இருபது வெள்ளைக்காரர்கள் – அய்யனார் விஸ்வநாத்.

This entry is part 12 of 13 in the series 22 ஜனவரி 2017

இருபது வெள்ளைக்காரர்கள் – அய்யனார் விஸ்வநாத்.

குறுநாவல்;
இருபது வெள்ளைக்காரர்கள்.
ஆசிரியர் ; அய்யனார் விஸ்வநாத்.
வெளியீடு ; வம்சி புக்ஸ்.
விலை ; ரூ 170/=

தமிழில் இன்று பல இளம் படைப்பாளிகள், பன்புகப்பார்வையுடன், மரபுகளை தாண்டி, புதிய தடங்களை தேடி செல்கின்றனர். இதற்கு, கணனி உதவியும், தொழில் நுட்ப அறிவும் அவர்களுக்கு கைக் கொடுகின்றது.

இவர்கள், எந்த இலக்கிய குருப்பில் சேராமலும், எந்த அரசியல் குழுக்களில் விழுந்துவிடாமலும், சுதந்திர உணவுடன் செயல் படுகின்றனர்.

அப்படியான ஒருவகை வன்மையும்,காமமும்,காதலும்,தேடலும் சேர்ந்த மூன்று குறுநாவல்களின் தொகுப்பாக,இருபது வெள்லைக்காரர்கள் எனற நாவல் தொகுப்பை,வம்சி 2011ல்,வெளியிட்டுள்ளது. இது ஒரு குறுகிய வட்டத்தில், சுழன்று சென்றுவிட்டது.

தமிழில் காமத்தை ஒரு மென்புணர்வாக ஜானகிராமன் தொட்டு சென்றுள்ளார். சுஜாதா கொஞ்சம், சங்கோஜத்துடன் தொட்டு சென்றார். சாரு நிவேதிதா எல்லைகளைத்தாண்ட சொல்லி கொடுத்தார். அய்யானார் , யாருக்காகவும் வெட்கப்படவில்லை, பயப்படவும் இல்லை. வாழ்வின்காம உன்னதங்களை, வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றார்.

அதேபோல், வன்மத்தை அதன் கொடூர நாக்குடன் கக்குகின்றார். இதில், ஒரு வெள்ளைக்கார கும்பலும் சேர்ந்துக்கொண்டு, கிருஷ்ண பக்தியோடு, காமத்தையும் கலந்து, ஒருவித ரஜனீஷ் உலககத்திற்குள், ஒரு சாதரண, இளைஞனையும், இழுத்துப்போட்டு, வெள்ளைக்காரச்சியின் காம இச்சையில், இவனயும்மிதக்கவிட்டு, ஒருவித சாந்தனிலைக்கு, ஆசிரியர் வாசகனை அமைதி படுத்துகின்றார். இது ஒரு சுயநிலை- எதிர்வினை கலகத்திற்குள் செல்கின்றது.

முதல் குறுநாவல் – பழி.

கூலிக்கு, கொலை செய்யும் கும்பலில் குணா ஒரு இளைஞன். ஒரு கொலையை, கச்சிதமாக செய்துவிட்டு, கொஞ்சநாள், தலைமறைவாக இருக்க, மேலிடத்துக் க்ட்டளை. அவன், புதுசேரியை தேர்வு செய்துக்கொண்டான். பகல் நேரத்தை போக்க, குடியும் போதையுமாக கழிக்க, இதைவிட, வேறு சொர்க்கம் கிடையாது. ” கொல்வதை போல் பரவசத்தை தருவது,கலவிதான்,என்ற வேதாந்த்தை பேசுபவன். ஒரு வாடகை வீட்டை எடுத்துக்கொண்டு, நாட்களை கடத்தும் போது, ஒரு பெண்ணின் தொடர்பு, அவனுக்கு, வாழ்வின் புதிய வாசல்களை திறக்கின்றது.

பெண் எத்தனை அற்புதம்!.பாசம், உணர்வு,நினைவு என எல்லாவற்றையும் முழுதாய் நிறைக்க பெண்ணால் மட்டும்தான் முடியும்.கடற்கரை இரைச்சலும், காட்டேஜ் அமைதியான சுழலும், பெண்ணின் நிர்வாணமும் அவனை, இன்பத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.ஒருமித்த கலவி என்பது, உடலின் ஒவ்வொரு செல்லையும்நிரப்பிவிடுகின்றது.

அடுத்து, ஒரு பணக்கார பெண்ணை கொல்ல , செய்தி வந்தது. அவன் அதற்கு தயார் செய்து கொள்கின்றான். வேலயை கச்சிதமாக முடிக்கின்றான். அவன் கணக்கில், பெரிய தொகை போடப்படிகின்றது. இதற்குள், இதே விதமாக கொலை செய்யும் இரண்டு பேர் இவனுக்கு நண்பனாக வருகின்றனர். குடியும் கும்மாளமும் இவர்கள் வாழ்க்கையாக, இடத்தை மாற்றிக்கொண்டே செல்கின்றனர்.பல பெண்கள் இடையிடையே வந்து செல்கின்றனர். குடும்ப பெண், குடும்பம் இல்லாத பெண், ஆண் சுகம் தேடி அலையும் பெண் என பலதரப்பட்ட பெண்கள் வந்து செல்கின்றனர்.

“இதுல காதல், புனிதம், துரோகம், ஏமாற்றம், இப்டின்னு எந்த மசிரு,, மட்டையும் கிடையாது…”என்றான்.

ஒரு பழைய நடிகையை கொல்ல, ஒரு அரசியல் புள்ளியின் ஆணை. மூன்று நண்பர்களும் சேர்ந்து செய்ய வேண்டிய நிர்பந்தம். வேறு வழியில்லாமல், கொடைக்கானல் மலையில் அவள் தங்கியிருந்த போது, அவளின் நட்பை ஏற்படுத்திக்கொண்டு, அவளை மூவரும் புணர்ந்தபின் கொன்றுவிடுகின்ற்னர். கொன்றபின், துண்டுதுண்டாக வெட்டி, பள்ளத்தாக்கில் எறிந்துவிட்டு, அடுத்தா வேலை பார்க்க சென்றுவிடிகின்றனர்.இதன் ந்டுவே, நடிகை வாழ்வின் மீதும்,மனிதர்கள் மீதும் காறி உமிழும் உணர்வுகளை, ஆசிரியர் மிக ஆழமாக பதிவு செய்துள்ளார்.

இலக்கிய வாழ்வியல் போர்னோ எழுத்தாக மலர்ந்துள்ளது.
ஆனால் ரசனையுடன் எழுத்து வாசகனை இழுத்து செல்கின்றது.

மழைக்காலம் -இது இரண்டாவது குறுநாவல்.

ஒரு நடுத்தர குடும்பத்து இளைஞனின் காதல் கதைதான். ஒரு பெண்னை நேசித்தலும், அது காதலாக மலர்ந்து, வன்காதலாக மாறி, இளமையின் வேகத்தில், எல்லைகளைத்தாண்டி, காமம் தலைகேறி, ஆணும் பெண்னும் இணவதும், பிறகு பிரிவதுமான கதை. இதனிடையே, குடும்ப உறவுகள், பாசம், அடிதடி, ரகளை என்றெல்லாம் சுற்றி, பிறகு அந்த பெண்ணை, வேறு ஒருவன் திருமணம் செய்து கொள்வதில் முடிகிறது. இதன் எழுத்து நடையும், காதலின் புரிதலும் நட்பும், குடும்ப உறவுகளையும் மிகுந்த உற்சாகத்துடன் படிக்க உள்ளே இழுத்துச் செல்கின்றது

இருபது வெள்ளைக்காரர்கள் – இது மூன்றாவது குறுநாவல்.

ஒருவித கலப்பின வெள்ளைக்காரர்கள்- காரிகள் கும்பல், ஜவ்வாது மலையடிவாரத்தில் கிருஷ்ண பக்தி பட்டாளமாக, போதை மாத்திரைகளும்,எல்ஸ்டி ஊசிகளையும் ஏற்றிக்கொண்டு,ஆட்டமும்- பாட்டுமாக கூடி அடிக்கும் கூத்தை பார்த்துக் கொண்டிருக்கும், கிராமத்து கொஞ்சமாக படித்த இளைஞன், அந்த வெள்ளைக்காரிகளின், வெண்மையான திரண்டெழுந்த முலைகளையும்,தொடை சதை ,பிருஷ்டங்களயும், எல்லாம் நிர்வாணமாகி, காற்றில் கலந்த அவர்களது, மெய்மறந்த நிலை, இந்த இளைஞனுக்கு, ஆச்சிரியத்தையும், காமத்தையும் கிளர்ந்தெழ செய்கின்றது.

என்னதான் கிருஷ்ண பக்தி மயக்கத்தில் இருந்தாலும், ஒரு வெள்ளைக்காரியை, ஒரு இந்திய இளைஞன் அணுகுவதையோ, உடல் உறவு வைத்துக்கொள்வதையோ, அந்த இயக்கத்திலுள்ள ஒரு வெள்ளையனுக்கு ஏற்புடையதாக் இல்லை. அந்த இந்திய இளைஞனும்- வெள்ளைக்காரியும் மெய்மறந்து, புணர்ந்து ஒருவித மயக்கத்தில் விழுந்துக் கிடக்கின்றனர். அந்த வெள்லைக்காரனோ, அவளை தந்திரமாக கொன்றுவிடுகின்றான். அந்த உடலை, அந்த காட்டுப்பகுதியிலே, புதைத்துவிட்டு சென்றுவிடுகின்றனர். பிறகு, அந்த இளைஞனும், அந்த கும்பலில் இருந்து விலகி, கிராமத்திற்கே வந்து விடுகின்றான்.

மயக்க உலகின் ரகசியங்களை அந்த காட்டிற்குள்ளே தொலந்து விடுகின்றது. நிஜமான வாழ்வின், சுமையும், அதன் உண்மைகளும், அவனுக்கு புரிந்து விடுகின்றது.காமம் கண்ணை மூடும்போது, தொலைந்து போகும், சிறுவனாகத்தான் தெரிகின்றான் அந்த இளைஞனும்.அய்யனாரின் மனதில் நிறைவேறத சில ஆசைகளில், ஆழ்ந்த நிலை மனதோடு, பெரிய மலையடி பிரதேசங்களில் சுற்றித்திர்ந்து, ஆன்மன நிலை எய்த வேண்டும் என்ற கனவுகள், இந்நாவலின் மூலம் திர்த்துக் கொளவதாக கூறுகின்றார்.

அய்யானரின் மொழியில் தெரியும் நவீனமும், தேடலும், இவரது துணிச்சலும், அழகியல் பார்வையும், யதார்த்தமான கதை களமும், வாசகனை, முற்றிலும் புதிய உலகத்திற்குள் அழைத்து செல்கின்றது.

இரா.ஜெயானந்தன்.

Series Navigationஜல்லிக்கட்டு – ஒரு தொடக்கமா…………..?கட்டு
author

இரா. ஜெயானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *