எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 31

This entry is part 16 of 19 in the series 10 ஏப்ரல் 2022

 

An awful Tempest mashed the air

 
image.png
 
 

அசுரப் புயல் அடிப்பு -31

மூலம் : எமிலி டிக்கின்சன்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
 

Stanza One 

An awful Tempest mashed the air—
The clouds were gaunt, and few—
A Black—as of a Spectre’s Cloak
Hid Heaven and Earth from view.

அசுரப் புயல் காற்றைப் போர்த்தி வரும்

கடுகடுத்த முகில் கொஞ்சம் தெரியும்

கருமைத் திரட்சி பேய் உடுப்பு போல்

வானோ, வையமோ காண இயலாது ! 

Stanza Two

The creatures chuckled on the Roofs—
And whistled in the air—
And shook their fists—
And gnashed their teeth—
And swung their frenzied hair.

கூரை மேல் பறவைகள் கொக்கரிக்கும்

ஊளையிடும் அவை காற்றில் சேர்ந்து,

அவற்றின் சிறகுக் கரங்கள் படபடக்கும்.

விலங்கினப் பற்கள் நெறிநெறிக்கும்  

 அவற்றின் ரோமங்கள் கலைந்தாடும்.

 Stanza Three

The morning lit—the Birds arose—
The Monster’s faded eyes
Turned slowly to his native coast—
And peace—was Paradise!

பொழுது புலரும், புள்ளினம் விழிக்கும்

அசுரப் புயலும் வலுவிழந்து போய் 

சொந்தக் கரை நோக்கி தவழ்ந்தது.

புயலுக்குப் பின் அமைதி சொர்க்கம்!

**********************

Series Navigationபூமியின் சுற்றுப் பாதைப் பெயர்ச்சி, சுழலச்சுக் கோணத் திரிபு ஐந்தறிவு வானரத்தை ஆறறிவு மானுடனாய் வளர்ச்சி பெறச் சூழ்வெளி அமைக்கிறது.சொல்லவேண்டிய சில…..
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *