ஆத்தா…

author
1
0 minutes, 1 second Read
This entry is part 17 of 31 in the series 31 மார்ச் 2013

செம்மல் இளங்கோவன்

ராயிக்களி கம்புக்களி நாந்திங்க வேணுமின்னு
ராப்பகலா கண்முழிச்சு
திருகுக்கல்ல திருப்பித் திருப்பி
பருப்பரச்சா பாவிமக

பொடவைஎல்லாம் பொத்தலோடு ராவெல்லாந்
தூங்காம மகன் எனக்கு கத சொல்வா
விட்ட கொட்டாயி வத்திப் போயி அசந்திருப்பா
வீல்னு கத்தி வெடுக்னு முழிச்சிருவேன்

அள்ளி என்னை அணைச்சுக்கிட்டு
அப்புறமும் முழுச்சிருப்பா நான்தூங்க

உழைப்பெல்லாம் கொட்டிப்புட்டு
களைப்போடு கண்ணயர்வா-ஆனாலும்
வுடமாட்டேன் மணிக்கணக்கா கத கேப்பேன்
இருந்தாலும் அலுக்காம கத சொல்வா

ஒரு நாலு கத சொல்லாம சொகமில்லாம
படுத்திருந்தா… சோலப்பாட்டிக்கு சொல்லியனுப்பி
ஓடிவந்தா-கூனு விழுந்த சோலப்பாட்டி வெச்சுக்குடுத்த சுக்குத்தண்ணி வேண்டாமின்னு அடம்பிடிச்சா என்னாட்டம்…

நாலு நாளு இழுத்திட்டு இருந்தா..
என்னப் பெத்த மவராசி…
ஆனமுட்டும் கேட்டுப்பாத்தா என்னைமட்டும்
அழுவாதன்னு-நான்கேக்க மாட்டேனு தெரியும்
அடுத்த நாளு போயிச் சேந்தா….

சோலப்பாட்டி கால நீட்டி ஓலமிட்டே ஒடிஞ்சிருந்தா
கன்னமெல்லாம் வீங்கிப் போயி- கண்ணீரும்
வத்திப் போயி கதவோரம் சாஞ்சிருந்தேன்
ஆத்தாளப் பாத்திருந்தேன்…
திருகுகல்ல திருப்பி திருப்பி பாத்து
கைய சிக்க வச்சிகிட்டேன்
அழுக மட்டும் வரவேயில்ல
ஆத்தாளும் கேட்கவேயில்ல…

Series Navigationகேள்போதிகை (Bearing)
author

Similar Posts

Comments

  1. Avatar
    தேமொழி says:

    கவிதை வரிகள் இதயத்தை பிசையும் சோகத்தை உணரச் செய்தது.

    ….. தேமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *