கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி கவிதை-44 பாகம் -3)

This entry is part 42 of 46 in the series 5 ஜூன் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

ஆலயங்களுக்கும் மற்ற புனிதத் தளங்களுக்கும் நான் தொழச் செல்கையில் அங்கேயும் திருவாளர் பிதற்றுவாயன் கரத்தில் ஒளிவீசும் செங்கோல் ஏந்திச் சிரத்தில் கிரீடத்துடன் ஓர் ஆசனத்தில் அமர்ந்திருப்பான் !  என் இல்லத்துக்கு நான் மீளும்போது அங்கும் காணப் படுவான் கூரையிலிருந்து தொங்கும் பாம்புபோல் !  சுருங்கக் கூறின் திருவாளர் பிதற்றுவாயன் எல்லா இடங்களிலும் நடமாடி வருகிறான்.”

 

கலில் கிப்ரான். (Mister Gabber)

 

 

+++++++++++++++++++

இசை தனித்துவ மொழி

+++++++++++++++++++

 

 

அரிய தோர் இசையே

புரிய வினா எழுப்பும் நமக்குள்

புராண நூற்களில்

புதைந் திருக்கும்

மர்மங் களின்

அர்த்தத் தின் மீது !

பறவை இனம்

நாதம் இசைக்கும் போது

மலரை நோக்கிப்

பாடுமா ?

மரத்தை நோக்கிப்

பாடுமா ?

அல்லது ஓடும்

ஆற்றின் சல சலப்பை

எதிரொ லிக்குமா ?

 

+++++++++++

 

பறவை இனம்

பாடுவ தென்ன ?

ஆறோட்டம்

முணு முணுப்ப தென்ன ?

மெதுவாய்,

மென்மையாய்

கரை தொட்டு மீளும்

கடல் அலைகள்

மௌனமாய்

மொழிவ தென்ன ?

அறிய மாட்டான் மனிதன்

அவற்றை எல்லாம் !

 

+++++++++++

 

மரத்தின் இலைகள் மேல் விழும்

மழைத் துளிகள்

மொழிவ தென்ன ?

சாளரக் கண்ணாடியில்

தாளமிடும் காற்று மழை

ஓல மிடுவ தென்ன ?

வனப் பூக்கள் மேல்

உரசும் தென்றல்

உரைப்ப தென்ன ?

அறிய வதில்லை மனிதன்

அவற்றை எல்லாம் !

 

+++++++++++++

 

மனிதன் எளிதாய்க் கேட்பது

உணர்வு மூலம் நுழைந்திடும்

இனிய இசை நாதம் !

நித்திய ஞானம்

நேராய்ப் பேசும் அவனிடம்

மர்ம மொழியில் !

இயற்கையும் ஆத்மாவும்

இணைந்து உரையாடும் ஒன்றாய் !

மனிதனை

மயக்கி இசை நாதம்

மௌன மாக்கும் !

அழ வைத்துக் கண்ணீர்

விழ வைக்கும் !

கண்ணீர் வீழ்ச்சியே

உன்னதப் புரிதலுக்கு

ஓர் அடையாளம் அல்லவா ?

 

(தொடரும்)

 

****************

 

தகவல் :

 

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

 

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

 

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

 

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

 

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

 

For further information:

The Prophet By Kahlil Gibran :

 

http://www.katsandogz.com/gibran.html

http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

 

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

 

Kahlil Gibran Art Gallery :

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

 

 

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 31, 2011)

 

 

 

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *