எழுத்தாளர்களின் ஊர்வலம் (பாகம்..2)

This entry is part 4 of 31 in the series 19 பிப்ரவரி 2012

உ.வே.சா.
==========

இவருக்கு நாலு வேதங்களும்
எட்டுத்தொகையும்
பத்து பாட்டும் தான்.

கி.வா.ஜ‌
========

செந்தமிழும்
“பன்”தமிழும்
இவருக்கு நாப்பழக்கம்.

திரு.வி.க‌
==========

த‌மிழின் “ஓங்கு வெள்ள‌ருவி”
ஓட‌ வைத்த‌து
“க‌ல்கி”எனும் தேனாறு.

வ‌.உ.சி
=======

சுத‌ந்திர‌ம் எனும்
க‌ன‌ல் எழுத்து ந‌டுவேயும்
“தொல்காப்பிய‌ம்” த‌ந்த‌வ‌ர்.

ப‌ரிதிமாற்க‌லைஞ‌ர்
=================

ந‌ரியை ப‌ரியாக்கின‌ர்.
ப‌ரியை ந‌ரியாக்கின‌ர்…இவ‌ர் தான்
த‌மிழை “ப‌ரிதி” ஆக்கினார்.

ம‌காக‌வி பார‌தி
=============

த‌மிழ் நாட்டின்
இம‌ய‌ ம‌லையும் இவ‌ன் தான்.
எரிம‌லையும் இவ‌ன் தான்.

பாரதி தாசன்
===========

பார‌தியின் நிழ‌ல் அல்ல‌ இவ‌ர்.
அந்த விள‌க்கின் அடித்திரி இவ‌ர்.
இவ‌ர் விட்ட‌ சுட‌ர் த‌மிழின் அமுத‌ம்.

வையாபுரிப்பிள்ளை
=================

ஊரான் மொழியை ஊட்டி வ‌ள‌ர்த்தால்
த‌ன் மொழி தானே வ‌ள‌ரும் என்ற‌வ‌ர்.
த‌மிழ் வெளிச்ச‌த்தில் ச‌ம‌ஸ்கிருத‌ம் ப‌டித்த‌வ‌ர்.

ஆறுமுக‌ நாவ‌ல‌ர்
===============

இவ‌ர் த‌மிழால்
க‌ற்க‌ண்டு தீவு ஆன‌து
இல‌ங்கை.

விபுலான‌ந்த‌ அடிக‌ள்
==================
இவர் ந‌ர‌ம்பு மீட்டினால்
ச‌ரிக‌ம‌ப‌த‌நிச‌ கேட்காது.
அக‌ர‌முத‌ல‌ என்று த‌மிழே ஒலிக்கும்

ம‌றைம‌லை அடிக‌ள்
==================

த‌மிழே தேன் தானே.
அதையும் தேனில் வ‌டிக‌ட்டி
தூய‌ த‌மிழ் த‌ந்த‌ ப‌ண்பாள‌ர்.

தேவ‌நேய‌ப்பாவாண‌ர்.
===================

தொல்காப்பியரும் ம‌லைத்துப்போவார்.
தேவ‌ மொழிக்கும் க‌ருப்பை த‌மிழே..என்று
இவ‌ர் நாட்டிய‌ திற‌ம் க‌ண்டு!

புலியூர் கேசிக‌ன்
==============

ச‌ங்க‌த்த‌மிழ் ஓலைக‌ளை யெல்லாம்
ப‌டிக்கும் காகித‌ங்க‌ள் ஆக்கினார்.
உரைத்த‌மிழின் உய‌ர்த‌ர‌ சிற்பி இவ‌ர்.

கோவி. மணிசேகரன்
===================

வாளும் மகுடமும் உரசும் ஒலிகளில்
இதழ்ப்பவளங்கள் கோத்த
காதல் தேசத்தின் கனவுகளும் உண்டு.

சாண்டில்யன்
===========

இதோ இளவரசன் உதடு குவித்தான்
இன்பவல்லி கண்புதைத்தாள்…ஆனால்
ஆயிரம் பக்கங்கள் ஒரு “முத்தத்துக்கு”

ஆரணி குப்பு சாமி முதலியார்
===========================

ஆங்கில‌ ஆடையைக் க‌ளைந்து
திகில் மூட்டும் எழுத்துகளின்
துகில் உரிந்த‌ துணிச்ச‌ல் எழுத்தாள‌ர்.

வ‌டுவூர் துரைசாமி அய்ய‌ங்கார்
===============================

க‌த்தியில் ஒட்டியிருக்கும்
ஒற்றை ம‌யிர் போதும்…கொலையின்
ஒளி ஒலிக்காட்சி இவ‌ர் எழுத்துக்க‌ளில்.

த‌மிழ்வாண‌ன்
=============

தொப்பியும் க‌ருப்புக்கண்ணாடியும்
ச‌ங்க‌ர்லாலுடன் கூட்ட‌ணி அமைத்து
எழுத்துக்க‌ளின் ஆட்சியையே பிடித்துவிட்ட‌ன‌.

ஆபிரகாம் பண்டிதர்
====================

தமிழில் இசை ஆராய்ச்சியை
நுட்பமாய்த் தந்த‌
தமிழ்நாட்டின் “கால்டுவெல்”

ராஜம் அய்யர்
==============

கமலாம்பாள் சரித்திரம் என்ப‌தில்
கி.மு வும் அல்ல‌ கி.பி யும் அல்ல‌
பெண்ணிய‌ம் துடித்த‌ முத‌ல் இத‌ய‌ம் அது.

வீர்மா முனிவர் என்ற ஃபாதர் பெஸ்கி
===================================

தமிழுக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்தவர்
அன்பே சிவம் என்றால் இவரது
சிலுவை மரத்திலும் சிவலிங்கம் செய்யலாம்.

Series Navigationநினைவுகளின் சுவட்டில் – 86எல்ரெட் குமாரின் ‘ முப்பொழுதும் உன் கற்பனைகள் ‘
author

ருத்ரா

Similar Posts

2 Comments

  1. Avatar
    ruthraa says:

    Nanri! Nanri! NanRi Dr.G.Johnson avarkale!

    kuru varikalil avarkalin ezuththukkatalai atakkuvathu.katineme.kodu mattum kaattiyirukkire.
    meendum Nanri

    anpudan
    Ruthraa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *