ஆத்துல இன்னும் தண்ணி வரல….

This entry is part 23 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

 

 

அப்பத்தாவுக்கு உள்ளூர் வைத்தியர்

வைச்ச கெடு,

‘அமாவாசை தாண்டுறது கஷ்டம்’.

கண்ணும் தெரியல

காதும் கேட்கல

பேச்சும் கொளறுது

முனகல் மட்டுமே

வலிக்கூறு தாங்காம.

ஏறி இறங்குற நெஞ்சு

எப்ப வேணா நிக்கலாம்.

கண்ணும், உடம்பும்,

கையும் கெடந்து துடிக்குது

எதுக்குன்னு தெரியல.

அப்பாவுக்கோ ஆயிரம் கவல.

ஆத்துல இன்னும்

தண்ணி வரல !

சோத்துக்கு ஒரு

வழியும் பொறக்கல !

ஆனாலும் ஆத்தா துடிக்கறது

அத விட சோகமில்ல.

கண்ணு கலங்கி நின்னு

அப்பா கேட்டாரு,

“என்னாத்தா வேணும் ஒனக்கு”

பதிலுக்கு அப்பத்தா கேக்குது,

“இன்னும் குறுவை நடலியா” ன்னு!

 ***********

 

 

தி. ந. இளங்கோவன்

Series Navigationகங்கை சொம்புதாகூரின் கீதப் பாமாலை – 27 புயல் அடிப்பு
author

இளங்கோ

Similar Posts

51 Comments

    1. Avatar
      Selvam says:

      Appavukku aayiram kavalai… uyirpogum velaiyil appathaavukku santhathigalin unavu-pathugappu patri periyaaa kavalai… migasathaarana manithargal.. miga-miga arputhamaana sinthanaigal… GOOD… melum ezhutha vazhthukkal…

  1. Avatar
    இளங்கோ says:

    கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பர்களே!

  2. Avatar
    Kavya says:

    வயதான பெண்ணொருத்தி மரணிக்கும்போது ‘இன்னும் குறுவை நடவில்லையா?’ என்று கேட்பதாக கவிதை முடிகிறது.

    இதை எப்படி எடுப்பது?

    வயதானவர் என்பதால் தனக்கு இன்னும் சாவு வராமல் இருக்கவேண்டுமென்று எவரும் கேட்பதில்லை. நல்ல சாவு வரவேண்டுமென்றுதான் கேட்பதுண்டு.

    வாழ்க்கைக்கு வழிதரும் விவசாயம் நீரில்லாமல் தடைபட்டுக்கொண்டிருக்கும்போது இவர் மரணம் வர, அத்தடை நீங்கியதா என்பதாக கேள்வி.

    இக்கேள்வியைத் தன்னலமில்லாக்கேள்வியென எடுத்து இக்கிழவியை நாம் மெச்சலாமா?

    முதலில் இஃதொரு தன்னலமில்லாக்கேள்விதானா?

    ஊர்மொத்தமும் நீரைப்பெற்று விவசாயத்தை நடாத்தி மகிழட்டும் என்று இவர் நினைத்துத்தான் சொன்னாரா என்பதை எப்படித் தெரிவது?

    ஏனென்றால் வயதானவர்களை நான் அறிவேன். நீண்ட நெடுவாழ்க்கையில் அவர்கள் மனங்கள் மரத்துப்போய், தான், தன் சுற்றம், தன் இனம், தன் ஜாதி – இவைகளுக்கப்பால் இவர்கள் சிந்தனைகள் போவதேயில்லை. அபூர்வமாக ஒரு சிலரே தான் மரணிக்கும் தருவாயில் கூட பிறர் நலத்தைப்பற்றிக்கவலைகொள்ளும் மாமனிதர்கள்.

    பெண்கள் – இதைப்படிக்கும் பெண்கள் மன்னிக்கட்டும் – தான், தன் மகவு, தன் கணவன், தன் சுற்றத்தைத்தாண்டிச் செல்பவர்கள் அல்ல‌. இதுகொண்டு பெண்களுள் தத்துவ ஞானிகள் உருவாவதில்லை.

    ஆண்களும் உண்டு. ஆயினும், அவர்களில் பலர் வேறுபட்டிருப்பதைக்காணலாம்.

    ஆங்கில வரலாற்றில் ஒரு நிகழ்வைச்சொல்லிக்காட்டுவது உண்டு: ஃபிலிப் சிட்னி என்ற கோமகனார் ஒரு மாவீரர். தன் நாட்டுப்படையொன்றை நடாத்திப்பொருதும்போது, அவன் காயமுற்று கீழே வீழ்ந்து கிடக்கிறார். அவர் படை தோற்கடிக்கப்பட்டு அவர் வீரர்கள் சடலங்கள் ஆங்கும் இங்கும் சிதறிக்கிடக்கின்றன. சிலர் வேதனையில் துடிக்கிறார்கள். அப்போது இவரருகே ஒரு வீரனும் கிடக்கிறான். இக்கோமகனார் தாகத்தால் தவித்ததைக்கண்ட ஒருவர், ‘சிட்னி, இத்தண்ணீரைக் குடியுங்கள்” எனச்சொல்லித்தர, சிட்னி அதை பக்கத்து வீரனுக்குக் கொடுக்கும்படி சொன்ன வாசகம் உலகப்புகழ்பெற்ற ஒன்றாகும்: “Thy necessity is yet greater than mine”. சாகரடீசுக்குச் சிறையில் விடத்தை அருந்தி மரணிக்க வேண்டுமன்ற தண்டனை வழங்கப்படுகிறது. அது நிறைவேறும் சில வினாடிகளுக்கு முன் அவரது சீடர் பிளோட்டோ சிறைக்குச்சென்று சந்தித்து, ‘ஆசிரியரே, தயவு செய்து அவர்களிடம் சொன்னது தவறென்று சொல்லிவிடுங்கள். உங்கள் தண்டனை இரத்து செய்யப்படும். எனக்காக…!’ என்றதற்கு சாக்ரடீசு: Plato, you are dear to me. But dearer still is Truth!” என்றார்.

    இப்படிப்பட்ட இறக்கும்தருவாயில் வரும் தியாக உணர்வு அல்லது கொள்கை உணர்வு, இக்கிழவிக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், ஏற்கனவே சொன்னமாதிரி: ஊர்ப்பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும்’ என்பதை ஏற்றுக்கொண்ட பெண் வரலாற்றில் உண்டா? ‘நமக்கென்ன வந்திச்சி, வாங்க!’ என்று கடிந்து இழுத்துச்செல்லும் மனைவிமார்கள் எங்கேயும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.

    இக்கவிதை ஒரு பொய்யைத் திறமையாக நம்முன் உண்மைபோல வைக்கிறது. என்னை ஏமாற்ற முடியாது.

    1. Avatar
      சான்றோன் says:

      //‘நமக்கென்ன வந்திச்சி, வாங்க!’ என்று கடிந்து இழுத்துச்செல்லும் மனைவிமார்கள் எங்கேயும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.//

      காவ்யா கருத்துடன் உடன்படுகிறேன்…….ஓரளவு சமூக அக்கறை உள்ள ஆண்களையும் சுய நல கூட்டுக்குள் இழுப்பது பெண்களே….

      எல்லா ஆண்களின் வாழ்விலும் இதற்கான உதாரணம் நிச்சயம் இருக்கும்…..

  3. Avatar
    jayashree shankar says:

    அன்பின் இளங்கோ,
    யதார்த்தமான கவிதை…நன்று…

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  4. Avatar
    இளங்கோ says:

    /*இக்கேள்வியைத் தன்னலமில்லாக்கேள்வியென எடுத்து இக்கிழவியை நாம் மெச்சலாமா?
    முதலில் இஃதொரு தன்னலமில்லாக்கேள்விதானா?/*

    காவ்யா அவர்களுக்கு,
    கிழவி தன்னலமில்லாக்கேள்வி கேட்டதாக கவிதையில் எங்குமே சொன்னதாக நான் உணரவில்லை. தியாக உணர்வு அல்லது கொள்கை உணர்வு கொண்டவளாகவும் சொல்லவில்லை. எந்த வரிகள், அல்லது வார்த்தைகள் அப்படிப்பட்ட ஒரு புரிதலை உங்களுக்குக் கொடுத்தன எனக் கூற முடியுமா?
    இளங்கோ

  5. Avatar
    புனைப்பெயரில் says:

    மனதில் உழண்டது வாயில் குழறியாவது வந்தது. ஆழ் மன அழுத்தத்தில் அந்த பாட்டிக்கு அதுவே வார்த்தையாக இருந்தது. இதைப் போட்டு பிச்சு பீராய வேண்டாம். நொந்த மனதில் வெந்த வார்த்தைகள்…

  6. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    இப்படியெல்லாம் கவிதையை குடலாப்ரேஷன் பண்ண ஆரம்பிச்சா …..

    வெளங்கிடும்.

    1. Avatar
      K A V Y A says:

      பீய்ச்சி பிராயப்படுதலே ஒரு கவிதையை அடையும் வழி. இது நேர்கவிதைகளுக்கும் கூட பொருந்தும். குழந்தைக்கவிதைகளுக்குக்கூட பொருந்தும்.

      எ.கா.. கிறிஸ்டினா ரொசீட்டியின் குழந்தைக்கவிதைகள் வேறுநோக்கில் வளர்ந்தோரால் படிக்கப்படுகின்றன. அவர் தன் காதலை நசுக்கிக்கொண்ட உணர்வுகளே அவரின் குழந்தக்கவிதைகளாயின என்பது ஒரு விமர்சன்ம்.

      கலிவர்ஸ் ட்ராவல்ஸ் குழந்தைகளுக்கான நாவல். அது வளர்ந்தோரால் வெள்ளையனின் ஏகாதிபத்திய குணத்தை விமர்சனம் பண்ணி ஜொனதன் ஷ்விஃப்ட்டினால் எழுதப்பட்டது என்கிறார் விமர்சகர். இவ்விமர்சனம் எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

      பன்முறை திண்ணையில் எழுதிவிட்டேன். புரிந்த மாதிரி தெரியவில்லை. கவிதையை எந்த வாசகரும் எம்முறையிலும் விமர்சிக்கலாம். ஒரு கவிதை ஆல் திங்க்ஸ் டு ஆல் மென். அல்லது டிஃப்ரண்ட் திங் டு டிஃப்ரண்ட் மென். பழம் என நீங்கள் சொல்வீர்கள்; அய்யோ அப்படிச்சொல்லாதீர் தோலுக்குள்ளே காய்தான் என்கிறேன். பார்வைகள் வெவ்வேறு. எது உணமை எது பொய் – என்று நாமிருவரும் சொல்லமுடியாது. கட்சிக்காரர்களே நீதிபதியாக முடியுமா?

      இக்கவிதையின் எங்கே நான் அப்படி எழுதியிருக்கிறேன் என்று கவிஞர் கேட்கக்கூடாது. கவிஞர் விமர்சனங்களைப்படித்து புன்முறுவல் பூத்துக்கொள்ளலாமே தவிர விமர்ச்கர்களுக்கு நடுவே உட்கார வரக்கூடாது. இளங்கோ தயவு செய்து வெளியேறி விடுங்கள்.

      யதார்த்தம் என்று பலத்ரை தவறாக உணரவைத்திருக்கிறது இக்கவிதை. அதை தன் சொற்திறமையால் சாதித்துவிட்டார் கவிஞர். பாராட்டுக்கள்.

      எந்த கிராமத்துக்கிழவிக்கும் பொது நோக்கு கிடையாது. அப்படி நோக்கு இருக்கிறது இக்கிழவிக்கு என்று உணர்வு விமர்சனத்தில் தெறிக்கிறது. அதன் எச்சரிக்கையே என் விமர்சனம்.

      தமிழகத்தில் ந்ல்லவர்கள் குறைந்து குறைந்து காணாமல் போய்விட்டார்கள். எஞ்சியவர்கள் ஓரிருவர் ஆனால் அவர்களைக்கண்டுபிடிக்க முடியாது. இவ்வுண்மையைச்சொன்னால்தான் ஒரு கவிதை யதார்த்தம் எனலாம். இல்லாவிட்டால் இல்லாதததை இருப்ப்தாகக்காட்டுவது எனலாம்.

      பொய் சொல்வதும் கவிதைதான். ஒரு பெண்ணை எப்படிஎப்படியெல்லாமோ வருணிக்கிறார்கள். ஆனால் அது பொய். அவளை மண்ணெண்னெய் ஊற்றிக் கொழுத்திவிட்டு தற்கொலை செய்துகொண்டாள் என் மருமகள் என போலீசில் போய் புஹார் கொடுப்பதே உண்மை.

      பொய்யைச் சந்தையில் அழகாக மடித்து வியாபாரம் செய்து புகழென்னும் பணத்தைச்சம்பாதிப்பவனே கவிஞன்.

      “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்று ஒரு யதார்த்ததைப் பகர்கிறது ஒரு பிரபலமான திரைப்பாடல்.

      1. Avatar
        பொன்.முத்துக்குமார் says:

        பீய்ச்சிப் பீராயலாம், அவை கட்டுரைகளாக, சிறுகதைகளாக நாவல்களாக இருக்கும்வரை. “பீய்ச்சிப் பீராய” ஆரம்பித்தால்

        ‘இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’

        ‘பறவையிலிருந்து உதிர்ந்த
        சிறகு ஒன்று
        காற்றின் தீராப்பக்கங்களில்
        பறவையின் வாழ்வை
        எழுதிச் செல்கிறது’

        ‘அன்றைய தினத்தின்
        அற்புத சாட்சியாய்
        எழுந்து நிற்கிறது
        பசும்புல்’

        போன்ற ஏகப்பட்ட கவிதைகளை இடக்கையால் புறமொதுக்க வேண்டும்.

        கவிதை என்று வரும்போது அதை மூளையால் “பீய்த்துப் பீராயாமல்” இதயத்தால் நேரடியாக வாங்குவதே சிறப்பு. இது எனக்குப்பிடித்த வழி, அவ்வளவே.

        1. Avatar
          Kavya says:

          //கவிதை என்று வரும்போது அதை மூளையால் “பீய்த்துப் பீராயாமல்” இதயத்தால் நேரடியாக வாங்குவதே சிறப்பு. இது எனக்குப்பிடித்த வழி, அவ்வளவே//

          கவிதைக்கும் லாஜிக் இருக்கிறது.

          “கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்.
          அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்” என்று எழுதக்கூடாது.

          எழுதினார்.

          விசுவநாதன் ‘கடவுளுக்குச் சாவு உண்டா கவிஞரே?” என்றவுடன் மாற்றிக்கொண்டார்.

          “கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்;
          அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்! என்று.

          ஏன் முத்துக்குமார்?

          அவர் உங்களைப்போல சொல்லியிருக்கலாமே? “இசையமைப்பாளரே என் கவிதையை இதயத்தால் வாங்குங்கள்” என்று?

          உங்களுக்ககுப்பிடித்த வழியின்படி விசுவநாதன் சென்றிருந்தால், கடவுள் சாக வேண்டுமென்றுதான் பாடல் இருந்திருக்கும். அந்த அபத்தத்தை தமிழக மக்கள் நாள்தோறும் கேட்கும் விதிக்குத் தள்ளப்பட்டிருப்பார்கள்.

          கவிதை படித்துவிட்டு குப்பையில் தூக்கியெறிய அன்று. அது நம் சிந்தனையைப் பலவழிகளில் தூண்ட வேண்டும். எல்லாருக்கும் ஒரே மாதிரியான சிந்தனையாக இருக்க்வேண்டுமென்று அவசியமில்லை. அவரவருக்குத் தோன்றியமாதிரி.

          லேய‌ர் அபான் லேய‌ர் லிஃப்ட்
          ப‌ட் லேய‌ர் அன்ட் லேய‌ர் ஸ்டில்ல் லெஃப்ட்

          என்று போக‌ வேண்டும். அப்போதுதான் இல‌க்கிய‌ இன்ப‌ம் தரமானது எனலாம். குழந்தை இல‌க்கிய‌த்துக்கு இது தேவையில்லை. ஆயினும் அவ்வில‌க்கிய‌த்துக்கும் உட்பொருள் உண்டு. அதை குழந்தை த‌ன்னாலே கிரஹித்துக்கொள்ளும். வ‌ளர்ந்த‌‌வ‌ர்க‌ளுக்கு சிந்த‌‌னைக்கு விருந்து தேவை. குழந்‌தைக‌ளுக்கு அம்புலிமாமா போதும். உங்க‌ளுக்கும் அம்புலிமாமாவா?

          கவிதை கணிதமன்று. ஒரே விடை எல்லாருக்கும் வரவேண்டுமென்று கிடையாது.
          உங்கள் வழியில் கவிதை ஒரு கணிதம்போன்று ஒரு கட்டத்துக்குள் அடைப்பட்டுவிடும். அதற்குமேல் அங்கு ஒன்றுமில்லை.

          உங்கள் வழி ஒரு சராசரித்தமிழனின் வழி. எங்கும் எதிலும் ஏதாகினும் இலாபம் உண்டா என்ற நோக்கு. எனவே கவிதையில் உட்பொருள் இருக்கக்கூடாது. அது ஒரு வாழைப்பழம்போல இருக்கவேண்டும். உரித்தவுடன் சாப்பிட வேண்டும். அதைக்கூட செய்யாமல் உரித்து வாயில் திணிக்கவேண்டுமென்றுமிருக்க வேண்டும். அப்படிப்பட்ட கவிதைகளே தமிழகத்தில் எழுதப்படுகின்றன. திண்ணையில் வேறு மாதிரியாக வந்தால் எவரும் படிப்பதில்லை.

          ரகுவரன் ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் தன் பேபிக்கு எத்தனை பால்பவுடர் டப்பாக்கள் செலவாயின என்று எண்ணும் காட்சி நினைவுக்கு வருகிறது. ம‌னித‌ வாழ்க்கையே பாழ். இவ‌ர்க‌ளுக்கு இல‌க்கிய‌மேன் என்ற‌ கேள்வி எழுகிற‌து. எல்லாமே பாழ்: சினிமாவும் ட‌ப்பாங்குத்து, இல‌க்கிய‌மும் ட‌ப்பாங்குத்து; அர‌சிய‌லும் அதே.

          உண்டு உற‌ங்கி க‌ண்டு க‌ளித்து சோற்றால் அடித்த‌ பிண்ட‌ங்க‌ளாக‌ வாழ மட்டும் இறைவ‌ன் ந‌ம்மைப் ப‌டைக்க‌வில்லை. அப்ப‌டி ம‌ட்டும்தான் என்றால் வில‌ங்குக‌ளுக்கும் ந‌ம‌க்கும் என்ன‌ வேறுபாடு?

          “செவிக்கு உண‌வில்லாத‌ போது சிறித‌ள‌வு வ‌யிற்றுக்கும் ஈய‌ப்ப‌டும்” என்று எவன் சொன்ன‌வரே அவனே உண்மைத்த‌மிழர். வாழ்க அவர் !!

          1. Avatar
            பொன்.முத்துக்குமார் says:

            விஸ்வநாதன் கவிஞனில்லை. கண்ணதாசன் மாற்றிக்கொண்டது அவருக்கிடையேயான நட்பின்பாற்பட்டு. அப்படியே ‘சாகவேண்டும்’ என்று எழுதியிருந்தால் ‘காதலில் துயருற்ற நெஞ்சின் ஓலம் அது’ என்றவகையில் அது ஒன்றும் பிழையாகவும் இருந்திருக்காது. அப்படிப்பட்ட ஒரு வெளிப்பாட்டு வரியில் லாஜிக், சின்டாக்ஸ், சிமேன்டிக்ஸ் என்றெல்லாம் “பீய்த்துப் பீராய்ந்தால்” முன் சொன்னது போல “வெளங்கிடும்”

            லாஜிக்கெல்லாம் பார்க்கிறீர்கள் : ‘கடவுளுக்கு சாவு இல்லையெனில் பிறப்பும் இல்லை’ என்றல்லவா ஆகும் ? சாவே இல்லாத ஒன்றுக்கு பிறப்பும் இல்லாமலல்லவா இருக்கவேண்டும் ?

            ‘பரந்து கெடுக உலகியற்றியான்’ என்றவனும் மகா கவிதான்.

            மேதகு ஐயன்மீர்,

            நான் கவிதையை இதயத்தால் வாங்கும் ‘சராசரி தமிழன்’ எனவே இருந்துகொள்கிறேன். நீவிர் “பீய்த்துப் பீராய்ந்து” மேல்மட்ட தமிழனாக இரும்.

            அங்ஙனமே ஆகட்டும், ததாஸ்து, ஆமென்.

  7. Avatar
    இளங்கோ says:

    புனைப்பெயரில் மற்றும் பொ.மு…

    தான், தன் குடும்பம், அந்தக்குடும்பத்தின் விவசாயம் தேக்கத்தில் நின்று வாரிசுகளின் நிகழ்கால, எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி நிற்றல் போன்றவற்றின் வேதனை, சாக்காடு வரும் வேளையிலும் ஒரு கிழவியின் மனதை அரிப்பதையே கவிதையாகக் கொணர்ந்திருந்தேன். “குறுவை” என்பது எப்படியோ காவ்யாவுக்கு ஒரு பொது நல, தியாக உணர்வுக்கு அடையாளமாகத் தோன்றி இருக்கிறது. அதன் விளைவே மற்ற குற்றச்சாட்டுக்கள். அப்படிப்பட்ட புரிதல் எங்கனம் வந்தது என்பதை விளங்கிக் கொள்ள இயலவில்லை.
    காவ்யாவின் விளக்கத்துக்குக் காத்திருப்போம். மற்றபடி “திண்ணைக்கு” வந்து விட்டால் எந்தவொரு படைப்பும் “ஆப்ரேஷன்” பண்ணப்படும் என்பது தெரிந்ததுதானே. அது அவசியமும்தானே!

    1. Avatar
      K A V Y A says:

      சபாஷ்! உண்மையைச்சொல்லிவிட்டீர்கள் பின்னூட்ட விளக்கத்தில்.

      அஃதென்ன?

      //தான், தன் குடும்பம், அந்தக்குடும்பத்தின் விவசாயம் தேக்கத்தில் நின்று வாரிசுகளின் நிகழ்கால, எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி நிற்றல் போன்றவற்றின் வேதனை, சாக்காடு வரும் வேளையிலும் ஒரு கிழவியின் மனதை அரிப்பதையே கவிதையாகக் கொணர்ந்திருந்தேன். //

      இதே இதே.

      தான், தன் குடும்பம். அஃதோடு விடாமல் வாரிசுகள் – இவர்களின் நலமே தான் சாகும் தருணத்திலும் இவளுக்கு வருகிற்து. அவ்வூரின் எத்தனை எத்தனை மக்களிருப்பர்.? அவர்களுள் நிலமே இல்லாதோர் எத்தனை எத்தனை? அவர்களுள் இவ்ளின் குடும்பத்தாருக்கு உழைத்து போட்டவர்கள் எத்தனை எத்தனை? என்பனவெல்லாம் இவளுக்கு என்றுமே தெரிந்திருக்க நியாயமில்லை அவ்வளவு உறைந்து போனவள் இவள்.

      தான், தன் குடும்பம், அந்தக்குடும்பத்தின் விவாசாயத்தின் தேக்கம், வாரிசுகளின் நிலைமை என்று ம்ட்டுமே நின்று விட்ட‌ ஒரு சாதாரண அற்பக் கிழவிக்கு ஒரு கவிதை! அதைப்படித்து விட்டு யதார்த்தம் எனப்பாராட்ட இங்கொரு கூட்டம்.

      என்னே இயற்கை !

      பாரதியை நான் எதற்கு வெறுக்கிறேன்? சாகும் வேளையில் ‘செல்லம்மா…செல்லம்மா…” என்றழுதவரை எப்படி மாமனிதர் என்பது? சாதாரண மனிதர் என்றுதானே சொல்ல்வேண்டும்.

      சாதாரண மனிதர்களை கவிதையில் புகழ்வதில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.

    2. Avatar
      K A V Y A says:

      குற்றச்சாட்டுகள் என்ற பதம் இங்கு பொருந்தாது. ஒரு கவிதை விமர்ச்சிக்கப்படுகிறது. விமர்சனங்கள் அங்கும் இங்கும் இருக்கலாம். அவ்வளவுதான்.

      பிடிக்காதவைகளைச்சொன்னால் குற்றச்சாட்டுகளா? முதலில் உங்களை ஆர் விமர்சனங்களுக்கு நடுவே தலையை நீட்டச்சொன்னது. மற்றவர்கள் விமர்சனம் செய்ய, கவிஞரே தன் கவிதையை விமர்சனம் செய்வாரா? நான் அப்படித்தான் சொன்னேன் என்று விளக்கத்தேவையில்லை. அவரவர் அவரவருக்குத் தோன்றியமாதிரி எடுத்துக்கொள்கிறார்கள் என்று விட்டுவிட வேண்டியதுதான் கவிஞரின் வேலை.

  8. Avatar
    இளங்கோ says:

    காவ்யா,
    உண்மையை பின்னூட்டத்தில் மட்டும் சொல்லவில்லை. கவிதையிலும் அதையே சொல்லியுள்ளேன்.
    இளங்கோ

    1. Avatar
      K A V Y A says:

      ஆம் அவள் ஒரு சராசரிக்கிழவி என்பதுதான் உண்மை. ஒரு சராசரிக்கிழவிக்கு ஒரு கவிதை. அவ்வளவுதான்.

      சராசரி மனிதர்களைப்பற்றியும் எழுதலாம். ஆனால் அவர்கள் சராசரிகள் என்று ஒத்துக்கொள்ளும்படி கவிதை அமைய வேண்டும்.

  9. Avatar
    பெர்னார்ட் says:

    புதுக் கவிதையின் இலக்கணமே யதார்த்தம் தான். அப்பத்தாவின் கடைசி வார்த்தைகள் யதார்த்தமாக இல்லை என்பது என் கருத்து. வெகுஜன ஈர்ப்புக்காக எழுதப்பட்டது போல உள்ளது அந்த கடைசி வரி.

  10. Avatar
    punaipeyaril says:

    அந்த கடைசி வரியில் என்ன யதார்த்தம் இல்லை..? இருக்கிறதோ இல்லையோ அது தான் வந்தது… சிட்டிஸன் கேன் படம் பாருங்கள். மகா மகா பெரிய மனிதர், சாகும் போது, “ரோஸ் பெட்” என்று சொல்லி விட்டு சாக, அது என்னவென்று தேடுவார்கள்…. அது மாதிரி தான் இதுவும்…

  11. Avatar
    suvanappiriyan says:

    //“பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்று ஒரு யதார்த்ததைப் பகர்கிறது ஒரு பிரபலமான திரைப்பாடல்.//

    ‘கவிதைக்கு பொய்யழகு’ என்பது வைரமுத்துவின் வைர வரிகள். :-(

    1. Avatar
      Kavya says:

      எப்படிப்பட்ட பொய் என்பதைப் பொறுத்தே அழகமையும்.

      காலங்களில் அவள் வசந்தம்
      மலர்களிலே அவள் மல்லிகை
      மாதங்களில் அவள் மார்கழி

      என்று ஒரு காதலியைப்பற்றிய‌ பாடலில் பொய்கள் அழகு. கேட்ட காதலிக்கும் சொன்ன காதலனுக்கும் அவை பொய்கள் என்று தெரியும். ஆனால் அச்சொற்களுக்கு ஆங்கு முக்கியமில்லை. அவனின் சொற்கள் அவன் மனதில் அவள் உயர்வாக இருக்கிறாள் என்பதைக்காட்டுவதனாலே. இக்கவிதையின் நோக்கும் அதே. எனவே இது ஒரு உயர்வான கவிதை. இங்கு பொய்கள் அழகாகின்றன.

      மாறாக, கருன்நாநிதிக்கு ஒரு விழா மேடை. வைரமுத்துவும் வாலியும் இன்னபிற சகபாடிகளும் மேடையேறி: அர்ஜுனன், மனுநீதிச்சோழன், தன்னலமில்லா உத்தமன் என்று கவிபாடினால், அல்லது ஜெயின் அரசவைக்கவிஞர் கூட்டம் ‘யாதுமாகி நின்றாள் காளி’ ‘எங்கள் மேரி மாதாவே’ ‘ரங்கநாயகி’ (சொன்னது வாலி) என்று பாடினால்,

      பொய்கள். அவை அசிங்கங்கள். அழகன்று.

  12. Avatar
    K A V Y A says:

    //விஸ்வநாதன் கவிஞனில்லை. கண்ணதாசன் மாற்றிக்கொண்டது அவருக்கிடையேயான நட்பின்பாற்பட்டு. அப்படியே ‘சாகவேண்டும்’ என்று எழுதியிருந்தால் ‘காதலில் துயருற்ற நெஞ்சின் ஓலம் அது’ என்றவகையில் அது ஒன்றும் பிழையாகவும் இருந்திருக்காது. அப்படிப்பட்ட ஒரு வெளிப்பாட்டு வரியில் லாஜிக், சின்டாக்ஸ், சிமேன்டிக்ஸ் என்றெல்லாம் “பீய்த்துப் பீராய்ந்தால்” முன் சொன்னது போல “வெளங்கிடும்”

    லாஜிக்கெல்லாம் பார்க்கிறீர்கள் : ‘கடவுளுக்கு சாவு இல்லையெனில் பிறப்பும் இல்லை’ என்றல்லவா ஆகும் ? சாவே இல்லாத ஒன்றுக்கு பிறப்பும் இல்லாமலல்லவா இருக்கவேண்டும் ?

    ‘பரந்து கெடுக உலகியற்றியான்’ என்றவனும் மகா கவிதான்.

    மேதகு ஐயன்மீர்,

    நான் கவிதையை இதயத்தால் வாங்கும் ‘சராசரி தமிழன்’ எனவே இருந்துகொள்கிறேன். நீவிர் “பீய்த்துப் பீராய்ந்து” மேல்மட்ட தமிழனாக இரும்.

    அங்ஙனமே ஆகட்டும், ததாஸ்து, ஆமென்
    //

    எழுதினது அப்படியே படிக்கக்கூடாது. கண்ணதாசன் என்ற பெயரையே நான் எடுக்கவில்லை. நீங்கள் ஏன் எடுத்தீர்கள்? கவிஞர் ஒருவர், கவிதை ஒன்று. என்று சொல்லி, ஒரு எ காவுக்குத்தான் பேசினேன். அதைப்பிடித்து கண்ணதாசனுக்கு வக்காலத்து வாங்க இங்கேயா இடம்?

    அவர் எப்படியும் எழுதட்டும். நாம், லாஜிக்கும் சின்டாக்ஸும் பார்க்கவேண்டும் சிலவேளைகளில். ஒருவர் ஒரு கவிதை எழுதுகிறார்: அதில் பார்வதி சிவபெருமானில் தங்கையென்றும் பிள்ளையார் ஏசுவின் மகன் என்றும் எழுதுகிறார். அல்லது நான் நாளை காற்று வாங்கி வந்தேன் என்று இலக்கணப்பிழை போடுகிறார். ஏற்றுக்கொள்வீர்களா?

    நான் சராசரித்தமிழன்; என் இதயத்தைத் தொட்டுவிட்டது என்பீர்களா? கவிதை இங்கே இளங்கோ எழுதியிருக்கிறார். அதன் வரிகள் எப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன? உரைநடை போலவா? எனவே கவிதைக்கு இலக்கணம் உண்டு. கவிஞர்களுக்கும் வரையறை உண்டு. அதில் ஒன்றை நான் இங்கு சுட்டிக்காட்டினேன். பிறகவிஞரகளின் வரியை அப்படியே எடுத்தாள்வது தவறு.

    பரந்து கெடுக உலகற்றியான் என்றெழுதியவர் மஹா கவியா? வள்ளுவரா?

    ஆதியும் அந்தமும் பிறப்பும் இறப்பும் இல்லா இறைவன் என்று அனைத்து மதங்களும் சொல்கின்றன. எந்தக் கவிஞன் உண்டு என்று புனைகிறானோ அவன் கவிதை எழுத லாயக்கற்றவன் மதங்களின்படி. நாத்திகர் ஏற்றுக்கொள்வார்.

    சராசரியென்றால் உயர்ந்த குணங்களைக்குறிப்பதாக எடுத்துக்கொண்டு இறுமாப்படையாதீர்கள். கொலை, கொள்ளை, எளியோருக்கும் நலிந்தோருக்குமெதிரான வன்கொடுமைகள்; மக்கட்சொத்தைக்கொள்ளையடித்தல், கடவுள் பேரால் ஏமாற்றுக்கள் – இப்படி நிறைந்த வாழ்க்கையும் அதைச்சரியென்று சொல்லல், அல்லது கண்டும் காணாதமாதிரி இருத்தல், எல்லாரும் ஏமாற்றித்தான் பொழைக்கிறான்; நான் செய்தாலென்ன? இவை போன்ற செயல்களே சராசரி உலகம். இங்கு வசிப்பவர்கள் சராசரி மனிதர்கள். இவர்களிடமிருந்து வரும் கவிதைகள் இவைகளைப்போற்றும். இவர்கள் இலக்கியத்தை சராசரி மனிதர்கள் இரசிப்பார்கள். ஏனென்றால் அவர்கள் வாழ்க்கைதானே சித்தரிக்கப்படுகிறது? இங்கு ஒரு சராசரி கிழவிதானே போற்றப்படுகிறாள்?

    இப்போதுதான் இப்படி. முன்பு தமிழகம் இப்படியன்று. ‘வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றெழுதிய காலமுண்டு.

    மனதினிலே ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம். இதுதான் இலக்கிய உண்மை . ஒரு கவிதை ஒரு பேருணமையைச் சொல்வதில் முடிய வேண்டுமென்பார் இராபர்ட்டு ஃப்ரோஸ்டு. A poem should end on a moral message – Robert Frost (Quote is not exact) The mge need not be overt or explicit. It can be subterranean.

    எப்படி மக்களோ அப்படியே அவர்கள் ஆட்சியாளர்களும் அவர்கள் கலாச்சாரமும் அவர்கள் இலக்கியமும் அமையும். As people, so their government, so their culture, so their literature. Bad culture, bad lit. Or their lit reflects their culture. தமிழர் கலாச்சாரம் நாறிக்கொண்டே போகிறது. இன்றைய‌ செய்தித்தாள்க‌ளின்ப‌டி, ஒரு ச‌ரித்திர‌ப் புகழ்வாய்ந்ந்த‌‌ ம‌லையையே வெட்டிக்காணாம‌ல் செய்துவிட்டார்க‌ள். ப‌ல்லாண்டுக‌ளாக‌ ந‌டந்த‌ நிக‌ழ்வு. அதை வேடிக்க‌ப்பார்த்த அர‌சிய‌ல்வாதி, யாதுமாகி நின்றாய் காளி என்று புக‌ழ‌ப்ப‌டுகிறார். ஆசுப‌த்திரியில் குழந்தையை நாய் க‌டித்துக் கொல்கிற‌து. ப‌ல்லாண்டுக‌ளாக‌ ந‌ட‌க்கிற‌து. ஆனால் ந‌ட‌வ‌டிக்கை இன்றுதான். ‘யாதுமாகி நின்றாள் காளி’ எவ்வள‌வு ந‌கைச்சுவையான புகழாரம் ச‌ராச‌ரியில்லாத்த‌மிழ‌ருக்கு. ச‌ராச‌ரித்த‌மிழ‌ருக்கு ‘இதிலென்ன‌ங்க‌ த‌ப்பு. எங்கேயும் ந‌ட‌ப்ப‌துதானே? ” அல்ல‌து, “குழந்ன்டஹ்தை ஒரு துப்புர‌வுத் தொழிலாளியின‌துதானே?” ஆக‌, ச‌ராச‌ரி என்ப‌து கேவ‌ல‌மான‌ சொல்.

    However, it is just a phase, the decline and fall. History of lit of any language tells us that it has ups and downs in its long history. In 16th and 17th Century, when TN came under Kannda speaking Hoshalyas, Tamil lit suffered for want of great books and great authors as there wa no encouragement. A few were however left their books for us. Their no is small. Arunagirinaathar, Villpuththooraazhwaar and others.

    Similarly, lets hope Tamil lit will rise like Phoneix from the present morass and immorality.

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      புன்னகையோட படிச்சிட்டே வந்து “பரந்து கெடுக உலகற்றியான் என்றெழுதியவர் மஹா கவியா? வள்ளுவரா?” என்ற வரில கைகொட்டி வாய்விட்டு சிரிச்சுட்டேன்.

      அடுத்த சிக்ஸர் “சராசரியென்றால் உயர்ந்த குணங்களைக்குறிப்பதாக எடுத்துக்கொண்டு இறுமாப்படையாதீர்கள்” என்ற வரில.

      யப்பா யப்பா நெஜம்மாவே தாங்க முடியல. :))

      “கவிஞர்களுக் கெந்நாளும் பண்டிட்ஜீக்கள்” என்ற ஞானகூத்னோட வரிகள்-தான் நினைவுக்கு வருது.

  13. Avatar
    Kavya says:

    சிரிச்சுக்கிட்டேயிருந்தா பைத்தியமென்பார்கள். அவ்வரியை எழுதியவர் ஆர்? மஹாகவியா வள்ளுவரா? சொன்னா தேங்க்ஸ்.

    1.சராசரி மனிதருக்கு, 2.சராசரிக்கு மேலான மனிதருக்கு, 3.குழந்தைகளுக்கு என்று மூவகைகளாகக் இல‌க்கியம் பிரிக்கப்படும். மேலும் பிரிவுக‌ள் உள‌.

    நீங்கள் சராசரியில் இருந்து படிக்க நேர்கவிதையே பொருந்தும். அதாவது வாழைப்பழத்தை உரித்து அதை உங்கள் வாயில் திணிப்பது போன்ற கவிதை. Passive receptivity, like watching TV serials.

    சங்கப்பாடல்களை நீங்கள் படித்துச்சுவைத்தால், நீங்கள் சராசரிக்கு மேலானவர் என்றுதான் வரும். உங்களால் படிக்க முடியுமென்றால் சொல்லுங்கள். உங்களைத் தரப்படுத்தலாம்.

    கால்டுவெல், திராவிட மொழிகளில் ஒப்பிலக்கணம் என்ற தம் நூலின் முகவுரையில் சொல்கிறார்: தமிழர்கள் என்றுமே பேச்சுமொழியையும் இலக்கிய மொழியையும் பிரித்தே பார்த்து வந்திருக்கின்றனர் என்று. (I write from memory). இதன் பொருள் என்னவென்றால், சங்கப்பாடல்களைப் பாமரத் தமிழர்கள் படிக்கவில்லை. ஒரு உழைப்பாளியாலோ, ஒரு மசாலாக்கடைக்காரனோ படிக்கமுடியாது. பள்ளி ஆசிரியை கூட படிக்கமுடியாது. தமிழ் தெரிந்தால் மட்டும் போதாது. இலக்கிய ஈடுபாடும் சிந்தனையை பயன்படுத்தியும் படிக்கவேண்டும். இலக்கியத்தமிழில் எழுதப்பட்டவைமட்டுமல்ல அவை; நேராக‌ எதையும் சொல்வதில்லை. சொல்லாமல் விட்டது சொன்னதை விட அதிகம். அதுவே உயரிய கவைதை.கல்வியும் கற்பனைத் திறமும், இலக்கிய நாட்டமும் இருந்தாலே படிக்கமுடியும். அப்படிப்பட்டோருக்குத்தா அப்புலவர்கள் க்குத்தான் எழுதினார்கள். எனவே அப்படிப்பட்ட கற்றறிந்தோர் சபையில்தான் அவர்கள் நூல்கள் அரங்கேற்றப்பட்டன. பாமரர்கள் இருக்கும் பஞ்சாயத்துக்களில்ல‌.

    இதைப்புரிந்து கொள்ளுங்கள். இலக்கியம் என்பது பாமரல்லாதாருக்கொன்று; பாமரருக்கொன்று. இருவருக்கும் படிக்கும்படி இருக்கவேண்டுமென எழுதப்பட்டவை நீங்காப்புகழ் பெற்று உயர்நிலையை அடையும். எ.கா பாரதியாரின் கவிதைகள். பேச்சுமொழியே அவரெழுதியது. பெரும் இலக்கிய மொழியன்று. அதற்கொரு காரணம் அவர் தமிழ் இலக்கணத்தை முறையாகக்கற்றவரன்று. ம‌ணிப்பிர‌வாள‌த்தில் நான் எழுதினால் நீங்க‌ள் முடியைப் பிய்த்துக்கொள்வீர்க‌ள். ஆனால் அஃது எவ‌ருக்கென்று எழுத‌ப்ப‌ட்ட‌தோ அவ‌ர் ப‌டித்தால் இர‌சிப்பார். உண்மையில் இல‌க்கிய‌ம் இருவ‌ரும் ப‌டிக்கும்ப‌டி அமைந்தால் நன்று. நிற்கும். ப‌ண்டித‌ருக்கும‌ட்டுமென்றால் அது நீர்த்துவிடும். ம‌ணிப்பிர‌வாளம், ச‌ம‌சுகிருத‌ம் ம‌க்க‌ளால் புற‌ந்தள்ள‌ப்ப‌ட்ட‌து சில‌ உதார‌ண‌ங்க‌ள்.

    திரைப்ப‌ட‌ப்பாட‌ல்க‌ள்: பாம‌ர‌ருக்கு. பாம‌ரால்லாதார் ப‌டிப்ப‌து என்ப‌து கார்ட்டூன்க‌ளை பெரியவ‌ர்க‌ளும் இர‌சிப்ப‌து போன்று. அவ‌ற்றில் சில‌ ந‌ல்ல‌ இல‌க்கியமுமாகும். ஆயினும் அப்ப‌டி அவ‌ற்றை வ‌குப்ப‌டுத்துவோர் ப‌ண்டித‌ரே. நீங்க‌ள‌ல்ல‌.

    இங்கு எழுத‌ப்ப‌ட்ட‌ க‌விதை எனக்கு எப்ப‌டி பொருளைத்த‌ருகிற‌து என்று சொன்ன‌தைப்ப‌டிக்க‌வே உங்க‌ளுக்கு வெறுப்பாக‌ இருக்கின்ற‌தால், எப்ப‌டி சராச‌ரிக்குமேலுள்ளோருக்காக‌ எழுத‌ப்ப‌டும் இல‌க்கிய‌த்தில் நீங்க‌ள் நுழைய‌முடியும்? But you can try to come up to the world of above average. be assured that the intellectual pleasure awiting you there will be a great reward for your efforts.

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      ஐயன்மீர் பண்டிட்-ஜி-யாக இருந்தவரா அல்லது இருப்பவரா ? இந்த “வெளு” வெளுக்கிறீரே அதான் கேட்கிறேன். :))

      நான் மகாகவி என்று சொன்னது பெரும் கவி என்ற பொருளில். நீவிர் மகா கவி என்றாலே பாரதி என்று பொருள் கொண்டு ‘பாரதியா வள்ளுவரா’ என்று கேட்கிறீர்.

      இந்த லட்சணத்தில் ‘எப்ப‌டி சராச‌ரிக்குமேலுள்ளோருக்காக‌ எழுத‌ப்ப‌டும் இல‌க்கிய‌த்தில் நீங்க‌ள் நுழைய‌முடியும்’ என்று வேறு அலட்டுகிறீர். ஐயா நாங்கள் நுழைந்துவிட்டோமா இல்லையா என்று தெரியாமலே எம்மை பற்றி கவலைப்படுவதை விடுத்து முதலில் ‘வானம்பாடி’ கவிதை-யை விட்டு மேலே வர நீவிர் முயற்சி செய்யும்.

  14. Avatar
    Kavya says:

    ஞானக்கூத்தன் சொன்னார்; கண்ணதாசன் சொன்னார்; வாலி சொன்னார் என்றெல்லாம் எழுதாதீர்கள். ஆண்டவன் நமக்கும் சிந்திக்கும் திறனைக்கொடுத்திருக்கிறார். அதை வைத்து கருத்துக்களை இடுவோம். அப்படியோ பிறரின் கருத்தை இங்கு எடுத்துக்காட்டவேண்டும்ன்றால், இவர்களைக்காட்டாதீர்கள். இவர்கள் ஒன்றும் மேதைகளல்ல

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      “இவர்களைக்காட்டாதீர்கள். இவர்கள் ஒன்றும் மேதைகளல்ல”

      அதுக்கென்னங்க செய்வது, வைரத்தின் மதிப்பு வைர வியாபாரிக்குத்தான் தெரியும். கத்திரிக்கா வியாபாரி ‘இந்த கண்ணாடி கல்லுக்கு கால் கிலோ கத்திரிக்கா தரேன், அதுவே அதிகம்-னுதான் சொல்வான்.

      1. Avatar
        Kavya says:

        தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் வைரங்கள் என்றும் அவர்கள் வாசகர் வட்டம் அவ்வைரங்களை அடையாளங்கண்டு அனுபவிப்பர்கள் என்றும் சொன்னால் அதை நான் வரவேற்கிறேன். அப்படியானால் அதே உரிமை அஜித், விஜய், போன்ற நடிகர்களுக்கும் அவர்கள் விடலை இரசிகர் வட்டத்துக்கும் கொடுக்கப்பட வேண்டும்.

        எல்லாருமே மேதைகள்தான். தமிழ்நாட்டில் ரொம்ப சீப்பா மேதைகள் கிடைப்பார்கள் போலிருக்கிறதே! கத்தரிக்காய் வியாபாரத்தை விட மேதை வியாபாரம் ரொம்ப சுலபம்கிறீங்க சரிதான்!!

        உண்மையில் அப்படித்தான் போகிறது வாழ்க்கை. சமீபத்தில் ஒரு ‘மாபெரும்’ எழுத்தாளர் ஒருவர் தில்லித் தமிழ்ச்சங்கத்து வந்தார். இவர் நீயா நானா புரோகிராமில் நடுவராக வந்து தமிழ்மக்களுக்கு நல்வழி காட்டுவார்.

        இவருக்கு விமானச்செலவு, தங்கும் ஓட்டல் செலவென்று அழைத்தவர்கள் செலவழித்திருப்பார்கள். 2500 மைலகள் தாண்டி வந்த இவரைப்பார்க்க ஒரே வாசகர் கூட்டம் மேதையின் திருவாயிலிருந்து மேதாவித்தனாம சொற்கள் கீழே விழும் பொறுக்கலாமென்று காத்திருந்தார்கள்.

        அவர் சொன்னார் ஒரு சின்ன விடயத்தை. எனக்கு மறந்துவிட்டது சரியாக. அடுப்புல பால் பொங்கினால் உடனே காஸ் ஸ்டவ்வை அணைச்சுருங்கோ என்பது போல. உடனே ஒரு பதிவர் அதை எடுத்துப்போட்டு ஆஹா ஓஹோ என்றெழுத, நான் போட்ட கமென்ட அவர் எடுத்துக்கொள்ளவில்லை.

        இதிலிருந்து என்ன தெரிகிறதென்னவென்றால் இரசிகர்களிடன் அல்லது வாசகர்களிடம் எது மேதாவித்தனம், அல்லது எது சிறந்த நடிப்பு என்று கேட்டால், விஜய்யின் குத்துப்பாட்டு என்பார்கள். அஜித்தின் முனகல் சப்தமென்பார்கள்; வாசகர் வட்டம், ஒரு எழுத்தாளன் வீட்டுச்சலவைக்குறிப்பேன்பார்கள்.

        எவர் எதைச்செய்ய வேண்டுமென்ற ஒரு விவஸ்தை இருக்கிறதுங்கோ.

    2. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      “ஞானக்கூத்தன் சொன்னார்; கண்ணதாசன் சொன்னார்; வாலி சொன்னார் என்றெல்லாம் எழுதாதீர்கள். ஆண்டவன் நமக்கும் சிந்திக்கும் திறனைக்கொடுத்திருக்கிறார். அதை வைத்து கருத்துக்களை இடுவோம்.”

      சபாஷ் ! பலே பலே !! நீங்க அடிச்சி ஆடுங்க !!!!

  15. Avatar
    லெட்சுமணன் says:

    ///எனவே கவிதைக்கு இலக்கணம் உண்டு. கவிஞர்களுக்கும் வரையறை உண்டு. அதில் ஒன்றை நான் இங்கு சுட்டிக்காட்டினேன்.///
    கவிதை என்பதற்கு பல பார்வைகளில் வெவ்வேறு வரையறைகள் உண்டு. கவிதை சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்திலக்கியக் கலை வடிவம் ஆகும். உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது. கவிதை என்பதை ஒரு சட்டத்துக்குள் எல்லாம் அடைக்க முடியாது. அது ஒரு உணர்வின் வெளிப்பாடு. 4X4 சட்டத்துக்குள் அதை அடைக்க முயல்வது கடினம்.

    *// பிறகவிஞரகளின் வரியை அப்படியே எடுத்தாள்வது தவறு.//*

    யாயும் ஞாயும் யார் ஆகியரோ
    எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
    யானும் நீயும் எவ் வழி அறிதும்
    செம் புலப் பெயல் நீர் போல‌
    அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
    —–செம்புலப்பெயனீரர்

    உனக்கும் எனக்கும்
    ஒரே ஊர் –
    வாசுதேவ நல்லூர் …
    நீயும் நானும்
    ஒரே மதம்…
    திருநெல்வேலிச்
    சைவப் பிள்ளைமார்
    வகுப்பும் கூட,..
    உன்றன் தந்தையும்
    என்றன் தந்தையும்
    சொந்தக் காரர்கள்…
    மைத்துனன் மார்கள்.
    எனவே
    செம்புலப் பெயல்நீர் போல
    அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.
    (ஊசிகள், பக். 48) (வகுப்பு = சாதி)
    —-மீரா

  16. Avatar
    Kavya says:

    //கவிதை என்பதற்கு பல பார்வைகளில் வெவ்வேறு வரையறைகள் உண்டு. கவிதை சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்திலக்கியக் கலை வடிவம் ஆகும். உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது. கவிதை என்பதை ஒரு சட்டத்துக்குள் எல்லாம் அடைக்க முடியாது. அது ஒரு உணர்வின் வெளிப்பாடு. 4X4 சட்டத்துக்குள் அதை அடைக்க முயல்வது கடினம்.//

    அரை உண்மை. அரை உண்மை பொய்யாகும் என்பது ஆங்கிலப்பழமொழி.

    கவிதையில் இருவகை. மரபுக்கவிதை. மரபை மீறிய கவிதை (புதுக்கவிதை). மரபுக்கவிதைதான் பன்னெடுங்காலமாக எழுதப்பட்டது அதற்குத்தான் தமிழர்கள் இரண்டாயிரமாண்டுகளுக்கு முன் யாப்பிலக்கணம் எழுதினார்கள். அதன்படிதான் எழுத வேண்டும்.

    மரபை மீறிய கவிதை நவீன காலத்தில் தொடங்கியது. ஆங்கிலத்திலும்தான். அதற்கு இலக்கணமில்லை. இருப்பினும் அதில் அண்டப்புழுகையெல்லாம் வைக்கக்கூடாது. சொல்லக்கூடாத அசிங்கங்களையெல்லாம் எழுதக்கூடாது. இப்படி நாம் சொல்லும்போது, வரையறை அதற்கும் வருகிறதல்லவா?

    இலக்கணமும் மீறப்படும்போது அதை ‘இலக்கணப்போலிகள்’ என்பார்.

    யாப்பிலக்கணத்தில் வடிவமைக்கப்படும் மரபுக்கவிதையிலும் இலக்கணம் மீறப்படும் இலக்கியச்சுவை வருமெனில். ஆழ்வார்கள் மீறியிருக்கிறார்கள். ஆண் பெண்ணுக்கு வரைவதுதான் மடல். உலகமரபும் கூட. ஆண்தான் தன்காதலை வெளிப்படுத்த வேண்டுமென்பது உலகமரபு. இவ்வாறு ஆணெழுதும் கவிதைவடிவ மடலைத் தமிழலக்கணம், மடலூறுதல் என்று பேசும். பெண் ஆணுக்கு மடலூறுதல் தமிழ்யாப்பிலக்கணத்தில் கிடையாது.

    ஆனால் இவ்விலக்கிய மரபை மீறினார் திருமங்கையாழ்வார். எங்கே? எப்போது? என்று யான் சொல்லப்புகின் நீங்கள் கதைகேட்க உட்கார்ந்த சோம்பேறியாவீர்கள். ஒன்றையுமே படிக்காமல் திண்ணையில் உட்கார்ந்து எனக்கு அதைச்சொல்; இதைச்சொல் என்று கேட்கிறார்கள்.

    இலக்கிய மரபுகள்; மீறுதல்கள் என்பன எல்லாருக்கும் கொடுக்கப்பட்டவையல்ல‌. அதற்கும் ஒரு தகுதிவேண்டும்.

    No meera (who’s that person? Man or woman? ) poem here. Write your own and post in thinnai in poetry page.

  17. Avatar
    லெட்சுமணன் says:

    ///No meera (who’s that person? Man or woman? ) poem here. Write your own and post in thinnai in poetry page.//

    http://www.tamilvu.org/courses/degree/p103/p1032/html/p1032613.htm

    உங்களுக்கு கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் எழுதிய மீராவை தெரியவில்லை. ஆனால் கடுமையான விமர்சனங்களை அடுத்தவர் மீது வைத்து விடுகிறீர்கள்.

    *// பிறகவிஞரகளின் வரியை அப்படியே எடுத்தாள்வது தவறு.//*

    செம்புலப்பெயனீரர் வரிகளை மீரா அப்படியே எடுதாண்டிருக்கிறார் என்பது தான் நான் சொல்ல வந்தது.

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      “உங்களுக்கு கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் எழுதிய மீராவை தெரியவில்லை. ஆனால் கடுமையான விமர்சனங்களை அடுத்தவர் மீது வைத்து விடுகிறீர்கள்.

      செம்புலப்பெயனீரர் வரிகளை மீரா அப்படியே எடுதாண்டிருக்கிறார் என்பது தான் நான் சொல்ல வந்தது”

      என்னங்க செய்ய முடியும் லெட்சுமணன் ? அவரு அடிச்சி ஆட ஆசைப்படுறாரு, விடுங்க பாவம் ஆடிட்டுப்போகட்டும்.

    2. Avatar
      Kavya says:

      “செம்புலப்பெயனீரர் ” என்றால் என்ன பொருள்? எப்புலவரிடமிருந்து திருடினார் மீரா என்ற கவிஞர்? அக்கவிதை முழுவதையும் தெரிந்தால்தானே திருட்டின் அளவு என்ன என்று தெரிந்து தண்டனை வழங்கலாம்?

  18. Avatar
    Shankar says:

    திரு காவ்யா அவர்களே,
    “விசுவநாதன் ‘கடவுளுக்குச் சாவு உண்டா கவிஞரே?” என்றவுடன் மாற்றிக்கொண்டார்.” என்று எழுதியுள்ளீர்கள்.

    இது நிஜமாக நடந்ததா? உங்கள் கற்பனையா?
    ஏன் என்றால், “கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்” பாடலின் இசை அமைப்பாளர் திரு விஸ்வனாதன் அல்லர். அதற்கு இசை அமைத்தவர் திரு கே வி மஹாதேவன் அவர்கள்.

  19. Avatar
    Kavya says:

    இருக்கலாம். இல்லாமலிருக்கலாம் எவர் இசையமைப்பாளரென்று தேடும்போது. நான் ஓராண்டுக்கு முன் தினமணிக்கதிரில் படித்தது அது. ஒருவேளை இன்னொரு படத்துக்கு இசையமைக்கும்போது விசுவநாதனிடம் காட்டியிருக்கலாம். அல்லது மஹாதேவனாகக்கூட இருக்கலாம். இதை அப்பத்திரிக்கையில் அந்த இசையமைப்பாளர் தம்மிடம் சொன்னதாக வேறொருவர் எழுதினார்.

    கவிஞர்கள் கருத்துப்பிழை போடுவது சஹஜம். அவர்கள் ஒன்றும் தெய்வப்பிறவிகள் அல்ல.

    செந்தமிழ் நாடெனும் போதினிலே
    இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே

    என்றார் ஒரு கவிஞர்.

    காதில் தேன் பாய்ந்தால் என்னவாகும்?

    எனினும் பாடுகிறோம். ஏனெனில் கவிஞனின் உணர்ச்சிப்பெருக்கில் எல்லாமே பிரவாஹம்தான்.

    ஆனால் திரைப்படக்கவிஞர் பாட்டெழுத பம்பாய் 5 ஸ்டார் ஓட்டலலில் அல்லவா ரூம் போட்டுக்கொடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்?

  20. Avatar
    மலர்மன்னன் says:

    ஆங்கில இலக்கணத்தைச் சரியாக அறிந்தவர்கள் மேல் ஆர் ஃபீமேல் என்றுதான் கேட்பார்கள். ஆக இதிலும் தனது அரை குறையை ஆர்ப்பாட்டமாக வெளிச்சம்போட்டுக் காட்டியாகிவிட்டது. எல்லாம் நமது போதாத காலம்தான்! யாரையும் சொல்லிக் குற்றமில்லை!
    -மலர்மன்னன்

  21. Avatar
    மலர்மன்னன் says:

    கவிதையைப் பற்றிய எவ்விதப் புரிதலும் இன்றிக் கவிதைக்கு இலக்கனம் சொல்லும் வேடிக்கையை இங்குதான் பார்க்கிறேன். நம் கோபால் ராஜாராமே கவிதை என்றால் இன்னதென்கிற பிரக்ஞை உள்ள ஒரு நல்ல கவ் கவிஞர்தான். சபை நடுவே ஒரு விதூஷகனும் அவசியந்தான் என்று அவர் கருதுகிறார் போலிருக்கிறது. நடக்கட்டும். எஞ்ஜாய்!
    -மலர்மன்னன்

  22. Avatar
    Kavya says:

    கோபால் ராஜாராமென்பவர் ஆர்? கேள்விப்பட்டதேயில்லேயே !

  23. Avatar
    மலர்மன்னன் says:

    செம்புல… இந்தச் சங்க காலக் கவிதை மிகவும் பிரசித்தி யானது. எங்கேயோ பெய்த மழையின் நீர் அருவியாய் ஓடி வந்து செம்மண்ணில் கலந்து இரண்டும் செந்நிறமாய் இரண்டறக் கலத்தல்போல நாம் இணைந்துவிட்டோம் எனத் தலைவன் தலைவியிடம் சொல்வதாகப் பொருள். இதேபோல் பொருள் வயின் பிரிதல் என்கிற ஓர் அருமையான சமாசாரமும் சங்கக் கவிதைகளில் மிகவும் பிரபலமான அம்சம். இவையெல்லாம் கொஞ்சமாவது தெரிந்திருப்பவர்கள் கவிதை விமர்சனம் செய்தால் அதற்கு மரியாதை இருக்கும். இம்மாதிரி பிரசித்தி பெற்ற வரிகளை எடுத்தாண்டு சுருக்கமாக நிலைமையைப் புலப்படுத்துவது பாராட்டுக்குரிய விஷயமே.
    சபைக்கொரு விதூஷகனைத் தரும் திண்ணைக்குப் பாராட்டு!
    -மலர்மன்னன்
    -மஃலர்மன்னன்

  24. Avatar
    மலர்மன்னன் says:

    என்னே ஒரு அறியாமை! சங்க காலக் கவிதைகளுக்கும் இக்கால ’புதுக்” கவிதைக்கும் பாட்டன்,பாட்டி–பேரன் பேத்தி உறவு உண்டு. மரபுக் கவிதை புதுக் கவிதை என்றெல்லாம் கிடையாது. கவிதை மட்டுந்தான் உண்டு. புதுக் கவிதை என்று சொல்லப்படும் எதையும் யாப்பிலக்கணக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். கவிதை என்பது கவிதை. யாப்பிலக்கணம் என்கிற தளையில் உழன்று அதற்கு ஏற்ப எழுத வேண்டுமே என்கிற பிரக்ஞையுடன் எழுதுவது சில சமயங்களில் கவிதையாகவும் பல சமயங்களில் வெறும் செய்யுளாகவும் அமைந்துவிடுவது உண்டு.
    -மலர்மன்னன்

  25. Avatar
    மலர்மன்னன் says:

    கவிஞன் கவிதையை எழுதிவிட்டு அதற்குக் கீழே பொழிப்புரையும் எழுதிவிட வேண்டும் என்கிற பாமரத்தனத்தைப் பார்க்கையில் விசித்திரமாக இருக்கிறது!
    இளங்கோ, உங்கள் கவிதையைப் படித்தேன். உங்களுக்குக் கவிதை எழுத வருகிறது. எழுதுங்கள். விளக்கம் அளிக்க வேண்டுமென்கிற கவலை எல்லாம் உங்களுக்கு எதற்கு? நீங்கள் பாட்டுக்கு எழுதிக்கொண்டு போங்கள். நிற்பது நிற்கும்.
    சுய நலம் போலத் தோன்றும் பல விஷயங்கள் பொது நலனையூம் உள்ளடக்கியிருக்கும். என் வீட்டில் பற்றிய தீயை நான் அணைக்க முற்படுவது என் வீட்டுத் தீயைத்தான் என்றாலும். அடுத்த வீட்டுக்கும் அது பரவுவதைத் தடுப்பதுதான். அதனால்தான் ஊரே கூடி ஒரு வீட்டுத் தீயை அணைக்க முனைகிறது.
    -மலர்மன்னன்

  26. Avatar
    லெட்சுமணன் says:

    காவ்யா என்பவரின் தமிழ் இலக்கண, இலக்கிய புரிதல் (அறிவு,ஆளுமை) பள்ளிச் சிறுவர்களுக்கு வகுப்பு எடுக்கும் அளவிற்கு மட்டுமே இருக்கும் என்பது நான் எதிர்பார்க்காதது. சாரி காவ்யா சார். ஏமாத்தீட்டீங்க.

    மலர்மன்னன் அவர்கள் ”யாயும் யாயும்” என்ற குறுந்தொகை பாடல் குறித்து தெளிவாக விளக்கிவிட்டார்கள். நன்றி.

  27. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    அதுக்குத்தான் அப்போவே சொன்னேன், அவரு அடிச்சி ஆட ஆசைப்படுறாரு, ஆடிட்டுப்போகட்டும் விடுங்க-ன்னு. நீங்க ரெண்டு பெரும் எதுக்கு இவ்ளோ கீழ எறங்கி விளக்கம் கொடுத்துட்டு இருக்கீங்க-ன்னு எனக்கு புரியல. :)

    சரி போனது போட்டும், இனியாவது பாத்து சூதானமா நடந்துக்குங்க. :))

    1. Avatar
      Kavya says:

      நான் இங்கு வைக்கும் கருத்துக்களுக்குப் பதில் சொல்லுங்கள் சார். சும்மா சும்மா ஆடுறான் பாடுறான்னு எழுதினால் எப்படி? பதில் சொல்லுங்கள். இப்போது மலர்மன்னனுக்குப் பதில் போடுகிறேன். அதைப் படித்துவிட்டு நுங்கள் கருத்தை வைக்கவும். ஆடுறதை விட்டுவிட்டு கருத்தப்பாருங்க. ஒரு கவிதை விமர்சனத்தில் கூட இவ்வளவு காழ்ப்புணர்ச்சியென்றால், மதம், சாதி, சமூகமென்றால் உங்கள் காழ்ப்புணர்ச்சி எல்லையில்லாமல் கரைபுரண்டோடுமே இல்லையா பொ.மு?

  28. Avatar
    Kavya says:

    மலர்மன்னன் சொல்கிறார்:

    கவிஞன் கவிதைக்குப் பொழிப்புரை எழுதவேண்டுமென்பது பாமரத்தனம்.

    என் பதில். பொ.முத்துக்குமாரும் படிக்கலாம். இலக்குமணனும் படிக்கலாம்.

    கவிஞன் கவிதைகளுக்குப்பொழிப்புரை எழுதுவது கிடையாது. எழதவேண்டுமென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. எனவேதான் இளங்கோவிடம், விமர்சகர்களுக்கிடையே நீங்கள் நுழையாதீர்கள் என்றேன். கவிதைகளுக்கு பொழிப்புரைகள் அவசியம். அவ்வுரைகளைத் தமிழறிஞர்கள்; அல்லது ஆசிரியர்கள் வரைவார்கள். பள்ளிகளிலும் கல்லூரிகளும் சொல்லித்தரப்படும். பொழிப்புரை இல்லாமல் சங்கப்பாடல்களைப்படிக்கவியலாது. பெரும் தமிழறிஞரக்ளால் மட்டுமே முடியும். எனவே கவிதைகளுக்குப் பொழிப்புரை தேவையில்லை என்பது அறியாமை. கவிஞர் சிலவேளைகளில் தன் கருத்துப் பரவலாகச் சரியாகப்புரிந்துகொள்ளப்படவில்லை என்ற ஆதங்கத்தினால் விளக்கம் கொடுப்பதுண்டு. ஆனால் அது பொழிப்புரையாகாது.

  29. Avatar
    Kavya says:

    மலர்மன்னன் சொல்கிறார்:

    புதுக்கவிதை, மரபுக்கவிதையென்றெல்லாம் கிடையா. ,
    “புதுக் கவிதை என்று சொல்லப்படும் எதையும் யாப்பிலக்கணக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். கவிதை என்பது கவிதை. யாப்பிலக்கணம் என்கிற தளையில் உழன்று அதற்கு ஏற்ப எழுத வேண்டுமே என்கிற பிரக்ஞையுடன் எழுதுவது சில சமயங்களில் கவிதையாகவும் பல சமயங்களில் வெறும் செய்யுளாகவும் அமைந்துவிடுவது உண்டு”

    என் பதில்.

    மரபுக்கவிதையே நமக்குக்கிடைத்தவை சங்ககாலமுதற்கொண்டு. மரபுக்கவிதை யாப்பிலக்கணத்தின் வரையறைப்படி எழதப்படுவது. ப்ரக்ஞையுடன் எழ்தப்படுவதோ இல்லையோ ஒரு வரையறைக்குப்பட்டது. வெண்பா என்றால் நான்கடிகள்தான். நான்கடிக்குள்தான் எழதவேண்டுமென்ற பிரக்ஞையில்லாமல் எழுதுவார்களா? குறள் என்றால் ஈரடிதான். மூன்றடிகளில் எழதி நான் குறள் எழுதிவிட்டேனென்றும், ஐந்தடிகளில் நான் ஒரு வெண்பாவைப் படைத்துவிட்டேன் என்றும் சொன்னால் ஏற்பரோ? சிரிப்பர்.

    அக்காலத்தில் கவிதைகள் சங்கத்தில் அரங்கேற்றப்படும். இலக்கண மீறல்கள்; பொருட்பிழைகள் சுட்டிக்காட்டப்படும். புலவர் விளக்கங்கள் அளித்தாக வேண்டுமென்பதை பாண்டியன் முன் நக்கீரர் இறையனார் மோதல் நமக்குக்காட்டுகிறது. இறையனார் வெண்பாவில் பொருட்பிழை காண்கிறார் சங்கத்தின் தலைமைப்புலவரான நக்கீரர். மோதலில் இறுதியில், ’நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்ற பொது நீதி நிலைபெறுகிறது. தமிழர்தம் பணப்பாட்டு நீதியாக இன்றும் பெருமையுடன் காட்டப்படுகிறது.

    முதற்சங்கத்தில் நிலந்தருவிற்பாண்டியனவையில் அரங்கேற்றப்பட்ட தொல்காப்பியமே இன்று நாம் காணும் யாப்பிலக்கண்த்தை முதலில் தந்தது. அதற்கு முன்பே சொல்லப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்: ’என்பனார் புலவர்’, ”என்ப:. அவ்விலக்கணத்தின்படியே கவிதைகள் பல்வேறு வடிவங்களில் எழுதப்பட்டன. அவை இன்றும் கிடைக்கின்றன. நாம் படிக்கிறோம். பள்ளிகளில் அசை, சீர், தேமா, புளிமா, ஆசிரியப்பா என்றால் என்ன? விருத்தப்பா என்றால் என்ன? கொச்சு களியப்பா என்றெல்லாம் என்ன? என்றெல்லாம் யாப்பிலக்கணம் கற்றுத்தரப்படுகிறதல்லவா?

    மரபை மீறிய கவிதைகளும் அன்றும் எழுதப்பட்டிருக்கும். ஆனால் நமக்குக் கிடைத்தில. இன்று நம் காலம் ஒழுங்கைப்பேணா காலம் எனவே இலக்கணமில்லாக்கவிதைகள் எழுதுவது இலகுவென்று எழுதித்தள்ளப்படுகிறது. அப்படிப்பட்டவையே புதுக்கவிதைகள்.

    எககவிதையாயினும் அதன் முடிவு: இலக்கிய இன்பம். பொருட்சுவை, சொற்சுவை இவற்றினாலே அவ்வின்பம் பெறப்படும்.

    ஒரு மரபுக்கவிதை எழுத எவராலும் இயலும் யாப்பிலக்கணத்தைக்கற்றால். கொஞ்சம் தமிழறிவு இருந்தால். எப்படி ஆங்கில இலக்கணத்தைக்கற்றவர் ஆங்கிலம் எழுதுவதைப்போல. அதே சமயம். அவையெல்லாம் மாபெரும் கவிதைகளாவது எழுதுவோர் உண்மையிலேயே வரகவிகளாக இருந்தால் மட்டுமே. அல்லது கவிதையுணர்வு அவருக்கு இயற்கையிலேயே அமைந்திருந்தால்.

    அழகுயுணர்ச்சியும் அதைத் திறமையாக இரசிக்கும் இயல்பும், அவ்வழகுணர்ச்சியை தன் எழுத்துக்களில் வெளிக்கொணரும் தன்மையுமே கவிதையுணர்வு என்றழைக்கப்படுகிறது., எல்லாரும் ஆங்கிலம் எழுதுவார்கள். எல்லா ஆங்கிலமும் படிப்போருக்கு சுவை தாரா. ஓவியம், சிற்பக்கலை, ஆடல், பாடல் – இவையும் அவ்வாறே. எல்லாரும் செய்யலாம். ஆனால் சிலரையே நம்மால் இரசித்துப்பாராட்ட முடியும்.,

    யாப்பிலக்கணமே ஒரு வேஸ்ட் என்பார் தமிழின் சிறப்பையும் தொன்மையையும் இகழ்வோர்.

Leave a Reply to Kavya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *