சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி வெளியீடு

This entry is part 4 of 24 in the series 9 ஜூன் 2013

சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி வெளியீடு

சீன வானொலி தொகுத்துள்ள “சீனம்-அன்னிய மொழி கலைச்சொல் அகராதிகளின்” வெளியீட்டு விழா ஜுன் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. தமிழ், இந்தி, உருது, நேபாளம் உள்பட 18 மொழி கலைச்சொல் அகராதிகள் வெற்றிகரமாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
வீட்டு வசதி, பொழுதுபோக்கு , பண்பாடு, கலை, பொது பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சமூக காப்புறுதி, நிதி, நாணயம், சந்தை ஆகிய துறைகளைச் சேர்ந்த 27ஆயிரம் சொற்கள், சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதியில் தொகுக்கப்ப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளியீட்டு விழாவில் சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் தலைவரும் அகராதி தொகுப்பாளருமான கலைமகள் செய்தியாளர்களுக்கு சீன-தமிழ் அகராதியைக்
காண்பித்தபோது எடுத்தபடம்.
சீன வானொலி தமிழ்ப் பிரிவின் தலைவர் கலைமகள் தொகுத்த இந்த அகராதி, தமிழ்ப் பிரிவின்
முதல், சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதியாகும். முன்பு, கலைமகள் அவர்கள் எழுதிய “சீனாவில்
இன்ப உலா” எனும் புத்தகம் தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெளியீட்டு விழாவில், 18 மொழி அகராதிகளின் தொகுப்பாளர்கள், பணியாளர்கள்.

தகவல்:ஆல்பர்ட்,விச்கான்சின்,அமெரிக்கா.

Series Navigationதிருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013தாகூரின் கீதப் பாமாலை – 68 தேர்ந்தெடுத்த என் பாதை .. !
author

அறிவிப்புகள்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *