சி.சு. செல்லப்பாவின் நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடும் வகையில் தளத்தின் முதல் இதழ் சி.சு. செல்லப்பாவுக்கு அஞ்சலி

author
0 minutes, 1 second Read
This entry is part 13 of 34 in the series 28அக்டோபர் 2012

எழுத்தாளர்கள் பாரவி(பிரக்ஞை), சாமிநாதன்(சாம்),கவிஞர் தேவகோட்டை வா.மூர்த்தி ஆகியோரின் தீவிர முயற்சியின் பயனாய்த் ‘தளம்’ என்னும் பெயரில் ஒரு கலை இலக்கியக் காலாண்டிதழ் தொடங்கப் பட்டிருக்கிறது. இதன் முதல் இதழ் அக்டோபர் மாத இறுதியில் வெளிவரும்.

தளம் முதல் இதழில் அம்பை, எஸ்.பொ., சுப்ரபாரதி மணியன், பெருந்தேவி,சித்தன்(யுகமாயினி),முருகபூபதி,ந.முத்துசாமி,சார்வாகன்,வே.சபாநாயகம், ஆறுமுகம் ரவிச்சந்திரன்,வீ.விஜயராகவன். தீபப்பிரகாசன், ஜி.தெய்வசிகாமணி, சிவகுமார்(இந்து நாளிதழ் இசை விமரிசகர்),எஸ்.எம்.ஏ.ராம் ஆகியோரின் படைப்புகள் இடம்பெறுகின்றன. இவை தவிர ஓவியர்கள் விஸ்வம்,ஜெயகுமார் ஆகியோரின் நவீன ஓவியங்களும் கோட்டோவியங்களும் படைப்புகளுக்கு அழகும் அர்த்தமும் சேர்க்கின்றன.

சி.சு. செல்லப்பாவின் நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடும் வகையில் தளத்தின் முதல் இதழ் சி.சு. செல்லப்பாவுக்கு அஞ்சலியாக சமர்ப்பிக்கப் படுகிறது. அவரது ‘எழுத்து’ பத்திரிகை, அயராத இலக்கியப்பணி, மற்றும் போராட்டம் நிறைந்த வாழ்க்கை இவற்றை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப் படுத்தும் விதமாய் இடம்பெறும் ஒரு விமர்சனக் கட்டுரை இதழின் சிறப்பு அம்சமாக இருக்கும். ஓவியர் ஜெயகுமார் தத்ரூபமாக வரைந்திருக்கும் சி.சு.செல்லப்பாவின் கோட்டோவியம் இதழின் அட்டையை அலங்கரிக்கும்.

 

தளம் முதல் இதழைப் பெற விரும்பும் நண்பர்கள் தங்கள் தபால் முகவரிகளை thalam.base@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால், இதழ் வெளி வந்தவுடன் அவர்களுக்குப் பிரதிகள் தபாலில் இலவசமாக அனுப்பி வைக்கப் படும். இந்த முயற்சி வெற்றி பெற  அனைத்து இலக்கிய ஆர்வலர்களின் ஒத்துழைப்பையும் அன்போடு கோருகிறோம்.

 

தளத்துக்காக,

எஸ்.எம்.ஏ.ராம்

Series Navigationநான் ரசித்த முன்னுரைகளிருந்து………….. 2. பாரதியார் – பாஞ்சாலி சபதம்.தாகூரின் கீதப் பாமாலை – 37 யாருக்குத் தெரியும் ?
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *