சேமிப்பு

This entry is part 22 of 44 in the series 16 அக்டோபர் 2011

”எப்பப் பார்த்தாலும் வாங்கின சம்பளம் பூரா ஏதாவது செலவு பண்ணிடுறே. போன மாசம் 4 செட் ட்ரெஸ், மூணாம் மாசம் காஸ்ட்லி கெடிகாரம்., இந்த மாசம் ஷூ., எப்பத்தான் சேமிப்பே.. பாங்க் அக்கவுண்ட்ல ஒரு சேவிங்ஸும் இல்லை. ”

”சம்பளம் இன்னும் அதிகம் வரட்டும்மா.. எப்பப்பாரு டெபாசிட் போடு அப்பிடிங்கிறீங்க. அப்புறம் எப்பத்தான் லைஃபை என்ஜாய் செய்றது”.

மகன் வேலைக்கு சேர்ந்து முணு மாதமாக வீட்டில் நடக்கும் வாக்குவாதம்தான் இதெல்லாம்.

சொல்லிப் பிரயோஜனமில்லை என பால்கனிக்கு காற்று வாங்க வந்தாள் கோமதி.

அவென்யூவை ஒட்டிய ஓட்டு வீட்டின் வெளியே அந்த வீட்டுப் பையன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தான்.

“ அண்ணா இது வீட்டு போன்ணா.. எனக்கு ஒண்ணு வாங்கிக் கொடு., நோக்கியாவுல. தினேஷுக்கு வாங்கிக் கொடுத்தியே அதுதாண்ணா..”

“ அண்ணா சொன்ன புருஞ்சுக்க மாட்ட்றீயே. இங்கே அம்மா பணத்தை சீட்டுப் பிடிக்கணும் அதுல போடுன்னுது. கொஞ்சம் அர்ஜண்ட்ணா.. இல்லாட்டி அப்பிடி இப்பிடின்னு செலவாயிடும். 2000 ரூபாய்அப்பிடியே கடையிலேருந்து சம்பளத்தை எடுத்து பாங்கில போட்டுருக்கேன். சொன்னீன்னா நாளைக்கு கார்த்தால போயி வாங்கிறலாம். எனக்கு பார்த்து வாங்கத் தெரியாதுண்ணா . ஹெல்ப் பண்ணுண்ணா. “ என யாரிடமோ கேட்டு கொண்டிருந்தான்.

ப்ளஸ்டூ படிக்கும் அவன் பார்ட் டைமாக ஒருதுணிக்கடையில் வேலை செய்து வந்தான்.

அட பள்ளி படிக்கும் இவன் கூட தன் சம்பளத்தில் ஒரு நல்ல பொருள் தனக்காக வாங்க ஆசைப்படும்போது வேலைக்குச் செல்லும் தன் மகன் எல்லாப் பொருளும் சிறப்பாக வைத்துக் கொள்ள ஆசைப்படுவது தப்பில்லை. இது அனுபவிக்கும் காலம். இன்னும் சில காலம் கழித்து சேமிப்பின் அவசியம் புரியும்போது சேமித்துக் கொள்வான் என நிம்மதியாக உள்ளே சென்றாள்.

Series Navigationகிளம்பவேண்டிய நேரம்.:அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் !
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *