கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -5)

This entry is part 47 of 53 in the series 6 நவம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

தூங்கச் செல்கிறான்
ஒருவன்
தான் வசித்த ஊரில் !
கனவில் வேறோர் ஊரில்
வாழ்வதாய் நினைவு !
கனவில் நினை வில்லை எந்த
ஊர் மெத்தையில் தான்
உறங்கிய தென்று !
கனவு ஊரைப் பற்றிய
உண்மையை நம்பினான் !
உலகு தூக்க மயக்கம்
தருகிறது
ஒருவிதத்தில் !

தகர்ந்து போன அநேக
நகரங்களின்
தூசி வெள்ளம்
தரையில் நம்மேல் படிந்திடும்
உறங்கி விழுவது போல் !
முதியவர் வயதில் நாம்
அந்தப்
புதிய நகரங்களை விட !
உதித்தோம் இங்கு நாமெல்லம்
உலோகப் பொருட்கள் போல் !
பிறகு
செடி கொடி போல்
வடிவம் பெற்றோம் !
விலங்கின மாய்ப் பின்பு
வளர்ந்தோம் !
இறுதியில் மனிதராய்
உருவெடுத் தோம் ! ஆயினும்
எப்போதும்
மறப்போம் நம் பழைய
வரலாற்றை
வசந்த காலத்தில்
பசுமை மீளும் பூமியின்
நிலப் பகுதிகளை
நினைக்கும் போது !

***************
மீட்டெழுச்சி நாள் : The Resurrection Day
***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 2, 2011)

Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -3)இந்தியா – குறைந்த விலை பூகோளம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *