கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -4)

This entry is part 24 of 33 in the series 12 ஜூன் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“மௌனத்தையும், அமைதியையும் நேசிப்பவனுக்குப் பிதற்றுவாயரிடமிருந்து எங்கே ஓய்வு கிடைக்கும் ?  கடவுள் என் ஆத்மா மீது பரிவு காட்டி மௌன சொர்க்கத்தில் தங்கிக் கொள்ள பேசாமைக்கு வரம் தருவாரா ?  இந்தப் பிரபஞ்சத்தில் நான் போய் ஏகாந்தத்தில் இனிதாய் வசிக்க எந்த மூலை முடுக்காவது இருக்கிறதா ?  வெற்றுக் காலிப் பேச்சுகள் நடமாடாத எந்த இடமாவது உள்ளதா ?  தன் வாய்ப் பேச்சை வழிபட்டு வாழாதவன் இந்தப் புவியில் எங்காவது வசித்து வருகிறானா ?

 

கலில் கிப்ரான். (Mister Gabber)

 

 

++++++++++++++

தெய்வீக இசை

++++++++++++++

 

 

 

இசை தெய்வீக மானது !

காதல்

ஆத்மாவின் புதல்வி !

காதற்

கசப்பின் பேழை !

மனித இதயத்தின்

கனவுகள் !

துயரத்தில் பழுத்த

கனிகள் !

பூரிப்பில் விரிந்த

பூக்கள் !

உணர்ச்சியில் பொங்கும்

குமிழிகள் !

கசியும் இரகசியம்

காதலர் நாக்கு !

மாதாவின் கண்ணீர்த் துளி

மறைக்கும் பரிவு.

 

+++++++++++

 

இசை என்பது கவிஞரை

ஈர்ப்பது

பாடகர் நெஞ்சைக் கவர்வது

கட்டடக் கலைஞர்

கருத்தைத் தன்வசம் இழுப்பது !

ஒருமித்த சிந்தனை

இசையே !

ஒன்று கூடும் சொற்களின்

பின்னல் !

அழகுத்து வத்தில் பிறக்கும்

காதல் உதிப்பு !

கனவு உலகில் மதி மயக்கும்

ஒயின் மது !

 

+++++++++++

 

ஆத்மாவை உறுதிப் படுத்தும்

இசை !

போராட்ட வாதி களுக்குத்

தாலாட்டு !

பரந்த பரிவுக் கடல் !

இரக்கத் தின் சாகரம் !

ஓ இசையே !

உன் ஆழ்ந்த உட்கரு வுக்குச்

சமர்ப்பணம் செய்வோம்

எமது இதயத்தை !

இனிய ஆத்மா வை !

இதயத்தின்

எதிரொலி கேட்கும்

செவிகளின் உன்ன தத்தை

அற்புத இசையே நீ !

கற்பித்தாய் எமக்கு.

 

(தொடரும்)

 

****************

 

தகவல் :

 

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

 

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

 

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

 

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

 

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

 

For further information:

The Prophet By Kahlil Gibran :

 

http://www.katsandogz.com/gibran.html

http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

 

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

 

Kahlil Gibran Art Gallery :

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

 

 

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 7, 2011)

 

 

Series Navigation(69) – நினைவுகளின் சுவட்டில்கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பிதற்றும் சிறுவன் (கவிதை -37)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *