இயலாமை

This entry is part 29 of 53 in the series 6 நவம்பர் 2011

தூங்க ஆரம்பித்த ஒரு மழை ஞாயிற்றுக்கிழமையின்
பின்னிரவு பொழுதில் மூன்றாம்
வீட்டிலிருந்து ஏதோ அலறல் சத்தம்
ஜன்னலை திறந்து அலறலை உற்றுக்கேட்டால்
யாருக்கோ மோசமான உடல்நிலை
திங்கள்கிழமை வேலைப்பளு நினைவுக்கு வர
ஜன்னலை சாத்தி போர்வையை
இழுத்துப்போர்த்தி நல்ல தூக்கம்
ரெண்டு நாளாச்சு
அவருக்கு என்ன ஆச்சு
யாரவது சொன்னால் தேவலை.

**********
அ.லெட்சுமணன்

Series Navigationநிலத்தடி நெருடல்கள்நெகட்டிவ்கள் சேமிக்கப்படும்
author

அ.லெட்சுமணன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    லெட்சுமணன் says:

    Kavya says:
    November 8, 2011 at 4.02 pm

    இதை சொல்வதற்கு எல்லாம் ஒரு கவிதை தேவையா? 4 வரி உரைநடை எல்லாம் கவிதை என்கிறார்கள். கவிதையின் வடிவம் எதுவேன்றே இவர்களுக்கு தெரியவில்லை. இவர்களுக்கு ஆசிரியப்பா, வஞ்சிப்பா, குறிஞ்சிப்பா எல்லாம் எங்கே தெரிகிறது?
    எதுகை மோனை, ஒருமை பன்மை தெரியாதவர்கள் எல்லாம் கவிதை எழுத வந்துவிட்டார்கள். பாரதி சினிமா பார்த்தவன் எல்லாம் கவிஞராக ஆகிவிட முடியாது. It is ridiculous to see such people. பக்கத்து வீட்டுக்காரனுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் போய் என்ன ஏது என்று பார்க்கும் சமூக அக்கறை இல்லாமல் கவிதை எழுதுகிறார்கள். என்னை பொருத்தவரை அந்த பக்கதுவீட்டுக்காரனுக்கு “மிட்நைட் அலரலோ போபியா” என்ற வியாதி இருக்கிறது. அதிலும் கூட இந்த வகைக்கு “பின்னிரவு மேனியா” என்று பெயர். சீக்கிரம் மன நல மருத்துவரிடம் சென்றால் குணம் அடையலாம்.

    I have experienced two people affected by this problem. When I was in B’lore, I heard a voice in the midnight. I went there and checked that man. He was affected by “Midnight Alarolophobia”. I will write the other incident in my next feedback.

    “கவிதை சமுதாயம் இன்று வரை நீடிருத்திருக்கும் பேரதிசயம்” என்று ஒரு கட்டுரை எழுத வேண்டும். அப்போது தான் லெட்சுமணன் போன்றவர்கள் கவிதை என்று கிறுக்குவதை நிறுத்துவார்கள்.

    ————————————————-
    என்னுடையா எல்லா பிரசுரத்தையும் விமர்சனம் செய்யப்போவதாக சபதம் செய்துள்ள, காவ்யா என்ற திண்ணையின் முக்கியமான எல்லாம் தனக்கு மட்டுமே தெரிந்த வாசகர் இப்படிதான் விமர்சனம் எழுதப்போகிறார். அதான், நானே எழுதி அவர்களுக்கு ஒரு வேலையை குறைத்துவிட்டேன். அந்த நேரத்தில் அவர்கள், வேற ஏதாவது கட்டுரையை நார் நாரா கிழிக்கலாம் பாருங்க.
    (ஹா, ஹா, ஹா……..)

  2. Avatar
    Madhu says:

    I have been reading all the postings you have been sending thus far and I do appreciate your involvement, efforts and interest. I particularly enjoyed your parody of how the other person might criticize your writing – this reveals your sense of humour, accpeting criticism etc. I do not personally believe that you don’t know the various formats and grammar of Kavidhai – but as you know, it’s not required/common that everyone well-versed with grammar aren’t necessarily lyricists. Of course, vice-versa is true too.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *