிமன்றம் வரை சென்று நமக்கான தீர்ப்பை பெறுகிறோம்…….ஒன்றாவது அமல்படுத்தப்படுகிறதா? தொடர்ந்து நமது நியாயமான கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன……காரணம் என்ன? நான் முன்பே குறிப்பிட்ட லாபியிங் செய்ய நம் பக்கம் ஆளில்லை…..

    குஜராத் மீனவன் தாக்கப்ப‌ட்டால் அவனை இந்திய மீனவன் என்கிறார்கள்…. ராமேஸ்வர மீனவன் தாக்கப்பட்டால் தமிழக மீனவன் தாக்கப்பட்டான் என்கிறார்கள்…… எனில் தமிழன் இந்தியன் இல்லையா? இந்த நிலையை உருவாகியது ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்தான்…..

    திராவிட இயக்க தலைவர்கள் தங்கள் சுய நலத்துக்காக மாணவர்களின், தமிழர்களின் எதிர்காலத்தை பலியிட்ட அநாகரீகம்தான் ஹிந்தி எதிர்ப்பு வன்முறை……..இதை முன் நின்று நடத்திய தலைவர்கள் பிற்பாடு தங்கள் பேரன்களை ஹிந்தி படிக்கச்செய்ததும் , அதையே தகுதியாக காட்டி மத்திய அமைச்சர் பதவி பெற்றதையும் நாம் அறிவோம்…..தங்கள் பிழைப்புக்காக ஹிந்தி எதிர்ப்பை இன்றும் தொடர்பவர்கள் தொடரட்டும்……தங்கள் எதிர்காலம் பலியிடப்படுவது தெரியாமல்,மூளை மழுங்கடிக்கப்ப‌ட்ட முட்டாள்கள் கூட்டம் நிகழ்த்திய வன்முறைகளை, போராட்டம் என்ற பெயரில் நியாயப்படுத்தும் இதுபோன்ற கருத்துக்கள் , இனி வரும் தலைமுறையையும் முட்டாள்களாகவே வைத்திருக்க மட்டுமே பயன்படும்……

  31. Avatar
    poovannan says:

    ஹிந்தி திணிப்பிற்கு எதிரான தமிழக மாணவர்களின் போராட்டம் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்.அதனால் பலன் அடைந்தது மொத்த நாடும்
    ஏன் என்ற கேள்வியை கேட்க தயங்குபவர் பெரும்பான்மையாக இருக்கும் நாட்டில் தெருவில் வந்து போராடுபவனை பார்த்து வரும் இயலாமை வெறுப்பாக மாறுவது வருந்த வேண்டிய ஒன்று
    அநியாயத்தை எதிர்த்து கேள்வி கேட்பது இன்று நேற்று அல்ல பல நூறு ஆண்டுகளாக நடந்து வருவது தான்.இதில் சில வெற்றி பெறலாம்,பல தோல்வி அடையலாம்
    தோல்வி அடைந்ததால் அவை தேவை இல்லாத ஒன்றாக ஆகி விடாது
    சிறுபான்மையினராக இருந்தாலும் தென்னாப்ப்ரிக்காவில் நிறவெறியை,அநியாயத்தை,அடக்குமுறையை எதிர்த்து முதலில் பொங்கி போராடி உயிரையும் இழந்தவர் பலர் தமிழர் தான்

    http://www.gandhitoday.in/2011/11/blog-post_28.html

    சாமி நாகப்பன் படையாட்சி, நாராயணசாமி, வள்ளியம்மா முனுசாமி முதலியார் மட்டுமல்லாமல், “1913 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் நாள், மவுண்ட் எட்ச்காமே எனும் இடத்தில் ‘சத்தியாகிரகம் முடியும் வரை தோட்ட வேலைக்கு வரமாட்டோம்’ என்று கூறிய ஆறு தமிழர்கள் – பச்சையப்பன், ராகவன், செல்வன், குருவாடு, சுப்புராய கவுண்டர் மற்றும் பெயர்தெரியாத மற்றொருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேற்குறிப்பிட்டவர்களில் செல்வத்தின் மனைவி தமிழ் நாட்டிற்கு திரும்பினார், செல்வத்தின் மகன் அந்தோணிமுத்து காந்தியின் அகமதாபாத் ஆசிரமத்தில் சேர்ந்தார்” என்று எனுகா எசு. ரெட்டி என்பவர் குறிப்பிடுகிறார்

    அநியாயம் புரிந்தவன் பணக்காரன்,இன்று மிக வலிமையாக உள்ளவன் என்பதால் எதிர்த்து போராடாமல் கெஞ்சி உயிர் வாழ வழி தேடி கொள்ள வேண்டும் என்று எண்ணுபவர்கள் தான் இலங்கையில் படுகொலைகளுக்கு ஞாயம் கேட்டு போராடுபவர்களை கிண்டல் செய்பவர்கள் ,முட்டாள்கள்,சுயபுத்தி இல்லாதவர்கள் என்று வசை பாடுபவர்கள்
    இவர்களின் நன்மைக்கும்,நல்வாழ்வுக்கும் அவர்களின் போராட்டங்கள் வழி செய்யும் என்பதை கூட உணராதவர்கள்

  32. Avatar
    poovannan says:

    பெரும்பான்மையாக இருப்பவனின் மொழியை இணைப்பு மொழியாக ஏற்று கொள்ள வேண்டும்,அவனின் மதத்தை ஏற்று கொள்ள வேண்டும் அல்லது அவன் பெருந்தன்மையாக ஒதுக்கும் மூலையில் வாழ வேண்டும் என்று எண்ணம் பலருக்கு இன்றும் இருப்பது ஆச்சரியம் தான்
    மக்களை பிரிக்கும்,வெறியை தூண்டும் மதவெறி போராட்டமான அயோத்யா போராட்டத்தை நினைத்து பரவசப்படும் இவர்கள் பாதிக்கப்படும் மக்களுக்காக,புறக்கணிக்கப்படும் மொழிக்காக நடக்கும் போராட்டங்களை இழிவு படுத்துதல் ஏனோ
    போராட்டங்கள் பலரின் மனசாட்சியை உலுக்கும்.சிங்களவரில் சிலரை சிந்திக்க வைக்கும்.
    வெள்ளையன் தோற்று ஓடவில்லை.பிடிக்காத மக்களை ஆள்வது தவறு,கடினம்,ஜாலியன்வாலா பாக் நிகழ்வுகள் மனிதர்கள் செய்ய கூடிய காரியம் அல்ல, என்ற குற்ற உணர்ச்சி கொண்டவர்கள் வெள்ளையர்கள் இடையே அதிகமானதால் தான் ஆட்சியை விட்டு விட்டு சென்றான்.
    தென்னாப்ரிக்காவில் வெள்ளையர்களும் தோற்று நிறவெறியை விடவில்லை,உலக நாடுகளின் புறக்கணிப்பு வெள்ளை இனத்தை சார்ந்த ஆட்சியாளர்களை வேறு வழி இல்லாத நிலைக்கு தள்ளியது

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      // போராட்டங்கள் பலரின் மனசாட்சியை உலுக்கும்.சிங்களவரில் சிலரை சிந்திக்க வைக்கும். //

      உங்களது தன்னம்பிக்கை சிலிர்க்க வைக்கிறது. இங்கே இலங்கை தமிழருக்கு ஆதரவான போராட்டம் எனக்குத்தெரிந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கிறது.

      ஆனால் நாம் நடத்திக்கொண்டிருக்கும் போராட்டங்கள் அவர்களை சிந்திக்க வைப்பதான முறையில் இல்லை என்பதுதான் இங்கு குறையே. தமிழகம் வரும் புத்த பிட்சுக்களை ஓட ஓட அடித்து விரட்டுவதும், விளையாட வரும் இலங்கை கிரிக்கெட் வீரர்களை அரசே முன்னின்று தடை செய்வதும் சிங்களர்களை எந்த திசையில் சிந்திக்க வைக்கும் என்பதை முதலில் நீங்கள் சிந்தியுங்கள் பூவண்ணன்.

      1. Avatar
        poovannan says:

        சிங்களர்களை,புத்த பிக்குகளை தாக்கிய நிகழ்வு மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று.அதை ஆதரிப்பதை விட அவமான பட கூடிய நிகழ்வு வேறு கிடையாது.
        ஆனால் அதையும் விளையாட்டு,ராணுவ வீரர்களுக்கு பயிற்சி போன்றவற்றை எதிர்ப்பதையும் ஒன்றாக பார்ப்பது சரியா
        நிற வெறியினால் தென்னாப்ரிக்காவில் பாதிக்கப்பட்ட இந்தியர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்கள் தான்.அவர்களுக்கு மற்றும் பாதிக்கப்பட்ட கறுப்பின மக்களுக்கு ஆதரவாக இந்தியா தான் உலக அரங்கில் குரல் எழுப்பி ,நிற வெறியை பாராட்டும் தெனாப்ப்ரிகாவோடு எந்த தொடர்பும் வைத்து கொள்ள கூடாது என்று உலக நாடுகளை வற்புறுத்தி அதில் பெருமளவு வெற்றியும் பெற்றது
        ஒரே ஆண்டில் தென் ஆப்ரிகா மாறி விடவில்லை.நாப்பது ஆண்டுகள் போராட்டத்தில் வெள்ளைய ஆட்சியாளர் நிற வெறியை கை விட்டனர் .மண்டேலாவும் அவர் நண்பர்கள் பலரும் ஆயுதம் எடுத்து போராடியவர்கள் தான்
        ஒரு இன மக்களை உயர்வாகவும் ,மற்றவரை இழிவாக நடத்தும் எந்த அரசும் மற்ற நாடுகளால் அந்த கொள்கைகளை அழிக்கும் வரை,பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருப்பது ஆச்சரியம் தான்

  33. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    திரியின் முக்யமான கருதுபொருள், வெளிதேசங்களிலிருந்து ஹிந்துஸ்தானத்தில் நிகழும் போராட்டங்களுக்கு மறைமுக ஊக்குவிப்பு. ஈழத்துக்கு உபகாரம் செய்கிறோம் என்ற பெயரில் சந்தடி சாக்கில் தனித்தமிழ்நாட்டுப் பிரிவினைக் கோஷங்கள்.
    இதெல்லாம் தான் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறதே. ஹிந்துஸ்தானத்தைக் கூறுபோடுவதற்கு பருந்துகள் பறந்து கொண்டிருப்பதும் அறியாத பச்சைக்கிளிகளான மாணவர்கள் அதற்கு இறையாவதும் தெரிகிறதே.

    ஹிந்துஸ்தான சர்க்கார் இதுவரை ஈழத்தமிழர்களுக்காகக் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவிட்டு ஈழத்தில் பல கட்டுமானப்பணிகளை பூர்த்தி செய்துள்ளது. இவை ஹிந்துஸ்தானத்தின் அனைத்து மாகாணத்தவரும் கட்டிய வரிப்பணத்திலிருந்து கொடுக்கப்பட்டது.

    இந்தப்பணம் சரியாக உபயோகிக்கப்பட்டதா? இதன் பயன் முற்று முழுதாக ஈழத்தமிழர்களுக்கு கிடைத்ததா. அல்லது செலவு செய்தது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக. ஆனால் அதன் பலனை அவை அந்த அளவிற்கு தேவையில்லாத சிங்களர்கள் அனுபவிக்கிறார்களா?

    இந்தக் கேழ்விகளெல்லாம் எந்தப் போராட்டத்திலாவது விவாதங்களிலாவது பேசப்பட்டது? கண்டிப்பாக பதில் கிடைக்க முடிந்த இந்தக் கேழ்விகளை வைத்து ஈழத்தமிழர்களுக்கு ஹிந்துஸ்தானம் இன்னமும் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பரிசீலனை செய்ய முடியுமே!!!!!!

  34. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    இத்தாலியப் பரங்கியக் கொலைகாரர்கள் கேரளத்துச் சஹோதர மீனவர்களைக் கொலை செய்து க்றிஸ்துமஸ் கொண்டாடுவதற்கும் ஓட்டுப்போடுவதற்கும் ஹிந்துஸ்தானத்தை விட்டு வெளியே போக அனுமதி கொடுக்கிறது நீதிமன்றம். விட்டு விடுவார்களா கேரளத்தவர். ஊடகங்கள் மூலம் கேந்த்ர சர்க்காரை வறுத்தெடுக்கவில்லை?

    சமுத்ரம் தாண்டி இருக்கும் ஈழத்தமிழருக்கு நாம் செய்ய வேண்டியது நிறைய. செய்துள்ளது குறைவு.

    ஹிந்துஸ்தானத்து தமிழ் மீனவர்களை ஸ்ரீலங்கா சர்க்கார் குருவி சுடுவது போல் சுட்டுத்தள்ளிக்கொண்டிருக்கிறதே? (இதுவரை 700 பேர் அல்லது அதற்கும் அதிகம்?) இதற்குத் தமிழகத்தில் அவ்வப்போது ஆட்சியில் இருக்கும் சர்க்கார் என்ன செய்துள்ளது? பாக்கிஸ்தான சர்க்கார் குஜராத் மீனவர்களை கைது செய்வதையும் விடுதலை செய்வதையும் விவாதிக்கும் தேசிய சேனல்கள் தமிழகத்து மீனவர்களின் நிலையைப் பெரிதாக விவாதிக்காது விடுவதை தமிழகத்தவர் ஏன் இந்த சேனல்காரர்களுக்கு சுட்டிக்காட்டுவதில்லை?

    கேரளத்தவரால் சாதிக்க முடிந்த விஷயம் தமிழகத்தவரால் ஏன் சாதிக்க முடிவதில்லை?

    அவரவர் சொந்த பந்தங்களை விசாரணைக்கமிஷன் களிடமிருந்து பாதுகாத்துக்கொள்வது; என்னென்ன பசையுள்ள இலாகாக்களை மந்த்ரி சபையில் பிடுங்குவது என்பதில் மட்டும் முனைப்பிருந்தால் சுகப்படவேண்டியது சொந்த பந்தங்கள். தெருவில் கோஷமிட வேண்டியது பெற்றோர் தங்களது படிப்புக்காகச் செலவு செய்த பணத்தை வீணடிக்கும் மாணவர்கள். தங்கள் தலைவனுக்கு பெருமை சேர்ப்பதற்காகத் தீக்குளித்து மாண்டு போகும் அப்பாவி பொதுஜனங்கள்.

    தமிழகத்தில் ஸ்ரீலங்கா வீரர்களை IPLல் விளையாட விடமாட்டோம் என அம்மணி ஜெயலலிதா சொல்லி முடிக்குமுன் கேரளத்து முக்யமந்த்ரி உம்மன்சாண்டி கேரளத்திலே நாங்கள் எல்லா சௌகர்யங்களும் செய்து தருகிறோம் என்று சொல்லியுள்ளாரே? யாராவது தமிழக காங்க்ரஸ் காரர் இதைக் கண்டித்துள்ளார்?

    ஈழத்தில் துயரப்படும் தமிழர்களுக்காக ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் அனைவரும் ஜாதி, மத, மொழி, மாகாண பேதமின்றி குரல் கொடுக்க வேண்டும்; பாடுபட வேண்டும் என்பது சரியான நிலைப்பாடு.

    ஆனால் முனைந்து வருவது பிரிவினைவாத சக்திகள். மற்ற மாகாணத்தைச் சார்ந்த பிரிவினைவாதிகள் பிரிவினை வாத கோஷங்கள் போடுபவருடன் இணைகிறார்கள். தேசம் இதைப் பார்த்து வருகிறது.

  35. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \கனடா, அமெரிக்க போன்ற வெளி நாடுகளில் இந்தியர்கள் ஒருங்கு கூடி நடத்தும் சுதந்திர தின விழா, தீபாவளி போன்ற பொதுப் பண்டிகையில் மற்ற இந்திய மாநிலத்தில் வாழ்ந்தவர் புன்னகையோடு ஐக்கியமாய்ப் பழகும் போது, திராவிடத் தமிழர் மட்டும் உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டு தனியே ஒதுங்கி நிற்கிறார். இது உண்மை.\

    ஸ்ரீமான் ஜெயபாரதன், கானடாவில் எப்படி என்று உங்களுக்குத் தான் தெரியும்.

    தீபாவளி ரொம்ப தூரம். இப்போது தான் முடிந்த ஹோலிப்பண்டிகையில் தமிழர்கள், மலையாளிகள், தெலுகுகாரர்கள், கன்னடிகர்கள் எல்லோரும் உத்தரபாரதத்தவருடன் குஷியாகப் பண்டிகையைக் கொண்டாடியதைக் கண்டு மகிழ்ந்தவன் நான்.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      திராவிடக் கட்சிகள், “தனித் திராவிட நாடு” கோரிக்கையைக் கைவிட்டு இப்போது மாணவர் உண்ணா விரதப்
      போராட்டத்தில் “தனித்தமிழ் நாடு” பிரிவினைக்கு விதை யிடுகிறது. தமிழர்களாகிய நாம் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் போது நம்மை எல்லாம் அவர்கள் திராவிடக் கட்சி அனுதாபிகள் என்று தவறுதலாய் நினைக்கவும், ஒதுக்கவும் ஆளும் திராவிடக் கட்சிகள் தமிழர் முத்திரையைத் திராவிடர் என்று மாற்றி விட்டன.
      தமிழர் எல்லாரும் தமிழர், திராவிடர் அல்லர் ! முதல் அமைச்சர் ஜெயலலிதா தமிழரா, ஆரியரா ? அல்லது திராவிடரா ?
      தமிழருக்குள் “திராவிடர்” என்னும் வரலாறு கூறாத, தேவை இல்லாத வகுப்பு வாதப் பிரிவு ஒன்று தேவையா ?
      திராவிட நாடு தமிழ்நாடாக மாறிய போது, திராவிடர் தமிழராக வேண்டாமா ?
      திராவிடக் கட்சி அனுதாபிகள் யாரும் தம்மைச் “சகோதரத் “திராவிடர்களே !” என்று மேடைகளில் கூட விளிப்பதில்லை.

      1. Avatar
        paandiyan says:

        பக்க்கது கர்நாடகவில் போயி நீயம் நானும் திராவிடன் என்று சொல்லி பாருங்கள் கன்னடன் பின்புறம் சிரிப்பான். இதுதான் இவர்கள் பேசிய திராவிட கூவு. திராவிடம் என்பத ஒரு நிலபரப்பு. இன்று அந்த நிலபரப்புக்கு (பீர்மேடு, பாலாறு, காவேரி..) வெட்டு.. குத்து ..எங்க நாம் திராவிடன் என்ற உணர்வுடன் இதற்க்கு எல்லாம் தன்னை தான “இன தலைவன்” என்று உலரும் கூட்டம் சரி பன்னவேண்டியதான .. அதாவது திராவிட உணர்வோடு ??

  36. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \எதிர்க்கப்பட்டது கட்டாய ஹிந்தி தான்\

    அன்பர் பூவண்ணன்,

    “ராஜ்பாஷா நீதி” என்று முறையாகத் திட்டம் தீட்டி ஹிந்தியைக் கேந்த்ர சர்க்கார் எப்படி பரப்பி வருகிறது என்பது உங்களுக்குத் தெரிந்தது தானே. அதைச் சட்ட ரீதியாகத்தானே செய்து வருகிறார்கள்? ஹிந்தி பேசும் மாகாணங்களில் மற்றும் ஹிந்தி அறியாத மாகாணங்களில் எப்படி இதைப் பரப்ப வேண்டும் எனத் திட்டம் தீட்டி மொழியைப் பரப்பி வருகிறார்கள்.

    ததாகத பாபாசாஹேப் அம்பேத்கர் தேசத்திற்கு அளித்த ஆவணமான ஹிந்துஸ்தானத்தின் அரசியல் சாஸனத்தின் ஷரத்து 351 என்ன சொல்கிறது என்பதைப் பாருங்கள் :-

    It shall be the duty of the Union to promote the spread of the Hindi language, to develop it so that it may serve as a medium of expression for all the elements of the composite culture of India and to secure its enrichment by assimilating without interfering with its genius, the forms, style and expressions used in Hindustani and in the other languages of India specified in the Eighth Schedule, and by drawing, wherever necessary or desirable, for its vocabulary, primarily on Sanskrit and secondarily on other languages.

    தக்ஷிண பாரத ஹிந்தி ப்ரசார சபா ஹிந்தியை தக்ஷிண பாரதம் முழுதும் பரப்பி வருகிறது.

    தமிழுக்காகத் தமிழ்ப்பல்கலைக்கழகம் ;செம்மொழி என் நிறுவியது; தமிழ் மொழி சார்ந்து எண்ணிறந்த ஆய்வுகள் எல்லாவற்றிற்கும் எனது வணக்கங்கள். ஆனால் தமிழ் மொழி அறியாத மற்ற ஹிந்துஸ்தானியருக்குத் தமிழைப் போதிக்க ஹிந்தி ப்ரசார சபா போன்று ஏதாவது இயக்கம் உள்ளதா என்பதை அறிய விழைகிறேன். தமிழக சர்க்காரோ அல்லது தமிழ் மொழி சார்ந்த இயக்கங்களோ இந்த விஷயத்தில் எடுத்துள்ள முனைப்பு யாது?

    அன்பர் பூவண்ணன் அல்லது அன்பர் பாலா இது சம்பந்தமாய் ஏதும் விபரமறிந்திருந்தால் பகிருமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  37. Avatar
    paandiyan says:

    \கனடா, அமெரிக்க போன்ற வெளி நாடுகளில் இந்தியர்கள் ஒருங்கு கூடி நடத்தும் சுதந்திர தின விழா, தீபாவளி போன்ற பொதுப் பண்டிகையில் மற்ற இந்திய மாநிலத்தில் வாழ்ந்தவர் புன்னகையோடு ஐக்கியமாய்ப் பழகும் போது, திராவிடத் தமிழர் மட்டும் உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டு தனியே ஒதுங்கி நிற்கிறார். இது உண்மை.\

    இது ஆட்ச்யர்யம் இல்லை. அதாவது — இன்னும் சற்று ,,, இன்னும்.. கொஞ்சம்.. பொருத்து கொள்ளுங்கள் , சிங்கப்பூர்ல் இந்த நிலை விரைவில் வந்துவிடும்..

    //நம் ஊரில் கொளுத்து வேலை செய்ய ஆள் கிடைக்காததால் ஒரிசா,பீகார் மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கில் மக்கள் தமிழகம் வந்து வேலை செய்கிறார்கள்
    //

    அதாவது கூலி வேலை நிலையில் இருந்து நாம் மேல சென்றுவிட்டோம் . ஆனால் வைகோ , தமிழருவி மணியன் மதுக்கு எதிராக போராடும் நோக்கம் வேறு , கருத்து வேறுபடுகின்றத . யார் பொய்யர் இங்கு

    // ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மிகவும் வெறுக்க காரணம் ,இவர்களின் கனவு திட்டமான ஆங்கிலத்தை விரட்டும் முடிவுக்கு கிடைத்த மரண அடி,//

    இன்னொமொரு புரட்டு ஹிந்தி வந்தால் ஆங்கிலம் அழிந்து விடுமாம் அப்படி இல்லாமல் இவர்கள் தூக்கி புடித்து தாங்கி இன்று இந்த நிலயில் இருகின்றார்கலாம் . என்ன ஒரு புருட
    .என்ன்வோ இவர்கள் ஹிந்தியை ஆதரித்து ஒண்ணும சொல்லவில்லையா? பேஸ்ட் பண்ணினால் நாறிவிடும். உண்மை நோக்கம் நமக்கு எல்லாம் தெரியாது என்று ஒரு நெனைப்பு .

    //தமிழகத்தில் பலர் ஆங்கிலத்தை விட இந்தி படிப்பது நல்லது என்று மாறி விட்டது போல பாண்டியன் கூறுவது //

    நான் உண்மை சொல்வது இங்கு. அதாவது நேரில் பார்த்து . இணையத்தில் ஒரு லிங்க் கொடுத்து ஊரை ஏமாற்றும் செயல் இல்லை.
    என்னுடைய பல நண்பர்கள், நான் பார்த்துகொண்டு இருப்பவர்கள் எல்லாம் ஹிந்தியில் புலிகள் . அனால் தமிழ் வேடம் போடாத மொழி வெறி இல்லாமல் இருக்கும் நல்லவர்கள். புத்திசாலிகள்… பொழைத்துகொண்ட்டர்கள்…

  38. Avatar
    paandiyan says:

    //போராட்டங்கள் பலரின் மனசாட்சியை உலுக்கும்.சிங்களவரில் சிலரை சிந்திக்க வைக்கும்.
    //

    மேல மண்ணின் மைந்தன் நாக்கை புடுங்குவது போல கேள்வி கேட்டு இருகின்ரார். பதில் சொல்வது…

  39. Avatar
    paandiyan says:

    //சிலர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மிகவும் வெறுக்க காரணம் ,இவர்களின் கனவு திட்டமான ஆங்கிலத்தை விரட்டும் முடிவுக்கு கிடைத்த மரண அடி,மற்றும் ஹிந்தி பேசும் மாணவர்கள் மற்றவர்களை போல இன்னொரு மொழி படிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழும்பினால் அவர்களின் மீது வடமொழியை திணித்து//

    நாளைய கமிஷன் கிடைத்தால் இதை இவர்கள பன்னமாட்டர்கள் என்று நினைத்துவிடாதீர்கள்.. ஆதாயம் இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் நடக்கும் ஹிந்தி க்கு செத்தவர்கள் கட்ச தீவுக்கு என்ன பண்ணினார்கள். மொழிவாரி மாநிலங்களாக பிரியும் போது நில மீட்சி போராட்டங்கள் எதுவுமே திமுகவால் முன்னெடுக்கப்படவில்லை, மொழி வாரி மாநிலத்தால் தமிழகம் இழந்த திருப்பதி, சித்தூர், கோலார், தேவிகுளம்,பீர்மேடு, பாலக்காடு என்று பெரிய பட்டியலே இருந்தாலும் தமிழகம் இன்னும் இழந்துவிடாமல் மீட்டெடுக்கப்பட்ட திருத்தனி, சென்னை, முழுக்குமரி மாவட்டம் என தமிழர்களின் தேசிய நிலத்தை மீட்டெடுத்தவர்கள் ராஜாஜி , ம.பொ.சி, நேசமணி மற்றும் பலர், இதில் எதிலும் திமுகவோ அல்லது அண்ணாதுரை கருணாநிதி போன்றோர்களின் பங்களிப்போ கிட்டத்தட்ட இல்லை. இது போலதான் இன்று இலங்கை நிலையும் .. என்ன காரணம். தமிழ் தமிழ் என்று சொல்லி இவர்கள் பக்கத்துக மாநிலத்தில் இருந்து வந்து இங்கு மொளகாய் அரைத்து மூடனாய் ஆக்கி விட்டு இருகின்றார்கள். பாவம் எப்போ தெளியுமோ??

    1. Avatar
      poovannan says:

      1957 தேர்தலில் தி மு க வெற்றி பெற்ற இடங்கள் 13.அவர்களுக்கும் மொழி வாரி மாநிலங்கள் பிரிந்த போது தமிழ்நாடு இழந்த பகுதிகளுக்கும் என்ன தொடர்பு .திருவான்கோரே கீழ் இருந்த கன்யாகுமரி பகுதிகளை சேர்த்து கொள்ள முதல்வராக இருந்த காமராஜ் அவர்களால் பீர்மேடு,தேவி குளம் பகுதிகள் கேரளாவிற்கு விட்டு தரப்பட்டது
      முதல்வராக இருந்த ராஜாஜியின் முட்டாள்தனத்தினால் தான் சென்னையில் உண்ணாவிரதம் இருந்த போட்டி ஸ்ரீராமுலு இறக்க நேரிட்டது.அவரின் ஆட்சியின் கீழ் இருந்த தெலுகு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு தமிழ் பேசும் மக்கள் துரத்தப்பட்டனர்.மொழிவாரி மாநிலம் அமைக்க குழு ஏற்படுத்துவதற்கு முன்பே ,ராஜாஜியின் திறமை இன்மை காரணமாக ,கலவரங்களை கட்டுபடுத்த நேரு உடனடியாக 16 மாவட்டங்களை ஆந்திரமாக அமைத்து உத்தரவிட நேர்ந்தது.இந்த பிரிவினை தான் ராஜாஜி பதவி இழக்க முழு காரணம்.தமிழர்களின் ,வெற்றி பெற்ற எம் எல் ஏ க்களின் ஆதரவு துளி கூட இல்லாமல் பின்வழியாக முதலவர் ஆன ராஜாஜி ,ஆந்திரம் பிரிந்த பிறகு சில மாதம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் பதவி இழந்தார்.
      பிரிவினைக்கு காரணமானவரை,கலவரத்தை அடக்க முடியாமல் தவித்தவரை ,தமிழகத்திற்கு இடங்கள் கிடைக்க காரணம் எனபது கேப்பையில் நெய் வழிகிறது கதை தான்

      1. Avatar
        paandiyan says:

        7 வயதில் இருந்து கொடி புடித்து போராடினன் என்று சொன்னது எல்லாம் பீலா என்று சொல்லுகின்றீர்களா ?? பிரிட்டிஷ்ண் கீழ் நேரடி சுதந்திரம், தனி தமிழ்நாடு என்று எல்லாம் கூவிய இவர்கள் இந்த விசயத்தில் கூவின மாதரி தெரியவில்லைய?? ஏன்

    2. Avatar
      poovannan says:

      நாளை மன்மோகன் அரசு சியாசேன் பனிசதுக்கத்தை ஐ நா விடம் ஒப்படைத்தால் ,காஷ்மீர் அரசாங்கம் மேல் குறை சொல்வீர்களா
      கச்சதீவு தாரை வார்த்தல் தமிழகத்தின் எதிர்ப்பை மீறி இந்திரா அரசாங்கம் எடுத்த முடிவு அது
      எவை மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வருகின்றன என்று கொஞ்சமாவது யோசியுங்கள்.வங்காள யுத்தத்தில் வெற்றி பெற்று பெரும் மிதப்பில் இருந்த இந்திரா காந்தியை,நீதிமன்றம் எதிராக தீர்ப்பு சொல்லியதால் எமர்ஜென்சி கொண்டு வந்த இந்திரா காந்தியின் முட்டாள்தனம் கட்ச்சதீவு,அல்லது தமிழர்களின் மீதான காழ்ப்புணர்வு.அந்த பழியை கலைஞர் மேல் போடுங்கள்,ஆனால் முல்லை பெரியார் அணையின் ஒப்பந்தத்தை 1970 அன்றைய கேரளா முதலவர் அச்சுத மேனோனோடு போட்டதை நைசாக மறைத்து விடுங்கள்.
      காவிரி அணையின் ஒப்பந்தம் காலவதியானதற்கு காரணம் ,ஒத்து கொள்ள மறுத்த கர்நாடகம்.இன்று இலங்கை அரசுடன் பேசி தீர்க்க வேண்டும் ,போராடாமல் என்று வாதிடுபவர்களை போல அன்றைய வானளாவிய அதிகாரம் கொண்ட பிரதமர் இந்திரா பேசி தீர்க்கலாம் என்று சொன்னதால் தமிழகம் வழக்கை வாபஸ் பெற்றது.வழக்கில் வெற்றி பெற்றாலும் ,வி பி சிங் அரசு நடுவர் மன்றம் வைத்து ,தீர்ப்புகள் வந்தாலும் பேச்சுவார்த்தைக்கு செல்லுங்கள் என்று அதே உச்ச நீதிமன்றம் சொல்வதை இன்றும் பார்க்கிறோமே

      1. Avatar
        paandiyan says:

        //தமிழகத்தின் எதிர்ப்பை மீறி இந்திரா அரசாங்கம் எடுத்த முடிவு அது
        //
        //பிரதமர் இந்திரா பேசி தீர்க்கலாம் என்று சொன்னதால் தமிழகம் வழக்கை வாபஸ் பெற்றது//
        எதையும் தாங்கும் இதயம் உங்களுக்கு. அப்படிப்பட்ட இந்திராவை நேருவின் மகளே என்று கூவி கூவி கூப்பிடும்போது இது எல்லாம் எங்க போனது

      2. Avatar
        paandiyan says:

        //நாளை மன்மோகன் அரசு சியாசேன் பனிசதுக்கத்தை //
        என்று நீங்கள் சொல்ல வருவது மற்றும் :-
        // இந்திரா பேசி தீர்க்கலாம் என்று சொன்னதால் தமிழகம் வழக்கை வாபஸ் பெற்றது, தமிழகத்தின் எதிர்ப்பை மீறி இந்திரா அரசாங்கம் எடுத்த முடிவு அது,//

        இப்படிப்பட்ட இளித்தவாயன் எல்லாம் அங்கு இல்லை. அதாவது உங்களை மாதரி கேனைகள்.. அதாவது எந்த பிரமரும் அப்படி நினைக்க கூட முடியாது ..இப்படிப்பட்ட கேணத்தனமான கற்பனையில் இருந்து வெளியில் வரவும்

  40. Avatar
    paandiyan says:

    //சென்னை தமிழ் ,கோவை தமிழ் ,நெல்லை தமிழ் என்று மூன்றும் வேறு மொழிகள்,வேறு ஸ்கிரிப்ட் என்று இருக்கிறது என்று வைத்து கொள்வோம்.இதில் சென்னை மாணவர் சென்னை தமிழ் மட்டும் படித்தால் போதும்
    மற்றவர்கள் கோவை தமிழோடு ,சென்னை தமிழையும் கட்டாயம் படிக்க வேண்டும் என்றால் இவர்கள் ஒத்து கொள்வார்களா
    //
    இந்த உவமானம் ஒன்று போதும் நீங்கள் எந்த அளவு இந்த பிரச்சனையின் ஆழம் புரிந்துகொண்ட நபர் என்று?? வேறு என்ன வேண்டும்??

    1. Avatar
      poovannan says:

      பாண்டியன் சார் இதில் என்ன தவறு என்று சொன்னால் திருத்தி கொள்வேன்.
      இணைப்பு மொழியாக ஆங்கிலத்தை வைத்தால் அனைவருக்கும் பொது.அனைவருக்கும் தாய்மொழியோடு சேர்த்து இரண்டாவது மொழி
      இதில் சென்னை தமிழ் பேசுபவர்கள் மற்றவர்களை விட ஆயிரம் பேர் அதிகம் என்பதால் அதை இணைப்பு மொழியாக ஆக்க வேண்டும்,அதை கட்டாயம் அனைவரும் படிக்க வேண்டும் என்பதில் ஏதாவது நியாயம் உள்ளதா
      பல மொழிகள் பேசுபவர் இருக்கும் தேசத்தில் எண்ணிகையை வைத்து இணைப்பு மொழியை முடிவு செய்வதா அல்லது எந்த மொழி அனைவராலும் ஏற்று கொள்ளப்படும்,எளிதானது,எந்த குழுவினருக்கும் முன்னுரிமை தராதது என்று பார்த்து முடிவு செய்வதா

  41. Avatar
    poovannan says:

    சான்றோன் சார்
    ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழுக்கும் ,இந்திக்குமான போராட்டம் அல்ல
    ஆங்கிலத்துக்கும் இந்திக்குமான போராட்டம்
    இணைப்பு மொழி இனி ஹிந்தி மட்டும் தான் என்பதை எதிர்த்து தான் போராட்டமே .ஆங்கிலம் இந்தியாவில் இணைப்பு மொழியாக இன்று இருப்பதற்கு,உத்தர்ப்ரதேச மக்கள் கூட போட்டி போட்டு கொண்டு கற்று கொள்ளும் நிலை உருவானதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்
    அதன் பலனை அனுபவிப்பவர் அனைத்து மாநில மக்களும் தான்.

    உங்கள் நவோதய வித்யாலய பற்றிய கேள்விக்கு ஏற்கனவே பதில் கொடுத்ததாக ஞாபகம்
    மாநில அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம் கொடுக்கும்.அங்கு மத்திய அரசு ஹோச்டேல் வசதியுடன் இலவச கல்வி,உணவு,தங்குமிடம் வழங்கும் பள்ளி நடத்தும்.இடம் கொடுக்க தமிழக அரசு தயாராக இருந்தது.அதன் ஒரே கோரிக்கை ,கட்டாய ஹிந்தி வேண்டாம்,விருப்ப பாடமாக இந்தி இருக்கலாம் எனபது தான்.
    தமிழகம் இந்தியாவில் ஒரு பகுதி என்றால் ,இங்கு இருப்பவர்களும் இந்தியர்கள் என்று மத்திய அரசு கருதினால் ,இங்குள்ள ஏழை மாணவர்கள் பயன்பெற வேண்டும்,அவர்களும் நம் மக்கள் தானே என்று எண்ணி இருந்தால் விருப்ப பாடமாக ஹிந்தியை ஒத்து கொண்டு இருக்கலாம்.
    ஆனால் இங்கு இருக்கும் ஏழை மக்களுக்கு கல்வி தருவதை விட ஹிந்தி திணிப்பு முக்கியம் என்பதால் பள்ளிகளை இன்றுவரை மத்திய அரசு திறக்கவில்லை
    அதை பற்றி கவலை வேண்டாம்.இதன் மேல் வழக்கு போட்டு நடத்தாத இத்தனை ஆண்டுகளுக்கு மத்திய அரசு இழப்பீடாக செலவிட்டிருக்க வேண்டிய தொகையை பெற முடியும் என்ற நம்பிக்கையை நீதிமன்றங்கள் இப்போது தர துவங்கி உள்ளன

  42. Avatar
    KALAI says:

    வெளிநாட்டிலிருந்து மாணவர்களையும் பிறரையும் தூண்டி விடுபவர்கள் இரண்டு ரகம். ஒன்று பழைய திராவிட உணர்வாளர்கள். இவர்கள் இன்னமும் அறுபதுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். தனித்தமிழ் நாட்டில் தட்டினால் தங்கம் வெட்டினால் வெள்ளி என்று அடுக்கு மொழியை நம்பி மக்களுக்கு வலை விரித்தவர்கள் தான் தமிழனைக் காப்பாற்றியவர்கள் என்று நினைப்பவர்கள். இன்னொரு பக்கம் இலங்கைத் தமிழர்கள். அவர்கள் உணர்ச்சி வசப்படுவதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் அவர்களில் எவரும் பிரசினை தீர வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புகிறார்களா என்பது சந்தேகம். பலரும் மேநாட்டில் குடியுரிமை பெற்று வாழ்பவர்கள்.அல்லது குடியுரிமைக்குக் காத்திருப்பவர்கள். குடியுரிமைக்குக் காத்திருப்பவர்கள் பிரச்சினை தீர்ந்து விட்டால் திரும்பிப் போக நேரிடுமே என்று கவலை கொள்பவர்கள்.இன்னொரு புறம் கனடாவில் ஈழம் அமைக்கப் போகிறோம் (குபெக் மாதிரி என்று உசுப்பி விடுபவர்கள். இரண்டாவது தலைமுறை இது பற்றிக் கவலை கொள்ளுமா என்பது சந்தேகம்.

    இந்திய வம்சாவளியினரின் நலனுக்கு இந்திய அரசு என்றுமே கவலைப் பட்டதில்லை. குவானா முதல் பிஜி வரையில் இந்திய வம்சாவளியினரின் ஆதரவு சக்தியாக இந்திய அரசு செயல்படவேண்டும் என்ற தொலை நோக்கை உருவாக்கி அதன் ஊர் அங்கமாக இலங்கைத் தமிழார் பிரசினையை மேற்கொண்டால் ஒழிய தீர்வு சாத்தியம் இல்லை.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      25 வருட ஈழப் போராட்டித்தில் 500,000 மேற்பட்ட ஈழத் தமிழர் புலம் பெயர்ந்து, புகுந்த நாட்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டுச் சுதந்திரமாக சுகமாக வாழ்ந்து வருகிறார். இவரில் பலர் ஈழ விடுதலைக்குப் நிதியும், ஆயுதமும் அளித்தவர். ஈழ விடுதலைக்கு இப்போது ஆதரவாளராய்த் தூண்டுபவர்.
      ஆனால் ஈழ நாடு ஏற்பட்டுத் தனி விடுதலை நாடானால் 500,000 பேரில் எத்தனை பேர் மீண்டும் இலங்கைக்குத் திரும்பி வருவார் என்பது யாரும் சொல்ல முடியாது !!!

    2. Avatar
      paandiyan says:

      //இந்திய வம்சாவளியினரின் நலனுக்கு இந்திய அரசு என்றுமே கவலைப் பட்டதில்லை//
      இலங்கை போர் உக்கிரத்தில் இருந்தபோது சீக்கிய மயிருக்கு பிரான்ஸ் பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது . சீக்கிய விசயத்தில் வெளிஉறவு உடன் நடவடிக்கை எடுக்கும். இத்தாலி விசயத்தில் இன்றைய கேரள முதல்வரை facebook தூக்கி வைத்து கொண்டாடுகின்றது. (லெட்டெர் எழுதி எழுதி அந்த முதல்வர் ஊரை ஏமாற்றவில்லை. அவர்கள் சொன்னார்கள் நான் உண்ணும் விரதம் முடிதுகொண்டன் என்று கூவவில்லை ) திராவிடம் எப்போதும் கனி உனக்கு மணி எனக்கு பாலிசிதான்.. காசேதான் பகுதறிவு கடவுள் எனும்போது வெளிஉறவு கண்ணை மூடிகொள்வதில் என்ன தவறு …

  43. Avatar
    poovannan says:

    சான்றோன் சார் சொல்வதை பார்த்தால்
    ஹிந்தியை எதிர்த்ததால் தமிழக மீனவனை பற்றி கண்டு கொள்ள மறுக்கிறார்கள் ,ஆகவே ஹிந்தியை ஆற தழுவ வேண்டும் என்று கூறுகிறவர்

    நாம் அனைவரும் கிறுத்துவராக மாறினால் ,இலங்கை தமிழர்கள் கிறுத்துவராக மாறினால் அமெரிக்கா உடனே விடுதலை வாங்கி கொடுக்கும் ,கொடுத்திருக்கும் என்பார் போல ,இல்லை இலங்கை தமிழர்கள் புத்த மதத்தை தழுவினால் இலங்கை அரசாங்கம் உடனே அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும்,அப்படி ஆற தழுவாமல் அதை எதிர்க்கும் முட்டாள்கள் என்றும் கூறலாம்
    ஹிந்தி திணிப்புக்கு ஒத்து கொண்டால் நவோதய பள்ளி என்பதை போல கட்டாய அரபி,ஒரு மணி நேரம் கட்டாய இஸ்லாமிய போதனை நடத்த அனுமதி தந்தால் அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளை போல அனைத்து வசதிகளும் செய்து தருகிறேன் என்று இஸ்லாமிய இயக்கங்கள் முன்வந்தால் ஏற்று கொள்ளாமல் இருப்பவர்கள் முட்டாள்கள் என்று சொல்வார் போல

  44. Avatar
    poovannan says:

    http://www.ndtv.com/article/south/tamil-nadu-mps-demand-tamil-as-official-language-210329

    MPs M Thambidurai (AIADMK), TKS Elangovan (DMK) and Thol Thirumaavalavan (VCK) raised the demand while participating in the debate in Lok Sabha on the completion of 60 years of the first sitting of Parliament.

    Mr Thambidurai said they only want Tamil, “one of the ancient and classical languages,” to be accorded equal status and it be made an official language of the country.

    “Our language must be respected and this Parliament must come forward to enact a law to make ours an official language. Link language is different and official language is different.

    “The status of official language must be awarded to Tamil and not only that, the same equal status and importance must be given to Malayalam, Odiya, Bengali and all other languages of the country. This is our avowed policy and principle,” he said.

    பாண்டியன் சார்
    ஹிந்திக்கு ஆதரவான பெரும்பான்மையான தமிழர்களில் ஒரு சிலரையாவது தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஹிந்திக்கு ஆதரவாக பேச சொல்லுங்களேன்
    ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் எதற்காக என்று கொஞ்சம் படிக்க முயற்சி செய்யுங்களேன் .
    பொத்தாம் பொதுவாக போராட்டத்தினால் அழிந்தவர்கள் பலர் என்று பேசுவது,அதற்க்கு நீங்கள் கை தட்டுவதில் உண்மை எங்கே .எதை இழந்தார்கள்,எதனால் அழிந்தார்கள் என்று கூறுங்களேன்
    தமிழ் மொழி போராட்ட தியாகிகள் என்று அரசு அவர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு,உதவி தொகை எல்லாம் தருகிறது.அதற்கு முன்பு கல்லூரி படிப்பை முடித்தவர் பல லட்சம்,போராட்டத்திற்கு பின் அது மிகவும் குறைந்து விட்டது.போராட்டத்திற்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவர்கள்,அவர்களின் தேர்ச்சி சதவீதத்தை விட போராட்டத்திற்கு பிந்தைய வருடங்களின் எண்ணிக்கை ,தேர்ச்சி சதவீதம் குறைவு என்று ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் தாருங்களேன்
    திராவிட கட்சிகளின் ஆட்சியில் மாநில அரசு வேலை வாய்ப்புகள் அதிகரித்தன,பள்ளி,கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது .
    தி மு க அங்கம் வகித்த வி பி சிங்க் அரசு மண்டல் கமிசன் பரிந்துரைகளை ஏற்று கொண்ட பின் மத்திய அரசு உயர் பதவிகளில் தமிழகத்தின் பங்கு அதன் மக்கள் தொகை சதவீதத்தை விட அதிகம் பெற்று வருகிறது.
    ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு மத்திய அரசு பணிகளில் கூட தமிழர்களின் பங்கு குறையவில்லை,கூடி தான் வருகிறது

    http://articles.timesofindia.indiatimes.com/2008-05-05/chennai/27776869_1_civil-services-obc-candidates-obc-category

    TN accounted for nearly a quarter of the OBC candidates selected at the all-India level in both 2004 and 2005. In 2006, it accounted for 15% while Uttar Pradesh accounted for over 20% (one in every five selected OBC candidate was from UP). But TN has the largest number of OBCs making it to the civil services, much more than even UP, which has more than double its population

    1. Avatar
      paandiyan says:

      //ஹிந்திக்கு ஆதரவான பெரும்பான்மையான தமிழர்களில் ஒரு சிலரையாவது தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஹிந்திக்கு ஆதரவாக பேச சொல்லுங்களேன்
      //
      நான் திரும்ப திரும்ப சொல்வது என்னவென்றால் இந்த மொழி பிரச்சனயில் உங்களுக்கு ஒரு தெளிந்த பார்வை இல்லை. மொழி கற்பதர்க்கும், வேலைக்கும், அரசியலுக்கும் உள்ள வித்யாசம் தெரிந்துகொண்டு வரவும் முதலில்

  45. Avatar
    paandiyan says:

    //நாம் அனைவரும் கிறுத்துவராக மாறினால் ,இலங்கை தமிழர்கள் கிறுத்துவராக மாறினால் அமெரிக்கா உடனே விடுதலை வாங்கி கொடுக்கும் ,கொடுத்திருக்கும் என்பார் போல //

    உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ ஒரு உண்மை இங்கு வந்துவிட்டது.இது என்ன ???
    http://dravidamayaisubbu.blogspot.in/2012/11/blog-post_8137.html

  46. Avatar
    paandiyan says:

    //ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழுக்கும் ,இந்திக்குமான போராட்டம் அல்ல
    ஆங்கிலத்துக்கும் இந்திக்குமான போராட்டம்
    //
    கால்சென்ட்டர் ஆங்கிலத்துக்கும், மொழிக்கும் வித்தியாசம் தெரியாத poovannan ன்னை என்ன சொல்வது.. அந்தோ பரிதாபம் !!

  47. Avatar
    paandiyan says:

    படிக்க வேண்டிய வரலாற்று கடிதங்களில் இதுவும் ஒன்று

    ஒளரங்கசீப் சக்கரவர்த்தியாக முடிசூட் டப்பட்ட பிறகு முல்லா சாஹேப் தனக்கு ஒளரங்க சீப்பின் அரச சபையில் கெளரவப் பதவியும், சன்மானமும் தர வேண்டுமென்று கோரியிருந்தார். அதற்குப் பதில்தான் ஒளரங்கசீப்பின் இந்தக் கடிதம்.

    கற்றவரே!

    நீர் என்னிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? நான் உங்களை என்னுடைய அரச வையில் ஒரு முக்கிய பதவியில் அமர்த்த வேண்டுமென்று உங்களால் நியாயமாக எதிர்பார்க்க முடியுமா? ஒன்று சொல் லுகின்றேன் நீங்கள் எனக்கு எப்படிக்கல்வி போதித்திருக்க வேண்டுமோ, அப்படிச் செய்திருந்தால், உங்களுக்கு நான் பதவியை அதருவது போன்ற நியாயமான காரியம் வேறு எதுவுமே இருக்க முடியாது. ஆனால் நீங்கள் எனக்கு போதித்த முறை யான கல்வி என்பது எங்கே இருக்கிறது?

    ஐரோப்பாவை ஒன்றுமே இல்லாத ஒரு சூன்யப்பிரதேசம் என்று போதித்தீர்கள். போர்த்துக்கீசிய நாட்டு மாபெரும் மன்னரைப்பற்றியோ, அவருக்கடுத்த ஹாலாந்து மன்னரைப்பற்றியோ, இங்கிலாந்து மன்னரைப் பற்றியோ நீர் எனக்கு ஒரு விவரமும் கூறவில்லை. பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாட்டு மன்னர்களையெல்லாம் நமக்கு அடங்கிய மிகச் சிறிய குறுநில மன்னர்களென்று கூறுனீர்கள். ஹிந்துஸ்தான் மன்னர்களின் பெயரைக் கேட்டாலே உலகத்தில் எந்த நாட்டு மன்னனும் நடுங் கினான் என்று கதை கட்டினீர்கள். எங்கள் பரம்பரையைப் புகழ வேண்டுமென்பதற்காக உலகத்திலுள்ள மற்ற நாடுகளெல்லாம் நமக்கு அடங்கியவையே என்று கூறினீர்கள். ஆஹா…. வியந்து பாராட்டப்பட வெண்டிய சரித்திர அறிவு. எனக்கு நீங்கள் என்ன கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்? உலக நாடுகளிலெல்லாம் என்ன நடக்கிறது. அந்த நாடுகளின் பலம் என்ன? அவர்களின் போர்முறை என்ன? மதக்கோட்பாடுகள் என்ன? ராஜதந்திரங்கள் என்ன? இவற்றையெல்லாம் எனக்கு நீங்கள் கற்றுக்கொடுத்திருக்க வேண்டாமா? உண்மையான சரித்திரத்தை எனக்கு கற்றுக்கொடுத்து, பல நாட்டு மன்னர்களின் வாழ்வையும், தாழ்வையும், அவர்களது எழுச்சியையும், வீழ்ச்சியையும் நான் உணரும்படி செய்திருக்க வேண்டாமா? எந்த விதமான தவறுகளால் அல்லது எதிர்பாராத நிகழ்ச்சிகளால் அங்கே புரட்சிகள் தோன்றின. அந்த சாம்ராஜ்யங்கள் அழிந்தன என்றெல்லாம் நீங்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா?

    உங்களிடமிருந்து என்னுடைய முப்பாட்டனார்களின் பெயர்களைக் கூட நான் அறிந்துகொள்ளவில்லை. ஹிந்துஸ்தான் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த புகழ்பெற்ற என்னுடைய முன்னோர்களைப் பற்றிக்கூட உங்களிடமிருந்து நான் ஒன்றும் தெரிந்து கொள்ளவில்லை. இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த அவர்களுடைய சரித்திரத்திற்கும், நீங்கள் எனக்கு கற்பித்ததற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி இருந்தி ருக்கிறது.

    எனக்கு அரேபிய மொழியை எழுதவும், படிக்கவும் கற்றுக்கொடுக்க முனைந்தீர்கள். அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் பேசும் மொழியை விடுத்து இப்படி ஒரு கடினமான மொழியில் புலமை அடைவதுதான் ஒரு அரசனுக்கு பெருமையா? ராஜ பரிபாலனத்துக்கு அவசியமான – முக்கியமான விசயங்களைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய நான் அரேபிய மொழியைக் கற்பதில் காலம் கழித்தேன்.

    ஒரு மனிதன் தன்னுடைய இளம் வயதில் நல்ல விடயங்களைக் கற்றுக்கொண்டால், அந்த நினைவு, வாழ்நாள் முழுவதும் நிலைத்து, அவனைப் பெரும் சாதனைகளைச் செய்யத் தூண்டும் என்பது உங்களுக்குத் தெரியாது போலும், சட்டம், மதவழிபாட்டு முறைகள், விஞ்ஞானம் இவற்றையெல்லாம் என் தாய் மொழியில் நான் கற்றிருக்க முடியாதா? அரேபிய மொழியை ஏன் என் தலையில் கட்டினீர்கள். என் தந்தை சாஜஹானிடம் எனக்கு மதத்துவங்களைப் போதிக்கப் போவதாக நீங்கள் சொன்னது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

    அர்த்தமே இல்லாத இருந்தாலும் புரிந்துகொள்ள முடியாத புரிந்து கொண்டாலும் மனத்திருப்தி அளிக்காத மனத்திருப்தி அளித்தாலும் கூட, இன்றைய சமுதாயத்தில் எந்தவிதப் பயனுமே இல்லாத புதிர்களையெல்லாம் என்னிடம் போட்டுக் காட்டிக்கொண்டிருந்தீர்கள், நீங்கள் கற்றுக்கொடுத்த தத்துவங்களைப் பற்றி இப்படித்தான் புகழ முடியும். அவையெல்லாம் புரிந்துகொள்ள மிகக் கடினமானவை, மறப்பதற்கு மிக எழியவை.

    நீங்கள் போதித்த மதத்துவங்களைப் பற்றி என் நினைவில் மீதம் இருப்பதெல்லாம் காட்டுமிராண்டித்தனமான இருளடைந்த பெரிய பெரிய வார்த்தைகள்தான். உங்களைப் போன்றவர்களின் அறியாமை யையும், இறுமாப்பையும் மறைக்க உங்களைப் போன்றவர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைகள், உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் எங்களைப் போன்ற மகா மேதாவிக ளுக்குத்தான் இந்தப் பயங்கர வார்த்தைகளில் அடங்கியிருக்கிற அரிய தத்துவ ரகசியங்கள் புரியும் என்று மற்றவர்கள் நினைத்து ஏமாந்து போவதற்காக, உங்களைப் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட வெறும் வார்த்தைகள்.

    காரண காரியங்களை மட்டுமே பார்க்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தக்கூடிய மதத்தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித்திருந்தால் மனதை ஒரு நிதானத்தில் அடக்கி வைக்கப் பயன்படும். அரிய தத்து வங்களை எனக்கு நீங்கள் போதித்திருந்தால் அதிர்ஸ்டத்தினால் தாக்கப்பட்டு, செல்வத்தில் திளைத்தாலும் சரி துரதிஸ்டத்தினால் தாக்கப்பட்டு தோல்வியைத் தழுவினாலும் சரி, இரண்டுக்குமே மயங்காத மனோ தைரியத்தை அளிக்கக்கூடிய தத்துவங்களை நீங்கள் எனக்கு போதித்திருந்தால் நாம் யார்? உலகத்தின் மேன்மை என்ன? எப்படி இந்தப் பூமி இயங்குகிறது? என்பதையெல்லாம் நான் உணர்ந்துகொள்ள உதவி செய்யும் வகையில் நீங்கள் எனக்குக் கல்வி போதித்திருந்தால் இப்போதும் சொல்லுகிறேன், இந்த மாதிரி விசயங்களையும் தத்துவங்களையும் நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்திருந்தால் நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாக இருந்திருப்பேன். அலக்சாண்டர் அவனுடைய குரு அரிஸ்டாட்டிலுக்கு செய்ததற்கும் மேலாக உங்களுக்குச் செய்திருப்பேன். நன்றி காட்டியிருப்பேன்.

    சதா என்னை முகஸ்துதி செய்து கொண்டே இருந்ததற்குப் பதிலாக, ராஜ பரிபாலனத்துக்குத் தேவையான விசயங்களை எனக்கு நீங்கள் கற்றுக்கொடுத்திருக்க வேண்டாமா? குடிமக்களுக்கு அரசன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? அரசனுக்கு குடிமக்கள் செய்ய வேண்டிய கடமை என்ன? என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா?

  48. Avatar
    paandiyan says:

    ஓளரங்க சீப் மன்னன் 1658 ஆம் ஆண்டு தில்லி சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக முடி சூட்டப்பெற்றார். ஒளரங்க சீப்பிற்கு இளம் வயதில் ஆசிரியராக இருந்த முல்லா சாஹேப் என்பவருக்கு ஒளரங்கசீப் மன்னன் எழுதிய கடிதம் இது..

  49. Avatar
    சான்றோன் says:

    @ பூவண்ணன்……

    //ஹிந்தியை எதிர்த்ததால் தமிழக மீனவனை பற்றி கண்டு கொள்ள மறுக்கிறார்கள் ,ஆகவே ஹிந்தியை ஆற தழுவ வேண்டும் என்று கூறுகிறவர் //

    உங்கள் தீராவிட சிந்தனைகள் புல்லரிக்க வைக்கின்றன….

    நான் சொல்வது , நமது தரப்பு நியாயத்தை அவர்களுக்கு ஆங்கிலத்தில் சொல்வதைவிட ஹிந்தியில் சொன்னால் எளிதில் விளங்கிக்கொள்வார்கள் என்பதுதான்…..

    தி .மு.க சமீபத்தில் டெல்லியில் நடத்திய டெசோ நாடகம் பிசுபிசுத்ததற்கு காரணமே ஹிந்திதான் என்பது தங்களுக்கு தெரியாதா ? மேற்படி மாநாட்டடுக்கு டி.ஆர். பாலு ஆங்கிலத்தில் அழைப்புவிடுத்தபோது தலையை ஆட்டிய வட இந்திய தலைவர்கள் , பின்னாடியே சென்று மைத்ரேயன் ஹிந்தியில் விளக்கியவுடன் புரிந்துகொண்டு டெசோ மாநாட்டைபுறக்கணித்துவிட்டனர்….. டெசோவை அகில இந்திய அளவில் எடுத்துச்செல்லும் திமுகவின் முயற்சி படுதோல்வி அடைந்தது…….

    இரண்டே கேரள மீனவர்களை சுட்டுக்ககொன்ற இத்தாலிய மீனவர்களை திரும்ப அழைக்க மலையாள லாபியால் முடிகிறது,…….. நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டும் தமிழர்களால் மத்திய அரசை அசைக்க முடியவில்லை…….

    யதார்த்தம் கண்முன்னே தெரிகிறது ….கண்ணை இறுக்க மூடிக்கொண்டுதான் நடப்பேன் என்கிறீர்கள்….அதற்காக மற்றவர்களையும் உங்களைப்போல் ஆக்க நினைக்காதீர்கள்……

  50. Avatar
    சான்றோன் says:

    @பூவண்ணன்…….

    நவோத‌யா பள்ளிகளை பற்றி மனமுவந்து பொய்களை பரப்புகிறீர்கள்…….

    ஹிந்தி மூன்றாவது மொழியாக கற்றுத்தரப்படும் என்பதுதான் மத்திய அரசின் நிலை……[ முதல் மொழி ஆங்கிலம், இரண்டாம் மொழி தமிழ் ]

    இதை எதிர்க்கும் தீராவிடக்கட்சிகள் முழுக்க முழுக்க ஹிந்தியிலேயே கற்றுத்தரும் கேந்த்ரிய வித்யாலயாக்களை தமிழகத்தில் அனுமதிப்பது எப்படி?

    அதாவ்து வசதியுள்ளவன் ஹிந்தி படித்தால் பரவாயில்லை…….ஏழைக்கு நல்ல கல்விகிட்டக்கூடாது என்ற எண்ணம்தானே?

    அவனை இப்படியே வைத்திருந்தால்தானே நீங்கள் அரசியல் நடத்தமுடியும்?

    1. Avatar
      poovannan says:

      சார் KV பள்ளிகளை பற்றி புரிந்து கொண்டு சற்று எழுதுங்கள்.அங்கு யார் வேண்டுமானாலும் சென்று சேர முடியாது.முழுக்க முழுக்க மத்திய அரசு,பொது துறை நிறுவனங்கள்,ராணுவ,துணை ராணுவ படை வீரர்களின் வாரிசுகளுக்காக உருவாக்கப்பட்ட பள்ளிகள் KV .அங்கு மாணவர்களை சேர்க்க priority வரிசை என்று உண்டு.அதில் கடைசியில் ஏழாவது,எட்டாவதாக தான் அந்த பகுதியில் வசிக்கும் அந்த மாநிலத்தை சார்ந்த மக்கள் வருவர்.ஒவ்வொரு வகுப்புக்கும் ஆன 40 (RTI வந்ததால் 41 )இடங்களுக்கு மத்திய அரசு பணியில் இருப்பவரின் வாரிசுகளுக்கு போக மீதி தான் மற்றவர்களுக்கு.பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்தவர்களின் /ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் வாரிசுகளுக்கே அங்கே இடம் கிடைப்பது கடினமான ஒன்று
      அங்கு பயிற்று மொழி ஆங்கிலம்/ஹிந்தி இரண்டில் ஒன்று ஹிந்தியை பயிற்று மொழியாக கொண்டு படிப்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டு தான் வருகிறது.
      மீனம்பாக்கம் விமான நிலையத்தில் /AAI /CISF /AIRINDIA வில் பணி புரியும் /அருகில் இருக்கும் ராணுவ யூனிட் இல் இருக்கும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களின் ஹிந்தியை தாய் மொழியாக கொண்ட மக்களின் குழந்தைகள் படிப்பதற்கான பள்ளிகள் கே வி பள்ளிகள்.அதற்கும் மாநில அரசுக்கும் துளி கூட தொடர்பு கிடையாது.

      தமிழ்நாட்டு மாணவர்களுக்காக ,தமிழ்நாட்டின் அரசு தரும் நிலத்தில் உருவாகும் பள்ளிகள் நவோதய பள்ளிகள் .அங்கு தமிழை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள் தான் படிப்பார்.அவர்கள் மீது இந்தியை கட்டாயமாக திணிக்க கூடாது என்பதில் தவறு எங்கே வருகிறது

      1. Avatar
        சி. ஜெயபாரதன் says:

        ////ஒவ்வொரு வகுப்புக்கும் ஆன 40 (RTI வந்ததால் 41 )இடங்களுக்கு மத்திய அரசு பணியில் இருப்பவரின் வாரிசுகளுக்கு போக மீதி தான் மற்றவர்களுக்கு. பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்தவர்களின் / ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் வாரிசு களுக்கே அங்கே இடம் கிடைப்பது கடினமான ஒன்று ////

        கல்பாக்கத்தில் உள்ள கேந்திரியா வித்தியாலயத்தில் என் புதல்வியர் இருவர் படித்தார். தாய் மொழி தமிழில் படிக்க ஒரு திட்டமும் இல்லை. ஆனால் யாரும் அங்கு படிக்கலாம். அரசினர் உத்தியோகப் பிள்ளைகள் என்று வேறு பாடில்லை. படித்தவரில் 75% தமிழ் மாணவர். படித்தது ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம். அங்கே என் புதல்வியர் தமிழ் படிக்க விரும்பியும் முடியவில்லை. அதுதான் வெட்கக் கேடு.

        1. Avatar
          புனைப்பெயரில் says:

          அய்யா, ஜெயபாரதன்: நீங்கள் சொல்வது போல் தான் என் நிலையும். தமிழில் ஏதாவது உருப்படியாக நாம் செய்ய நினைத்தாலும், நம்மை விட வறட்டு கத்தலும் கூச்சலும் ரவுடித்தனமும் பண்ணுபவர்கள் தமிழ் உணர்வாளர்கள் ஆகி விட்டனர். என்ன செய்ய…?

        2. Avatar
          poovannan says:

          என் மகள்கள் ஆந்திரத்தில் மத்திய அரசு பள்ளியில் படிக்கிறார்கள்.இங்கு தெலுகு உண்டு.சேரும் மாணவர்களின் விருப்பம் என்ற அடிப்படியில் குறிப்பிட்ட எண்ணிக்கையை தாண்டவில்லை என்று மாநில மொழி எளிதாக ஒதுக்கபடுகிறது

          http://www.gconnect.in/orders-in-brief/kendriya-vidyalaya-admission-guidelines-2012-13.html

          http://www.hindu.com/2006/11/17/stories/2006111708700100.htm

          Under Article 112 in the Education Code of Kendriya Vidyalaya Sangatan, which provides for teaching of a regional language/mother tongue when 20 or more students opt for it, Tamil was introduced as an additional subject. Apart from English that is a medium of instruction, Hindi and Sanskrit are taught in these schools.

          நீங்கள் 20 பேரை சேர்த்திருந்தால் தமிழ் வாத்தியார் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து இருக்க முடியும்.ஆனால் தமிழகத்தில் KV பள்ளிகளில்
          சேர்ப்பவர்கள் பெரும்பாலும் மாறுதலுக்கு உள்ளாகும் பணியில் இருப்பதால்,அல்லது தமிழ் வேண்டாம் என்ற முடிவில் இருப்பதால் தமிழை ஒதுக்குதல் எளிதாக இருக்கிறது

          http://articles.timesofindia.indiatimes.com/2013-01-19/news/36431720_1_kv-sangathan-max-mueller-bhavan-avinash-dikshit

          A shortage of teachers is the main hurdle. The KVs form a large network with branches in remote areas. The dearth of teachers has kept KVS from introducing any of the other four languages – French, Spanish, Chinese and Japanese—that its board approved of in 2008. “We could only start German as finding teachers for schools outside metros is difficult,” says KVS chief Avinash Dikshit

          1. Avatar
            சி. ஜெயபாரதன் says:

            தமிழ் நாட்டில் பல்லாண்டுகளாய் இயங்கி வரும் கேந்திரிய வித்தியாலயங்களில் ஏன் தாய்மொழி தமிழ் ஒரு பாடமாக, அல்லது விருப்ப பாடமாக திராவிடக் கட்சியினர் 45 வருட ஆட்சிகளில் ஏன் இன்று கூட வைக்கப் பட வில்லை ????

  51. Avatar
    paandiyan says:

    //மேல கோப்பி பேஸ்ட் பண்ணும்போது சரியாக இல்லை ஆகவே இன்னும் ஒருமுறை இங்கு. இதை யாராவுது போராடும் மாணவர்களுக்கு சொல்லுங்கள் என்பதற்காக மற்றும் மொழி வெறுப்பை இங்கு உபயோகிப்போருக்கும் மிக பயன்படும் ஒரு கடிதம் ..//இனி கடிதம் ….
    முகலாய பேரரசர்களில் ஒருவரான ‘அபு முசாபர் முகையுதீன் முகமது ஔவுரங்கசீப் ஆலம்கீர்’ என்கிற ஔரங்கசீப் எழுதிய ஒரு கடிதம், உலக சரித்திரத்தில் பிசித்திப் பெற்ற கடிதமாக நிலைப் பெற்று இருக்கிறது. தனக்கு கல்வி போதித்த ஆசிரியர் ஒருவருக்கு அவர் எழுதிய கடிதமது. தீவிர சிந்தனைகளை கொண்டதாகவும் யதார்த்த இழையோடியதாகவும் அந்தக் கடிதம் நம் பார்வையை ஈர்க்கிறது. கடிதத்தில் தெறிக்கும் அவரது கோபம் யோசிக்கத் தகுந்தது. என்னளவில் அது அர்த்தம் கொண்ட தும் கூட! படித்ததில் பிடித்ததான அந்தப் பிரசித்திப் பெற்ற கடிதத்தை கீழே தந்திருக்கிறேன்.ஆசிரியரின் திறமையின் மைக் குறித்து, தனது மனதாங்களை ஔரங்கசீப் விமர்சனக் கோணத்தில் வெளிப்படுத்தி இருப்பது தேர்ந்ததோர் அழகு!

    (1658-ஆம் ஆண்டு ஔரங்கசீப் ஹிந்துஸ்தானத்தின் சக்ரவர்த்தியாக முடிசூட்டப் பெற்றார். அல்லது முடிசூட் டிக் கொண்டார். ஔரங்கசீபிற்கு இளம் வயதில் ஆசிரி யராக இருந்த முல்லா சாஹேப் என்பவருக்கு, ஔரங் கசீப் எழுதிய கடிதம் இது. ஔரங் கசீப் சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்ட பிறகு முல்லா சாஹேப், ‘தனக்கு ஔரங்கசீபின் அரச சபையில் கௌரவ பதவியும், சன் மானமும் தர வேண்டும்’ – என்று கோரியிருந்தார். அதற்குப் பதில்தான் ஔரங்கசீபின் இந்தக் கடிதம்.) – துக்ளக் / 30.04.2008

    கற்றவரே!
    *
    நீர் என்னிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? நான் உங்களை என்னுடைய அரசவையில் ஒரு முக்கிய பதவியில் அமர்த்தவேண்டுமென்று உங்களால் நியாயமாக எதிர்பார்க்க முடியுமா? ஒன்று சொல்கிறேன், நீங்கள் எனக்கு எப்படிக் கல்வி போதித்திருக்க வேண்டுமோ, அப்படிச் செய்திருந்தால் உங்களுக்கு நான் பதவியைத் தருவது போன்ற நியாயமான காரியம் வேறு எதுவுமே இருக்க முடியாது.
    *
    ஏனென்றால் நான் ஒரு விஷயத்தை நிச்சயமாக ஒப்புக்கொள்வேன். ஒரு குழந்தை தன்னுடைய தந்தைக்கு எவ்வளவு கடமைப் பட்டிருக்கிறதோ, அந்த அளவுக்குத் தனக்கு முறையான கல்வியைப் போதித்த ஆசிரியனுக்கும் கடமைப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் எனக்குப் போதித்த முறையான கல்வி என்பது எங்கே இருக்கிறது?
    *
    ஐரோப்பாவை ஒன்றுமில்லாத ஒரு சூன்யப் பிரதேசம் என்று போதித்தீர்கள், போர்ச்சுகீஸிய நாட்டு மாபெரும் மன்னரைப் பற் றியோ, அவருக்கு அடுத்த ஹாலந்து மன்னரைப் பற்றியோ, இங்கிலாந்து மன்னரைப் பற்றியோ, நீர் எமக்கு ஒரு விபரமும் கூறவில்லை, பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாட்டு மன்னர்களை எல்லாம் நமக்கு அடங்கிய, மிகச் சிறிய குறுநில மன்னர்கள்
    என்று கூறினீர்கள். ஹிந்துஸ்தான் மன்னர்களின் பெயரைக் கேட்டாலே உலகத்தில் எந்த நாட்டு மன்னனும் நடுங்கினான் என்று கதை கட்டினீர்கள். எங்கள் பரம்பரையைப் புகழ வேண்டும் என்பதற்காக, உலகத்தில் உள்ள மற்ற நாடுகள் எல்லாம் நமக்கு அடங்கியவையே என்று கூறினீர்கள். ஆஹா…! வியந்து பாராட்டப்பட வேண்டிய சரித்திர அறிவு!
    *
    எனக்கு நீங்கள் என்ன கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்? – உலக நாடுகளில் எல்லாம் என்ன நடக்கிறது? அந்த நாடுகளின் பலம் என்ன? அவர்களின் போர் முறைகள் என்ன? மதக்கோட்பாடுகள் என்ன? ராஜதந்திரங்கள் என்ன? – இவற் றை எல்லாம் எனக்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்க வேண்டாமா? உண்மை யான சரித்திரத்தை எனக்குக் கற்றுக் கொடுத்து, பல நாட்டு மன்னர்களின் வாழ்வையும் தாழ்வையும், அவர்களது எழுச்சியையும் வீழ்ச்சியையும் நான் உணரும்படி செய்திருக்க வேண்டாமா? எவ்விதமான தவறுகளால் அல்லது எதிர்பாராத நிகழ்ச்சிகளால், அங்கே புரட்சிகள் தோன்றின – அந்த சாம்ராஜி யங்கள் அழிந் தன – என்றெல்லாம் நீங்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்தி ருக்க வேண்டாமா?
    *
    உங்களிடமிருந்து என்னுடைய முப்பாட்டனார்களின் பெயர்களைக்கூட அறிந்து கொள்ளவில்லை. ஹிந்துஸ்தான் சாம்ராஜிய த்தை ஸ்தாபித்த புகழ்பெற்ற என்னுடைய முன்னோர்களைப் பற்றிக்கூட உங்களிடமிருந்து நான் ஒன்றும் தெரிந்து கொள்ளவில்லை. இந்த மாபெரும் சாம்ராஜியத்தை ஸ்தாபித்த அவர்களுடைய சரித்திரத்திற்கும், நீங்கள் எனக்குக் கற்பித்ததற்கும் – அவ்வளவு பெரிய இடைவெளி இருந்திருக்கிறது.
    *
    ஒரு மனிதன் தன்னுடைய இளம் வயதில் நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டால், அந்த நினைவு வாழ்நாள் முழுவதும் நிலைத்து, அவனைப் பெரும் சாதனைகளைச் செய்யத் தூண்டும் என்பது உங்களுக்குத் தெரியாது போலும்!

    *
    காரண காரியங்களை மட்டுமே பார்க்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தக் கூடிய தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித் திருந்தால் – மனதை ஒரு நிதானத்தில் அடக்கி வைக்கப் பயன்படும் அரிய தத்துவங்களை எனக்கு நீங்கள் போதித்திருந்தால் – அதிர்ஷ்டத்தினால் தாக்கப்பட்டு, செல்வத்தில் திளைத்தாலும் சரி – துரதிஷ்டத்தினால் தாக்கப்பட்டு தோல்வியைத் தழுவினா லும் சரி – இரண்டுக்குமே மயங்காத மனோதைரியத்தை அளிக்கக் கூடிய தத் துவங்களை நீங்கள் எனக்குப் போதித்திருந்தால் – நாம் யார்? உலகத்தின் மேன்மை என்ன? எப்படி இந்த பூமி இயங்குகிறது? – என்பதை எல்லாம் நான் உணர்ந்து கொள்ள உதவி செய்யும் வகையில் நீங்கள் எனக்குக் கல்வி போதி த்திருந்தால் – இப்பொழுதும் சொல்கிறேன் – இந்த மாதிரி விஷயங்களையும் தத்துவங்களையும் நீங்கள், எனக்கு கற்றுக் கொடுத்திருந்தால், நான் உங்களு க்கு மிகவும் கடமைப்பட்டவனாக இருந்திருப் பேன். அலக்ஸாண்டர், அவனு டைய குரு அ ரிஸ்டாடிலுக்கு எவ்வளவு கடமைப்பட்டிருந்தானோ, அதைவிட உங்களுக்கு நான் கடமைப்பட்டிருப்பேன். அலெக்ஸாண்டர், அரிஸ்டாடிலுக்குச் செய்ததற்கும் மேலாக உங்களுக்குச் செய்திருப்பேன், நன்றி காட்டிருப்பேன்.
    *
    சதா என்னை முகஸ்துதி செய்து கொண்டே இருந்ததற்குப் பதிலாக, ராஜபரி பாலனத்துக்குத் தேவையான விஷயங்களை எனக்கு நீங்கள் கற்றுக் கொடுத் திருக்க வேண்டாமா? குடிமக்களுக்கு அரசன் செய்யவேண்டிய கடமைகள் என்ன? அரசனுக்குக் குடிமக்கள் செய்யவேண்டிய கடமைகள் என்ன என்பதை எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா? என் வாழ்க்கைப் பாதையில் ஒரு கட்டத்தில் என்னுடைய பதவிக்காகவும், உயிருக்காகவும் கூட, என்னு டைய உடன் பிறந்த சகோதரர்களுடனே யே நான் வாள் எடுத்துப் போரிட நேரிடும் என்பதையும் உணரும் அளவுக்கு, நீங்கள் போதித்த கல்வி அமைந் திருக்க வேண்டாமா?
    *
    ஒரு நகரத்தை எப்படிக் கைப்பற்றுவது? ஒரு போர்ப் படையை எப்படி நடத்திச் செல்வது – என்பதை எல்லாம் நான் அறிந்து கொள்வதில் நீங்கள் அக்கறை காட்டினீர்களா?
    *
    பயனுள்ள விஷயங்களை ஏதாவது நான் இப்போது அறிந்து வைத்திருந்தால், அதற்காக நான் மற்ற பலருக்குக் கடமைப்பட் டிருக்கிறேன் – நிச்சயமாக உம க்கல்ல!
    *
    போங்கள்! நீங்கள் எந்தக் கிராமத்திலிருந்து வந்தீர்களோ, அந்தக் கிராமத்திற்கே போய் சேருங்கள்! நீர் யார்? எங்கிருந்து வந்தீர்கள்? என்ன ஆனீர்கள்? என்பதை யெல்லாம் எவருமே தெரிந்து கொள்ளவேண்டாம்.
    – ஔரங்கசீப்

  52. Avatar
    சான்றோன் says:

    @பூவண்ணன்…….

    //திருவான்கோரே கீழ் இருந்த கன்யாகுமரி பகுதிகளை சேர்த்து கொள்ள முதல்வராக இருந்த காமராஜ் அவர்களால் பீர்மேடு,தேவி குளம் பகுதிகள் கேரளாவிற்கு விட்டு தரப்பட்டது//

    உண்மையில் தமிழகத்தின் இன்றைய எல்லையை உருவாக்கியவர்கள் ராஜாஜியும் காமராஜரும்தான். அதில் காமராஜரின் இந்த ‘பதிலிப்போர்’ பெரிய வெற்றி பெற்றது. அந்த தந்திரம் கேரளத்துக்கும் கர்நாடகத்துக்கும் தெரிந்திருக்கவில்லை. அப்போது கேரளம் திருவிதாங்கூர் -கொச்சி- மலபார் எனமூன்று பகுதிகளாக இருந்தது. ஒட்டுமொத்த கேரளத்திற்குமான தலைவர்களும் அரசியலும் இருக்கவுமில்லை. கேரளம் ஒருங்கிணைந்த கேரளமாக ஆகி, ஒரு மாநிலஅடையாளம் பெற்றதே 1956ல் வந்த மாநில மறுசீரமைப்புப் சட்டத்துக்குப் [ States Reorganization Act of 1956] பின்னர் தான்.
    ஆகவே காமராஜ் கிட்டத்தட்ட ஒருதலைபட்சமான வெற்றிகளைப் பெற்றார் என்பதே உண்மை. வேறெந்த தலைவரும் வேறெந்த அரசியல் சூழலிலும் எல்லைப்பிரச்சினைகளில் காமராஜ் அடைந்த ராஜதந்திர வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது. தமிழகத்தில் அதற்குப்பின் வந்த எந்த தலைவரும் பக்கத்துமநிலங்களிடம் பேச்சுவார்த்தைமூலம் எந்த வெற்றியும் பெற்றதாக வரலாறே இல்லை. இழந்தவை எண்ணற்றவை.
    மொழிவாரி பிரிவினைக்கு அடிப்படையாக முன்வைக்கப்பட்ட அளவுகோல் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்கள் அதிகமாக தொன்றுதொட்டு வாழ்ந்துவந்தார்கள் என்றால் அந்த நிலப்பகுதிகளை இணைத்து ஒரு மாநிலம் என்பதே. அந்த அளவுகோலின்படி சிக்கலாக அமைந்தவை தமிழ்-மலையாளம் இருமொழிகளும் ஏறத்தாழ சம அளவில் பேசப்பட்ட கன்யாகுமரி, செங்கோட்டை, பாலக்காடு, தேவிகுளம், பீர்மேடு பகுதிகள்.
    பேச்சுவார்த்தையில் பாலக்காடு, தேவிகுளம், பீர்மேடு போன்றபகுதிகளை விட்டுக்கொடுத்துத்தான் கன்யாகுமரிமாவட்டத்தை ஒட்டுமொத்தமாகப் பெற்றார் காமராஜ். நான்கு பெரிய அணைகள், பதினெட்டு சிறிய அணைகள், மூன்று மீன்பிடித்துறைமுகங்கள் மூன்று மழைக்காலம், 60சதவீத நிலம் மழைக்காடுகள் கொண்ட மாவட்டம் இது. ஒட்டுமொத்த தமிழக நிதிவருவாயில் கிட்டத்தட்ட 20 சதவீதம் அளிக்கும் மாவட்டம்.
    இதில் மலையாளம் பேசும் பெரும்பான்மையினரைக் கொண்ட பகுதிகள், அதாவது தர்க்கபூர்வமாக பார்த்தால் கேரளத்துக்குச் சொந்தமான பகுதிகள், 40 சதவீதம். இன்றைய விளவங்கோடு கல்குளம் வட்டங்கள். அப்பகுதிகளிலேயே அணைகள் அமைந்திருந்தன. அந்த அணைகளை தமிழகத்தில் இருந்து விட காமராஜ் விரும்பவில்லை. ஆகவே காமராஜ் அப்பகுதிகளுக்காகவும் போராடினார். பாலக்காட்டைச்சேர்ந்த இருமேனன்கள் அன்று மத்தியஅரசின் மையப்பொறுப்புகளில் இருந்தார்கள் .தங்கள் மாநிலம் கேரளத்தில் சேரவேண்டுமென்ற அவர்களின் தனிப்பட்ட ஆசையை காமராஜ் பயன்படுத்திக்கொண்டார்.
    கேரளத்தில் இருந்து தமிழகம் செங்கோட்டையை பெற்றது. அதேபோல ஊட்டி மேற்குமலைச்சரிவை. இந்த நிலங்கள் மழைப்பிடிப்புபகுதிகள் என அன்று காமராஜுடன் இருந்தவர்கள் அறிந்திருந்தார்கள். இவ்விரு பகுதிகள் இங்கே வந்தமையால்தான் தாமிரவருணியின் அணைகளும், குந்தா போன்ற அணைகளும் நமக்குச் சாத்தியமாகின. முல்லைப்பெரியாறு அணைப்பகுதி ஏன் தமிழகத்துடன் வரமுடியாது என்றால் அந்த அணையின் நீர்ப்பிடிப்புபகுதி, நீர் வழியும்பகுதி முழுக்கமுழுக்க மலையாளிகள் வாழும் கேரளநிலத்தில் உள்ளது. அந்த பகுதியில் தமிழர் எண்ணிக்கை 05 சதவீதம் மட்டுமே. எந்த அடிப்படையில் அதைக்கோருவது?
    எந்த நிலங்களை கேரளத்துக்கு விட்டுக்கொடுத்தார்களோ அந்நிலங்களை கேரளத்துடன் பேசி ஒப்பந்தம் மூலம் பெற்றுக்கொண்டு முற்றிலும் கேரளத்தில் பெய்யும் மழைநீரை அப்படியே தமிழகம் எடுத்துக் கொள்ளும் பரம்பிக்குளம் -ஆளியார் அணைக்கட்டுகளை உருவாக்கினார்கள் ஆர்வியும் சி. சுப்ரமணியமும். பரம்பிக்குளம் அணை கேரளத்தில் தமிழகத்தால் கட்டப்பட்டது. அதேபோல கேரள மன்னரிடம் பேசி முழுக்க முழுக்க கேரளநிலத்தில் ஓடும் நெய்யாற்றில் இருந்து குமரிக்கு நீர்கொண்டு வந்தார் காமராஜ். இதெல்லாம்தான் உண்மையான ராஜதந்திரம்.
    எந்த ஒரு அரசியல்பேரத்திலும் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும், இன்று காமராஜ் சில இடங்களை விட்டுக்கொடுத்ததை ஏதோ கையாலாகாத்தனம்போலவும், கிடைத்தவை முழுக்க இங்கே மீடியாவில் சத்தம்போட்ட சிலரின் தனிப்பட்ட சாதனைபோலவும் பேசும் ஒரு அரசியலை திராவிட இயக்கம் உருவாக்கிவருகிறது. இவையே நம் பொதுஅரசியல் வரலாறாக இன்று உள்ளது. பொய்களையே சொல்லி அதன்மேலேயே உருவாகி வந்த ஓர் இயக்கத்தின் சாதனை இந்த பிரச்சார வரலாறு

    நன்றி . எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள்

  53. Avatar
    சான்றோன் says:

    @பூவண்ணன்…..

    //முதல்வராக இருந்த ராஜாஜியின் முட்டாள்தனத்தினால் தான் சென்னையில் உண்ணாவிரதம் இருந்த போட்டி ஸ்ரீராமுலு இறக்க நேரிட்டது.//

    ராஜாஜி இல்லையேல் சென்னை தமிழ்நாட்டுக்கு இல்லை என்பதே வரலாற்று உண்மை. இங்கே சில ஊர்களில் கோஷமிட்ட ம.பொ.சியைப்பார்த்து பயந்துபோய் ஆந்திரர்கள் சென்னையை விட்டுக்கொடுக்கவில்லை. அப்போது தமிழகத்தின் முதல்வராக ராஜாஜி இருந்தார். பேச்சுவார்த்தைகளில் இம்மிகூட அவர் விட்டுக்கொடுக்கவில்லை. 1953ல் ஆந்திரமாநிலம் உருவானபோது சென்னையையும் திருத்தணியையும் உள்ளிட்ட இன்றைய தமிழக எல்லைகளை அமைக்க காரணமாக அமைந்தவர் அன்றைய முதல்வரான ராஜாஜிதான்.1952ல் ஆந்திர சுதந்திரப்போராட்ட வீரரான பொட்டி ஸ்ரீராமுலு மதராஸ்மனதே என்ற போராட்டத்தின் உச்சமாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். ஆந்திராவே கொந்தளித்தது. அதற்கிணையான எந்த அலையும் இங்கே உருவாகவில்லை. மபொசியை காங்கிரஸ் கிளப்பிவிட்டும்கூட பெரிதாக ஒன்றும் நிகழவில்லை, சில கூட்டங்களைத்தவிர. நேரு ஆந்திர காங்கிரஸின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தாகவேண்டிய நிலை. காரணம் ஆந்திராவுக்கு தேசிய அரசியலில் பங்கு மிக அதிகம். அது மாபெரும் மாநிலம்.
    ஆனால் ராஜாஜி நேருவை உதாசீனம்செய்தார். பொட்டிஸ்ரீராமுலு உயிர்துறந்த டிசம்பர் 15 ஆம் தேதி நேரு பலமுறை கூப்பிட்டும் ராஜாஜி நேருவின் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. அவர் தொலைபேசியை எடுத்திருந்தால் சென்னை கைவிட்டுப்போயிருக்கும் என்று எம்.ஓ.மத்தாய் சொல்லியிருக்கிறார். விளைவாக ஆந்திரா எரிந்தது, ராஜாஜி பிடிவாதமாக இருந்தார். அந்த ஒருசெயலால்ராஜாஜி சென்னையை மீட்டார். அவரது அரசியல் வாழ்க்கையை நிரந்தரமாக அழித்தும் கொண்டார்.

    நன்றி . எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள்

    1. Avatar
      paandiyan says:

      சான்றோன் sir, விடுங்கள், வரலாற்றை ஒரு இனைய பின்னூட்டம் மூலம் மாற்ற முடியுமா என்ன? அப்படி கொண்டு வந்த வரலாறு தெரியவில்லை என்றாலும் பரவாஇல்லை அனால் அவர் முட்டாள் என்று ஒரு வார்த்தை வேறு ..இதை பாருங்கள் “முதல்வராக இருந்த ராஜாஜியின் முட்டாள்தனத்தினால்” — இவர்களுக்கு வரலாறு கற்றுத்தந்த ஆசரியர் எப்படி இருப்பார் என்று ஔவுரங்கசீப் கடிதம் மேல படித்து சிரியுங்கள். அனால் சமீபத்தில் ராமதாஸ், ராஜாஜி இல்லை என்றால் சென்னை இல்லை என்று சொன்னார் ஒரு பேட்டியில் .. மகிழ்ச்சியான ஒன்று..

  54. Avatar
    Salanan says:

    வட இந்தியாவில் 1960 களில் “ அங்கிரேசி ஹட்டாவ்” (ஆங்கிலத்தை அகற்று) என்னும் வட இந்திய மொழி வெறி இயக்கம் உருவாகி பிரச்சினை செய்தது. அதற்கு இணங்கி 1965 வரை ஆங்கிலம் இருக்கும். அதற்கு பிறகு எல்லாம் இந்தி தான் (சீனா பாணியில்) என்னும் முடிவை அப்போதைய மத்திய அரசு எடுத்தது. அதற்கு எதிராக தான் தமிழகத்தில் போராட்டம் வெடித்தது. திராவிட அரசியல்வாதிகள் செய்த பெரும் தவறு அனைத்து தமிழ் மக்களுக்கும் முழுமையான மற்றும் தரமான ஆங்கில மொழி அறிவை புகட்ட தவறியது தான். அதை செய்திருந்தால் தமிழர்கள் இந்த அளவுக்கு முட்டாள்களாக இருந்திருக்க மாட்டார்கள்.

    1. Avatar
      paandiyan says:

      என்னோவோ நீங்கள் சொல்வதை பார்த்தல் இவர்கள் தமிழை தெளிவாக சொல்லி கொடுத்த மாதறி இருக்கின்றது..இப்படி படிக்கவும் எல்லாம் மிக சரியாய் வரும் –” திராவிட அரசியல்வாதிகள் செய்த பெரும் தவறு அனைத்து தமிழ் மக்களுக்கும் முழுமையான மற்றும் தரமான , பிழை இல்லாத தமிழ் மொழி அறிவை புகட்ட தவறியது தான். அதை செய்திருந்தால் தமிழர்கள் இந்த அளவுக்கு முட்டாள்களாக இருந்திருக்க மாட்டார்கள்”

  55. Avatar
    IIM Ganapathi Raman says:

    திராவிட அரசியல்வாதிகள் இல்லாதிருந்தால், வடமொழி கலந்த தமிழ்மொழியே இருக்கும் இப்போது.

    வடமொழியை முற்றிலும் நீக்கவியலாது. ஆனால் அதைக்கட்டுப்படுத்த இயலும். அதைச் செய்யவிடாமல் பாப்பனர்கள் தடுத்தார்கள்.

    திராவிட அரசியல்வாதிகளால், வடமொழி தமிழ் மேல் பண்ணிய ஆதிக்கத்தைக்கட்டுப்படுத்த முடிந்தது.

    முதலில் வேகமாகச் செய்தார்கள். பின்னர் அவ்வியக்கத்தின் பிதாமகன்கள் ஒவ்வொருவராக போய்விட, அல்லது வயதாகி தன் வீரியத்தை இழக்க, அல்லது, மற்றபிறகாரணிகள் சூழ, அந்த உத்வேகம் குறைந்துவிட்டது.

    அதுவே குறை. ஆனால் ஒரே ஒரு தலைமுறை இதைச்செய்ய முடியாது. வரும் தலைமுறைக்கு வழிகாட்டினார்கள். ஆனால் வந்த தலைமுறையே வேறுவிதமாகப்போய்க்கொண்டிருக்கிறது. இங்குள்ள பின்னூட்டங்களே சாட்சிகள்.

  56. Avatar
    IIM Ganapathi Raman says:

    அரசியல்வாதிகளைப் பற்றிய தவறான கண்ணோட்டம் நிலவுகிறது.

    அரசியல்வாதி ஒரு மலையை இங்கிருந்து அங்கே நகட்ட வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். அரசியல்வாதிக்கு இறைவன் அச்சக்தியைக் கொடுக்கவில்லை.

    அரசியல்வாதி ஒரு தமிழ் கட்டாயப் பாடம் என்று சட்டம் போடலாம். தமிழ் வழிக்கல்வி பயின்றோருக்கு உதவிகள் செய்யலாம். அவ்வளவே.

    ஆனால் மக்கள் தங்கள் குழந்தைகளைத் தமிழ் படிக்க அனுப்பாமல் செய்வதைத் தடுக்கமுடியாது. ஜய்பாரதன் சொன்னது போல, சிபிஎஸ் சி பள்ளிகளில் சேர்த்தால் தமிழ்படிக்க வேண்டியதில்லை.

    மக்கள் அப்பள்ளிகளுக்குத்தான் அலைமோதுகிறார்கள். ஆங்கிலம், ஹிந்தி என்று தங்கள் பிள்ளைகள் கறக ஆசைப்படுகிறார்கள். தமிழ் தள்ளப்படுகிறது.

    அரசு மக்களைப்பிடித்து ஜெயிலில் போட்டு அடிக்கமுடியுமா?

    அரசு ஆசைப்படலாம். மாதிரிகளை உருவாக்கலாம். அவைகள் ஹேதுக்கள். சிம்பல்கள் மட்டுமே.

    எ.கா: சமத்துவபுரம். மாவட்டத்துக்கு ஒன்று என்றுதான். ஊருக்கொன்றன்று. ஏன்? சமத்துவபுரம் ஒரு சிம்பல். இப்படி வாழுங்கள் ஒன்றாக என்று அரசு மக்களுக்குக் காட்டுவாதற்கு மட்டுமே.

    ஆனால், மக்கள் ஏற்றுக்கொண்டார்களா? சமத்துவபுரத்துக்குள்ளேயே தலித்துகள் தள்ளிவைக்கப்படுகிறார்களே?

    மதுரை விமான நிலையத்துக்கருகில் உள்ள சமத்துவபுரத்தைத்தான் சொல்கிறேன். தலித்துகுடுமபங்களை எவரும் சேர்த்துக்கொள்வதில்லை என்று ஆய்வாளர்கள் கண்டெழுதிய கட்டுரை தி ஹிந்து போட்டது.

    அரசியல்வாதிகள், அரசு – இவரகள் மக்களின் ஆசை நிராசைகளை மாற்றமுடியாது.

    தமிழைக் கருநாநிதி வளர்க்கவில்லை; ஆங்கிலத்தை அண்ணாத்துரை வளர்க்கவில்லை என்பனவெல்லாம் meaaningless talk. நீங்கள் சரியாக இருந்தால் நாங்கள் உதவ முடியும் என்பதே அரசியல்வாதிகள் சொல்ல வேண்டியது.

    Liberty is a practice; material and legal changes can never guarantee liberty or equality- Michel Foucault With this quote, the Hindu began the sorrowful story of Madurai Samathuvapuram and Thinnai readers can enjoy reading that: R they not part and parcel of the self same society which discriminate? All of us should share the blame.

    Here is the link: http://www.hindu.com/2010/01/17/stories/2010011759390200.htm

    ஆம், ஃபோகால்டின் சொற்கள் அனைத்துக்கும், இங்கு நடக்கும் வாதத்திற்கும் பொருந்தும். அதாகப்பட்டது:

    மக்கள் சரியில்லையென்றால் எந்த கொம்பனாலும் சமூகத்தை மாற்றமுடியாது. இதையேன் சொன்னேனென்றால்,அரசிடம் தலித்துகள் முறையிட்ட போது, //எங்களால் என்ன செய்ய முடியும்? இலவச வீடுகளைக்கட்டித்தரமட்டுமே முடியும்? எப்படி நீங்கள் வாழவேண்டுமென எப்படி எங்களால் கட்டுப்படுத்த முடியும்?// என்றுதான் கூறப்பட்டது.

    சரிதானே பாண்டியன்?

    1. Avatar
      paandiyan says:

      சட்டம் போட்டு தமிழ் வார்த்தைகளை மாறாலாம் , தேவதாசி ஒழிக்கலாம், கோவில் செல்ல கொண்டுபோகலாம் இது எல்லாம் சாத்தியம். சமுத்துவம் சான்ஸ் இல்லை என என்றால் அது உயர்ஜாதி Vs SC /ST . இதா ஓபன் ஆ சொல்லுப்பா கணபதி

  57. Avatar
    poovannan says:

    சார் KV பள்ளிகள் மத்திய அரசு பணியாளர்களுக்காக இந்தியா முழுவதும் நடத்தப்படும் பள்ளிகள்.அதில் மாநில அரசு தலையிட முடியாது.
    ரானுவதிர்க்கேன்று ,விமான படைக்கேன்று இப்போது தமிழகத்தில் பள்ளிகள் உள்ளன.சில இடங்கள் காலியாக இருந்தால் உள்ளூர் மாணவர்களுக்கும் இடம் கிடைக்கலாம்..அவர்களின் பண ஒதுக்கீட்டில்,மற்ற மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மாநில பள்ளிகளில் படித்து விட்டு பிறகு வேறு மாநிலங்களுக்கு மாற்றலானால் கஷ்டபடுவதை தவிர்க்க உருவாக்கபட்ட்ட பள்ளிகள்.அவற்றில் அங்கு படிக்கும் மாணவர்கள் விரும்பினால் தான் அவர்களுக்கு ஆதரவாக மாநில அரசு மாநில மொழியை படிக்க உதவ முடியும்
    அங்கும் தமிழகம் தான் இருவது குழந்தைகளை பெற்றோர் சேர்த்தால் தமிழ் படிக்க உதவி செய்வதை முதலில் துவங்கியது.மாநில அரசு தன பணத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மத்திய அரசு பள்ளிகளுக்கும் தமிழ் ஆசிரியர்களை நியமித்து பணியாற்ற வைக்கலாம்.
    எப்படியாவது ஹிந்தி,வடமொழியை அனைவர் மீதும் திணிக்க வேண்டும் என்ற வெறி கொண்ட கூட்டத்தை எதிர்த்து நடக்கும் தொடர் போராட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் மாநில அரசை டிஸ்மிஸ் செய்வதை கடினமாக்கிய தீர்ப்பிற்கு பிறகு தான் மற்ற மாநிலங்களும் தமிழகத்தோடு சேர்ந்து மாநிலத்தின்,அவர்களின் தாய் மொழியின் உரிமைகளுக்காக போராட துவங்கி உள்ளன
    ஒரு வித காரணமும் இல்லாமல் தமிழக அரசு 91 இல் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில் இருந்து இன்று சட்டமன்றத்தில் தனி ஈழம் ,இலங்கையை சர்வதேச அளவில் தென்னாப்ப்ரிகா போல ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் போடும் அளவிற்கு மாநில அரசுகள்,மாநில கட்சிகள் முன்னேறி உள்ளன
    கூடிய விரைவில் தமிழக அரசுகள் தன பணத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு பள்ளிகளிலும் தமிழ் ஆசிரியர்களை நியமிக்கும்,நியமிக்க நாம் அதனை வற்புறுத்துவோம்

  58. Avatar
    poovannan says:

    சான்றோன் சார் திரைகதை ஆசிரியர் எல்லாம் வரலாற்று ஆசிரியர் ஆவது சிறந்த நகைச்சுவை .ஆனாலும் அற்புதமான திரைகதை.தொலைபேசியை எடுத்திருந்தால் கை நழுவி இருக்கும் சென்னை.ஆஹா என்ன ஒரு நாட்.தொடாத தொலைபேசி என்று படமாக எடுத்தால் பிய்த்து கொண்டு ஓடும்

    இன்று டெலெங்கானவிர்க்காக போராட்டம் நடக்கிறது.தலைவர் கே சி ஆர் உண்ணாவிரதம் இருக்கிறார்.போராட்டங்கள் வெடிக்கின்றன .முதல்வர் யாராக இருந்தாலும் போராட்டத்தை பெரிதாக வளர விடாமல்,உண்ணாவிரதம் இருப்பவர்கள் இறக்காமல் பார்த்து கொள்வது /அவர்களை கைது செய்து போராட்டம் தீப்பற்றி எரியாமல் அடக்க வேண்டியது யார் கடமை.ஒரு மொழி பேசும் மக்கள் இன்னொரு மொழி பேசும்/.அல்லது இன்னொரு பகுதியை சேர்ந்தவர்களை தாக்காமல் தடுக்க வேண்டியது யார் கடமை
    தேர்தலில் நின்று வெற்றி பெற தைரியம் இல்லாமல் பின்வாசல் வழியாக ,சாதி கட்சிகளின் ஆதரவில் முதல்வர் ஆனவரை பார்த்து பயந்து நேரு 16 மாவட்டனகளை ஆந்திரமாக அறிவித்தவர் சென்னையை விட்டு விட்டாராம்.
    கலவரங்களை அடக்க கொஞ்சம் கூட திறமை இல்லாத ஆட்சியை நடத்தியதால் தான் நேரு வேறு வழி இல்லாமல் உடனே ஆந்திரத்தின் பிரிவை பற்றி அறிவிக்க வேண்டி வந்தது.இரண்டு பகுதிகளிலும் poraadiyathu வேறு வேறு கட்சிகள் அல்ல.அதே காங்கிரஸ் கட்சி தான் கிரண் குமார் ரெட்டி கூட டேலேன்கானவை சார்ந்த தன கட்சிகாரர்களை அடக்க முடிகிறது.ஆனால் மூதறிஞர் பேச்சை அதே கட்சியை சார்ந்த ஒரு பயல் கூட மதிக்கவில்லை .
    இதற்க்கு எவ்வளவு அற்புதமான திரைக்கதைகள்

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      // சான்றோன் சார் திரைகதை ஆசிரியர் எல்லாம் வரலாற்று ஆசிரியர் ஆவது சிறந்த நகைச்சுவை //

      அவர் திரைக்கதை ஆசிரியர் அல்ல. இலக்கியவாதி – நாவலாசிரியர். திரைக்கதை-யும் எழுதுகிறார். அவ்வளவே. அவர் திரைக்கதை எழுதியது மட்டும் உங்களுக்கு தெரிந்திருக்கிறது என்றால் அவரது வார்த்தைகளிலேயே “தமிழனுக்கு எதையும் சினிமா மூலம் சொன்னால்தான் புரியும் போல”

      அவர் வரலாறு குறித்து எழுதினால் என்ன சார் நகைச்சுவை ? ஏன் வரலாறு குறித்து எழுத பூவண்ணனுக்கு மட்டும் ஏதோ உரிமம் தரப்பட்டுள்ளதா என்ன ? அவர் சொன்னதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று பாருங்கள் ; பொய் எனில் நிரூபியுங்கள், அதைவிடுத்து, அவர் வரலாறு எழுதுவது நகைச்சுவை என்று நக்கலடிப்பதுதான் அவல நகைச்சுவை.

      1. Avatar
        சான்றோன் says:

        பொன்முத்துக்குமார் அவர்களே…..

        ஒருவரின் கருத்தை நேர்மையாக , ஆதாரபூர்வமாக எதிர்கொள்ள முடியவில்லையென்றால் அவர்மீது புழுதிவாரி தூற்றுவது தீராவிட கலாச்சாரம்……இவங்க எப்பவுமே இப்படித்தான்…….

  59. Avatar
    சான்றோன் says:

    @பூவண்ணன்…..

    //ஒரு வித காரணமும் இல்லாமல் தமிழக அரசு 91 இல் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில் இருந்து //

    ஒரு காரணமும் இல்லாமல் திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படவில்லை……மத்திய அரசு தீவிரவாதிகள் [ புலிகள் ]பற்றி மாநில அரசுக்கு அனுப்பிய உளவு எச்சரிக்கைகளை கருணாநிதி புலிகளுக்கே அனுப்பியது ஆதார பூர்வமாக அம்பலமானதால்தான் ஆட்சி கலைக்கப்பட்டது…….

    ராஜீவ் கொல்லப்பட்டது வேண்டுமானால் கவர்னர் ஆட்சியிலாக இருக்கலாம்….ஆனால் அதற்கான சூழ்நிலையை உருவாக்கியது கருணாநிதிதான்…….

    பத்மனாபாவை படுகொலை செய்த புலிகள் ஆறு மணி நேரத்தில் எந்த தடங்கலும் இல்லாமல் இலங்கை செல்ல வசதி செய்தவரும் கருணாநிதிதான்……

  60. Avatar
    பூவண்ணன் says:

    ராஜாஜி ஒரு வார்த்தை கூறி இருந்தால் தமிழகம் கொந்தளித்து இருக்குமா
    தமிழக எம் எல் ஏ க்களின் ஆதரவும் கிடையாது,தெலுகு எம் எல் ஏ க்களின் ஆதரவும் கிடையாது,மக்களின் ஆதரவும் கிடையாது

    ஆதரவாக மரங்களை வெட்டி சாலையை வழி மறிக்க/கலவரத்தில் ஈடுபட சாதி ரீதியான ஆதரவாளர்களும் கிடையாது.இந்தியாவிலேயே காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.ஒரே கட்சியாக இருந்தாலும் வேறு மொழி பேசும் எம் எல் ஏக்களுக்கு இடையே நல்லுறவு கிடையாது.
    மொழி ரீதியாக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கடும் பிளவு.அவரை இவருக்கு பிடிக்காது ,இவர் முதல்வரானால் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர் ஆகி விடுவார்.ஆதலால் அதை தடுக்க வேண்டும் என்று ஒருவர் காலை ஒருவர் வாரி விட்டு கொண்டிருந்த சூழலில் மக்கள் ஆதரவு இல்லாத
    ரோசையாவை காங்கிரஸ் சில காலம் முதலவராக ஆகி பின்பு தூக்கியது போல அந்த கால ரோசையா ராஜாஜி முதல்வர் பதவியில் உட்கார வைக்கப்பட்டார்

    அவரை கண்டு நேரு பயந்தார்,தெலுகு எம் எல் ஏக்கள்,தெலுகு மக்கள் பயந்து பின்வாங்கினர்.அவர் ஒருவர் இல்லை என்றால் தமிழ்நாடு என்று ஒரு மாநிலமே இருக்காது எனபது போல் சொல்லவும்,எழுதவும் மிகுந்த நகைச்சுவை உணர்வு வேண்டும்
    தொண்ணூறு சதவீத தெலுகு மக்கள் இருக்கும் பகுதியை நேருவை மிரட்டி பணிய வைத்து வாங்கியவர் போல கூறுவதில் துளியாவது உண்மை உள்ளதா.சென்னையும் அதன் சுற்றுபுரங்களும் யாரோடு சேர்வது எனபது மக்கள் முடிவு செய்ய வேண்டியதா இல்லை இருவர் தொலைபேசியில் பேசி முடிவு செய்ய வேண்டியதா
    இங்கு தெலுகு மக்கள் தான் அதிகம் என்றால் நியாயப்படி அவர்களுக்கு தான் சென்றிருக்க வேண்டும் மாறாக தமிழ் பேசும் மக்கள் தான் அதிகம் என்றால் தமிழ்நாட்டில் தான் இருக்கும்.பிரிக்கும் போது நடுவில் இருக்கும் சிறு பகுதிகளில் மக்கள் தொகையில் வேறு மொழி பேசும் மக்கள் அதிகம் இருந்தாலும் பிரிப்பது கடினம்.ஓரமாக இருக்கும் சில பகுதிகளில் கொடுக்கல் வாங்கல்கள் ,சில விட்டு கொடுத்தல்கள் இருக்கும்.இவைகளை இருவர் பேச முயற்சித்து அதில் ஒருவர் தொலைபேசியை எடுக்க மறுத்ததால் ,டயல் செய்தவர் பயந்து சில பகுதிகளை விட்டு விட்டார் என்று உணர்வு போங்க கூக்குரல் இடுவது சரியா
    அரசு அறிவித்த டேலேங்கான பிரிவினை,ஹைதராபாத் யாருக்கு போன்றவை மக்களின் எதிர்ப்பால் அப்படியே அரைகுறையாக நிற்கவில்லையா,
    புதிதாக உருவான சண்டிகர் நகருக்கு இன்றும் இரு மாநிலங்கள் சொந்தம் கொண்டாடி கொண்டு தான் இருக்கின்றன.கர்னாடகதிற்கும் மகாராஷ்ற்றதிர்க்கும் இடையே பெல்காம் பகுதிக்காக இன்றும் போராட்டங்கள்.அங்கு எல்லாம் யாரும் தனி நபர்களை சாதித்தவர்கள்,காட்டி கொடுத்தவர்கள் என்று கூறுவதில்லை.ஆனால் இங்கு தனக்கு பிடித்த தலைவர்களை அளவுக்கதிகமாக புகழ்வதும்,அனைத்து நன்மைகளுக்கும் காரணமாக ஆக்குவதும்,பிடிக்காதவர்களை ஏசுவதும் பலரால் செய்யபடுவது வேதனை தான்.கட்சிகளை தாண்டி ஒன்றாக இணைந்து போராட வேண்டிய விஷயங்களுக்கு கூட மாற்று கட்சியினரை/மாற்று கருத்து உள்ளவர்களை வன்மத்தோடு நக்கல் செய்யும் சு சாமிகள் ,அவரின் க்ளோன்கள் சிலர் இருப்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று

  61. Avatar
    paandiyan says:

    //அவரை கண்டு நேரு பயந்தார்,தெலுகு எம் எல் ஏக்கள்,தெலுகு மக்கள் பயந்து பின்வாங்கினர்.அவர் ஒருவர் இல்லை என்றால் தமிழ்நாடு என்று ஒரு மாநிலமே இருக்காது எனபது போல் சொல்லவும்,எழுதவும் மிகுந்த நகைச்சுவை உணர்வு வேண்டும்
    //

    அப்பா வழ வழ என்று புரியாமல் பெசுவோதோடு மட்டும் அல்லாமல் ஊருக்கும் உபதேசம் பண்ணுகின்றீர்கள இதைதான் உங்கள் திராவிடம் கற்று தந்த ஒரு பாடம். ஆமாம் எனக்கு வரலாறு ஒன்றும் திரியாது , கற்றுகொள்ளவும் தேவை இல்லை ஒரு சர்ச்சை கிளப்பி குளிர் காய எனக்கு புடிக்கும் என்று சொல்லி விட்டு போங்கள் . உங்களை கருத்துகளை படித்தால் நல்ல நகைசுவையாக இருகின்றது.

    உண்மை இங்க “அப்போது தமிழகத்தின் முதல்வராக ராஜாஜி இருந்தார். பேச்சுவார்த்தைகளில் இம்மிகூட அவர் விட்டுக்கொடுக்கவில்லை. 1953ல் ஆந்திரமாநிலம் உருவானபோது சென்னையையும் திருத்தணியையும் உள்ளிட்ட இன்றைய தமிழக எல்லைகளை அமைக்க காரணமாக அமைந்தவர் அன்றைய முதல்வரான ராஜாஜிதான்.
    1952ல் ஆந்திர சுதந்திரப்போராட்ட வீரரான பொட்டி ஸ்ரீராமுலு மதராஸ்மனதே என்ற போராட்டத்தின் உச்சமாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். ஆந்திராவே கொந்தளித்தது. அதற்கிணையான எந்த அலையும் இங்கே உருவாகவில்லை. மபொசியை காங்கிரஸ் கிளப்பிவிட்டும்கூட பெரிதாக ஒன்றும் நிகழவில்லை, சில கூட்டங்களைத்தவிர. நேரு ஆந்திர காங்கிரஸின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தாகவேண்டிய நிலை. காரணம் ஆந்திராவுக்கு தேசிய அரசியலில் பங்கு மிக அதிகம். அது மாபெரும் மாநிலம்.

    ஆனால் ராஜாஜி நேருவை உதாசீனம்செய்தார். பொட்டிஸ்ரீராமுலு உயிர்துறந்த டிசம்பர் 15 ஆம் தேதி நேரு பலமுறை கூப்பிட்டும் ராஜாஜி நேருவின் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. அவர் தொலைபேசியை எடுத்திருந்தால் சென்னை கைவிட்டுப்போயிருக்கும் என்று எம்.ஓ.மத்தாய் சொல்லியிருக்கிறார். விளைவாக ஆந்திரா எரிந்தது, ராஜாஜி பிடிவாதமாக இருந்தார். அந்த ஒருசெயலால்ராஜாஜி சென்னையை மீட்டார். பின்னர் சீனப்படையெடுப்பின்போது வலியச்சென்று நேருவுக்கு உதவ முன்வந்தார் ராஜாஜி. நேரு அப்போதும் அவரிடம் முகம்கொடுத்துப் பேச தயாராக இருக்கவில்லை.

    மற்றும் ஒன்று
    “1873 பஞ்சத்தில் பிகாரில் லட்சக்கணக்கானவர்கள் செத்தார்கள். ஆனால் 1951ல் நேருவின் அரசு உலகமெங்கும் பிச்சை எடுத்து பிகாரில் பட்டினிச்சாவு இல்லாமல் பார்த்துக்கொண்டது. [அதில் அமெரிக்கா அளித்த பங்கு மிக முக்கியமானது, அது சோவியத் ஆதரவு அரசியலால் பின்னர் மறக்கப்பட்டுவிட்டது] இப்பஞ்சத்தில் பிகாரில் மாபெரும் கஞ்சித்தொட்டி இயக்கத்தை ஆரம்பித்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் இன்றும் அம்மக்களால் காந்திக்கு நிகராக கொண்டாடப்படுகிறார்.

    இச்சூழலில் ராஜாஜி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தார். தமிழகத்தின் நிதிச்சுமையை அவரால் சமாளிக்க இயலவில்லை. கிராமப்பொருளாதாரம் குடிப்பழக்கத்தால் அழிந்துகொண்டிருப்பதை அவர் உணர்ந்தமையால் மதுவிலக்கை கறாராக அமல்படுத்தினார். தமிழக அரசின் முக்கியமான வரவினமே மதுமீதான வரி என்பதனால் அவர் கடுமையான பொருளியல் நடவடிக்கைகளை எடுக்க நேர்ந்தது”

  62. Avatar
    Ram says:

    மொழிவாரி மாநிலம் பற்றி

    http://www.hindu.com/mag/2003/03/30/stories/2003033000040300.htm

    ஒன்று தெரிகிறது – ராஜாஜி சொல்வதற்கு முன்னாலே 1920 இருந்தே மொழி வாரி கோரிக்கைகள் இன்ருந்தனவென்று. மற்றும் தெலுங்கருக்கு ராஜாஜி மேல் மட்டற்ற கோபம் சென்னையை ஆந்திராவோடு சேர்க்க முடியாமல் பண்ணியதற்காக …

    திராவிட அரசியல் வரலாறை எப்படியெல்லாம் மாற்ற முடிகிறது…

    1. Avatar
      paandiyan says:

      //திராவிட அரசியல் வரலாறை எப்படியெல்லாம் மாற்ற முடிகிறது…

      //
      இங்கு சண்டைய தமிழ், ஆந்திரா எல்லை விசயம்தான. இதில் என்ன திராவிட வரலாறு ? திராவிட பேசும் எல்லாம் போல!!

  63. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    இணைய தளங்களில் தேடியபோது நேருவுக்கு ராஜாஜி மேல் மிகவும் மதிப்பு இருந்ததாகவும், ராஜாஜி நேரு மீது செல்வாக்கு செலுத்துமளவு அதிகாரம் உள்ளவராகவும், மொழிவாரி மாநில பிரிவினையின் போது ராஜாஜியின் அறிவுரைப்படியே நேரு நடந்துகொண்டதாகவும், அதனால் தெலுங்கர்கள் ராஜாஜி மீது கோபம் கொண்டதாகவுமே தெரிகிறது.

    இங்கே சான்றோன் அவர்கள், சுட்டியுள்ள “திரைக்கதை ஆசிரியர்” எழுதிய கட்டுரையில் ‘ராஜாஜி நேருவிடமிருந்து வந்த தொலைபேசி வந்தபோது எடுக்கவில்லை’ என்று எம்.ஓ.மத்தாய் அவர்களை மேற்கோள் காட்டியுள்ளார். எம்.ஓ.மத்தாய் நேருவின் அந்தரங்க உதவியாளராக பல்லாண்டுகள் பணியாற்றியவர். அவர் எழுதிய ‘நேரு கால நினைவுகள்’ நூலின் மீது தனது பார்வையை “திரைக்கதை ஆசிரியர்” மூன்று கட்டுரைகளாக எழுதியுள்ளார். அதை படிக்கும்போது மேற்சொன்ன சம்பவம் உண்மையாகவே இருக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன.

    அதை விடுத்து இன்றைய சூழலோடு அன்றைய சூழலை ஒப்பிட்டு பேசுவது அபத்தமாக தோன்றுகிறது.

  64. Avatar
    poovannan says:

    நாட்டின் பிரதமர்,முதல்வர்,அரசு செயலாளர்கள்,ப்ரோடோகோல் ,போராடும் மக்கள்,சென்னையில் வாழும் மக்களின் விருப்பம் என அனைத்தையும் அவலமாக்கும் கூற்று எடுக்காத தொலைபேசி சென்னை தமிழ்நாட்டில் இருக்க காரணம் எனும் கருத்து

    மாநிலம் தீப்பற்றி எறியும் போது பிரதமரின் தொலைபேசியை முதல்வர் எடுக்க மறுத்தார் எனபது உண்மையாக இருந்தால் அதை விட அவலம் வேறு எதுவும் கிடையாது
    நீங்கள் கூறுவது போல தசரதர் கைகேயிக்கு இரு வரங்கள் தந்தது போல நேரு ராஜாஜிக்கு தந்த வரத்தை ராஜாஜி சென்னையை தமிழகத்தோடு இருக்க பயன்படுத்தி கொண்டார் என்று சொன்னால் கொஞ்சம் நம்பகத்தன்மை வரலாம்

    மொத்த பிரட்சினையையும் தன இயலாமையால்,ஆட்சி நடத்த திறன் இல்லாததால் உருவாக்கி விட்டு,பின்புறமாக தமிழ் எம் எல் ஏ க்களோ,தெலுகு பேசும் எம் எல் ஏ க்களோ யாருடைய ஆதரவும் இல்லாமல்,மக்கள் ஆதரவும் இல்லாமல் முதலவர் ஆனவரை ஹீரோவாக்குவதை விட அவல நகைச்சுவை வேறு ஏது

    மக்கள் ஒத்து கொள்ளாததால் தான் 60 ஆண்டுகள் ஆகா போகிறது என்றாலும் டேலேங்கான பிரச்சினை கொழுந்து விட்டு எரிகிறது.பெல்காமில் அடித்து கொள்கிறார்கள்.அப்படி இருக்கும் போது சென்னையில் உண்மையில் தெலுகு மக்களுக்கு அதிக உரிமை இருந்திருக்குமானால் அவர்களோ,இங்கு பெரும்பான்மையாக அவர்கள் இருந்திருந்தால் மக்களோ போராடி கொண்டே தான் இருந்திருப்பார்கள்

    ஆட்சி செய்யும் மாநிலம் பற்றி எறியும் போது பிரதமர் பேச விருப்பபட்டும் பேசாமல் இருந்திருந்தால் அது நீரோ மன்னனோடு ஒப்பிட வேண்டிய நிகழ்வு.பேசி சென்னையின் உண்மை நிலையை,தமிழகத்திற்கு அதன் மேல் உள்ள நியாயமான உரிமையை புரிய வைத்தார் என்றால் கூட புரிந்து கொள்ளலாம்.ஆனால் பேசாததால் நேரு பணிந்தார் என்ற கதை …………..

    1. Avatar
      paandiyan says:

      //மாநிலம் பற்றி எறியும் போது பிரதமர் பேச விருப்பபட்டும் பேசாமல் இருந்திருந்தால் அது நீரோ மன்னனோடு ஒப்பிட வேண்டிய நிகழ்வு.//

      திராவிட தலைவர்களின் பேச்சு எழுத்து திறமை அப்படியா உங்கலுஇடம் உள்ளது. நல்ல பழக்கமோ?? செம சிரிப்பா இருக்கு . இங்கு கூட “நகைச்சுவையும் வித்தியாசமானவையும்” பகுதி இருகின்றது. மக்களை மகிழ்விக்கலாமே

Leave a Reply to Dr.G.Johnson Cancel reply

Your email address will not be published. Required fields are marked *