கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -4)

This entry is part 27 of 44 in the series 30 அக்டோபர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

மரணம் வந்திடும்
பொழுது விடிவது போல் !
புன்முறுவ லுடன் நீ
எழுந்த ருள்வாய்
உனது துயராய்க் கருதி !
கனவு இதுவாய் இருக்க வேறு
காரணம் உள்ளது !
கடுமை யாக
உணர முடியாத கொடுமை !
உலக மாயத்தில்
நடப்பது இவை !
மறையாது கடப்பவை
மரணம் நடமிடும் போது !
நிரந்தர மானது
விபரமாய் விளக்கப் பட
வேண்டியது !

இழிவு மனம் கொண்டவர்
சிரிக்கிறார் !
உடல் இச்சையை
விரைவாய் தீர்ப்போர்
ஓநாயாக மாறுவார்
உமக்கு எதிராய் வருவோர் !
பதிலுக்குப் பதில்
எதிர்வினை புரிவோர்க்குப்
பதிலடி கொடுப்பது
பள்ளிப் பையன் செய்வது போல்
தொல்லை விளையாட்டு !
நிலையற்ற இந்தக் காலத்தில்
நிஜ வாழ்விது

***************
மீட்டெழுச்சி நாள் : The Resurrection Day

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 26, 2011)

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -3)ஜென் ஒரு புரிதல் -17
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *