ஆத்ம கீதங்கள் – 6 ஓயட்டும் சக்கரங்கள் .. !

This entry is part 10 of 21 in the series 23 நவம்பர் 2014

unnamed

ஆத்ம கீதங்கள் – 6

ஓயட்டும் சக்கரங்கள் .. !


[கவிதை -4]

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

முழு நாளும் சக்கரங்கள் சுற்றி

இரைச்ச லிட்டு

முகத்திலே சுடுங் காற்றை வீசும்

நெஞ்சு துடித்து தலை சுற்றும் வரை,

சுற்றுச் சுவர்கள் இடம் விட்டு

நகரும் வரை !

வானுயர் ஜன்னலும்

வெற்றிட மாய்ச் வற்றும்.

நீள் விளக்கொளி சுவரின் கீழ் நிழலாய்

வீழ்ந்து விடும்.

ஊர்ந்திடும் கரிய ஈக்கள் பறந்திடும்

உள் கூரை விட்டு.

சுற்றித் திரிவோம் இவற்றுடன்,

நாள் முழுதும் !

இரும்புச் சக்கரங்கள்

இரைச்ச லிடும் நாள் பூராவும் !

இடையிலே சில சமயம் தவிப்புடன்

பிரார்த்திப்போம்

சபித்த வண்ணம் பைத்தியமாய் :

“இயந்திர ஆழிகளே !

ஓய்ந்து நிற்பீர் ஊமையாய்,

இன்றாவது !”

 

அமைதியாய் இருப்பீர், கேட்கட்டும்

ஒருகணம் வாய் மூலம்

சிறுவர் மூச்செடுப்பது.

இளம்மைச் சேய் மென்மையில்

ஒருவர் கரத்தை

ஒருவர் பற்றிக் கொள்ளட்டும் !

இந்த உலோ காயுதக்

கோர வேலை மட்டும்

இறைவன் காட்டிய வழியில்லை

என்றவர் அறியட்டும்.

எதிர்க்கட்டும் அவரது ஆத்மா

ஆழியின் மேலும் கீழூம்

அனுதினம்

அவர் உழைத்து வருவதை !

ஓயாமல் இன்னும்

ஓடிக் கொண்டுள்ளன சக்கரங்கள்,

குறிப்பிட்ட சிறுவர் தம்

ஆயுளைக்

குறைத்த வண்ணம் !

இறைவன் கதிரொளி யான

சிறுவரின்

ஆத்மாக்கள் சுற்றி வீழ்ந்திடும்

இருட்டுச் சுரங்கத்தில் !

 

[தொடரும்]

++++++++++++++++

மூல நூல் :

From Poems of 1844

Elizabeth Barrett Browning Selected Poems

Gramercy Books, New York 1995

  1. http://wednesdaymourning.com/blog/elizabeth-barrett-browning-beyond-victorian-love-poems/
  2. http://en.wikipedia.org/wiki/Elizabeth_Barrett_Browning
  3.  http://www.online-literature.com/elizabeth-browning/

 

Series Navigationஉலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு – மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்புஅழிவின் விளிம்பில் மண்பாண்டத்தொழில்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *