கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் ! (கவிதை -35)

This entry is part 38 of 48 in the series 15 மே 2011
 

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

உலகு முழுதும் சுற்றித் தேடிஓடாதே

ஒரு குகையைக் கண்டு

ஒளிந்து கொள்ள !

ஒளிந்திருக்கும் கடும் விலங்கு

ஒவ்வோர் குகையிலும் !

எலிப் பொந்தில் நீ வசித்தால்

ஒரு பூனைக் கால் நகம்

உனைப் பிறாண்டி விடலாம் !

உண்மை யான ஓய்வு

உனக்கு வருவது நீ இறையுடன்

தனியாய் உள்ள போது !

++++++++++++

உனக்கொரு முகவரி இங்கே

இருப்பினும்

உதித்து நீ வசித்த இடம்

ஒருவருக் கும் தெரியாது !

இரு தோற்ற மாய்த் தெரியுது

அதனால் நீ

எதை நோக்கினும் !

ஒரு சமயம்

உனக்குத் தெரியுது

ஒருவனை நீ நோக்கும் போது

சீறிப் பாய்ந்திடும் ஓர்

அரவம் என்று !

வேறு ஒருவன்

அருமைக் காதலன் என்று

கருதுவான் அவனை !

இருவர் நினைப்பதும் சரியே !

+++++++++++

ஒவ்வொரு மனிதனும்

நிறுத்துப் பார்ப்பதில் பாதி ! பாதி !

கருப்பு வெளுப்பு போல் !

ஆதாமைக் கண்டு

அழகீனன் என்பார் சோதரர் !

ஒப்பிலா அழகன் என்று

அப்பன் அழுத்திச் சொல்வான் !

கண்களை நம்பாதே

தூரத்தை நோக்கும் போது !

காரணம் உனது

கணிப்பு மிகையோ, குறைவோ ?

+++++++++++

இரு நோக்கு உள்ளது விழிக்கு !

இங்கும் அங்கும்

தாவி அலையும் அதற்கு !

பாய்ந்திட முயல்வாய் ஈர்த்திடும்

பயங்கர வலைக்குள் !

வற்றிடும் சிறிது சிறிதாய் !

சதுரங்கக் கட்டத்தில் ராஜாவை

இப்படி அடைப்பதா ?

அப்படி அடைப்பதா ?

நெஞ்சித் திறந்து வைத்திடு !

தூண்டில் விற்கப் போக

வேண்டாம் இனி !

சுதந்திர மாய் நீந்தும்

சுறாமீன் நீ !

***************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 9 , 2011)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

Series Navigationசந்திப்புகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *