ஆத்ம கீதங்கள் –13 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. !

This entry is part 9 of 19 in the series 25 ஜனவரி 2015

 

(அவனில்லாத் தருணம் வெளிநாட்டில் மரணம்)

 

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

வாசல் வழியே நீ நுழைய வில்லை;

வழிமேல் விழி வைத்தேன்

நெடு நேரம் !

வந்தனம் போய் வா !

ஒரு வேளை அவள் இழக்கலாம்

நம்பிக்கை;

அருகில் இருப்பது மரணம்

நீயல்ல !

வருவாய் இனிய நேசனே !

அருகிலே இறுகி

அணைத்துக் கொள் !

நீ தேடி அழைத்த

இந்த எளிய கண்கள் இரண்டும்

கனிவு கொண்டவை

இதுவரைக் கண்ட வற்றில் !

 

உனது கானத்தைக் கேட்டதும்

எனது வசந்த காலப் பூக்கள்

கனம் மிகுந்திடும்

நானோ அடுத்தவர் புகழுரை மதியேன் !

ஆனால் கேட்பது உன் புகழுரை

என் இதயத்தில்

இசை பாடிய வண்ணம் !

ஆசிகள் பெற்ற என் விழிகளும்

காணும் கனிவு அவனது

கண்களில் !

 

எல்லாம் மாறி விடுபவை

இந்த மாலைப் பொழுதில்

மங்கிய ஒளிதனைப் பரிதி வீசிடும்

வாசற் பாதையில் !

அங்கு நின்று கொண்டு நீ

முணு முணுப்பாயா

“காதலி ! நான்

காதலிப்ப துன்னை” என்று ?

முன் போல்

மரணம் தழுவிய கருமையில்

என் கண்களைப் பற்றிய

உன் கானம்

இனிமை அளிக்குமா என்றும் ?

 

மற்றவர் அருகில் நீ !

மரணப் படுக்கையில் நான் !

அவரது வனப்பை நீ மறுப்பினும்

சிரம் தாழ்த்தி நின்றாய் !

உறுதியாக நீ அவரை அழைத்து

காதலுடன் கண்ட போது

என் கண்கள் என்றும்

இனிமை தரும் உனக்கு !

 

[தொடரும்]

 

++++++++++++++++++++++++++++++++++++

மூல நூல் :

From Poems of 1844

Elizabeth Barrett Browning Selected Poems

Gramercy Books, New York 1995

Series Navigationவிசும்பின் துளிமீகாமனில்லா நாவாய்!
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *