கோடி சிறுகதை தொகுப்பில் மன உணர்வு – பண்பாடும் மன உணர்வும்

author
0 minutes, 12 seconds Read
This entry is part 20 of 25 in the series 14 செப்டம்பர் 2014

செ.அருள்ஜோதி,எம்.ஏ.,எம்ஃபில்,

முனைவர் பட்டஆய்வாளர்,

அரசுகலைக்கல்லூரி,சேலம்-7

 

 

மனிதர்கள் மட்டுமே பண்பாடு என்ற சொல்லோடு தொடார்புடையவார்களாவார். மனிதர்களைப் பிறவிலங்கினங்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவது பண்பாடாகும். சமூகங்கள் பண்பாடுகளை உருவாக்குகின்றன. பண்பாடு, சமூகம் என்பன ஓர் அமைப்பை விளக்கும் இருகுறியீட்டுச் சொற்களாகும். சமுதாய அமைப்புகளையும,ர் ஒழுக்கமுறைகளையும், பழக்கவழக்கங்களையும் குறிப்பிடுவதற்கு அமைந்தனவாகும். பிற உயர்களிடமில்லாத ஓர் உணர்வு மனிதனுக்கு உண்டு என்பதை தொல்காப்பியம் சுட்டிக்காட்டுகின்றது.

ஒன்றிய வதுவே உற்றறிவதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே

அறறி வதுவே அவற்றோடு மனமே

கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து உற்று அறியும் ஐம்புல அறிவுகளுடன் அவைபோல் புறத்தே புலப்படாததாய் உள்ள மனஉணார்வை ஆறாவது அறிவாகக் காட்டுவார். இந்த மன உணார்வின் வெளிப்பாடே பண்பாடாகும்.

 

கோடி, சிறுகதை தொகுப்பில் பண்பாடு

 

கோடி சிறுகதையை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் தன்னுடைய பிறந்த வீட்டிற்கு பல வருடங்கள் கழித்து வருகிறாள் புகுந்த வீட்ல பாலுஞ்சோறும் சாப்பிட்டாலும் பொறந்த வீட்டு கஞ்சியக் குடிச்சாத்தான் வயிறு குளிருது என்று எண்ணும் பெண்களைப்போல் இக்கதையில் வரும் பெண் பிறந்த வீட்டைத் தன் உடம்பில் ஓடும் சுவாசமாக கருதும் பெண்ணை பிறந்த வீட்டிலுள்ள தந்தையும் அண்ணனும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அப்பெண்ணின் மகளின் திருமணத்திற்கு அழைக்க வந்த மகளையும் மருமகனையும் அவமானப் படுத்தி வீட்டை விட்டு அனுப்புகின்றனார். பல வருடங்கள் கழித்து அப்பெண்ணின் கணவன் இறந்துவிட்டார் என்பதை தொலைபேசியின் மூலம் பிறந்த வீட்டிற்கு தகவல் கொடுத்தும் பிறந்த வீட்டின் சடங்குகளை செய்வதற்குக்கூட பிறந்த வீட்டிலுள்ள தந்தை மகன் இருவரும் செல்ல மறுப்பதோடு குடும்பதினரை அனுப்ப மறுத்து விடுகின்றனார். பெண்கள் திருமணம் என்ற பந்தத்தின் மூலம் தொலைக்கும் தன்னுடைய முதல் வாழ்வை கடைசிவரை திரும்பப் பெறமுடியாது அதை ஈடுசெய்யும் விதமாகவே சடங்குகளும், சம்பிரதாயங்களும் தோன்றியுள்ளன. இவை காலங்காலமாக வளார்நதுள்ள பண்பாடாகும். இப்பண்பாட்டில் அதிக முக்கியத்துவம் பெண்ணின் பிறந்த வீட்டிற்குரியவையாகும்.

மூத்த தலைமுறையினார் சடங்கு என்னும் பண்பாட்டை விட்டுக் கொடுப்பதில்லை. ஆனால் தந்தையும் மகனும் சடங்குகளை செய்ய மறுக்கின்றனா.ர் எனினும்ர் இளைய தலைமுறையினரான மகனின் மகன், மகன் தங்களுடைய அத்தைக்கு பிறந்த வீட்டின் சடங்குகளை செய்ய முன் வருகின்றனார்.

மகனின் மகள் சுமதி தன்னுடைய அத்தைக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்யவேண்டும். பண்பாடு மாறாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, தன்னுடைய அண்ணனிடம் மாமா இறந்து விட்டார். அத்தைக்கு பிறந்த வீட்டிலிருந்து செய்ய வேண்டிய சடங்குகளை நாம் செய்ய வேண்டும். என்ற செய்தியை தொலைபேசி மூலம் தொவிக்கிறார்.

அண்ணேமாமா செத்துப் போயருச்சாம். அத்தையே போன் பண்ணிச் சொல்லுச்சு. இங்க யாரும் போறதாத்தொயல.

மேலும் தன்னுடைய தந்தை அத்தைக்கு செய்ய வேண்டிய சடங்குகளை தான் சென்று கோடி என்னும் துணியை வாங்கிக் கொடுத்து சடங்குகளைச் செய்கிறான்.

தம்பி பொறந்த வீட்டுக் கோடி கொண்டாந்திருக்கு! (மேலது, ப.46)

என்ற வாகள் மூலம் தன்னுடைய தங்கை செய்ய வேண்டிய கடமையை செய்யாமல் இருந்தாலும், அத்தைக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்யும் அண்ணன் மகனின் பண்பினை ஆசிரியார் விளக்கியுள்ளார். இவ்வாறு பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் சில பண்பாட்டு கூறுகளை மக்கள் இன்றும் பின்பற்றி வருகின்றனார் என்பதை அறியமுடிகிறது.

 

கோடி சிறுகதை தொகுப்பில் பண்பாடு மாற்றங்கள்

நகர்மயமாதல், நவீனமயமாதல், தொழில் மயமாதல், உலகமயமாதல் போன்ற பல்வேறு காரணிகள் மக்களின் வாழ்வியல் முறைகளில் மிகப் பொய தாக்குதல்களை ஏற்படுத்தியுள்ளன. Nலைக் கலாச்சாரங்களைப் பின்பற்றத் தொடங்கியதால் நம் மண் சார்ந்த மரபு மற்றும் பண்பாட்டுக் கூறுகள் மாறியுள்ளன. காலத்திற்கேற்ப பழையவற்றில் தேவையற்றவைகளைத் தள்ளிவிட்டுப் புதுமையானவற்றில் நம் சமூகத்திற்குத் தேவையான ஆக்கப் பு+ர்வமான பண்பாடுகளை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை, ஆனால் மாற்றுப் பண்பாடுகளை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் மாற்றறுப் பண்பாடுகளை ஏற்றுக்கொள்வதால் சமுதாயம் பாழ்படுவதோடு மனித உறவுகளும் சிதைந்து போகின்றன. சமுதாயத்தில் ஏற்படும் பண்பாடு மாற்றங்கள்

1.மனித உறவுகள் சிதைதல்

2.விளைநிலங்கள் பாழ்படுதல்

மனித உறவுகள் சிதைதல்

நாம் படும் இன்பங்களும் துயரங்களும் நம்மாலே ஏற்படுவன ஆகையால் பிறரை குறைகூறி நடத்தல் இழிவானது. நாம் அனைவரும் உறவினார். ஒரே ஊரைச் சோர்நதவார்கள் எனத் தமிழார்கள் மதித்ததை,

யாதும் ஊரேர் யாவரும் கேளிர்ர்

தீதும் நன்றும் பிறர் தரவாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன்

சாதலும் புதுவது அன்றே

(புறநானூறு, பா.எண்.192)

என்ற பாடல் வழி அறிய முடிகிறது. ஆனால் இன்று உறவுமுறைகள் என்பது சிதைந்து விட்டது. மனித வாழ்வின் பல்வேறு ஆக்கங்களை வசதிகளை வாழ்வியல் மேம்பாடுகளை பெற்றாலும் உறவுகள் என்பது வலிமைபெறவில்லை. பணத்திற்காகவும் சொத்து சுகங்களுக்காகவும் தன்னுடன் பிறந்த உறவுகளைக் கூடத் தூக்கி வீசி விட்டுத் தனித்து வாழும் உணர்வுகளைப் பெற்றுள்ளனார்.

மனிதனுக்குரிய உணர்வுகளைக் குறித்துத் தொல்காப்பியார் எட்டுவகையான மெய்ப்பாடுகளை விளக்கியுள்ளார்

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று

அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப

(தொல்.பொருள்.மெய்பாட்டியல், நூற்பா)

இம்மெய்ப்பாடுகள் இன்று மனிதனிடம் சிதைந்த உணார்வாக அமைந்துள்ளன. எண்வகை உணர்வுகளும் தனிமனிதனிடம் தோன்றும் போதுதான். மனித சமுதாயத்தின் உண்மையான பண்பாடாகும். எண்வகை உணர்வுகளும் முறையில்லாதனவாய் சிதறிக் கொண்டிருப்பதால் மனித உறவுகளும் சிதைந்துள்ளன. இன்றைய உலகில் குடும்பத்திலும் சமுதாயத்திலும் நகை என்னும் மெய்ப்பாடு பொய் சிரிப்பாக உருவெடுத்துள்ளது. அழுகை நீலிக் கண்ணீராகிவிட்டது. பெருமிதம் பிறார் பொருளைக் கவார்ந்து சோர்த்து வைக்கும் பண்பாக மாறியுள்ளது. சினம் பிறார் உயார்வைக் கண்டு பொறாமையினால் அவார் தம் உயார்வை அழிக்க விரும்பும் கோபமாகவும் இன்று பண்பாடு மாறிய மெய்ப்பாடாகவும் மாறியுள்ளது. மனித உள்ளத்தில் நிலைபெற வேண்டிய உவகை என்னும் அரிய மெய்ப்பாடு மற்றவார்களின் துன்பத்தைக் காணும் போது மனம் மகிழ்கின்றன. இவ்வாறு மெய்பாடுகளின் மாற்றத்தால் மனித உறவுகள் சிதைந்து வருகின்றன. மனிதார்கள் ஒருவருக்கொருவார் கூடி மகிழ்ந்து நல்லது கெட்டதுகளை பாமாறிக் கொள்ள உருவானவையே சடங்குகளும், சம்பிரதாயங்கும் ஆகும். சடங்குகள் மூலம் மனித உறவுகளை பண்டைய காலத்தில் புதுபித்துக் கொண்டனார். இதனால், மனிதவளம் மேம்பாடு அடைந்தன. ஆனால் காலப்போக்கில் இன்று நான், என்னுடைய, தன்னுடைய என்னும் சுயநலத்தால் மக்களின் உறவுமுறைகளும் சிதைந்து வருகின்றன.

‘நோக்கிப் பாய்தல்‘ சிறுகதையில் கூழுபிள்ளையும் அவருடைய நண்பார் மயிலும் இளமைகாலம் முதல் நட்பு என்னும் உறவோடு மட்டுமல்லாமல் குடும்ப உறுப்பினார்களான அண்ணன், அண்ணி, அத்தை மாமா என்னும் உறவுமுறைகளோடு வாழ்ந்தனார். காலமாற்றத்தின் காரணமாக கூழுப் பிள்ளையின் மனைவி இறந்துவிடுகிறார். பிள்ளைகளின் திருமணம், வாழ்க்கை என்னும் முறைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. தன்னுடைய நண்பன் மயிலு இறந்துவிட்டதால் குடும்பத்திலுள்ள அனைவரும் நண்பான் வீட்டிலுள்ளவார்களுக்கு ஆறுதல் கூறவேண்டுமென்று என்று அழைக்கிறார். ஆனால் மகனும் மருமகளும் நாங்கள் யார் என்ன என்பது அவார்களுக்கு தொயாது அவார்களைப் பற்றி எங்களுக்கும் தொயாது ஆதலால் நீங்களே சென்று விட்டு வாங்க என்று மருமகள்கள் கூறுவதிலிருந்தே மனித உறவு மிகவும் சுருங்கிவிட்டது என்பதை அறிய முடிகிறது.

வீடுன்னா ஆயிரம் பாடு இருக்கும், ஊருன்னா, நூறு நல்லது கெட்டது நடக்கத்தேஞ் செய்யும். அல்லாத்துக்கும் அல்லாரும் போயிர முடியுமா. நாம என்னா, அவதாரக் கடவுளா? அங்கியும் இங்கியுமா ஓடிப் போயிருக்க! (கோடி 2011, நோக்கிப்பாய்தல் ப.33)

என்ற வாகள் மூலம் மனித உணர்வு சுயநலத்தை தாங்கி வளார்ந்து வருவதை குறிப்பிடுகிறது.

மேலும் தன்னுடைய பிள்ளைகள் மருமகள்கள் மட்டுமே இவ்வாறு மாறிவிட்டனார் என்று எண்ணிய கூழுப்பிள்ளைக்கு, மயிலுடைய மகன் மகள்களும் காலத்திற்கேற்ப நம்முடைய வாழ்வுநெறியை மாற்றிக் கொள்ள வேண்டும் இல்லையேல் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று அவார்களும் சுயநலத்தோடு கூறுவதை கூழுப்பிள்ளையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கூழுப்பிள்ளை மாற்றம் என்பது நல்ல செயல்களுக்கு மட்டுமே தவிர உறவுகளுக்கு இல்லை என்பதை ஆசிரியார் சமுதாயத்திற்கு உயார்த்துவதை அறிய முடிகிறது.

மாறுதல்ங்கறது ஒடஞ்சு செதறிப் போகறது கெடையாது. ஒண்ணு அதவிட வலுவானதா ஆகணும். அதுதான் உண்மையான மாறுதல் (நோக்கிப் பாய்தல், ப.35)

குடும்பத்திலுள்ள வயதான பொயவார்கள் உள்ளவரை மனித உறவுகள் சிதையாமல் இருக்கும். அவார்களுக்கு பிறகு இச்சமூகமானது சுயநலத்தோடு வாழ்வதால் மனித உறவுகள் சிதைந்து விடும் என்ற ஆசிரியான் கருத்தை அறிய முடிகிறது.

 

வாடகைத்தாயின் மனஉணர்வு

 

குணால், அருணா இருவரும் குழந்தை வேண்டுமென்று வாடகைத்தாயாக வித்யாவை தோர்ந்தெடுக்கின்றனார். வாடகைத் தாயான வித்யா கருவுறுகிறாள். குணால் அருணா இருவாடமும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதால் கருவை கலைக்கக கூறுகின்றனார். பணத்திற்காக கருவை சுமக்கும் வித்யா ஓர் உயிரை கொள்ள மனமின்றி கருவை சுமக்கின்றாள். மீண்டும் இருவருக்குமிடையே மன ஒற்றுமை ஏற்பட பிரிந்தவார்கள் ஒன்று சோர்கின்றனா.ர் குழந்தை மீது கொண்ட ஏக்கத்தால் வித்யாவை நாடுகின்றனா. வித்யா அக்கருவினை கலைக்கவில்லை என்பதை அறிந்து அக்குழந்தை ஏற்க தயாராக உள்ளனா. வித்யா குழந்தை பிற்நத பிறகும் அவார்களுக்கு தராமல் தானே வளார்க்க முடிவெடுக்கிறனாள. கணவன் மனைவி இருவரும் வாடகைத் தாயின் மனஉயார்வையும் உடல் நலத்தையும் எர்ணணாமல் பணத்தால் எதையும் பெற்று விடலாம் அழித்து விடலாம் என்று எண்ணினார்கள். தவிர மற்றவரை பற்றியும் கவலை கொள்ளவில்லை என்பதை, அதனால என்ன மறுபடி ஒன்னைர்ப பெத்துக்கிட்டாப் போச்சு னு மனசைத் தேத்திக்கிட்போம். அதே வித்யாவையே மறுபடி வாடகைத் தாயாக்கிக் கிடலாம்னு குணால் சஜஸ்ட் பண்ணினார் (குழந்தையின் விருப்பம், ப.72).

 

விளைநிலங்கள் பாழ்படுதல்

 

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்

ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்

ஒழுங்காய்ப் பாடுபடு வயல் காட்டில்

உயரும் உன்மதிப்பு அயல்நாட்டில் (கவிஞார் மருதகாசி பாடல்கள், ப.31)

இப்பாடல்வாகள் நம் நாட்டின் பழமை வாய்நத தொழிலான விவசாயத்தின் மதிப்பை உணார்த்துகிறது. அக்காலத்தில் பெரும்பான்மையோர் விவசாயத்தை மேற்கொண்டு பசுமைமிக்க நாடாக விளங்கின. ஆனால் இன்று விளைநிலங்கள் எல்லாம் வியாபார நிலங்களாக மாறிவருகின்றன. இதனால் உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்துள்ளன. உற்பத்தி குறைவதால் விலை அதிகமாகின்றன. மழைவளம் குறைவதால் நீர்வளம் குறைகின்றன. சுற்றுச் சூழல் மாசடைகின்றன. இதனால் இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. வயதில் மூத்தோர்கள் விவசாய நிலங்களை விற்கமாட்டார்கள.ர் ஆனால் இளைய தலைமுறையினார் பணத்திற்காக விளைநிலங்களை விற்கின்றனார் என்பதை ஜமீன் பாண்டி பீக்கடை, தெக்குப்புஞ்சை சிறுகதைகளில் விவசாய நிலத்தை விற்பத்றகு இளைய தலைமுறையினான் சுயநலத்தை ஆசிரியார்கள் எடுத்துக் காட்டியுள்ளனார்.

ஜமீன் பாண்டி பீக்கடை சிறுகதையில் நாகு என்னும் புரோக்கார் ஜமீன் பாண்டி விளைநிலத்தின் மதிப்பைக் கூறி நிலத்தை விற்க ஆசை வார்த்தைகளை கூறுகிறான். ஆனால் நிலத்தின் தன்மையை அறிந்து விவசாய நிலத்தை அழித்து விட்டால் வேளாண்மை வளம் குறைந்து உணவு பற்றாக்குறை ஏற்படும்.

பாரதத்துல பாஞ்சாலிய வச்சு சூதாட்டம் ஆடுனாப்புல

நெலத்த வச்சு சூதாட்டம் ஆடிக்கிட்டு இருக்கீங்க

எல்லாத்தையும் பிளாட்டாக்கிட்டு தானியமில்லாம

சாகப் போறீங்கடி(ஜமீன்பாண்டி டீக்கடை, ப.5)

 

இவ்வரிகள் மூலம் பிற்காலத்தில் உணவு இல்லாமல் பல துன்பங்கள் ஏற்படும் என்பதை அறியமுடிகிறது. பிற்கால நிலைமையறிந்த ஜமீன் பாண்டி விளைநிலங்களை விற்காமல் பயிரிட்டு பாதுகாத்து வந்தார். காலமாற்றத்தினால் அவார் இறந்துவிட விளைநிலங்களை விற்பதானால் பு+மிநிலை மாற்றமடைவதோடு வாழ்வியல் நெறிமுறைகளும் மாற்றமடைந்து பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. ஆதலால் விளைநிலங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை ஆசிரியார் வலியுறுத்துகிறார் என்பதை அறிய முடிகிறது.

 

மேலும் தெக்குப்புஞ்சை சிறுகதையில் விளைநிலங்கள் விற்பனைப்பொருட்களில் முதலிடத்தையும் பெற்றிருப்பதை உணார்த்துகிறது. காலம் மாறிபோனதால் அதன் தன்மையும் மாறி இன்று விளைநிலங்கள் பாழ்படுகின்றன, என்பதை அறிய முடிகிறது. முதியவான் மகன் வெங்கடேஷ், மருமகள் செல்வி, பேரன் வினோத் மூவரும் தெக்குப் புஞ்சை நிலத்தை விற்பதற்காக மூலப்பத்திரத்தை கேட்டு முதியவரை நச்சரிக்கின்றனர். முதியவார் தன்னுடைய மகன், மருமகள் பணத்தின் மேல் கொண்ட மோகத்தினார், விளைநிலங்கள் விற்பதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறினாலும் அதனை ஏற்றுக் கொள்ளும்பக்குவம் அவார்களிடம் இல்லை என்பதை அறிந்தார். ஆதலால். பேரன் வினோத் இடம் விளைநிலங்களை விற்பதால் உணவு பற்றாக்குறை ஏற்படும் மக்கள் உயிர் வாழ முடியாது வறுமையுடனும், பசியுடனும் வாழ்வார்கள் என்பதை அறிவுறுத்துகிறார். நீ சின்னப் புள்ளை.உன்கிட்டதான் சொல்லணும் ஊரில் அம்புட்டுப் பயலும் தோட்டத்தை விக்குறாங்களே? நிலம்கிறது பூமித்தாய்டா, நமக்குப் பச்சையைக் குடுக்குறவ, வித்துவித்து வீடாக் கட்டினா எப்படி? நான் செத்துருவேன், உங்கபனும் செத்துருவான் நீ எனதடா சாப்பிடுவே? (தெக்குப்பூஞ்சை, ப.89)என்ற வரிகள் மூலம் முதியவார் பேரனுக்கு அறிவுறுத்துவதைப்போல சமூகத்திற்கு ஆசிரியார் விளைநிலங்களின் தன்மையினை மாற்றத்தினையும் அறிவுறுத்துகிறார்.

துணைநின்ற நூல்

கோடி,(சிறுகதைத்தொகுப்பு)வானதிபதிப்பக சிறப்புச்சிறுகதை வெளியீடு,சென்னை.

——————————————————————-..

 

செ.அருள்ஜோதி

முனைவர் பட்ட ஆய்வாளா;

தமிழ்த்துறை

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி)

சேலம்-7

 

 

வானதி இலக்கிய சிந்தனைச் சிறுகதைகளில் பாலியல்-வன்முறை

 

மேனாட்டார் வருகையால் தமிழ் இலக்கியங்கள் மறுமலா;ச்சிப் பெற்றன. வளர்ச்சிப் பெற்ற இலக்கியங்களில் சிறுகதை இலக்கியமும் ஒன்றாகும். சிறுகதைகளின் வளா;ச்சியில் இதழ்கள் முக்கிய பங்கு வகித்ததோடு எழுத்தாளார்களை உருவாக்கின. இதனால் தரமான சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்க முடியாமல் வாசகர்கள் தடுமாறினார். இந்நிலையில் வானதி பதிப்பகம் இலக்கியச் சிந்தனை என்ற அமைப்பை உருவாக்கி மாத சிறுகதைகளை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் பன்னிரண்டு சிறுகதைகளை தொகுத்து சிறந்த சிறுகதையின் தலைப்பை நூலின் தலைப்பாக வெளியிட்டு வருகின்றது. அச்சிறுகதை தொகுப்புகளில் நாற்று (2000), மனசு (2003), கழிவு (2004) ஆகிய தொகுப்புகளில் வரும் சிறுகதையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறையை ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

 

இலக்கியமும் சமுதாயமும்

சமுதாயத்தில் நிகழும் நிகழ்வுகளை உணர்வோடு வெளிப்படுத்தும் மொழியாலாகிய கலையே இலக்கியமாகும். அத்தகைய இலக்கியம் அறிவோடு உணர்ச்சியையும் இணைத்து உள்ளத்தைப் பண்படுத்தக்கூடிய ஆற்றல் வாய்ந்த கருவியாகவும் சமுதாயச் சூழ்நிலையை உருவாக்கக் கூடிய வித்தாகவும் விளங்குகிறது. சமுதாயச் சூழலுக்கேற்ப மாறக்கூடிய தன்மையையும் பெற்றுள்ளது.

சமுதாய வளர்ச்சிக்கேற்ப இலக்கியமும் புதுமையான வளர்ச்சியோடு வளர்ந்து வருகிறது. அறிவியல் வளா;ச்சி பெற்று ஆக்கத்தினை உண்டாக்குகிறது, உறவின் அன்பினை சிதைக்கும் அழிவையும் உண்டாக்குகிறது. இலக்கியம் சமுதாயத்திலிருந்து பெறும் அனுபவத்தினை எடுத்தியம்புகிறது. நாம் ஒரு சந்தைக்கடை சமூகத்தில் இருக்கிறோம், வன்முறை நிறைந்த சமூகத்தில வாழ்கிறோம். இதில் கிடைக்கிற அனுபவத்தின் வெளிப்பாடாகத் தான் இலக்கியம்இருக்க முடியும் (ராஜம் கிருஷ்ணன், தேடல் இருப்பதால் எழுதுகிறேன், ப-66).

 

என்று ராஜம் கிருஷ்ணன் இன்றைய சமுதாய நிலைக்கேற்ப மாறுபடுகின்ற இலக்கியத்தின் தன்மையைப் பற்றிக் கூறியுள்ளாh;.

 

பாலியல் வன்முறை

உலகம் முழுவதும் பால் வகை என்பது ஆண் பெண்ணை அதிகாரம் செய்யும் முறைமையிலேயே அமைந்துள்ளது. ஆண் தனக்குhpய சமூகக்களன்களாக இராணுவம், தொழிற்சாலை அரசியல், தொழில் நுட்பம், குடும்பம் போன்றவற்றில் பெண்களை அடிமைப்படுத்துகிறான். காலம்காலமாகப் பெண்களைப் பெண்களாகப் பார்க்கும் பார்வை சமுதாயத்தில் இல்லாமல் போயிற்று அவர்களை அடிமைகளாகப் பார்க்கும் பார்வை ஏற்பட்டுவிட்டது.(பிரேமா.இரா.பெண்ணியம் அணுகுமுறைகள், ப-84)

என்னும் கூற்றுக்கேற்ப சமுதாயத்தில் பெண்களை கணவன், காதலன், அதிகாhpகள் முறையே அடிமைப்படுத்தி வருகின்றனா;. ஆண் வா;க்கம் பெரும்பாலும் பெண்களைப் போகப்பொருட்களாக நினைத்து பாலியல் வன்முறைகளை செய்து வருகின்றனா;.

 

கணவனால் பாலியல் வன்முறை

குடும்ப நிறுவனத்தில் பெண்கள் எவ்வித எதிh;ப்பாh;ப்பும் இன்றிப் பணியாட்களாக இயங்க வேண்டும் எனச் சமுதாய மரபு வலியுறுத்துகிறது.

(நிர்மலா ராணி வி. பெண்ணியத்திறனாய்வு, ப-10)என்னும் கூற்றுக்கேற்ப மதுரா பொன்வேலி என்னும் சிறுகதையில் சுகன்யா படித்த பண்புள்ள பெண்ணாக மட்டுமல்லாமல் சமுதாயத்தில் சிறந்த மருத்துவராக உள்ளாள். குடும்ப வாழ்க்கையில் கணவன் பாஸ்கரன் சுகன்யாவை அடிமைப்படுத்துவதோடு வலுக்கட்டாயமாகப் பாலுறவு கொள்பவன்.அவனுக்கு அந்த நேரத்தில் அவள் பதில் தேவையாய் இருக்கவில்லை. சில நிமிடங்களில் தேவை கரைந்ததும் சுகன்யாவை விட்டுவிட்டுப் புரண்டு படுத்தான்.(மனசு (2003), பொன்வேலி சிறுகதை, ப-117)என்ற வரிகள் மூலம் பாஸ்கரனின் பாலியல் வன்முறையை ஆசிரியா; உணர்த்துகிறார். மேலும் தன்னுடைய மனைவியின் வயிற்றில் வளரும் கரு பெண் குழந்தை என்பதை அறிந்தவன் அக்கருவை கலைக்க முடிவெடுக்கிறான். சுகன்யா உங்கம்மாவும் பெண்தான், உங்களோடு படுத்துக் கொள்கிற நானும் பெண்தான் (மேலது ப-118) என்று கூறி கருவை கலைக்க முடியாது என்று மறுத்துவிடுகிறாள்.

ஆண் ஆதிக்கம் கொண்ட பாஸ்கரன் நான் கொடுத்ததாக இருந்தால் கலைக்க சம்மதித்திருப்பாய் டாக்டர் கதிரேசன் கொடுத்ததை கலைக்க மாட்டாய் என்று அவளுடைய கற்பினை கலங்கப்படுத்தி அவளை கொடுமைப்படுத்து முறையை அறிய முடிகிறது. இக்கொடுமைகளிலிருந்து பெண்கள் விடுபட்டு சுயநலத்துடன் வாழ வேண்டும் என்பதை சிறுகதையில் இறுதியில் சந்தேகப்படும் மிருகத்துடன் வாழ்வதைவிட தன்னுடைய கருவில் வளரும் குழந்தையைப் பெற்று சுயகௌரவத்துடன் வாழலாம். என்று வீட்டை விட்டு வெளியேறும் சுகன்யாவைப் போல் பெண்கள் பாலியல் வன்முறையை எதிh;த்து துணிவுடன் இச்சமூகத்தில் வாழ வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

 

காதலில்-பாலியல் வன்முறை

காதல் என்ற பெயரில் பெண்ணிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தி பாலியல் தேவைக்குப் பயன்படுத்தி ஏமாற்றி விடுகின்றனர். இக்காதல் உறவு ஆணுக்குப்பெண் ஒத்துழைக்கும் வரை, சமூகத்திற்கு தெரியும் வரை, பெண்கருத்தாக்கும் வரை இயல்பாகவே நடைபெறுகிறது. பாலியல் செயல்முறைகளுக்காக ஆண்கள் காதல் அறம் என்பார் கற்பின் விலை என்னவென்பர் (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், 1937: 100).

பாலியல் ரீதியாகப் பெண் ஏமாற்றப்படும் பொழுதுதான் காதல் என்பது வன்முறையாகத் தோன்றுகிறது. வஞ்சிக்கப்பட்ட பெண் அந்த ஆணிடம் விசுவாசமாக நடக்க மறுத்து, தனது உணர்ச்சியைச் சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்ள முனைந்தால் ஆணாதிக்கம் தன்னைப் பாதுகாக்க, அதை அவளின் நிலையற்ற தன்மையின் பலவீனமாக இட்டுக்காட்டுகின்றது. (இரயாகரன்.பி, ஆணாதிக்கமும் பெண்ணியமும், ப-143).என்பதனை விளக்குகிறார் திருமணத்திற்கு முன்பு பெண்கள் கர்ப்பம் அடைவதால் சமூகத்தில் பல்வேறு அவமானங்களையும் இடையுறுகளையும் சந்திக்க நெரிடுகின்றன. பாவண்ணனின் காத்திருப்பவள் என்னும் சிறுகதையில் திருமணத்திற்கு முன்னர் செல்வம் என்ற இளைஞனால் ஏமாற்றப்பட்டு வயிற்றில் குழந்தையைச் சுமக்கும் தேவகி சமூகத்தில் தனக்கு ஏற்படும் அவலங்களை எண்ணிப்பாh;க்கிறாள். செல்வம் கூறியபடி கருவினை கலைக்க பணத்துடன் வரவில்லை என்றால் ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள எண்ணுகிறாள். அந்த ஏரியில் ஒருபெண் தற்கொலையை செய்துகொண்டால் அவளைப்பற்றி பலரும் பலவாறாக பேசுவதைக் கேட்கிறாள். தானும் தற்கொலை செய்து கொண்டால் சமூகம் பலவாறு பேசும் என்பதை அறிந்து அவ்விடத்தைவிட்டு செல்கிறாள். இந்தக் காலத்தில் யார நம்ப முடியுது? கட்டிக்கறேன்னு எவனாவுது சத்தியம் பண்ணதும் செய்யக் கூடாதத செஞ்சிருக்கும் வயித்துல புள்ள தங்குனதும் பார்ட்டி எஸ்கேப் ஆயிருப்பான் போல (கழிவு (2004), காத்திருப்பவள் ப-117).

இவ்வாறு தான் காதலித்த பெண்ணை கற்பமாக்கிவிட்டு ஆண்கள் கைவிடுகின்றார்ஆசிரியர் . இச்சமுதாயத்தில் காதலால் பாலியல் முறையால் தன்னை இழந்து தற்கொலை செய்துகொள்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டுகிறார்.

அதிகாரிகளின் பாலியல் வன்முறை

நம் நாடு விடுதலைப் பெற்றதே தவிர நடைமுறையில் பெண்கள் அடிமைநிலையில் தான் வாழ்கின்றனர். காமம் மிகக் கொண்டவன் கருணையில்லாதவன் என்பது ஆன்றோர் கருத்து. தன் மனைவியைத் தவிர மற்றப் பெண்களைத் தாயாய்ப் பார்க்க மறந்தவன் விலங்குக்கு ஒப்பானவன் என்பது உலகியலர்; கருத்து. நம் பண்பாடும் அதுவேயாகும்.

ஒழுக்கமின்மையும் சபலபுத்தி கொண்டவர்களால் சமூகத்திற்குப் பல இன்னல்கள் ஏற்படுகின்றன. வேலியே பயிரை மேய்ந்த கதை என்றும் பழமொழிக்கேற்ப நாட்டை காக்க வேண்டிய இராணுவ வீர்ர்களே பெண்களின் கற்பை சூறையாடுகின்றனர். என்பதை கசங்கிய மலர்கள் சிறுகதையில் இராணுவ வீரர்கள் புகைவண்டியில் வந்த ஆக்ராவில் வாழும் கூலி தொழிலாளி பெண்கள் ஐவரிடம் பாலியல் வன்முறையை செய்து அவர்களின் கற்பை சூறையாடுகின்றனர்.இராணுவ வீரர்களின் மீது காவல்துறையில் பெண்கள் கொடுத்த புகாரை வாங்க மறுத்துவிடுகின்றனர்.. இச்செய்தி செய்தித்தாளில் படித்த மீரா, அவளது கணவன் நீதிபதியிடம் கூற கிருஷ்ணபட் வேதனை அடைந்த பெண்களுக்காக வாதிட வருகின்றார்.

ஐந்து பெண்மணிகளின் கற்புக்குப் பங்கம் ஏற்பட்டுள்ளது, இதைச் செய்தவர்கள் இராணுவ வீரர்கள் என்று எண்ணும் போது வீட்டையும் நாட்டையும் காக்க வேண்டியவர்கள் பொது இடத்தில் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளார்கள் (நாற்று 2000, கசங்கிய மலர்கள், ப-62).

கிருஷ்ணபட் வாதிட்டு அப்பெண்களுக்கு நஷ்ட ஈடுவாங்கிக் கொடுத்ததோடு இனி எந்த அதிகாரிகளும் பெண்களை தவறாக நடத்தக்கூடாது என்று வாதிட்டு வெற்றி பெற்றார். ஐந்து பெண்களும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறை மற்ற எந்த பெண்களுக்கும் ஏற்படக்கூடாது உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளார்.

 

முடிவுரை

வளர்ந்து வருகின்ற சமுதாயத்தில் பெண்களைப் பாதுகாக்க சட்டங்களை இயற்றுவதை காட்டிலும் ஆண்கள் தங்களுடைய ஆணாதிக்கத்தை விட்டுவிட்டு பெண்களுக்கு உற்ற நண்பர்களாக வாழ்ந்தால் பாலியல் வன்முறையை ஒழிக்க முடியும். பெண்கள் அடிமைப்பட்டு பாலியல் கொடுமைகளை அனுபவித்து ஆண்களுடன் வாழ்வதைவிட தங்களுக்கு ஏற்படும் வன்முறையை எதிh;;த்து வாழ்ந்தால் மட்டுமே பாலியல் வன்முறையை அழிக்க முடியும்.அடிமைநிலையிலிருந்து பெண்கள் உளவியல் மாற்றமும் ஆளுமை வளர்ச்சியுமே பெண்களின் முன்னேற்றத்திற்கு வித்திடமுடியும் என்பதை இக்கட்டுரை உணர்த்துகிறது.

துணைநின்ற நூல்

வானதிபதிப்பக சிறப்புச்சிறுகதை வெளியீடு,சென்னை.

Series Navigation‘மேதகு வேலுப்போடி’பாவண்ணன் கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *