ஆத்ம கீதங்கள் –19 ஒரு மங்கையின் குறைபாடுகள் [A Woman’s Shortcomings]

This entry is part 12 of 22 in the series 8 மார்ச் 2015

 

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

பெரு மூச்சு விட்டவள் மெல்லப்

புன்னகை செய்கிறாள்.

ஆறு வரை எண்ணி மேற்செல்வாள்,

பணப் பையை நிரப்பிக் கொண்டு,

மனப் பயிற்சி செய்கிறாள்;

ஒவ்வொரு வனும் தகுதி யான

ஒரு காதலனே !

கால வரையறை இட்டார் அவர்கள்;

காரணம் : அவளது

ஆத்மா பிடிக்குள் விழ வேண்டும்

உலகு அமைத்த பள்ளத்துள்.

எழிலான செவ்விதழ்கள்

யாரிடமும் பொய் சொல்வ தில்லை

ஆனால் காதலி தேடுவது,

மெய்யான

மேலான நட்பு மட்டுமே !

 

மௌன சுகத்தில் நடுங்கும்,

அவள் கை விசிறி,

மீளாத அவள் சிந்தனையில்,

மேலும் கீழும் இமைகள் இயங்கி,

ஓரக் கண்ணில்

ஒருபுறம்

ஒருவனைப் பார்ப்பாள்,  

மறுபுறம் சிலரைக் கண்ணோக்கி,

ஏதோ சில வார்த்தைகள்

முணுப்பாள்,

நாணிக் கொண்டு !

கடிந்து ரையா சொற்களை

வெடிப்புடன் கேட்பாள்;

சூளுரை யாய் இல்லாது, அவள்

மௌனம் சொல்லும் :

காதல் தேடுவது,

மேலான நட்பு மட்டுமே !

 

போய் யாழிசை கேள் மங்கையே

பொழுது சாய்ந்து பிறகு !

மீட்போனை நோக்கிப் புன்னகை புரி !

ஜோராய்ச் சிரி

அறைக்குள் பாடும் அவன் குரல்

தூரத்தில் கேட்டாலும் !

ஒளித்து வை அவனைப் பரிவாக உன்

நளின விழி களுக்குள் !

ஓரக் கண்ணில் மெல்ல நோக்கு

இமைகள் மூடும் போது;

பழைய சூளுரை களுடன்  

புதிய வாக்குறு திகள் சேர்த்திடு ;

துணிந்து சொல்லாதே ஆனால்

அது காதலிப்ப தென்று !

 

[தொடரும்]

++++++++++++++++++++++++++++++++++++

மூல நூல் :

From Poems of 1844

Elizabeth Barrett Browning Selected Poems

Gramercy Books, New York 1995

  1. http://wednesdaymourning.com/blog/elizabeth-barrett-browning-beyond-victorian-love-poems/
  2. http://en.wikipedia.org/wiki/Elizabeth_Barrett_Browning
  3.  http://www.online-literature.com/elizabeth-browning/
Series Navigationஉயரங்களும் சிகரங்களும்தொடுவானம் 58. பிரியாவிடை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *