குறும்படம் வெளியீடு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 7 of 14 in the series 28 நவம்பர் 2021

 

 

” இரக்கம் ” குறும்படம் வெளியீட்டு நிகழ்ச்சி 21/11/21 காலை 11 மணி

மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர்

நடைபெற்றது. குறும்படத்தை  கோவையைச் சார்ந்த எழுத்தாளர்           கா சு வேலாயுதம் வெளியிட்டார். மக்கள் மாமன்றத் தலைவர் சத்ருக்கன் பெற்றுக்கொண்டார். இந்த குறும்படத்தின் இயக்குனர்;            எஸ் எல் . முருசேஷ் பல்லடத்தைச் சார்ந்தவர் . 15க்கும் மேற்பட்டக் குறும்படங்களை இயக்கி வெளியிட்டுள்ளார். முழு நீளத் திரைப்படம் ஒன்றையும் இயக்கியுள்ளார்.இப்படத்தில் இடம்பெற்ற நடிகர்கள், நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இக்குறும்படம் சுப்ரபாரதிமணியன்  எழுதிய சிறுகதையை மையமாகக் கொண்டது

கலவித்துறையில் சிறந்து விளங்கி படைப்பிலக்கியத்தில் அக்கறை கொண்ட ஆசிரியர்களுக்கு  “ கனவு கல்வி விருது  “வழங்கப்பட்டது. அந்த வகையில் முத்துபாரதி, பெரியார் காலனி ராமகிருஷ்ணன், கணேசன், ஆழ்வைக்கண்ணன் உள்ளிட்டோருக்கு கனவு கல்வி விருதை வழக்கறிஞரும் எழுத்தாளருமான சாமக்கோடாங்கி ரவி வழங்கினார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கோவையைச் சார்ந்த எழுத்தாளர்           கா சு வேலாயுதம் அவர்களுக்கு பாராட்டுத்தெரிவிக்கப்பட்ட்து. இயக்குனர் முருகேஷ் தன் திரைப்பட, குறும்பட அனுபவங்களைப்பற்றிப் பேசும் போது இன்றைய திரைப்படத்துறை நெருக்கடியில் இணையதளங்களும், ஓடிடி தளங்களும்  ஓரளவு ஆறுதல் தருக்ன்றன. ஆனால் திரையரங்குகளில் திரைப்படங்களைப்பார்க்கவே ரசிகர்கள் விரும்புகிறார்கள்  என்றார்

40 வது சார்ஜா புத்தகக்கண்காட்சியில் கல்ந்து கொண்டு புக்கிஷ் விருது பெற்றுத் திரும்பிய சுப்ரபாரதிமணியன் சார்ஜா புத்தக அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டார் . நிகழ்ச்சிக்கு சி. சுப்ரமணியம் தலைமை தாங்கினார். மருத்துவர் முத்துசாமி, வின்செண்ட், குமாரசாமி, ராஜா உள்ளிட்ட பலர் பங்கு பெற்றனர்

 

40 வது சார்ஜா புத்தகக்கண்காட்சி

 

40 வது சார்ஜா புத்தகக்கண்காட்சி இந்த வாரம் சார்ஜாவில் முடிந்திருக்கிறது. உலகில் பிராங்பர்ட்க்கு அடுத்து  மிகப்பெரிய புத்தகக் கண்காட்சி சார்ஜாவாகும்

இம்முறை தமிழக எழுத்தாளர்கள் மனுஷ்யபுத்திரன் , சுப்ரபாரதிமணியன் ஆகியோர் அங்கு நூல்கள் வெளியீட்டில் கலந்து கொண்டனர். ஈரோடு தமிழன்பனின் கவிதைகள் அரபிமொழியில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.. அதை கேரளாவைச் சார்ந்த லிலி பதிப்பகம் வெளியிட்டிருந்தது அவர் கலந்து கொள்ள இயலவில்லை.

சுமார் 60 மலையாள பதிப்பக அரங்குகள் இருந்தன இது முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைவே . தமிழில் டிஸவரி புத்தகநிலையம் சென்னை சில பதிப்பகப்புத்தகங்களுடன் கலந்து கொண்டது

மேட்டுப்பாளையம் ஓவியர் தூரிகை சின்ராஜ் அவர்கள் வரைந்த 25 அமீரகத்தில் வாழும் மலையாள எழுத்தாளர்களின் ஓவியங்கள் கண்காட்சியில் ரைட்டர்ஸ் பாரம் அரங்கில்  கவனம் பெற்றன .  ஓவியர் தூரிகை சின்ராஜ் அவர்களும், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களும் புக்கிஷ் பாரட்டு விருது பெற்றனர்

 

துபாய் எக்ஸ்போ கண்காட்சி ஆண்டு தோறும் ஒரு நாட்டில் நடைபெறுவது. இவ்வாண்டு துபாயில் நடைபெற்று வருகிறது. 1100 ஏக்கர்  பரப்பில்  பெரிய இக்கண்காட்சியில் இந்தியா உட்பட 200 நாடுகளின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. அமீரகத்தில் நடைறும் மனித உரிமை மீறல், இடம் பெயர்ந்தத் தொழிலாளர்கள் குறித்த சர்ச்சைகள் காரணமாக ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பும் புறக்கணிப்பும் செய்தன . துபாய் எக்ஸ்போவில் மாமல்லபுரம் சிற்பங்கள் , தஞ்சை பெரிய  கோவில் குறித்த வீடியோக்களும் படங்களும் இடம்பெற்றிருந்தன. கலைப்பிரிவில் அடூர் கோபால கிருஷ்ணன் குறித்த சிறப்புக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

சுப்ரபாரதிமணியன்,

 

Series Navigationஞானவாபிகுருட்ஷேத்திரம் 30(திருதராஷ்டிரனுக்கு விதுரர் சொன்ன சத்திரிய தர்மம்)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *