இந்தியாவில் படிப்பறிவின்மையின் வேர்கள் -மறு திட்டம்

author
1
0 minutes, 2 seconds Read
This entry is part 8 of 9 in the series 24 பெப்ருவரி 2019

ஒருகாலத்தில், இந்தியாவில் எல்லா இடங்களிலும் கோவில்கள் இருந்தன. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோவில் இருந்தது.

கோவில்கள் வணக்கத்தலங்கள் மட்டுமல்ல. அவை இந்திய கல்வி முறையின் மையங்கள்.

ஒவ்வொரு கோவிலும் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி தரும் நிலையங்களாக இருந்தன. பெரும் கோவில்கள் மேற்படிப்பு கல்வி நிலையங்களாக இருந்தன.

முக்கியமான கோவில்கள் கணிதம், வானவியல் போன்றவற்றை கற்பிக்கும் ஆராயும் இடங்களாக இருந்தன.

கோவில் கல்விநிலையங்கள் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு, தொழில்முறை ஆசிரியர்கள் பேராசிரியர்களை கொண்டவையாக இருந்தன. கல்வி அனைவருக்குமானதாக இருந்தது. இன்று சொல்லப்படுவது போன்று ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தவருக்குமானதாகவோ, குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டுமானதாகவோ இல்லை.

இஸ்லாமிய படையெடுப்புகள் இந்த இந்திய கல்வி முறையை வட இந்தியாவில் முற்றிலுமாக அழித்தன. ஓரளவுக்கு தென்னிந்தியாவிலும் இந்த கல்வி முறை அழிந்தது.

ஆயிரக்கணக்கான கோவில்கள் அழிக்கப்பட்டன. பல கோடி இந்தியர்கள் கொலை செய்யப்பட்டார்கள். பல கோடி இந்தியர்கள் அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.

காட்டுமிராண்டிகள் இந்தியாவின் மாபெரும் பல்கலைக்கழகங்களை, நாலந்தா, விக்ரமசீலா, தட்சசீலம் போன்ற பல்கலைக்கழகங்களை அழித்து கோடிக்கணக்கான நூல்களை எரித்தார்கள்.

இந்தியாவின் சமூக கட்டுமானமே முழுக்க அழிக்கப்பட்டது. இந்திய பெண்கள் தங்கள் முகத்தை மறைத்துகொள்ள ஆரம்பித்தார்கள்.

இஸ்லாமிய அரபு, பெர்ஷிய, துருக்கிய ஆக்கிரமிப்புகளுக்கு முன்னால் இந்திய பெண்களுக்கு முகத்தையோ அல்லது உடலையோ மறைத்துக்கொள்ளும் கட்டாயம் இருந்ததில்லை.

கோவில்களும் பல்கலைக்கழகங்களும் அழிக்கப்பட்டபின்னால், இந்தியாவின் புராதன அறிவு இழக்கப்பட ஆரம்பித்தது.

மராத்தாக்கள் சிவாஜி மஹாராஜாவின் கீழ் தங்களது முன்னேற்றத்தை கையெடுத்தபின்னால் இது மாற ஆரம்பித்தது.

கடந்த 1000 வருடங்களில் சிவாஜியே இந்தியாவின் மாபெரும் சக்ரவர்த்தி. அதன்பின்னாலேயே ரஞ்சித் சிங் வருகிறார்.

18ஆம் நூற்றாண்டின் நடுவே மராத்தாக்கள் முகலாய பேரரசை முற்றிலுமாக அழித்து இந்தியாவை ஏறத்தாழ தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்கள்.

துரதிர்ஷ்டவசமாக, பிரிட்டிஷ்காரர்களால் தூண்டப்பட்ட உள் சண்டையால், மராத்தாக்கள் தங்களது பேரரசை இழந்து குலைந்தார்கள்.

பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு இந்தியாவில் ஆரம்பிக்கும்போது இந்தியாவின் கல்வி அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்துக்கும் மேலேயே இருந்தது.

ஆகவே பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவின் கல்வி நிலையங்களாக இருந்த கோவில்களை அமைப்பு ரீதியாக அழிக்கும் வேலையை ஆரம்பித்தது.

இந்திய பாரம்பரிய தொழில்களை அழித்து, இந்தியர்கள் தொழிற்சாலைகளை துவங்கக்கூடாது என்று சட்டம் போட்டு பல கோடிக்கணக்கான மக்களை ஏழ்மையிலும் பட்டினி பஞ்சத்திலும் தள்ளியது பிரிட்டிஷ் அரசாங்கம்.

ஜமீந்தாரி என்ற முறையை கொண்டுவந்து அதனை ஜாதி அடிப்படையிலும், பிறப்பின் அடிப்படையிலும் உருவாக்கி குறிப்பிட்ட ஜாதிகளை அதில் நியமித்தது.

இதில் “மேல்ஜாதி” மக்களை நியமித்து அவர்களை கொண்டு மற்ற மக்களை சுரண்ட செய்தது.

இந்தியாவின் வறுமையை பிரிட்டிஷ் அரசாங்கம் அதிகரிக்க அதிகரிக்க, வறுமையின் காரணம் என்று சாதி முறையை கை காட்டியது.

வெறும் சில பத்தாண்டுகளிலேயே இந்தியாவின் பொருளாதாரத்தை அழித்து, இந்தியாவை கல்வி அறிவற்ற நிலமாக ஆக்கியது பிரிட்டிஷ் ஆட்சி.

தாமஸ் பாமிங்க்டன் மக்காலே 1834இல் “சுப்ரீம் கவுன்ஸில் ஆப் இந்தியா” என்ற அமைப்புக்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.

மக்காலே இந்தியாவின் கல்வி முறையை “சீர்திருத்த” ஆங்கில கல்வி முறையை புகுத்தினார்.

இந்த மக்காலே வெள்ளையர்களுக்கு உதவும் இந்தியர்களை இந்த கல்வி முறை மூலம் உருவாக்க தங்களுக்கு சேவகம் செய்யும் பிரவுன் சாஹிப்களை உருவாக்கினார்.

மக்காலே கல்வி முறையின் அடிப்படை நோக்கமே பியூன்களை உருவாக்குவதும் குமாஸ்தாக்களை உருவாக்குவதுமே. படிப்பறிவு என்பது இந்த வேலைகளுக்கு மட்டுமே. உண்மையான கல்வி என்பது இதில் வரவில்லை.

மெக்காலே கல்வி முறை மனப்பாடம் செய்வதையும், ஆசிரியருக்கு கீழ்ப்படிவதையுமே அடிப்படையாக கொண்டது. கேள்வி கேட்பது அனுமதிக்கப்படவில்லை.

மக்காலே கல்வி முறை, கற்பனை வளம், சிந்தனை, ஆக்கப்பூர்வமான வளமை, புத்திசாலித்தனம் ஆகியவற்றை நசுக்கி, இயந்திர மனிதர்களையும், அடிமைகளையுமே உருவாக்க திட்டமிடப்பட்ட ஒரு கல்வி முறை.

1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னாலும், காங்கிரஸ் கட்சி, மக்காலே கல்விமுறையையே தொடர்ந்தது.

இன்று இந்தியாவின் ஒவ்வொரு பள்ளிக்கூடமும், கல்லூரியும், பல்கலைக்கழகமும், மக்காலே கல்விமுறையையே பின்பற்றுகின்றன.

இந்த முறையில் மாணவர்கள் மனப்பாடம் செய்வது என்பதே முக்கியம், புரிந்துகொள்வது முக்கியம் அல்ல. ஆசிரியர்களை கேள்வி கேட்க இங்கே மாணவர்களுக்கு அனுமதி இல்லை.

மாணவர்கள் மனப்பாடம் செய்தே பள்ளி தேர்வுகளை பாஸ் செய்கிறார்கள். எல்லா கேள்விகளும், 2 அல்லது 3 வருடங்களுக்கு திரும்ப திரும்ப கொடுக்கப்படுகின்றன.

வரலாறு என்ன பெயரில் மார்க்ஸிய கட்சிக்காரர்கள் எழுதிய வரலாறே பள்ளிக்கூட புத்தகங்களில் சொல்லித்தரப்படுகிறது.

கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் கல்வி நிலையங்களில் ஊடுறுவி பல தலைமுறை மாணவர்களை மூளைச்சலவை செய்திருக்கிறார்கள்.

அசல் ஆராய்ச்சிக்கு இந்த கல்விமுறையில் முக்கியத்துவம் இல்லை. இந்தியாவின் புத்திஜீவிகள் என்று அழைக்கப்படுபவர்களிடமிருந்து எந்த விதமான புதிய சிந்தனைகளும் கருத்தாக்கங்களும் வருவதில்லை.

சமீபத்திய கொடுமையான கவி சட்டங்கள், அவற்றில் முக்கியமான RTE எனப்படும் கல்வி உரிமைச்சட்டம் ஆகியவை மாணவர்களை கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களுக்கு துரத்துகின்றன.

இந்தியாவின் கல்வி முறை ஆழமாக அழுகியிருக்கிறது.

ஆகவே மேல்கல்விக்கு இதோ ஒரு மாற்று.

  1. யுஜிசி எனப்படும் அமைப்பை முழுவதுமாக நீக்க வேண்டும். இது தேவையில்லாத ஒரு அமைப்பு. இது 21ஆம் நூற்றாண்டில் நீராவி ரயில் எஞ்சினுக்கு ஒப்பானது.
  2. யுஜிசிக்கு பதிலாக வெளிப்படையான, நவீன, முழுவதும் பகிரங்கமான அமைப்பை உருவாக்க வேண்டும்.
  3. எல்லா பல்கலைக்கழகங்களிலும் இருக்கும் கலைக்கல்வி (humanities) துறை இடதுசாரி மற்றும் மாவோயிஸ்டுகளால் நிரம்பி வழிகிறது. இவர்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக வேலையிலிருந்து துரத்திவிட்டு புது ரத்தத்தை கொண்டுவரவேண்டும்.
  4. வேலை செய்யாத, உதவாக்கரை, நேர்மையற்ற பேராசிரியர்கள் எல்லாரையும் வேலையை விட்டு தூக்குங்கள். புது ரத்தத்தை கொண்டு வாருங்கள். இந்தியாவில் ஏராளமான பிஹெச்டிக்கள், படித்தவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.
  5. கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு உலகத்தரத்தில் சம்பளம் கொடுங்கள். அரசாங்கத்து வேலையில் கொடுக்கப்படும் சம்பளத்தை தரவேண்டாம். வெளிநாட்டில் கல்வித்துறையில் வேலை செய்யும் இந்தியர்கள் இந்தியாவில் வேலை செய்ய வரும் வாய்ப்புக்களை உருவாக்குங்கள்.
  6. உலகத்தரம் வாய்ந்த , நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் வேலை செய்ய அழைப்புவிடுங்கள்.
  7. அதிகார வர்க்கம், அரசியல்வாதிகள் வர்க்கம் ஆகியோரின் கட்டுப்பாட்டிலிருந்து கல்வி நிலையங்களை விடுவியுங்கள். கல்வித்துறைக்கு சம்பந்தமில்லாத அதிகாரிகள் கல்வித்துறையாளர்களின் ஆணைகளை செயல்படுத்தவேண்டுமே அல்லாமல், அதிகாரிகள், அரசியல்வாதிகள் சொல்லுவதை கல்வித்துறையாளர்கள் செய்யக்கூடாது.
  8. கல்வித்துறையாளர்கள், அதாவது துறை தலைவர்கள், பேராசிரியர்கள் போன்றவர்கள் துறைக்கான பட்ஜட்டை நிர்வகிக்க வேண்டுமே அல்லாமல், அதிகாரிகள் நிர்வகிக்கக்கூடாது என்று கொண்டு வாருங்கள். உடனே கல்வித்துறை ஊழல் நின்றுவிடும்.
  9. பல்கலைக்கழகங்களை ஆராய்ச்சி மையங்களாக ஆக்குங்கள். உலகத்தரமான கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சித்துறையின் திசையை நிர்ணயிக்க அனுமதியுங்கள். ஆராய்ச்சிக்கான பட்ஜட்டை அதிகரியுங்கள்.
  10. போர், பாஸ்டர் சதுரங்களில் இருக்கும் அசல் ஆராய்ச்சிகளை முன்னெடுங்கள். அதுவே எதிர்காலத்தில் பயன்பாடுகளை நிர்ணயிக்கும்.
  11. இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றை அறிவியற்பூர்வமாக ஆராய்ச்சி செய்ய பண ஒதுக்கீடு செய்யுங்கள். தொழில்நுட்பம், மரபணுவியல், துப்பறிவு அகழ்வாராய்ச்சித்துறை ஆகியவற்றின் மூலமாக அறிவியற்பூர்வமான ஆராய்ச்சிக்கு வழிகோலுங்கள்.
  12. இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை இன்றைய வரலாற்று புத்தகங்களிலிருந்து எடுங்கள். நவீன வரலாற்று ரீதியில் உண்மையான வரலாற்றை பள்ளிக்கூட புத்தகங்களில் கொண்டுவாருங்கள்.
  13. இந்திய ஆராய்ச்சிகளை இந்திய ஆராய்ச்சி இதழ்களில் பிரசுரிக்க ஏற்பாடு செய்யுங்கள். வெளிநாட்டு ஆராய்ச்சி இதழ்களை விட இந்திய ஆராய்ச்சி இதழ்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
  14. அடுத்த பத்தாண்டுகளில் உலகத்தில் 100 உயர் தர பல்கலைக்கழகங்களில் குறைந்தது 10 பல்கலைக்கழகங்கள் இந்திய பல்கலைக்கழகங்களாக இருக்க வேண்டும் என்ற குறியோடு செயல்படுங்கள். அடுத்த பத்தாண்டுகளில் இதனை 20 பல்கலைக்கழகங்கள் இருக்க வேண்டும் என்று குறி வைத்துகொள்ளுங்கள்.
  15. அப்படி 20 பல்கலைக்கழகங்களை அடையாளப்படுத்தி அவற்றில் உயர்தர கல்வியாளர்களை நியமித்து உருவாக்குங்கள். இதே போல குறிக்கோளுடன் புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்குங்கள்.
  16. ஒவ்வொரு 10 ஆண்டுகளும் இந்த பல்கலைக்கழகங்களை ஆராய்ச்சி செய்து, இந்த முயற்சிகளில் எவை தோல்வி எவை வெற்றி, எதில் மாற்ற வேண்டுமென்று ஆராந்து அதிலிருந்து முன்னேறுங்கள்.
  17. மற்ற நாடுகளில் இதே போல செய்தவற்றை ஆராய்ச்சி செய்யுங்கள். முக்கியமாக சீனாவின் புராஜக்ட் 985, ப்ராஜக்ட் 211, அதன் c9 league. ஆகியவற்றை ஆராயுங்கள்.

இந்த திட்டம் இந்தியாவின் கல்வி துறையை அடியோடு மாற்றி, இந்தியாவை உலகத்தரமான கல்வி, ஆராய்ச்சி சூப்பர் பவராக ஒரே தலைமுறைக்குள் மாற்றும்.

Series Navigationதுணைவியின் இறுதிப் பயணம் – 14செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – விடியோ பயன்பாடு – பகுதி 7
author

Similar Posts

Comments

  1. Avatar
    Subramaniam Narasimhan says:

    திண்ணையில் இதைப் போன்ற – இடது சார்பு – திராவிட சார்பு – நம் நாட்டுக்குத் தேவையே இல்லாத சமயச் சார்பின்மை – இவைகளைத் தழுவாத ஒரு கருத்தை முதன் முதல் பார்த்து, திகைத்துப் போய் விட்டேன்! அச்சுப் பிழையோ என்று கூட நினைத்தேன்.

    கடும் எதிர்ப்பைக் கூறும் கருத்துக்கள் பல வரக்கூடும் என்று எண்ணுகிறேன்.

Leave a Reply to Subramaniam Narasimhan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *