கலங்கரை விளக்கு

This entry is part 11 of 31 in the series 19 பிப்ரவரி 2012

இந்தியாவின் கல்விக்கொள்கை பல மாறுதல்களுக்கு உட்பட்டது. நாம், இன்றும் மெக்கலெ ராஜாபாட்டையில் செல்கின்றோம். இந்த பாடத்திட்டத்தில்,நல்ல கண்க்கு பிள்ளைகளை, தெளிவற்ற வாத்யார்களை,கேள்விக்கேட்காத அலுவலர்களை உருவாக்கமுடியும்.

இதையெல்லாம் மீறி, சில நேரங்களில், சிந்தானாவாதிகள், விஞ்ஞானிகள்,எழுத்தாளர்கள் தோன்றிவிடுகின்றனர். இவர்கள்தான், நமது கலாச்சார – இலக்கைய சுவடுகளை காப்பாற்றி வருபவர்கள். இதையும் காசாக்க பலர் முற்ப்பட்டு, அதுவும் பாழாகிபோனகதை பல இன்று ச்மூகத்தில் உலவிவருகின்றது.

இந்த நூற்றாண்டில் தோன்றிய ஒரு கணித மேதையை ( ராமானுஜம்), கும்பகோணத்து வாத்தியார்கள் கண்டுக்கொள்ளவில்லை. அவர் எழுதிய கணித மேதமைத்தனத்தை, ஒரு வெள்ளையர்தான் கண்டுபிடித்து, உலகிற்கு அறிவித்தான். இப்படித்தான் பல அறிவாளிகளை நாம் அடையாளம் காண
முடியாமல் இழந்துள்ளோம்.

சமிபத்தில் நடந்த ஒரு மாணவனின் விகார மனச்சிதைவு, நம்மை சிந்திக்கத்தூண்டுகின்றது. நமது பள்ளிக்கூடங்களும்,பெற்றோர்களும் கலங்கிய நிலையில் இருக்கின்றது.

Sometime back, one of the student, jumped from the 3rd floor of a reputed city school , due to heavy pressure from the teaching side. One student hanged herself in her classroom during the late hour night class.

இன்றும் பல கிராமங்களில் சரியான கட்டடங்கள் உள்ள பள்ளிகள் கிடையாது. மழை அடித்தால் விடுமுறை விடுகின்ற பள்ளிகள் ஏராளம்.

பள்ளிகள் இருந்தாலூம், பாடம் நடத்தாமல் காலம் கழிக்கின்ற ஆசிரியர்களும் உண்டு. பாலியல் கொடுமைகள் செய்கின்ற இடமாகவும் பலகிராமிய பள்ளிகள் உண்டு.

சீனா தனது, கிராமபுறங்களில், ஆரம்ப , நடுநிலைப்பள்ளிகளை, விஞ்ஞான அடிப்படையில், பெரிய அளவில் கட்டி, முறையான பயிற்சி பெற்ற ஆசிரியபெருமக்களை அமர்த்தி, பாடங்களை முறையாக கற்றுக்கொடுத்து, வாழ்க்கை பயிற்சியையும் கற்று தருகின்றனர். இதனால், மாணவர்கள், சிறந்த பள்ளிகளை நோக்கி, நகரங்களை நோக்கி போவதிலலை.

கடந்த 20 வருடங்களில், உலக கணித ஒலிம்பிக்போட்டியில்(IMO ) 13 முறை முதலிடம் China பெற்றுள்ளது. இந்தியா 3 -முறை 10 ரேங்கிற்குள் வந்துள்ளது.
சீனா, பெரிய நாடாக இருந்தாலும், ஒரே மாதிரியான கல்வித்திட்டத்தினைஅறிவித்துள்ளது.

இந்தியாவில் 70 விழுக்காடு மாணவர்கள் , கிராமப்புறங்ளில்தான் படித்து வருகின்றனர்.

இப்படி பள்ளிப்பருவத்தை தொலைத்துவிட்டு, விவசாயிகளாக, கிராமத்தைவிட்டு ஓடிவந்து, நகரத்தில் ஓட்டல் வேலை, கட்டட தொழிலாளர்காளாக, டீக்கடை எடுபிடியாக, மளிகைக்கடை வேலையாட்காளாக, இன்னும் சிலர் சினிமா ஆசையில் அழிந்தவர்களும் உண்டு., சிலர் நடிகர்களாக நம்மிடையே உலவி வருகின்றனர். ஒரு சிலர் தீவர வாதியாக், திருடர்களாக், வன்முறையாளார்காளாகவும் உருவாகிவிடுகின்றனர். இவர்களைப்பற்றி நமக்கு கவலைக்கிடையாது.

Our concern is on the city based middle class people only. Either we or our parliamentarians are not interested to discuss about our village based schools or Education pattern in the Assembly or Parliament.

இந்தியாவிற்கு தீடீரென்று ஒரு யோகம் அடித்தது. மேலை நாட்டு கம்யூட்டர்வேலைக்கு குறைந்த சம்பளத்தில் ஆட்கள் தேவைப்ப்ட்டது. நமது நடுத்தரவர்க்கதின் காமதேனுவை கண்டு , இந்தியர்கள் படையெடுக்க ஆரம்பித்தனர். கடும் போட்டி கல்வித்துறையிலும் ஆரம்பித்தது. சாராய வியாபாரிகள் எல்லாம்(Engineering, Medical ) கல்லூரிகள் கட்ட ஆரம்பித்தனர்.

Thank you Lord, our money is safe in the Indian land as Educational Institutions, Better than the Swiss bank account black money.

Our schools are keen on Maths & விஞ்ஞானத்தையும் தான் முதலிடம் தருகின்றது. அது மட்டும்தான், அமெரிக்காவில் வேலை வாங்கிதரும். டாலர் கனவுகள் நிறைவேறும்.

Schools are insisting their teachers to train up students for getting 90-100% marks in the maths, science subjects
to get the ranking school merit list to propagate their education business for the next academic years.
For these reasons, sometime, teachers getting heavy pressure mentally – physically from the management and become sick .

நான் பெற்றோர்களை குறைசொல்லவில்லை. நானும் தான் இந்த ஆட்டத்தில் விளையாடி, இரண்டு குழந்தைகளை மருத்துவராக, software Engineer_ ஓடவிட்டுள்ளேன்.

ஆனால், போலீசாக, தீயணைப்பு படைவீரானாக, எழுத்தாளாக மாறவிரும்பும்மாணவர்களை யாரும் விரும்புவதில்லை. பள்ளியும், குடும்பத்தினரும் மதிப்பதிலை.

இப்படியாக மாறப்போகும் அவர்களை, வேறுமாதியாக மாற்ற, நாம் கொடுக்கும் தொல்லையால், மனநோயாளியாக, பல மாணவர்கள் மாறிவிடுவதாக , மனோ தத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்றைய சினிமாவின் தாக்கம் மாணவர்களையும் விட்டுவைக்கவில்லை.
உயர்ந்த சிந்தனையற்றவர்கள், சினிமாவை அணுகும் போது, சமுகத்தில் பல
இழப்புகள் தோன்றிவிடுகின்றன். அதில் ஒன்று, மாணவ சமுதாயத்தை பாதிப்பதாக ஆகிவிடுகின்றது. பிஞ்சில் காதல், மாற்றான் மனைவியை அணுகதல், போதை பழக்கம், ரவுடித்தனம், கொலைவெறியாட்டம்,திட்டமிட்டு கொலை செய்தல், குடிபழக்கம் போன்ற தகாத செயல்களை மிகைப்படுத்தி காட்டும்போது, ப்ஞ்சு உள்ளங்களில் அது நன்றாக பதிந்து விடுகின்றது.

இந்திய நாட்டின் மொத்த வருமானத்தில், 3.68 விழுக்காடுதான், கல்விக்காக
ஒதுக்கப்படுகின்றது. அதனால்தான், நமது கிராமிய ப்ள்ளிகள் காடாக மண்டிக்கிடக்கின்றது. காந்திய கொள்கைக்கு மாறாகத்தான் நமது, அரசியல்வாதிகளின் நடவடிக்கை செயல்படுகின்றது. தற்போது, 8 வ்ழுக்காடாக மாற்ற்க்கோரி பல குரல்கள் கேட்கின்றது.

நம்மால் அனுப்பபடும் எம்.பி. எம்.எல்.ஏக்களும் அவர்கள் வரவையே பெருக்க பெருமுயற்சியில் இறங்கி விடுகின்றனர். நமது குரல்கள் அங்கே எதிரொலிக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகின்றது. இதற்கிடையே சாதிச்சண்டை, லஞ்ச லாவண்ய நாடகங்கள், அரங்கேறிவிடுகின்றது.

இந்த கூத்தையெல்லாம் தாண்டி, மத்தியதரவருவாயில் வாழ்ந்துவரும்
இந்தியன், அவனது, பிள்ளைகளை, நல்ல மனிதனாக உலவவிடுவதுதான்,
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன்.

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 31- பாருண்டப் பறவைகள்வேதனை விழா
author

இரா. ஜெயானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *