இருமை

author
2
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 23 in the series 26 ஜூலை 2020

குணா

இருமை இல்லா வாழ்க்கை இல்லை

இருமை உணர்ந்து வாழ்ந்தாரில்லை

இருமை உணராது ஏற்றத்தின் தாழ்வு

இரண்டும் உணர்வதே தெளிவுக்கு தூது

நல்லதும் கெட்டதும் நடைமுறை பழக்கம்

இருளும் ஒளியும் இயற்கையின் தோற்றம்

குளிர்தலின் எதிர்மறை வெப்பத்தின் தாக்கம்

உணர்தலை உணராது மரத்து போகும்

உள்ளும் வெளியும் ஒருங்கிட நாடும்

பிரிப்பதில் புரிந்திடும் இரு புற மாலமும்

உணர்வதில் குழப்பம் உணர்ந்தபின் தெளிவு

குழப்பத்தின் உச்சம் தெளிதலின் விளிம்பு

குறைவினை மறைக்கும் நிறைவின் தாக்கம்

நிறைவினில் முடியா நிறையின் குறைகள்

இருந்தால் தெரிவது இல்லாமைக் கொடுமை

உள்ளதும் போகும் இல்லாத நிலையில்

இல்லாமை என்பது நிலையான தன்மை

கற்றதும் காண்பதும் தெரிவிப்பதில்லை

இருப்பதாய் உணர்வது மயங்கிய நிலைமை

இருப்பதை இழப்பது நிதர்சன உண்மை

மனமும் மூலமும் சேர்ந்திட வேண்டும்

புரிந்ததன் மூலம் தெளிந்திட வேண்டும்

புறப்படு வழியை உணர்ந்திட வேண்டும்

தெரிந்திடில் நாடிட முயலுதல் வேண்டும்

நாடிடும் வழியை புரிபடல் வேண்டும்

நம் வழி அதுவாய் அறிந்திட வேண்டும்

சுழலுக்குப்பின் தான் அமைதி

அமைதியில் புரியா நிரந்தர தீர்வு

தீர்வில் தொடங்கும் அடுத்ததோர் குழப்பம்

நிலை நிலையற்ற தடுமாறும் தோற்றம்

தோற்றம் அறுந்த தொடர்நிலை ஆக்கம்

புரிபட தோன்றும் புறப்படும் மார்க்கம்

நின்றால் ஓடும் நில்லாதால் நிற்கும்

அலைபாயும் மனமும் அதுகாணும் நிலையும்

நான் என்றால் நீ நாம் என்றால் உணர்

பன்மையில் மறையும் இருமையின் கொடுமை

பலதும் புரிபட கூடும் குழப்பம் பதிலைத் தேடும் மறுபடி குழம்ப

எதிர்மறை தந்திடும் உள்ளதின் பதிலை இருந்தும் தேடும் குழப்பங்கள்  கூட

இருந்தும்

இருமை இல்லா வாழ்க்கை இல்லை

இருமை உணர்ந்து வாழ்ந்தாரில்லை.

  • குணா (எ) குணசேகரன்
Series Navigationகோழி இல்லாமலேயே உருவாக்கும் கோழி மாமிச வறுவலை உருவாக்க திட்டம் போடும் கேஎஃப்சி (KFC கெண்டக்கி ஃப்ரைடு சிக்கன்)பிராயச்சித்தம்
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    BSV says:

    இரு என்ற சொல்லிலிருந்து பிறப்பது இருமை. அதாவது இருத்தல் என்ற பண்புப்பெயராக. இன்பம், துன்பம் என்ற இருவகைகளைக் குறிக்கவும் இருமை பயன்படுத்தப்படுகிறது. இருட்டு எனபது பெயர்ச்சொல். அதைப் பண்புப்பெயராக இருள்மை. இரவில் இருள்மை சூழும். எந்தப்பொருளில் இங்கு பயன்படுத்துகிறார்?

    1. Avatar
      குணா says:

      எதிர்மறை சொற்கள் அனைத்திற்கும் பொருந்தும். இருமை இல்லாது இவ்வுலகில்லை. இருமை துறப்பார் இவ்வுலகை நீப்பார். நன்றி.

Leave a Reply to BSV Cancel reply

Your email address will not be published. Required fields are marked *