கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (உன் நீர்ச்சுனையில் எழும் தண்ணீர்) (கவிதை -44)

This entry is part 42 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

மெழுகு வர்த்தி வெளிச்சம்
விரிந்து பரவி
விரைவாய் என்னை
விழுங்கி விட்ட தென்ன ?
திரும்பி வா
என்னரும் நண்பா !
நாம் காதலிக்கும் வழிமுறைகள்
வடிக்கப் பட்டவை அல்ல !
எதுவும் உதவா தெனக்கு
அழகத்துவம் தவிர !
என் ஆத்மா
உன் ஆத்மா விடம்
ஏதோ ஒன்றைக் கேட்ட
காலைப் பொழு தொன்று
நினைவுக்கு வருகிறது !
நீர் அருந்தினேன்
உன்சுனை ஊற்றி லிருந்து !
என்னை அதன் போக்கு
ஈர்ப்பதை
உணர்ந்து கொண்டேன் !

+++++++++

அழகின் தேவன்
ஆத்மா வுக்குள் நுழைந்தான்
வசந்து காலத்துப்
பூங்காவில்
புகுந்திடும் ஆடவன் போல் !
என்னுள் வா
முன்பு செய்த வாறு !
விளக்கை ஏற்று ஜோஸ•ப்
விழிகளில் !
துயரைத் தீர்த்திடு ஜேகப்
நண்பனின் !
அருகில் அமர்ந்து
“குழம்பிப் போய் வருந்துவது
ஏனென்று
என்னைக் கேள்”
கலைஞன் மனதில் மின்னும்
புதியதோர்
கருத்து போல் நீ
தவித்து நிற்கிறாய் !

+++++++++++++

ஓவியத் தூரிகையில்
ஒன்றை நீ வரையும் போது
உண்மை தெரியுது அதிலே !
பாதுகாக் கிறாய்
முழுமையாய்
உனது மௌனத்தை
நீர் கசியாத
ஓர் திரவப் பை போல் !
குருமேதை ஸாம்ஸ்* வசித்து வந்த
ஒரு களத்தில் வாழ்கிறாய்.
காரணம்
உனது மனக் கழுதைக்கு
உடல் வலிமை உள்ளது அங்கு
உன்னைச் சுமந்து போக !

+++++++++++++
*Shams-i-Tabrizi or Shams al-Din Mohammad (died ca.1248) was a Persian Muslim, who is credited as the spiritual instructor of Mawlana Jalal ad-Din Muhammad Balkhi, also known as Rumi and is referenced with great reverence in Rumi’s poetic collection

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 16, 2011)

Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -1)இயற்கை வாதிக்கிறது இப்படி……
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *